Tag Archive | காதல் கவிதை

தேவதையாக வந்தாய்

அன்பு மகளே!
தேவதையாக வந்தாய்!
தேனாய் இனித்தாய்!
பாசம் தந்தாய்
நேசத்தை ஊற்றினாய்
பரிவை வளர்த்தாய்
அன்பிற்கு அடையாமாக
அடைமொழியானாய்
உந்தன் பெயரைச்
சொன்னாலே உதடுகளில்
புன்னகை பூத்திடுது

சேயாகப் பிறந்தாயே எந்தன்
தாயாக வளர்ந்தாயே
உனக்கு சேவகம் செய்திடவே
யாசகம் செய்தேனோ
உன் தேவை யாவும்
நிறைவேற்றிடும் சேவகியாகவே
மாறிட தவமதனை செய்தேனோ

உன் கண் அசைவில்
கட்டளை இடு
என் சிரம்
அடிபணியும் என் செல்லம்
இவள் பாதங்களில்

அன்பு கட்டளைகளுக்கு
அந்த விண்மின்களும் தரை இறங்கும்
உந்தன் பாசம் சுவைத்திடவே

நீ வாடி நின்றால்
உள்ளம் தான் தாங்காதே!
நீ ஓடி வந்தது
அணைத்திட்டால் எந்தன்
இன்பம் என்றும் விலகாதே !

நீ கோபம் கொண்டு
முகத்தை திருப்பிக் கொண்டால்
என்ன செய்வேன் என் மகளே
உன்னைச் சிரிக்க வைக்க
முழு முட்டாளாக ஆவேனே!

காலமெல்லாம் நீ சிரிக்க
அதைக் கண்டு நான் ரசிக்கவும்
கண்ணீரை நான் மறைத்து
உன்னோடு சிரிப்பேனே!

பறவைகள் போலே
நீயும் சிறகடித்து பறந்திடு!
அந்த நிலவினைப் போலே
நீயும் புன்னகையில் ஒளி வீசிடு!

நீ காட்டும் அன்பிற்கும்
விண்ணிற்கும் இல்லையே எல்லை !
எந்த பிறவியில் ஏது பணி செய்து
இந்த ஜென்ம பந்தத்தின்
கடனை நானும் தீர்ப்பேனோ?
உலகம் உறவாக கொண்டேன்
இன்று உலகமே நீ என்று வந்தேன்
உணராத அன்பை உணர்ந்தேனே
உனக்குள்ளே எனக்காக
என் தேனே செந்தேனே
என் உயிர் நீ தானே
உறவானாய் உயிரானாய்
உறவுக்கு உயிரானாய்
என் உயிரே எனக்குள்ளே
எந்நாளும்

உனக்குள் வாழும்
என்னை என் உயிர்
இந்த உடல் பிரிந்தாலும்
நான் வாழ்வது நிச்சயம்

Advertisements

நிலா பெண்ணே


ஏ நிலா பெண்ணே,
எத்தனையோ நாட்கள்
என்னை சுற்றி வந்தாய்,
நீ என் அருகில் இருக்கையில்
உன் அருமை
அறியாமல் இருந்தேன்

எனக்கும் ஒருநாள்
உன் மீது காதல் பிறந்திட
நீ என்னிடம்
தேடிய அன்போடும்,
காதலோடும் ஓடோடி

வந்து தேடினேன்

உன்னை..

ஏ நிலா பெண்ணே என்று
கூவி அழைத்தேன்,
உன்னோடு பாடி மகிழ்ந்திட
நினைத்தேன்.
என் கூக்குரல் கேட்டும்
உன்னைக் காணாது
துடித்தேன்.
நான் உன்னை
தேடி வர
கால தாமதமானதால்
நீ கணவன் வீடு
சென்றாய் என் அறிந்தேன்…

என் வாழ்வின் நிலா
என்னை மறந்து சென்ற

நாள் முதல்

என் வாழ்க்கை
அமாவாசை ஆனது
என்னுடைய துரதிர்ஷ்டமே…..

நிலா காதல்

என் காதலே

உன்னை நிலவென்று

சொன்னேன்,

அதனால் என்ன

என் காதல் தேய்பிறையா

இல்லை வளர்பிறையா ??

