Tag Archive | நேசம்

தேவதையாக வந்தாய்

அன்பு மகளே!
தேவதையாக வந்தாய்!
தேனாய் இனித்தாய்!
பாசம் தந்தாய்
நேசத்தை ஊற்றினாய்
பரிவை வளர்த்தாய்
அன்பிற்கு அடையாமாக
அடைமொழியானாய்
உந்தன் பெயரைச்
சொன்னாலே உதடுகளில்
புன்னகை பூத்திடுது

சேயாகப் பிறந்தாயே எந்தன்
தாயாக வளர்ந்தாயே
உனக்கு சேவகம் செய்திடவே
யாசகம் செய்தேனோ
உன் தேவை யாவும்
நிறைவேற்றிடும் சேவகியாகவே
மாறிட தவமதனை செய்தேனோ

உன் கண் அசைவில்
கட்டளை இடு
என் சிரம்
அடிபணியும் என் செல்லம்
இவள் பாதங்களில்

அன்பு கட்டளைகளுக்கு
அந்த விண்மின்களும் தரை இறங்கும்
உந்தன் பாசம் சுவைத்திடவே

நீ வாடி நின்றால்
உள்ளம் தான் தாங்காதே!
நீ ஓடி வந்தது
அணைத்திட்டால் எந்தன்
இன்பம் என்றும் விலகாதே !

நீ கோபம் கொண்டு
முகத்தை திருப்பிக் கொண்டால்
என்ன செய்வேன் என் மகளே
உன்னைச் சிரிக்க வைக்க
முழு முட்டாளாக ஆவேனே!

காலமெல்லாம் நீ சிரிக்க
அதைக் கண்டு நான் ரசிக்கவும்
கண்ணீரை நான் மறைத்து
உன்னோடு சிரிப்பேனே!

பறவைகள் போலே
நீயும் சிறகடித்து பறந்திடு!
அந்த நிலவினைப் போலே
நீயும் புன்னகையில் ஒளி வீசிடு!

நீ காட்டும் அன்பிற்கும்
விண்ணிற்கும் இல்லையே எல்லை !
எந்த பிறவியில் ஏது பணி செய்து
இந்த ஜென்ம பந்தத்தின்
கடனை நானும் தீர்ப்பேனோ?
உலகம் உறவாக கொண்டேன்
இன்று உலகமே நீ என்று வந்தேன்
உணராத அன்பை உணர்ந்தேனே
உனக்குள்ளே எனக்காக
என் தேனே செந்தேனே
என் உயிர் நீ தானே
உறவானாய் உயிரானாய்
உறவுக்கு உயிரானாய்
என் உயிரே எனக்குள்ளே
எந்நாளும்

உனக்குள் வாழும்
என்னை என் உயிர்
இந்த உடல் பிரிந்தாலும்
நான் வாழ்வது நிச்சயம்

Advertisements

எனக்கான உனது அன்பு

1_amma

சுவைத்துப் பார்க்கிறேன்
உன் இதயத்திலிருந்து
வந்த வார்த்தைகளை
கவிதைகளா அவை –
இல்லை
காவியமடி எனக்கு.
சுவசமாக இருந்தேன்
உனது கவிதைகளின் வாசகத்தில்
எனது வாசத்தை உணர்ந்தேன்
உனது வரிகளில்.

மனதில் சலனம் வந்தாலும்
சண்டைகள் வந்தாலும்,
இடைவெளி என்பது
சிறிதும் இருந்தது இல்லை

தூரத்தில் இருந்தாலும்,
துடிப்பது ஒன்றாகிப் போன
இரண்டு இதயங்களும் தான்
சில நொடிகள் துடிக்க வைத்தாலும்
துடிதுடித்துப் போகிறாயடி செல்லமகளே !!!

தொலைவாக நாம்
இருந்தாலும் என்
தொலைதூர பார்வைக்குள்
உன்னை படம் பிடிக்கிறேன்

தொடமுடியாத தூரத்தில்
நீ இருந்தாலும்
உன் சுவசத்தில்
கட்டி அனைக்கிறாய்
என்னைக் கட்டி ஆள்கிறாய்.

