Tag Archive | strength

மங்கையின் துணிவு

CONFIDDENT WOMAN

என் வாழ்க்கையின்

வசந்தமென வர விரும்பினேன்

உன்னை, அவஸ்தைகள்

படபோகிறாய் என்று வேறு திசை

நோக்கிச் சென்றதனால்

பேதை இவள்  வாழ்வுதனை

முடித்துக் கொள்வாளோ??

இல்லையடா நான் வாழ்ந்து

அன்பாலே உலகை வெல்வேன்

அதன் மூலம்

என்னுள் இருக்கும்

உன்னை கொன்றுவிடுவேன் …!!!

என் வாழ்க்கை

கல்லும் முள்ளும்

இல்லாத பாதை

அல்லவே

அழகிய பாதையாக நீதான்

வரவேண்டும் என்று இருந்தேன்

இடையே இதுவல்ல

என் பாதை என்று

திசை மாறிட

எப்படி இரும்பாய் இருகிறாய் நீ ??

வேதனை என்னவென்று

விலங்கிடுமுன் வேள்வியாய்

பிறந்தவள் நானாடா !

உன்னை காதலித்த பின்

புரிந்து கொண்டேன்

எனது தவறு என்னவென்று

எந்தன் காதலது

கருமேகம் அல்லவே

நீ சென்றதும்

காற்றினில் கலைந்து போக !

இதயத்தில் எழுதியதில்லை

செதுக்கியது,

காலங்கள் பல ஆனாலும்

காதல் அழிவதில்லை

அழிவு என்பது

காதலர்களுக்கு மட்டுமே

உடலும் உயிரும் அழியலாம்

உணர்வுகள் அழிவதில்லை ! ! !

Advertisements

Strength or Weakness?

உந்தன் நிழலோடு நான் – என்னோடு நீ ! ! !

இதுவரை நான் உணர்ந்த அத்தனை உணர்வுகள் அனைத்தும் உன்னோடு நான் என்று இருந்ததால், அதனை ஆங்கில மொழிதனில் நீ படித்திட வேண்டும் என்று அனைத்தையும் பதிவிட்டேன். இன்று ஏனோ நீ இதனை அறிய வேண்டாம் என்று தோன்றுவதால், எனது தாய் மொழியாம் தமிழினில் பதிவிட மனம் துடிக்கிறது.

என்னை அறிந்த அனைவரும் சொல்லும் ஒரு சொல், நான் அவர்கள் மீது கொண்ட பாசம், நேசம், நட்பு, அன்பு என்று பல பெயர்களில் சொன்னாலும், உண்மையான, தூய்மையான, உன்னதமான ஒரு ஸ்னேகம் மட்டுமே அதில் இருக்கும். ஆனால் நீயோ நான், கற்பனையில் கூட நினைக்க மறந்த இனிய உறவாக என்னையும் அறியாமல் எனக்குள் பிறந்தாய்….. பேரின்பத்தின் உச்சத்தை எட்டச் செய்தாய்.

இது நாள் வரை நான் உன்னால் பல முறை வருத்தப்பட நேர்ந்தாலும், கண்ணீரோடு பல நாட்கள் இருந்தாலும், உதட்டினில் மாறாத சிரிப்போடு மட்டுமே உன் முன்னே வளம் வந்தேன், காரணம் உன்னால் ஏற்பட்ட அந்த உறவின் சுகமும் உனக்கு சிறிதும் மன வருத்தம் ஏற்பட்டுவிட கூடாது என்றும் மட்டுமே.

எந்தன் அன்பினை நன்றாக அறிந்திருந்தும், ஏதோ உனக்குள் இயல்பாக இருக்கும் ஒரு வெறுமையின் பாதிப்பை என்னோடு காட்டுகின்றாய். நீ எனக்குள் வந்தபின் நான் என்னும் அகந்தையும் அடிபட்டு போனதே ஒரு விந்தை. ஆம் ஒவ்வொரு முறையும் நீ என்னோடு விளையாடும் அனைத்திலும் எந்தன் நான் என்றது அடிபட துடித்தேன். வேறு யாராக இருந்தாலும் அவரது உறவே வேண்டாம் என்று தான் இருந்து இருப்பேன், இது என்னை பெற்றவாளாக இருந்தாலும் அதையே தான் செய்து இருப்பேன்.

நீ எந்தன் உணர்வுகளை கொன்று, எனக்கான உறவினையும் கொன்ற பின்பும் கூட ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய் என்று எண்ணம் கொள்வதற்கு கூட நேரமில்லாமல், உன்னை மட்டுமே நினைக்கும் இல்லை சிந்திக்கும் இல்லை சுவாசிக்கும் அளவிற்கு என்னை ஆட்கொண்டாய்.

இனிய உறவாக இருந்ததால், உன்னை நிஜம் என்று எண்ணியது எந்தன் தவறே. பல நேரங்களில் காயப்பட்டு இருந்தாலும், உன்னால் ஏற்பட்ட பாதிப்பினை அந்த இனிய சுகத்திற்காக, எந்தன் காயத்திற்கு உனது சிரிப்பினை மருந்தாக நினைத்துக் கொள்வேன். குழந்தை எட்டி உதைத்தால் வலிக்காது என்று எனக்கு நானே சமாதனம் சொல்லியதுண்டு.

கற்பனையிலும் இல்லாத உறவு, நிஜத்தில் ஆனால் அந்த உறவினை நிழலாக மாற்றியதும் நீயே…..

உந்தன் உறவானது ஆலமரம் போல் என்னுள் வேரூன்றி வளர்வதற்கு நீயே தான் காரணம்….. உறவுகளின் உன்னதம் தெரியாத உன்னால் என்னுள் எனக்கான ஒரு உறவினை எப்படி வளர்த்திட முடிந்தது? எனது பலமே எனது உறவுகள் தான். எப்படி இன்று எனது பலவீனமாக ஆனது?