உன்னுள் நித்தமும்

என் நினைவுகள்

தேய்கின்றன,

என்னுள் நித்தமும்

உன் நினைவுகளின் சத்தம்

காற்றாய் வருடுகின்றன

எப்போதாவது

என்னை நினைத்தால்

நிலவை பார்த்திடு

என் காதல்

அந்த நிலவாக

உன்னைச்

சுற்றியே வருவது

தெரியும்

தேவதையா நான்?

நான் எழுதுகிற கவிதைகள் யாவும்

காதலை பற்றியே இருக்கிறதோ என

எனக்குள்ளே ஒரு உணர்வு.

எதை எதையோ எழுதிட

எனக்கும் கூட ஆசைதான்.

இருந்தும் தெரியவில்லை

எதைப்பற்றி எழுதுவதென்று.

ஏழையின் கண்ணீரைக்

கண்டவுடன்

கொதித்துவிடும் நரம்பு,

என்னால் என்ன செய்யமுடியும்

என்று ஏளனமாக

என்னை நானே

பார்ப்பது இயல்பு.

கண்ணால் காதல்

பேசும்

அடுத்த வீட்டு இளைஞன்,

அழகான சிரிப்பினில்

அனைவரையும்

கவர்ந்திடும்

மாடி வீட்டு பாப்பா,

கதை கேட்க

யாராவது வருவார்களா

என்று ஏங்கிடும்

எதிர்வீட்டு தாத்தா,

என்று எத்தனையோ

என்னைச் சுற்றி நடந்தாலும்,

எழுதிட நினைத்து

வார்த்தைகளை

சேர்த்திடும் நேரத்தில்

என் நினைவுகள்

சுற்றுவது

என்னை தேவதையாக

நினைக்கும்

உன்னை மட்டுமே….

வைதேகி10

வைதேகி வீட்டுக்குள் நுழையும் நேரம் அங்கு ராஜேஷைக் கண்டு கொஞ்சம் நானி கோனியே எப்ப்போ வந்தே என்று இழுத்தாள். ராகவ் இவனுக்கு ஃபோன் பண்ணி இருப்பானோ என்று அவளுக்கு ஒரு நினைப்பு,  இவன் கேலி செய்வானே என்று நினைத்தபடியே என்று உள்ளே நுழைந்தாள்.

அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. ராகவ்வை நினைத்த மாத்திரத்தில் அவளிடம் இருந்த அந்த வெட்கம் எல்லா பெண்களுக்கும் இதுபோல தான் இருக்குமோ என்று அவளுக்கு தோன்றியது.

ராஜேஷுக்கு காபி கொடுக்க வந்தாள் பூரணி. அப்போது தான் வைதேகி வந்ததை கவனித்த பூரணி, ஒரு குரல் கொடுத்து இருந்தா உனக்கும் காபி கலந்து இருப்பேனே டீ என்று முடிப்பதற்குள், அவனது காபியில் பாதியை வைதேகி இந்தா பிடி என்று ராஜேஷ் அவளிடம் பாதியை அந்த டபராவில் தந்தான்.

என்ன இன்றைக்கு தீடீர் விஜயம் என்றாள் வைதேகி. ஒன்னும் இல்லை டீ ராகவ்வைப் பற்றி அவனது அலுவலகத்தில் விசாரித்தவரை எல்லாம் மிகவும் நல்ல விதமாக தான் சொல்றாங்கனு உன்கிட்ட சொல்லிட்டு போக வந்தேன்.

ராஜேஷ் அதை சொல்லியவுடன் வைதேகி முகத்தில் சந்தோசத்திற்கு பதில் ஒரு நொடி என்ன செய்வது என்று இன்று வந்த ஃபோன் கால் பற்றி சொல்வதா என்று யோசித்தவளை என்ன டீ யோசிக்கிறே?? வேறு ஏதாவது விசாரிக்க வேண்டுமா என்றான்.

இல்லை டா, அவர் இன்னிக்கு ஃபோன் பண்ணி நாளைக்கு நிச்சயதார்த்த புடவை வாங்க என்னையும் அவாளோட வர வேண்டும் என்று சொன்னார். நான் என்ன சொல்றதுனு தெரியாமல் அம்மாகிட்ட பேசச் சொல்லிட்டேன். அம்மாவை பார்த்து உனக்கு யாராவது ஃபோன் பண்ணினாங்களா என கேட்டாள்.