கையளவு இதயம் தான்
உலகளவு பாசம் வைத்தாய்
சொக்கித்தான் போகிறேன்
சொர்க்கமாக நீ சிரிப்பதால்.

கண்ணுக்கு தெரியாத
தூரத்தில் நீ இருந்தாலும்
காற்றுகூட புகமுடியாமல்
என்னைக் கட்டி அனைக்கிறாய்

தூரத்தில் இருந்தாலும்
நினைக்காத நேரமில்லை
நினைக்கும் நேரமெல்லாம்
உனது சில்லரைச்
சிரிப்பினில் சிறை வைக்கிறாய்

love-1

என் பிள்ளை இவள்
கொஞ்சலில் கொஞ்சம்
மெய்மறந்து தான் போகிறேன்
உன்னோடு வாழ்ந்தது விட்டேன்
சில காலம், ஆனால் அவைக்
கொஞ்சமே, அந்த கொஞ்சலோடு
வாழ்வது யாருக்கும்
கிட்டிடாத ஆனந்தமே;

சிறிது நேரம் நீ மௌனித்தாலும்
ஆராத சோகம் என் நெஞ்சோடு சேரும்

பல நாடுகள் கடந்திருந்தாலும்
பக்கமிருக்கும் உனது பாசம்
உந்தன் குரல் வழியில் – அது
எப்போதும் என்னைத் தொட்டு பேசும்
இது நமக்கு மட்டுமே தெரிந்த நேசம்

என்னுள் கலந்தாயடி
உன்னுள் உறைந்தேனடி
உணர்வாகினாய் உதிரமுமாகினாய்
என் உயிரின் உருவமாகினாயடி

thevathai-ival

உன்னை நினைத்தே எனது
நினைவுகள் சுழலுவதில்
ஆச்சரியமில்லை
என்னை மட்டுமே நினைத்து
எப்படியடி உனது நினைவுகள்
என்றே வியக்கிறேன்.

விடையில்லா கேள்வி குறியாக
இருந்த என் வாழ்வில்
என் வாழ்வின் விடையாக வந்தவளே
ஆயிரம் கோடி கொடுத்தாலும்
கிடைக்காத பொக்கிஷமடி
எனக்கான உனது அன்பு

mother-child-sleep

ஆசை- அவமானம் ! !

ஆசையால் அவமானம் ! !

ஆசைப்படுதலுக்கும்
அவமானப்படுதலுக்குமிடையில்
முட்டிமோதி முடிந்து
விடுகிறது என் வாழ்க்கை

நான் உன்னை வெறுப்பது
வெறும் வேஷம்
என்று எனக்கு தெரியும். !
ஆனால். .
நீ என்னை நேசித்ததே வேஷம்
என்று தெரியாமலே
நம் உறவுகள்
தொடர்வது உனக்கு தெரியுமா???

aasai-avamaanam

அபாயம் காத்திருக்கிறது

என் அன்பினில்

சிறகடிபாய் என

நினைத்தேன்,

ஆனால்

என் அன்பினில்

என்னையே

சிக்கவைக்கும்

மந்திரம்

உன்னிடம் மட்டுமே…

என் அன்பை

நிராகரித்து

பாசத்தை புரகணித்து

என்னை

தனிமைச் சிறையில்

கைதியாக்கி செல்லும்

வித்தை

உனக்கு மட்டுமே

அத்துப்படி ! ! !

உன்னைச் சிறைசெய்ய

நினைப்பவர்களுக்கு

இது ஒரு எச்சரிக்கை ! ! !

அபாயம் காத்திருக்கிறது

விலகிச் செல்லுங்கள் ! ! !

Strength or Weakness?

உந்தன் நிழலோடு நான் – என்னோடு நீ ! ! !

இதுவரை நான் உணர்ந்த அத்தனை உணர்வுகள் அனைத்தும் உன்னோடு நான் என்று இருந்ததால், அதனை ஆங்கில மொழிதனில் நீ படித்திட வேண்டும் என்று அனைத்தையும் பதிவிட்டேன். இன்று ஏனோ நீ இதனை அறிய வேண்டாம் என்று தோன்றுவதால், எனது தாய் மொழியாம் தமிழினில் பதிவிட மனம் துடிக்கிறது.

