Tag Archive | பாசம்

தேவதையாக வந்தாய்

அன்பு மகளே!
தேவதையாக வந்தாய்!
தேனாய் இனித்தாய்!
பாசம் தந்தாய்
நேசத்தை ஊற்றினாய்
பரிவை வளர்த்தாய்
அன்பிற்கு அடையாமாக
அடைமொழியானாய்
உந்தன் பெயரைச்
சொன்னாலே உதடுகளில்
புன்னகை பூத்திடுது

சேயாகப் பிறந்தாயே எந்தன்
தாயாக வளர்ந்தாயே
உனக்கு சேவகம் செய்திடவே
யாசகம் செய்தேனோ
உன் தேவை யாவும்
நிறைவேற்றிடும் சேவகியாகவே
மாறிட தவமதனை செய்தேனோ

உன் கண் அசைவில்
கட்டளை இடு
என் சிரம்
அடிபணியும் என் செல்லம்
இவள் பாதங்களில்

அன்பு கட்டளைகளுக்கு
அந்த விண்மின்களும் தரை இறங்கும்
உந்தன் பாசம் சுவைத்திடவே

நீ வாடி நின்றால்
உள்ளம் தான் தாங்காதே!
நீ ஓடி வந்தது
அணைத்திட்டால் எந்தன்
இன்பம் என்றும் விலகாதே !

நீ கோபம் கொண்டு
முகத்தை திருப்பிக் கொண்டால்
என்ன செய்வேன் என் மகளே
உன்னைச் சிரிக்க வைக்க
முழு முட்டாளாக ஆவேனே!

காலமெல்லாம் நீ சிரிக்க
அதைக் கண்டு நான் ரசிக்கவும்
கண்ணீரை நான் மறைத்து
உன்னோடு சிரிப்பேனே!

பறவைகள் போலே
நீயும் சிறகடித்து பறந்திடு!
அந்த நிலவினைப் போலே
நீயும் புன்னகையில் ஒளி வீசிடு!

நீ காட்டும் அன்பிற்கும்
விண்ணிற்கும் இல்லையே எல்லை !
எந்த பிறவியில் ஏது பணி செய்து
இந்த ஜென்ம பந்தத்தின்
கடனை நானும் தீர்ப்பேனோ?
உலகம் உறவாக கொண்டேன்
இன்று உலகமே நீ என்று வந்தேன்
உணராத அன்பை உணர்ந்தேனே
உனக்குள்ளே எனக்காக
என் தேனே செந்தேனே
என் உயிர் நீ தானே
உறவானாய் உயிரானாய்
உறவுக்கு உயிரானாய்
என் உயிரே எனக்குள்ளே
எந்நாளும்

உனக்குள் வாழும்
என்னை என் உயிர்
இந்த உடல் பிரிந்தாலும்
நான் வாழ்வது நிச்சயம்

Advertisements

எனக்கான உனது அன்பு

1_amma

சுவைத்துப் பார்க்கிறேன்
உன் இதயத்திலிருந்து
வந்த வார்த்தைகளை
கவிதைகளா அவை –
இல்லை
காவியமடி எனக்கு.
சுவசமாக இருந்தேன்
உனது கவிதைகளின் வாசகத்தில்
எனது வாசத்தை உணர்ந்தேன்
உனது வரிகளில்.

மனதில் சலனம் வந்தாலும்
சண்டைகள் வந்தாலும்,
இடைவெளி என்பது
சிறிதும் இருந்தது இல்லை

தூரத்தில் இருந்தாலும்,
துடிப்பது ஒன்றாகிப் போன
இரண்டு இதயங்களும் தான்
சில நொடிகள் துடிக்க வைத்தாலும்
துடிதுடித்துப் போகிறாயடி செல்லமகளே !!!

தொலைவாக நாம்
இருந்தாலும் என்
தொலைதூர பார்வைக்குள்
உன்னை படம் பிடிக்கிறேன்

தொடமுடியாத தூரத்தில்
நீ இருந்தாலும்
உன் சுவசத்தில்
கட்டி அனைக்கிறாய்
என்னைக் கட்டி ஆள்கிறாய்.

கையளவு இதயம் தான்
உலகளவு பாசம் வைத்தாய்
சொக்கித்தான் போகிறேன்
சொர்க்கமாக நீ சிரிப்பதால்.