நான் அவங்களையே பார்த்து வாங்கச் சொன்னேன், ஆனால் மாப்பிள்ளை நீ தான் வந்து செலக்ட் பண்ணனும்னு கண்டிப்பா சொல்லிட்டாராம். அதனால நீ நாளைக்கு ஆபிஸிலிருந்து கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி போய் வாங்கிட்டு வந்துடு. போகும் போது ஒரு அளவு ப்ளவுஸ் கொண்டு போ. அவங்க தையல்காரார் ரெண்டு நாள்ல தெச்சு கொடுப்பாராம்.

வைதேகி என்ன அமைதியா இருக்கே, ஏதாவது பிரச்சனையா என்றாள் அம்மா. அப்படி எதுவும் இல்லைமா. உனக்கு தெரியாதா, நானா போய் எதுவும் வாங்க மாட்டேன், எல்லாம் நீ தானே எனக்கு செய்யறே. அப்படி இருக்க இது புதுசா இல்லையா என்று யோசித்தேன்.

கொஞ்சம் பயமா இருக்கு, கொஞ்சம் கலவரமாவும் இருக்கு. என் மனசில இருக்கிற மாதிரி உனக்கும் இருக்குமே மா என அவள் சொல்லவும், பூரணி அழவே ஆரம்பித்து விட்டாள். எப்படி இருந்தாலும் பெண் குழந்தைகள் வேற வீட்டிற்கு போக வேண்டியவர்கள் தானே என்று ராஜேஷ் சொல்ல ஆரம்பித்தான். அது எனக்கும் தெரியும் டா, ஆனால் என் அன்பும், பாசமும் அரவனைப்பும் எல்லாமாக ராகவ் அவளுக்கு இருக்கான்னு தெரியும் வரை இந்த பயம் இருக்கத் தான் செய்யும் என்று பூரணி சொல்லவும், அம்மா கவலைப் படாதே ராகவ் என்னை நல்ல படியா பார்த்து பார் என்றாள் கொஞ்சம் வெட்கத்துடன்.

என்ன இருந்தாலும் அம்மா மாதிரி பார்த்துக்க முடியாது ஆனால் என்னை எங்கும் எப்போதும் விட்டுக் கொடுக்காமல் பார்த்து பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

எப்படி டீ இந்த பொண்ணுங்க இப்படி மாறி போறீங்க என்றான் ராஜேஷ். தாங்க முடியலை மா எனக்கு, இங்க இருந்தேன் நான் என் வீட்டில உதை வாங்கனும் நான் கிளம்பறேன் என்று அவன் சொல்லவும் கொஞ்சம் சகஜமான நிலைக்கு எல்லோரும் வந்தார்கள்.

வினோவை இங்க வரச் சொல்லேன் ரெண்டு பேரும் சாப்பிட்டு போகலாமே, இல்லை வைதேகி அவளை சப்பாத்தி குருமா பண்ண சொல்லி இருக்கேன். நீங்க எல்லோரும் அங்க வாங்களேன் என்றான் ராஜேஷ். இல்லை டா எனக்கு டயர்டா இருக்கு. கொஞ்சம் முல்தானி மெட்டி போடனும், தலை சூடா இருக்கு, கொஞ்சம் ஆயில் வைக்கனும், அம்மாவோட பேசனும், அடுத்த வாரம் ஒரு நாள் வினோவை பண்ணச் சொல்லுடா என்றாள் வைதேகி.

ஒஹோ நீங்க உங்க ஆள்கூட வெளியில் போக போறே அதுக்கு தான் இந்த ஆயில், முல்தானி எல்லாமா ??? நான் ஒரு மக்கு பாரு உன்னை இப்ப போய் சப்பாத்தி குருமா சாப்பிட கூப்பிட்டேன்.