என்னை அறிந்த அனைவரும் சொல்லும் ஒரு சொல், நான் அவர்கள் மீது கொண்ட பாசம், நேசம், நட்பு, அன்பு என்று பல பெயர்களில் சொன்னாலும், உண்மையான, தூய்மையான, உன்னதமான ஒரு ஸ்னேகம் மட்டுமே அதில் இருக்கும். ஆனால் நீயோ நான், கற்பனையில் கூட நினைக்க மறந்த இனிய உறவாக என்னையும் அறியாமல் எனக்குள் பிறந்தாய்….. பேரின்பத்தின் உச்சத்தை எட்டச் செய்தாய்.

இது நாள் வரை நான் உன்னால் பல முறை வருத்தப்பட நேர்ந்தாலும், கண்ணீரோடு பல நாட்கள் இருந்தாலும், உதட்டினில் மாறாத சிரிப்போடு மட்டுமே உன் முன்னே வளம் வந்தேன், காரணம் உன்னால் ஏற்பட்ட அந்த உறவின் சுகமும் உனக்கு சிறிதும் மன வருத்தம் ஏற்பட்டுவிட கூடாது என்றும் மட்டுமே.

எந்தன் அன்பினை நன்றாக அறிந்திருந்தும், ஏதோ உனக்குள் இயல்பாக இருக்கும் ஒரு வெறுமையின் பாதிப்பை என்னோடு காட்டுகின்றாய். நீ எனக்குள் வந்தபின் நான் என்னும் அகந்தையும் அடிபட்டு போனதே ஒரு விந்தை. ஆம் ஒவ்வொரு முறையும் நீ என்னோடு விளையாடும் அனைத்திலும் எந்தன் நான் என்றது அடிபட துடித்தேன். வேறு யாராக இருந்தாலும் அவரது உறவே வேண்டாம் என்று தான் இருந்து இருப்பேன், இது என்னை பெற்றவாளாக இருந்தாலும் அதையே தான் செய்து இருப்பேன்.

நீ எந்தன் உணர்வுகளை கொன்று, எனக்கான உறவினையும் கொன்ற பின்பும் கூட ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய் என்று எண்ணம் கொள்வதற்கு கூட நேரமில்லாமல், உன்னை மட்டுமே நினைக்கும் இல்லை சிந்திக்கும் இல்லை சுவாசிக்கும் அளவிற்கு என்னை ஆட்கொண்டாய்.

இனிய உறவாக இருந்ததால், உன்னை நிஜம் என்று எண்ணியது எந்தன் தவறே. பல நேரங்களில் காயப்பட்டு இருந்தாலும், உன்னால் ஏற்பட்ட பாதிப்பினை அந்த இனிய சுகத்திற்காக, எந்தன் காயத்திற்கு உனது சிரிப்பினை மருந்தாக நினைத்துக் கொள்வேன். குழந்தை எட்டி உதைத்தால் வலிக்காது என்று எனக்கு நானே சமாதனம் சொல்லியதுண்டு.

கற்பனையிலும் இல்லாத உறவு, நிஜத்தில் ஆனால் அந்த உறவினை நிழலாக மாற்றியதும் நீயே…..

உந்தன் உறவானது ஆலமரம் போல் என்னுள் வேரூன்றி வளர்வதற்கு நீயே தான் காரணம்….. உறவுகளின் உன்னதம் தெரியாத உன்னால் என்னுள் எனக்கான ஒரு உறவினை எப்படி வளர்த்திட முடிந்தது? எனது பலமே எனது உறவுகள் தான். எப்படி இன்று எனது பலவீனமாக ஆனது?

வைதேகி13

வைதேகி அம்மா கொடுத்த அடையை சாப்பிட ஆரம்பித்தாள். அதே நேரத்தில் வீட்டு தொலைபேசி சத்தமாக அழைத்தது. பூரணி நான் எடுக்க மாட்டேனா நீ சாப்பிடலாமே என்றதையும் காதில் வாங்காமல் ராகவ் அழைப்பாக இருக்கும் என்று நினைத்து வேகமாக ஓடிப் போய் எடுக்க போனாள் வைதேகி.