கண்ணுக்கு தெரியாத
தூரத்தில் நீ இருந்தாலும்
காற்றுகூட புகமுடியாமல்
என்னைக் கட்டி அனைக்கிறாய்

தூரத்தில் இருந்தாலும்
நினைக்காத நேரமில்லை
நினைக்கும் நேரமெல்லாம்
உனது சில்லரைச்
சிரிப்பினில் சிறை வைக்கிறாய்

love-1

என் பிள்ளை இவள்
கொஞ்சலில் கொஞ்சம்
மெய்மறந்து தான் போகிறேன்
உன்னோடு வாழ்ந்தது விட்டேன்
சில காலம், ஆனால் அவைக்
கொஞ்சமே, அந்த கொஞ்சலோடு
வாழ்வது யாருக்கும்
கிட்டிடாத ஆனந்தமே;

சிறிது நேரம் நீ மௌனித்தாலும்
ஆராத சோகம் என் நெஞ்சோடு சேரும்

பல நாடுகள் கடந்திருந்தாலும்
பக்கமிருக்கும் உனது பாசம்
உந்தன் குரல் வழியில் – அது
எப்போதும் என்னைத் தொட்டு பேசும்
இது நமக்கு மட்டுமே தெரிந்த நேசம்

என்னுள் கலந்தாயடி
உன்னுள் உறைந்தேனடி
உணர்வாகினாய் உதிரமுமாகினாய்
என் உயிரின் உருவமாகினாயடி

thevathai-ival

உன்னை நினைத்தே எனது
நினைவுகள் சுழலுவதில்
ஆச்சரியமில்லை
என்னை மட்டுமே நினைத்து
எப்படியடி உனது நினைவுகள்
என்றே வியக்கிறேன்.

விடையில்லா கேள்வி குறியாக
இருந்த என் வாழ்வில்
என் வாழ்வின் விடையாக வந்தவளே
ஆயிரம் கோடி கொடுத்தாலும்
கிடைக்காத பொக்கிஷமடி
எனக்கான உனது அன்பு

mother-child-sleep

உனக்காக மட்டும்

motherhood-1

என் ஆழ்மனதில் புதைத்து

வைத்த அத்தனை ஏக்கத்திற்கும்

என் அன்பிற்கு மொத்தமாய் 

சொந்தமானவளே

எனக்கே தெரியாமல் 

ஏக்கங்களுடனும் 

பல கனவுகளுடனும் 

காத்திருக்கிறேன்
என் கருப்பையை மூடிவைத்து 

கடவுளின் முன்னால் 

கையேந்தவில்லை 

மனமுருகவில்லை

பிரார்த்தனை இல்லை 

என் மகள் உன் மகன் என்று 

பிரித்து பார்த்ததும் இல்லை 

அனைவரும் சமம் எனவே இருந்தேன் 

 motherhood-4

என்னை ஆட்டிவைக்கும் 

அதிகாரம் எடுத்தவளே 

உன் அன்பினில் உருகிடவே

உனக்குள் உறைந்திடவே 

என் உயிருக்குள் கலந்திட்டவளே  

உன் அன்னையாக நான் இருந்திடவே
என் கருவறைக்குள் அடிஎடுத்து
வைத்திடத்தான் நீ ஓடிவா

என் அன்பு செல்வமே!!! 

வயிற்றினில் சுமப்பது வலியா?

இதயத்தின் சுமப்பது வலியா? 

எனது கேள்விகள் என்னையே கொல்கிறது.

என்னருகே நீ இருந்தால்

உன்னருகே நான் இருந்தால் 

அதுவும் இதுவும் எதுவும் சுமை அல்ல 

தொடும் தூரம் நீ இருந்தால் 

அனைத்தும் சுகமாகும்.

கண்ணுக்குள் நீ இருந்தாலும் 

கண்களுக்கு அருகினில் நீ இல்லை

அனைக்கும் ஆசை இருந்தும் 

கைகளுக்கு நீ எட்டுவது இல்லை 

View More: http://sparklingfootsteps.pass.us/nikki-maternityfamily

முத்தமிட நான் நினைக்க 

முத்தம் ஒன்றை நீ கொடுக்க 

அந்த செவ்விதழ் சத்தம் 

ஒன்றை மட்டுமே பரிசாக

செவி வழி கொடுக்க சொர்க்கம்  

எனவே நான் நினைப்பேன்

அந்த சத்தத்தை – உன்

இதழ் எச்சில் என்னவென்று

நான் அறியாதிருந்தால் 

 

கருவினில் சுமந்திருந்தால் 

10 மாதம் மட்டுமே சுமையாவாய் 

மனதினில் கருவாகவே 

உன் உருவத்தைச் சுமப்பதினால் 

என் ஆயுள் வரை இருந்திடுவாய் 

என் இதயத்தின் அன்பு

சிறைக்குள்ளே ஆசை சிசுவாகவே 

எனக்குள்ளே இருந்திடுவாய், 

நீ பிள்ளைகள் பல பெற்றாலும் 

என்றும் எனக்கு குழந்தையாகவே 

 motherhood-2

சுகமான சுமையாக உன்னை 

சுமக்கவே நினைக்கிறேன் 

அழகன வரமாய் வசந்தமாக 

வாவென கேட்கிறேன் 

உன் கருவிழிக்குள்ளே

என் முகம் புதைத்து 

உன் விழி வழியே

என்னை பார்த்திடவே  

நமக்கான புது உலகினை

உறவினை  படைத்திடவா

தங்கமவள் பசி அறியவில்லை 

முலையமுது தரவில்லை 

என் தேகம் இழைத்தும்

உயிரைக் கரைத்தும் அதில் 

தாய்மை குழைத்து 

உனக்கெனவே 

என் ஆயுள் முழுதும் 

அன்பைச்  சோரக

ஊட்டி விட வர வா…. 