சீக்கிரமா வந்துடு, லேட் ஆச்சுனா எனக்கு ஃபோன் பண்ணு நான் வந்து பிக்கப் பண்றேன் இல்லைனா ராகவ்வை கொண்டு வந்து விடச் சொல் என்றான். இது நல்லா இருக்கு டா என்று வைதேகி புன்னகைத்தாள். சரி நான் கிளம்பறேன் பை, நாளைக்கு நல்ல புடவையா செலக்ட் பண்ணிக்கோ கண்றாவியா எதையாவது வாங்கிக்காதே என்று சொல்லியவாறே அவனது பைக்கை உதைத்தான்.

அவன் புறப்பட்டதும் வைதேகி தன்னுடைய மாய உலகிற்கு செல்ல ஆயத்தமானால். உள்ளே சென்று முல்தான் மெட்டியை பன்னீருடன் கலந்து முகத்தில் பூசினாள். பெண் பார்க்க வரும் போது கூட இப்படி எதுவும் பண்ணலையே என்று அவளுக்குள் சிறிது வெட்கப்பட்டாள். எல்லோருக்கும் வருமே காதல் அதே தான் இவளுக்கு கொஞ்சம் லேட்டா வந்திருக்கு, கல்யாணம் யார்கூடனு தெரிஞ்சு அந்த நபரின் மீது காதல்.

பூரணி வந்து வைதேகியை சாப்பிட கூப்பிட்டாள் அப்போது தான் இருபது நிமிடம் ஆனது நினைவில் வந்தது. முகம் அலம்பி வருகிறேன் மா என பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

இரவு சிற்றுண்டி முடித்து அம்மாவுடன் சிறிது நேரம் பேச வேண்டும் போல இருந்தது. ஆனால் என்ன பேசுவது, என்று தெரியவில்லை. அம்மா எனக்கு கொஞ்சம் தலைக்கு ஆயில் வைச்சு விடறியா ??? கொண்டு வா டீ என்றாள் பரிவுடன் பூரணி.

அம்மா ஏதோ நமக்குள்ள ஏதோ ஒரு பிளவு இருக்க மாதிரி இருக்கு மனசே சரியா இல்லை. உன்கூட பேசனும் போல இருக்கு என்ன பேசறதுனு தெரியலை வைதேகி சொல்லவும் பூரணி தவித்து போனாள். அப்படி எதுவும் இல்லை வைதேகி, இது வெறும் பிரமை தான். நாம் எப்போதும் போல தான் இருக்கிறோம். இந்த மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்.

இது நாள் வரை நான் உன்னை கண் இமைக்குள் வைத்து காத்தேன். ஆனால் இனிமேல் நீ என்னை மாதிரி அந்த குடும்பத்தைக் காப்பாத்தனுமேனு ஒரு கவலை எனக்கு. மேலும் அவர்களோடு ஒத்து போகனும் உனக்கு என்றாள்.

சரி அதை விடு நாளைக்கு என்ன கலர் புடவை வாங்க போறே. முதல் முறையாக நீயே உனக்காக ஒரு செலக்‌ஷன் செய்ய போறே. அதான் உனக்கு கலவரம். எது நீ வாங்கிண்டாலும், அது எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி வாங்கு என்றாள்.

உனக்கு பிடிச்ச கருப்பு கலர் வாங்கிடாதே, மேலும் வெள்ளை, க்ரிம் கலர் வாங்காதே. நல்ல பளீச்னு இருக்கிற கலரா வாங்கிக்கோ என்றாள். லைட் கலர் வாங்கினா பளிச்னு இருக்காது. நல்லதுக்கு வாங்கும் போது மங்களகரமா வாங்கிக்கோ. இதுகூட சொல்ல கூடாது தான் இருந்தாலும், நீ எப்படி வாங்க போறேனு எனக்கு தெரியாது, அதான் சொல்றேன் என்ற பூரணியை பாசமாக அனைத்தாள் வைதேகி.

சரி நீ போய் தூங்கு, ஒன்னும் யோசிக்காதே. எல்லாம் நல்ல படியாக நடக்கும். நடக்க வேண்டியது தான் நடக்கும். எதுவும் நம்ம கையில் இல்லை. வருவதை ஏத்துக் கொள்கிற மனசை வளர்த்துக்கோ. உனக்கு இருக்கு இருந்தாலும் கொஞ்சம் அமைதியா யோசிக்கும் நிலமைக்கு வந்தால் இன்னும் நல்லா இருக்கும்.