அவளின் நினைப்பும் சரியாக தான் இருந்தது. ராகவ் மறுமுனையில் இஸ் இட் வைதேகி என்றான், ஆமாம் என்று கொஞ்சம் மூச்சு வாங்க சொல்லவும் தெரியும், எந்த அழைப்பாக இருந்து இருந்தாலும் நீ தான் இன்றைக்கு எடுத்து இருப்பாய் என்று. விடைபெறும் போது உன்னிடம் சொன்ன ஐ லவ் யூ உன்னை இன்று தூங்க விடாது போல இருக்கே என்றான்.

வீட்டுக்கு பத்திரமாக போய்ச் சேர்ந்தீங்கனு சொல்ல சொன்னேன்ல நீங்க பண்ணுவீங்கனு தெரியும் அதான் வேகமாக வந்து எடுத்தேன். வேற ஒன்னுமில்லை என்றாள். ஓஹோ அப்படியா என்றான். நீங்க சாப்டீங்களா, என்ன சாப்பிட்டீங்க என்று கேட்டாள்.

அப்படியே இரண்டு நிமிடம் பேசி இருப்பார்கள். அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.  சரி இப்போ வச்சுடட்டுமா நாளைக்கு பேசறீங்களா என்று கேட்டவுடன், என்ன உங்க அம்மா இருக்காங்களா என்று ராகவ் கேட்டான். இல்லை அடை ஆறிவிடும் அப்புறம் சாப்பிட முடியாது அதான் என்று கேலியோடு, பை, குட் நைட் நாளை காலை கால் பண்ணுங்கோ என்று சொல்லி அழைப்பினை துண்டித்தாள்.

அடை சாப்பிட்டு, தூங்க சென்றாள் வைதேகி. அவளை பூரணி அழைத்து நீ புடவை வாங்கி வந்துட்டேnu ராஜேஷுக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லேன் எனவும், அம்மா நளைக்கு பேசறேன் எனக்கு இப்போ தூங்கனும். நாளைக்கு நிறைய வேலை இருக்கு.

கண்டிப்பா ராஜேஷுக்கு ஃபோன் பண்றேன், பண்ணி நாளை அவருடன் சென்று அவருக்கு டிரெஸ் வாங்கச் சொல்றேன் மா என்றாள். சரி அப்புறம் உன்னோட இஷ்டம் மா. நேத்திக்கு உன்கிட்டே அவ்வளவு அன்பா சொல்லிட்டு போனானே என்று எனக்கு கரிசனம்.

உனக்கு அவன் கேலி பேசுவானே என்று பயம் என்றாள். எனக்கு என்னம்மா பயம். நீங்கள் எல்லோரும் பார்த்து முடிவு செய்த ஒரு ஆளுடன் தான் நான் புடவை வாங்க சென்றேன். இதில் எனக்கு என்ன பயம். ஒரு கர்வம்னு வேனும்னா சொல்லு.

சரி அவனுக்கு இப்பவே ஃபோன் பண்றேன் என்றாள். அவளது அத்தை வீட்டு நம்பரை டைல் செய்தாள், அந்தப் பக்கம் வினோதா தான் எடுத்தது. வைதேகி பேசறேன், எப்படி இருக்கே வினோதா என்றாள். ஹே கல்யாண பொண்ணு எப்படி இருக்கே, என்ன இன்னிக்கு புடவை வாங்க போறேனு  சொன்னாரே அவர்.

ஆமாம் டீ வாங்கிண்டு வந்துட்டேன். அதைச் சொல்லத்தான் இப்போ கூப்பிட்டேன்.  க்ரீன் கலர்ல ஒரு புடவை அவர் தான் செலக்ட் பண்ணினார். ஓஹோ முதல் புடவையை ராகவ் செலக்ட் பண்ணினாரோ… இம் அப்போ அது ரொம்ப ஸ்பெஷல் புடவை தான். ராஜேஷ் வெளியில் போயிருக்கார், வந்தவுடன் சொல்லிடறேன் என்றாள்.

ஹே வினோ அது மட்டுமில்லை, அவருக்கு ட்ரெஸ் வாங்கனும், நாளைக்கு நாள் நல்ல இருக்காம், அம்மா ராஜேஷை அவருடன் போய் வாங்கித் தர முடியுமானு கேட்கறதுக்கும் தான் பண்ணினேன். ராஜேஷை காலைல அம்மாகிட்டே முடியுமானு சொல்ல சொல்றியா.

