Tag Archive | வார்த்தைகள்

உனக்காக மட்டும்

motherhood-1

என் ஆழ்மனதில் புதைத்து

வைத்த அத்தனை ஏக்கத்திற்கும்

என் அன்பிற்கு மொத்தமாய் 

சொந்தமானவளே

எனக்கே தெரியாமல் 

ஏக்கங்களுடனும் 

பல கனவுகளுடனும் 

காத்திருக்கிறேன்
என் கருப்பையை மூடிவைத்து 

கடவுளின் முன்னால் 

கையேந்தவில்லை 

மனமுருகவில்லை

பிரார்த்தனை இல்லை 

என் மகள் உன் மகன் என்று 

பிரித்து பார்த்ததும் இல்லை 

அனைவரும் சமம் எனவே இருந்தேன் 

 motherhood-4

என்னை ஆட்டிவைக்கும் 

அதிகாரம் எடுத்தவளே 

உன் அன்பினில் உருகிடவே

உனக்குள் உறைந்திடவே 

என் உயிருக்குள் கலந்திட்டவளே  

உன் அன்னையாக நான் இருந்திடவே
என் கருவறைக்குள் அடிஎடுத்து
வைத்திடத்தான் நீ ஓடிவா

என் அன்பு செல்வமே!!! 

வயிற்றினில் சுமப்பது வலியா?

இதயத்தின் சுமப்பது வலியா? 

எனது கேள்விகள் என்னையே கொல்கிறது.

என்னருகே நீ இருந்தால்

உன்னருகே நான் இருந்தால் 

அதுவும் இதுவும் எதுவும் சுமை அல்ல 

தொடும் தூரம் நீ இருந்தால் 

அனைத்தும் சுகமாகும்.

கண்ணுக்குள் நீ இருந்தாலும் 

கண்களுக்கு அருகினில் நீ இல்லை

அனைக்கும் ஆசை இருந்தும் 

கைகளுக்கு நீ எட்டுவது இல்லை 

View More: http://sparklingfootsteps.pass.us/nikki-maternityfamily

முத்தமிட நான் நினைக்க 

முத்தம் ஒன்றை நீ கொடுக்க 

அந்த செவ்விதழ் சத்தம் 

ஒன்றை மட்டுமே பரிசாக

செவி வழி கொடுக்க சொர்க்கம்  

எனவே நான் நினைப்பேன்

அந்த சத்தத்தை – உன்

இதழ் எச்சில் என்னவென்று

நான் அறியாதிருந்தால் 

 

கருவினில் சுமந்திருந்தால் 

10 மாதம் மட்டுமே சுமையாவாய் 

மனதினில் கருவாகவே 

உன் உருவத்தைச் சுமப்பதினால் 

என் ஆயுள் வரை இருந்திடுவாய் 

என் இதயத்தின் அன்பு

சிறைக்குள்ளே ஆசை சிசுவாகவே 

எனக்குள்ளே இருந்திடுவாய், 

நீ பிள்ளைகள் பல பெற்றாலும் 

என்றும் எனக்கு குழந்தையாகவே 

 motherhood-2

சுகமான சுமையாக உன்னை 

சுமக்கவே நினைக்கிறேன் 

அழகன வரமாய் வசந்தமாக 

வாவென கேட்கிறேன் 

உன் கருவிழிக்குள்ளே

என் முகம் புதைத்து 

உன் விழி வழியே

என்னை பார்த்திடவே  

நமக்கான புது உலகினை

உறவினை  படைத்திடவா

தங்கமவள் பசி அறியவில்லை 

முலையமுது தரவில்லை 

என் தேகம் இழைத்தும்

உயிரைக் கரைத்தும் அதில் 

தாய்மை குழைத்து 

உனக்கெனவே 

என் ஆயுள் முழுதும் 

அன்பைச்  சோரக

ஊட்டி விட வர வா…. 