பதறிய காரியம் சிதறும் என்பது தான் சரி. எப்பவும் அவசரமா எடுக்கும் முடிவுகள் நூற்றிற்கு பத்து சதவிகதம் தான் சரியாக இருக்கும். இது வரைக்கும் அப்படி நடந்து இருந்தாலும் அது உன்னை மட்டுமே பாதிக்கும் அதனால் கொஞ்சம் என்னையும் மட்டுமே பாதித்து இருக்கும். ஆனால் இனிமேல் அப்படி நடந்தால் அது ஒரு குடும்பத்தை பாதிக்கும்.

எப்பவும் நிதானமாக இருப்பது நல்லது என்று சொல்லிவிட்டு படுக்க சென்றாள்.

அம்மாவின் அரவனைப்பிலிருந்து விடுபட்ட வைதேகி, அவளது அறிவுரையில் ஆழ்ந்து போனாள், அப்படியே அயர்ந்தும் போனாள்.

மறு நாள் காலையில் சீக்கிரமே அலுவலகத்திற்கு கிளம்பினாள் வைதேகி. அவள் முடிக்க வேண்டிய வேலையை முடிக்காவிட்டால், அவளால் சரியான நேரத்திற்கு கிளம்ப முடியாது. பரபரப்பாக வேலையில் மூழ்கினாள். எப்போதும் விட அவள் தனது வேலையை ஒரு மணி நேரம் முன்னதாகவே முடித்துக் கொடுத்தாள். அவளது அலுவலகத்தில் இதற்கு மேலும் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்பதால் அவளது மேலாளரிடம் தயங்கிய படியே தான் இன்று சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்றும், வெட்கத்தோடு அதற்கான காரணத்தையும் சொன்னாள். அவரும் அவளை வாழ்த்தியதோடு அவளுக்கு செல்ல அனுமதியும் கொடுத்தார்.

எப்போதும் ராகவ் ஃபோன் செய்த பின் பேசி வந்தவள், முதல் முறையாக அவனுக்கு ஃபோன் செய்யலாமா என்று யோசித்தாள். அவள் யோசிக்கும் நேரத்தில் அவளது மேஜையில் இருந்த தொலைபேசியில் மணி அடித்த்து. ராகவாக தான் இருக்கும் என்று வேகமாக எடுத்தவள், மறுமுனையில் ராகவ் குரல் கேட்டு இப்போது தான் உங்களுக்கு ஃபோன் பண்ணலாமா என்று நினைத்தேன் நீங்களே பண்ணிட்டீங்க என்று சொன்னாள். எத்தனை மணிக்கு கிளம்பனும் எங்கே வரனும்னு சொன்னேள்னா நான் அங்கு வருகிறேன் என்றாள்.

இல்லை நானே வந்து உன்னை பிக் பண்ணிக்கறேன். இன்னும் பத்து நிமிஷம் கழித்து கிளம்புவதாக சொன்னான். வேற யாரெல்லாம் வருகிறார்கள் என வைதேகி கேட்டதும் அவனுக்கு என்ன சொல்வது என்று தோன்றவில்லை. சாரி வைதேகி அம்மா கிட்டே அதைப் பற்றி கேட்கவில்லை. உனக்கு யார் வரவேண்டும் என்று சொல் என்று அவளிடம் சொல்லவும், அவள் உங்க அம்மா அக்கானு யாராவது வருவாங்களா இல்லையா??? உங்க உறவுகளோட வாங்கறதுல தான் எனக்கு சந்தோசம் என்றாள்.

சரி மேடம் தங்கள் உத்தரவு என் பாக்கியம். அம்மாகிட்டே  பேசிட்டு யார் வருகிறார்களோ அவர்களோடு வருகிறேன் என்றான். கிளம்பறதுக்கு முன்னாடி ஃபோன் பண்றேன் பை என்று முடிந்தது அந்த அழைப்பு.

அவளுக்குள் ஒரு தவிப்பு இருக்கிறது, இவன் தனியாக வந்தால் அவள் தனக்கு வந்த அந்த தொலைபேசி அழைப்பைப் பற்றி அவனிடத்தில் பேசலாம் என்று நினைத்த நேரத்தில் அதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்றும் யோசிக்கலானாள்.