ஹே வைதேகி நீயே கூட போய் வாங்கறது தானே என்றாள் வினோ. என்னையும் கூட வரத்தான் சொன்னார். ஆனால் நான் தான் ராஜேஷ் போனால் நல்ல இருக்கும்னு நினைக்கிறேன். இன்னிக்கு தான் நாங்க ரெண்டு பேரும் போனோம், திரும்ப நாளைக்கு போனா அது கொஞ்சம் ஓவரா இருக்குமோனு நினைக்கிறேன். அம்மா என்ன நினைப்பாள்னு தெரியலை.

ஓஹோ மேடம் ரெடியா தான் இருக்கீங்களா, சரி சரி உன் அம்மா கிட்டே எப்படி பேசனுமோ அப்படி பேச்ச் சொல்றேன் அவரை. நீயே போய்ட்டு வாடீ என்றாள்.

ஹே இது நீங்கள் எல்லோரும் பார்த்த வரன் டீ. அப்படி எல்லாம் அதுக்குள்ளே நடக்காது. இன்னும் நிச்சயம் கூட முடியலை அதுக்குள்ளே அடுத்தடுத்து போக எனக்கு என்னமோ போல இருந்தது. யாரவது பார்த்தால் என்ன சொல்வார்களோ என்று தான் டீ. பட் ஹீ இஸ் சோ ஸ்வீட் என்றாள்.

சோ ஸ்வீட் அப்படி என்ன சோ ஸ்வீட் மா மைசூர் பாக்கா ஜாங்கிரியா??? என்ன இன்னிக்கு ஒரே ஜாலியா இருக்கே, என்ன சொல்றார் உன்னோட ஹீரோ. ஒரே ரொமன்ஸா?? வெறும் வார்த்தைகளா இல்லை விளையாட்டா என்று வினோ அவளைச் சீண்டீனாள்.

உன்கிட்டே சொல்லாமா வேற யாருக்கிட்டே சொல்ல போறேன் ஆனா அது எல்லாம் நான் அப்புறமா சொல்றேன். ஆபிஸ்லேந்து நேரா கடைக்கு போனது ரொம்ப டையர்டா இருக்கேன். அவரோட கார்ல தான் போனேன். என்ன டீ சொல்றே இப்பவே டைய்ர்டா இருக்கா? அய்யோ பாவம் ராகவ் என்று மேலும் பேச்சை தொடர்ந்தால் வினோதா. வைதேகிக்கு நாளை அலுவலக கவலை வந்ததால் அவளால் அதை ரசிக்க முடியவில்லை.

சரி வினோ நீ ராஜேஷ்கிட்டே சொல்லி எனக்கு ஃபோன் பண்ணச் சொல்லு. ராஜேஷ்க்கு எப்போ வசதியோ அதுக்கு தகுந்த மாதிரி போய் நாளைக்கு வாங்கட்டும் என்றாள். சரி டீ நீ என்னமோ தூங்கு மூஞ்சி மாதிரி பேசறே. அவர் வந்தவுடன் சொல்றேன். குட் நைட், ஸ்வீட் அண்ட் டைட் ட்ரீம்ஸ் என்று சொல்ல வைதேகியும் bye சொல்லி இனைப்பைத் துண்டித்தாள்.

அம்மா வினோகிட்டே சொல்லி இருக்கேன் நாளைக்கு ராஜேஷ் ஃபோன் பண்ணுவான், நான் தூங்கப் போறேன் மா, காலைல கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும் சீக்கிரமா எழு மணிக்கு எழுப்புமா. 8 மணிக்கு நான் கிளம்பிடுவேன் என்று சொல்லி தூங்க போனாள்.

மறு நாள் காலை அம்மா எழுப்பியபின் எழுந்து வேகமாக கிளம்பி, அலுவலகம் சென்றாள். வேலை நிமித்தமாகவே சீக்கிரம் வந்தாள், வந்தவுடன் தனது வேலையை ஆரம்பித்து அதில் லயித்தும் போனாள். சக தோழி மேரி நிதானமாக பத்து மணிக்கு மேல் வந்து அவளிடம் குட் மார்னிங் என்றவுடன் அவளைப் பார்த்து புன்னைகைத்து விட்டு, கொஞ்சம் நேரம் கழிச்சு பேசுவோமா என்றாள்.