பாசத்தை இலக்கணமாக்கி 

மௌனத்தை இலக்கியமாக்கி 

தேனொழுகும் மொழிதனை 

உனக்கு கற்று தரவில்லை 

ஆனாலும் நீ பேசிடும் அனைத்தும் 

தேன்மொழியாகவே தித்திக்கிறது 

தனிமை என்பதே நம் இருவருக்கும் 

இனி இல்லை 

நீ பேசிய அன்பான வார்த்தைகளும்

உன் விரல்கள் பேசிய 

அன்பான வருடல்களும்

நீ சிரித்த சிரிப்பும் என் உயிரோடு 

கலந்து விட்ட ஓவியம்

வந்து போவதில்லை உன் நினைவுகள்

என்றும் என்னுடன் நீ இருப்பதால் 

நீ  பேசிய வார்த்தைகள் 

அனைத்தும் இனிக்கிறது 

இருந்தும் நீ சொன்ன இவ்வரிகள் 

கடைசி வரை சேர்ந்தே இருப்போம்

பிரிவு என்பது மரணம்

ஒன்றால் மட்டுமே நிகழும்.

அபாயம் காத்திருக்கிறது

என் அன்பினில்

சிறகடிபாய் என

நினைத்தேன்,

ஆனால்

என் அன்பினில்

என்னையே

சிக்கவைக்கும்

மந்திரம்

உன்னிடம் மட்டுமே…

என் அன்பை

நிராகரித்து

பாசத்தை புரகணித்து

என்னை

தனிமைச் சிறையில்

கைதியாக்கி செல்லும்

வித்தை

உனக்கு மட்டுமே

அத்துப்படி ! ! !

உன்னைச் சிறைசெய்ய

நினைப்பவர்களுக்கு

இது ஒரு எச்சரிக்கை ! ! !

அபாயம் காத்திருக்கிறது

விலகிச் செல்லுங்கள் ! ! !

தேவதையா நான்?

நான் எழுதுகிற கவிதைகள் யாவும்

காதலை பற்றியே இருக்கிறதோ என

எனக்குள்ளே ஒரு உணர்வு.

எதை எதையோ எழுதிட

எனக்கும் கூட ஆசைதான்.

இருந்தும் தெரியவில்லை

எதைப்பற்றி எழுதுவதென்று.

ஏழையின் கண்ணீரைக்

கண்டவுடன்

கொதித்துவிடும் நரம்பு,

என்னால் என்ன செய்யமுடியும்

என்று ஏளனமாக

என்னை நானே

பார்ப்பது இயல்பு.

கண்ணால் காதல்

பேசும்

அடுத்த வீட்டு இளைஞன்,

அழகான சிரிப்பினில்

அனைவரையும்

கவர்ந்திடும்

மாடி வீட்டு பாப்பா,

கதை கேட்க

யாராவது வருவார்களா

என்று ஏங்கிடும்

எதிர்வீட்டு தாத்தா,

என்று எத்தனையோ

என்னைச் சுற்றி நடந்தாலும்,

எழுதிட நினைத்து

வார்த்தைகளை

சேர்த்திடும் நேரத்தில்

என் நினைவுகள்

சுற்றுவது

என்னை தேவதையாக

நினைக்கும்

உன்னை மட்டுமே….

அன்பு நிலையானது

Friends For Ever

U R my Best Friend

எந்தன் தாயும் நீயே!

எந்தன் தோழியும் நீயே!

எந்தன் காதலும் நீயே!

எந்தன் சேயும் நீயே!

எந்தன் உணர்வும் நீயே!

எந்தன் உயிரும் நீயே!

எந்தன் வாழ்வும் நீயே  என்று

உன்னை சுவாசித்தேன்,

இந்த உலகமே

உன்னை வெறுத்தாலும்                                                                

உன்னை நேசிக்க

நான் இருக்கிறேன் என்ற

உன் பாசத்தில் பைத்தியமான

என் அன்பிற்கு நீ

கொடுத்த பரிசு

இன்று மட்டும் இல்லை

என் சுவசம்

நிற்கும் தருணம்,

நான் இருப்பினும்,

இறப்பினும்

இந்த இதயத்தில்

எப்போதும் மாறாமல்

என்னோடு

வலியுடன் வாழும்

என் அன்பு தோழியே

உன் நட்பு ! ! !

பிரிந்த_உறவு

பிரிந்த (பறந்த) உறவு

 

Sadness

உன்னிடம் கோபம் சிறிதுமில்லை

யார் மீதும் கோபமில்லை….

உன்னை நேசித்த இந்த

இதயத்தின் மீது மட்டுமே

என்னுடைய கோபம்.

உறவுகளில் விரிசல் இல்லை

புத்தியில் குழப்பமில்லை

நண்பர்களுக்கும் பஞ்சமில்லை

அலைகளாக

உன் நினைவலைகள்

அடைமழையாக

நம் அன்பின்

நேற்றைய ஞாபகங்கள்