எது எப்படி இருந்தாலும் இன்று அவனிட்த்தில் இதைப் பற்றி பேசிட வேண்டும். வீணாக மனதைக் கலவரப் படுத்தும் ஃபோன் காலாக அது இருக்கும் பட்சத்தில் கேட்டு தெளிந்து விடுவது உத்தமம் என்று முடிவு செய்தாள்.

சொல்லியபடியே பத்து நிமிடத்தில் மறுபடியும் ராகவ் வைதேகியை அழைத்து தான் கிளம்புவதாகவும் இருபது நிமிட்த்தில் வருவதாகச் சொன்னான். அவளும் தான் தயாராக இருப்பதாக கூறினாள். சொல்லியபின் ரெஸ்ட் ரூம் சென்று தன் தலை கோதினாள், முகம் அலம்பி துடைத்து, கொஞ்சமாக பவுடரும் பூசி தனது ஒப்பனை சரி பார்த்து வெளியில் வந்தவள், மேரியிடமும் தனது நிச்சயத்திற்கு புடவை வாங்க போவதாகவும் மற்றவை நாளை பேசுவதாகச் சொல்லி கிளம்பினாள்.

அவள் வாசல் வரவும் ராகவ் காரை அவள் அலுவலக வாசலில் நிறுத்தவும் சரியாக இருந்தது. காருக்குள்ளே எட்டிப் பார்த்த்வள் யாருமில்லாததைக் கண்டு புருவத்தை உயர்த்துவதைப் பார்த்த ராகவ், அம்மா தான் உன்னையும் என்னையும் மட்டும் போகச் சொன்னது. என்னோட சிஸ்டர்சும் அதான் வரலை.

உன்கிட்ட பேசினதுக்கு அப்புறம் என்னோட அம்மாகிட்டே கேட்டேன் என்னம்மா நீ கிளம்பலையானு, அம்மா தான் வரவில்லை என்றும், நேற்றே ப்ரியாவும் வரலை, அவங்க ரெண்டு பேரும் போகட்டும், அவர்கள் இருவரும் தனியா பேசிக்கறதுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கும் என்று சொன்னதாகவும் நாம் இருவர் மட்டும் தான் போகிறோம் உனக்கு ஏதாவது ஆட்சேபம் என்றாள் சொல் என்று மென்மையாக கேட்டான்.

அப்படி எதுவும் இல்லை, இருந்தாலும் யாரவது வந்து இருந்தால் அவர்களோடும் நான் பேசவதற்கு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கும் இல்லையா என்றாள். உங்க கூட இருக்க போற நேரத்தைவிட உங்க வீட்டில இருக்கிற நேரம் தான் அதிகமா இருக்கும். அவங்களையும் பார்த்து பேசி கொஞ்சம் பழகினால் ஒரு விதமான நெருக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்குமேனு நினைத்தேன், வேற ஒன்றுமில்லை. எனக்கும் உங்களோட பல விஷயம் பேசனும் என்றாள். எந்த கடைக்கு போகனும் என்றாள் ??? உனக்கு எந்த கடைக்கு போகனும் என்று சொல்லு என்றான். குமரன் சில்க்ஸ் போகலாமா?? எனக்கு பட்டு புடவை நிறைய வாங்கிய அனுபவம் கிடையாது என்றாள் வைதேகி. பட்டு புடவைனு இல்லை எதுவுமே நானாக வாங்கியது கிடையாது, எல்லாமே என்னோட அம்மா தான் வாங்குவா என்றாள்.

என்ன பொன்னு நீ, உனக்கு என்ன வேணும்னு நீ தானே முடிவு செய்யனும் என்றான். அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. எனக்கு என்ன வேணும்னு என்னை விட அம்மாக்கு நல்லா தெரியும். நான் எது செய்தால் எனக்கு நல்லது என்று என் அம்மாவை விட வேறு யாருக்கு நல்லா தெரியும் என்று அவனுக்கு பதில் கேள்வி எழுப்பினாள். நான் வருத்தபடுகிற மாதிரி என்னோட அம்மா எதுவும் பண்ணினது இல்லை. எங்க அம்மாவுக்கு பிடிக்காத எதையும் நானும் செய்தது இல்லை.