இல்லை இப்போ பத்து நிமிஷம் பேசுவோம் அப்புறம் நிதானமாக நீங்க வேலையைப் பாருங்க வைதேகி என்றாள். என்ன நேத்துக்கு மேடம் ரொம்ப சீக்கிரமா கிளம்பினீங்க? புடவை வாங்கியாச்சா என்றாள். வாங்கியாச்சு மேரி தப்பா நினைக்காதீங்க சாரி மேரி முன்னாடியே சொல்லி இருக்கனும், அது என்னமோ சொல்ல முடியலை. நேற்று தான் மானேஜரிடமும் சொன்னேன் என்றாள்.

அதனால் என்ன ஒன்னுமில்லை. நீங்க இங்க வந்ததில் இருந்து ஒரு டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்றீங்க அது தான் என்றாள். நான் கொஞ்சம் ரிசர்வ்ட் தான் மேரி. கொஞ்சம் மாசம் ஆகும் நான் சகஜமாக பழக. பழகினவங்க யாரையும் லேசில மறக்க மாட்டேன் என்றாள்.

சரி உங்களவர் என்ன பண்றார் என்று கேட்டாள் மேரி. மேரி என்னோட வேலையை முடிச்சிடுறேன் அப்புறம் நிதானமாக பேசலாமே என்றாள். என்னமோ வெட்கம் எல்லாம் படுறீங்க, எதோ ரியக்‌ஷன் எல்லாம் வருது. நல்லா இருக்கு உங்களை இப்படி பார்க்கிறதுக்கு. எப்பவும் கடுவம் பூனை மாதிரி தெரியும். உங்களுக்கு நீங்களே ஒரு வட்டம் போட்டு வச்சு அதுக்குள்ளேயே இருப்பீங்க. ஏதோ உங்களையும் சராசரி பொண்ணா மாத்த போற அந்த அதிர்ஷ்டசாலி யார் என்னனு தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன்.

ரொம்ப சின்ஸியரா வேலை பார்க்கும் போது நான் தொந்தரவு பண்ண விரும்பலை. வேலையை முடிங்க நாம அப்புறம் பேசலாம் என்றாள். சரி காலை உணவு சாப்டீங்களா, வறீங்கனா நான் காத்து இருக்கேன் இல்லை என்றாள் நான் போய் சாப்பிட்டு வருகிறேன்.

இல்லை மேரி நீங்க சாப்பிடுங்க எனக்கு இந்த வேலையை முடித்தாள் தான் எனக்கு நிம்மதியா இருக்கும் என்று சொல்லி வேலையில் மூழ்கினாள். அப்படியே எவ்வளவு நேரம் போனது என்று தெரியாது வைதேகிக்கு அந்த தொலைபேசி அழைப்பு வரும் வரை.

தொலைபேசி அழைத்தவுடன் ஒரு பரவசத்துடன் ராகவ் தான் என்று நினைத்துக் கொண்டே வைதேகி ஹியர் என்று சொல்லி எடுத்தாள்.  ஹலோ லில்லி ஹியர் என்ற அந்தப் பக்க குரல் கேட்டு ஒரு நிமிடம் அவள் நிலை குலைந்தாள் என்றே சொல்ல வேண்டும். ஒரு நொடியில் அந்த பரவசம் மறைந்து அவளது முகம் வெளரி போனது என்றே சொல்ல வேண்டும்.  ஒரு நிமிட அமைதிக்கு பின் வைதேகி தொடர்ந்தாள். என்ன வேண்டும் உங்களுக்கு என்றாள். என்ன வைதேகி நான் அவ்வளவு சொல்லியும் ராகவ் கூட போய் நீ நிச்சய புடவை வாங்கி இருக்கியே என்ன உனக்கு ராகவ் மேல அவ்வளவு காதலா, என்னோட காதல் பெரிசா உன்னோட கல்யாணம் பெரிசா என்றாள்.