பாசத்தை இலக்கணமாக்கி 

மௌனத்தை இலக்கியமாக்கி 

தேனொழுகும் மொழிதனை 

உனக்கு கற்று தரவில்லை 

ஆனாலும் நீ பேசிடும் அனைத்தும் 

தேன்மொழியாகவே தித்திக்கிறது 

தனிமை என்பதே நம் இருவருக்கும் 

இனி இல்லை 

நீ பேசிய அன்பான வார்த்தைகளும்

உன் விரல்கள் பேசிய 

அன்பான வருடல்களும்

நீ சிரித்த சிரிப்பும் என் உயிரோடு 

கலந்து விட்ட ஓவியம்

வந்து போவதில்லை உன் நினைவுகள்

என்றும் என்னுடன் நீ இருப்பதால் 

நீ  பேசிய வார்த்தைகள் 

அனைத்தும் இனிக்கிறது 

இருந்தும் நீ சொன்ன இவ்வரிகள் 

கடைசி வரை சேர்ந்தே இருப்போம்

பிரிவு என்பது மரணம்

ஒன்றால் மட்டுமே நிகழும்.

Advertisements

ஊமையின் வார்த்தைகள்

வார்த்தைகளில் விளையாடுவது ஏன்??

90% கவிதைகள் பிறப்பது எப்போது???

அடுத்தவர் நமது நேசத்தைப் புரிந்திடாத போது மட்டுமே வார்த்தைகள் கொண்டு புரிய வைக்க நினைத்திடுவோம்…..ஒருவருக்கான கவிதைகள் நெஞ்சுக்குள் அருவிப் போல பொங்கிடும் நேரம் அந்த அன்பு நமக்கு கிடைக்காத போது மட்டுமே…

இதயத்தின் ஏக்கத்தினை இதழ்களால் சொல்லி புரியாதவரிடம், வார்த்தைகளில் சொல்லி புரிய வைக்க நினைப்பது நேசத்திவரின் இறுதி முயர்ச்சி, அந்த உறவிற்கான இறுதி ஊர்வலம்……

வார்த்தைகளால் உணர்த்த வருவதும், ஆழ்ந்த அன்பினை உணர்ந்தும் வருவது உண்டு.இரண்டிற்கும் வித்தியாசம் இருப்பது நீ அறியாதது விந்தையே……

விலாசம் இன்றி போகும் நேசமும் உண்டு, விரிசல் கொண்டு செல்லும் அன்பும் உண்டு. அன்பைப் புரியாதவர்கள் வார்த்தைகளையா புரிந்துக் கொள்வர்????

உன்னோடு நானும் என்னோடு நீயும் ஒரு நொடியும் பிரியாமல் இருக்கும் இந்தப் பிரியத்தை எதற்கு எழுதிட வேண்டும்…

எழுதிடுவேன் உனக்கும் எனக்குமான உறவினையும் நீ புரிந்து விலகி போனால்.புரியாத அன்பிற்கு புரிய வைக்க எழுதிடலாம், புரிந்த அன்பிற்கு ஏன் எழுத்துக்களால் சொல்ல வேண்டும்…….

நீயும் நானும் தனித்தனியே விலகி இருந்தால் மட்டுமே எழுதிட வேண்டும். உன் மீது நம்பிக்கை இல்லாத போது எழுதிட வேண்டும். நீ வேறு நான் வேறு இல்லையே….

அன்பை வார்த்தைகளால் சொல்லிடலாம் ஆனால் வாழ்ந்து காட்டும்போது மட்டுமே விலங்கிடும் அத்துனை சுலபமானது இல்லை அன்பை வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கு கொடுப்பது…

என் ஊன் உயிரோடு கலந்தவருக்கு கவிதைகள் தேவையில்லை, காவியங்களாகும் நமது நேசம் – எந்தன் கவிதையாக நீ இருக்க உனக்கு என்று கவிதைகள் தேவையில்லை…..