வைதேகி என்ன சொல்வது என்றே புரியவில்லை. இருந்தாலும், தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஆர் யூ மேட் என்றாள். உனக்கு என்ன பைத்தியமா? அவளும் சர்வ சாதாரணமாக யெஸ் ஐம் மேட் ஆஃப் ராகவ் என்றாள்.

வைதேகிக்கு இப்போது கோபம் அவள் தலைகேறியது. நீ நிஜமாகவே லூசு தான். ஏற்கனவே உன்னோட காதலைச் சொல்லாதது உன்னோட தப்பு. இப்போ என்னோட வாழ்க்கை துனை அவர் தான்னு முடிவு ஆனதுக்கு அப்புறம் நீ இப்படி பேசறது நியாயம் இல்லை. மேலும் இப்படி என்னோட அலுவலகத்துக்கு ஃபோன் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை. நீ நேராக ராகவ்கிட்டே பேசறது பெட்டர் என்றாள்.

என்னோட பேசறதுக்கு உனக்கு பிடிகாது வைதேகி ஆனா என்னோட ராகவ் கூட பார்க்கில உட்கார்ந்து பேசறது பிடிக்குமோ?

இதுக்கு மேல எங்களை வேவு பார்க்கிறதை நீ நிறுத்தலைனா, இல்லை நிறுத்தனும், இல்லைனா நான் எந்த அளவுக்கும் போவேன். என்னை ரொம்ப சாதாரணமா நினைக்காதே. சாது தான் ஆனால் என்கிட்டே பிரச்சனை பண்ணினா நான் சும்மா இருக்க மாட்டேன்.

எங்களோட நிச்சயமும் நிச்சயம் நடக்கும், கல்யாணமும் நடக்கும், நீ என்கூட பேசி ஒன்னும் பிரயோஜனம் இல்லை. என் வாழ்க்கை அவரோட தான். இது கடவுள் போட்ட முடிச்சு. இனி உன் மனசை மாத்திக்கிறது நல்லது. இப்பவும் சொல்றேன், அவருக்கு உன்னை பிடிச்சிருந்தா நான் விலகிக்க தயார்னு சொன்னேன்ல. இப்பவும் உனக்கு டைம் இருக்கு, நேர்ல அவர்கிட்டே பேசு, உன்னால அவரை சரி சொல்ல வைக்க முடிந்தால் நான் ஒதுங்கிக்கிறேன் என்றாள்.

எனக்கு உன்னோட காதல் பற்றித் தெரியாது, ஆனால் எனக்கு தான் அவர்னு ஆனதுக்கு அப்புறம் தான் நான் அவரை விரும்ப ஆரம்பிச்சேன். எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு, ஹீ இஸ் ஃபார் மீ ஒன்லி.

லில்லி கோபப்பட்டு நிச்சயமே நடக்காது எப்படி கல்யாணம் நடக்கும் என்று பார்க்கிறேன் என்று சொல்லி கோபமாக படீரேன்று இனைப்பை துண்டித்தாள்.

அதுவரை அமைதியாக பார்த்த மேரி என்ன ஆச்சு வைதேகி யார்கிட்டே இவ்வளவு கோபமா பேசறீங்க என்றாள். லன்ச் டைத்தில சொல்றேன் மேரி. இப்போ அவரோட கொஞ்சம் பேசனும் ப்ளீஸ் இப்போ எதுவும் கேட்காதே என்னை என்றாள். சாரி வைதேகி கோபமா இருக்கீங்களேனு தான் கேட்டேன் என்று சொல்லி நகர்ந்தாள்.

வைதேகி அடுத்த நொடியே தனது அம்மாவுக்கு ஃபோன் செய்தாள். அம்மா ராஜேஷ் என்ன சொன்னான் ஃபோன் பண்ணினா என்று கேட்டாள். இல்லை டீ அவன் ரொம்ப பிஸியா இருக்கானு வினோ தான் ஃபோன் பண்ணி சொன்னா. எதுக்கும் அவனுக்குஇ நீ ஃபோன் பண்ணி கேளேன் என்றாள்.

சரி மா, அப்புறம் அவரோட வீட்டு நம்பர் இருக்கா உன்கிட்டே என்றாள். என்ன டீ அவருக்கு ஃபோன் பண்ண போறீயா என்றாள் அம்மா. ராஜேஷ்கிட்டே பேசினதுக்கு அப்புறம் அவருக்கும் சொல்லனும்ல மா அதான் கேட்டேன் என்றாள்.

இரு வீட்டு நம்பர் வேணுமா இல்லை மாப்பிள்ளையோட ஆபிஸ் நம்பர் வேணுமா என்றாள். அவர் வீட்ல தான் இருப்பார் மா, மூணு நாள் ஏதோ லீவ்ல இருக்கிறதா நேத்திக்கு சொன்னார்.

வீட்டு நம்பரை வாங்கியவள், ராஜேஷ்க்கு ஃபோன் செய்வதற்கு முன்னரே, ராகவ் வீட்டிற்கு ஃபோன் செய்தாள். அங்கு ராகவ்வின் தந்தை தான் மறுமுனையில் எடுத்தார். நான் வைதேகி பேசறேன் என்றவுடன், மிகவும் கரிசனமாக எப்படி மா இருக்கே, அம்மா சவுக்கியமா, தங்கை எப்படி இருக்கா, சித்தி எப்போ வரா, நேத்திக்கு வாங்கின புடவை ரொம்ப நல்ல இருக்கு, உனக்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று ஏதேதோ பேசினார். வைதேகிக்கோ என்ன செய்வது எப்படி ராக்வ் பற்றிக் கேட்பது என்று யோசிக்க வேறு வழி இல்லாமல், அவர் இருக்கிறாரா என்று கேட்டாள். ராகவ் கிட்டே பேசனுமா சாரி நான் ஒரு மக்கு, உன்கிட்டே இத்தனை நேரம் என்ன ஏதுனு கேட்காமல், உன்னை பேசவே விடாமல் பேசிண்டே இருந்துட்டேன். ஒரு நிமிஷம் இரும்மா, அவனை கூப்பிடறேன் என்றாள்.

ராகவ் வைதேகி ஃபோன்ல வைட் பண்றா என்று அவரி கூறிய அடுத்த நிமிடம் தாயும் மகனும் ஒன்றாக ஃபோன் நோக்கி வந்தார்கள். அம்மாவைப் பார்த்தவுடன், நீ பேசுமா என்றான். ஒரு நிமிஷம் தான் டா என்று சொல்லி அவளிடம் வைதேகி நான் ராகவோட அம்மா பேசறேன் என்றாள். வைதேகியும் ஏதோ பேச வேண்டுமே என்று அவர்களை குசலம் விசாரித்தாள். பிறகு ராகவ் பேச ஆரம்பித்தவுடன் தான் அவளுக்கு கொஞ்சம் நிம்மதுயானது.

என்ன வைதேகி நான் ஃபோன் பண்ணலைனு நீ பண்ணிட்டியா என்று கேட்டான் ராகவ். இல்லை நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன், அதான் ஃபோன் பண்ணினேன். திரும்பவும் இன்னைக்கு லில்லி ஃபோன் பண்ணினா. அவ நம்பளை ரொம்ப பக்கத்தில இருந்து வேவு பார்க்கிறா என்றாள். என்ன சொல்றே வைதேகி அது எப்படி முடியும் என்றான்.

அவ எனக்கு இன்னைக்கு ஃபோன் பண்ணி நாம ரெண்டு பேரும் புடவை வாங்கினது, பார்க்கில பேசினதுனு எல்லாம் சொல்றா. உண்மைய சொல்லனும்னா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு என்றாள். ராகவ்க்கும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது, ஆனாலும் வைதேகி மேலும் கவலைபடுவாளே என்று நான் தான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல உனக்கு எதுக்கு மா பயம் என்றான்.

அவள் என்னிடம் நிச்சயம் எப்படி நடக்கும் கல்யாணம் எப்படி நடக்கும்னு மிரட்டறா. பயப்படாமல் என்ன செய்ய சொல்றீங்க?

பயம் தொடரும்……

வைதேகி12

வைதேகி14

என் உயிரே

என் உலகம்

என் எண்ணம்

உன் வண்ணம்

என் நினைவுகள்

உன் வளர்ச்சி

என் உயிரில்

பிறந்த உறவே