நானாக முடிவு செய்தது உங்களை திருமணம் செய்வது மட்டும் தான் அதுவும் அம்மா செலக்க்ஷன் தான் ஆனா டிசிஷன் என்னோடது தான் என்றாள்.

இதை கேட்கும் போது எனக்கு பெருமையாக தான் இருக்கு. இருந்தாலும் இனிமேல் எல்லாமே நீ தான் எல்லோருக்கும் செய்யனும் அது மாதிரி உன்னை மாத்திக்கோ என்றான். நீ எப்படி ஒரு குடும்பத்தை நிர்வாகம் பண்றது என்று யோசித்தாயா??? உனக்கு சப்போர்ட்டா நான் இருப்பேன் கவலைப் படாதே.

அது எல்லாம் தானா வரும், யாரும் கத்துண்டு கல்யாணம் பண்றது இல்லை என்று பட்டென்று சொல்லிய பின் சாரி கொஞ்சம் வேகமா சொல்லிட்டேன் என்றாள். உண்மைதான் சொன்னாய் ஆனாலும் தனக்கு என்ன வேணும்னு தெரியாதவளுக்கு எப்படி தனது குடும்பத்தில் இருப்பவர்களை சமாளிப்பாள் என்று யோசித்தான். எப்படி இருந்தாலும் நல்லது தான்.

உங்க கிட்டே இன்னும் கொஞ்சம் எனக்கு பேசனும் இப்போ பேசலாமா இல்லை போகும் போது பேசவா என்றாள்.

இது என்ன கேள்வி, இப்பவும் பேசிக் கொண்டு தானே இருக்கிறோம், இல்லை இப்போ வேண்டாம், ஏற்கனவே நாம கொஞ்சம் ஜாஸ்தி தான் பேசிட்டோம் என்று நினைக்கிறேன் போகும் போது பேசறது நல்லது. இப்போ புடவை வாங்குற அந்த விஷயத்தை முதலில் பார்ப்போம்.

ராகவ் தனது சகோதரிகளுக்கு அவர்களின் திருமணத்திற்கு குமரன் சில்க்ஸில் தான் புடவை வாங்கியதாகவும் செண்டிமெண்டாக அங்கேயே போகலாமா என்றான், வைதேகி சரி என்று சொல்ல, இருவரும் குமரன் சில்க்ஸில் நுழைந்தார்கள்.

உள்ளே நுழையும் முன், வைதேகி ராகவிடம் உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று கேட்க, கருப்பு என்றான், சிரித்தவள் கருப்பு, வெள்ளை  இல்லாம வேற கலர் சொல்லுங்க என்றாள். எனக்கு ப்ளு கலர் பிடிக்கும் வைதேகி என்றான்.

நல்ல சரிகை வைத்த புடவை இருக்கும் பகுதிக்கு அவளை அழைத்துச் சென்றான். அவள் முதல் முறையாக தனக்கு வாங்குவதற்காக வந்த்தால் கொஞ்சம் சங்கோஜமாகவே இருந்தது.

அவளுக்கு பதில் ராகவ் அங்கு இருந்த பெரியவரிடம் சேலைகளைக் காட்டும்படி சொன்னான். அவரும் எடுத்து அடுக்கினார். நீலம், பச்சை, கருப்பு, சிகப்பு என்று எடுத்து அடுக்கினார். அவள் கை வைத்த பச்சை நிற புடவையை பிரித்துக் காட்ட எடுத்தார். அவளோ வேண்டாம் அப்படியே வைக்குமாறு சொன்னாள். ராகவ் ஏன் உனக்கு பிடிக்கலையா என்ன என்றவுடன், இல்லை இதே கிளி பச்சை நிறத்தில் பிங்க் பார்டர் இருக்கிறதா என்று பாருங்கள் என்றாள்.

கிளி பச்சையும் பிங்க் நிற பார்டரும் எனக்கு மிகவும் பிடித்த காம்பினேஷன் என்றாள். அந்த பெரியவர், இப்போ அது மாதிரி இல்லை என்றும் இந்த அளவுக்கு சரிகையில் லைட் கலர் வராது என்றார்.

கொஞ்சம் சரிகை கம்மியாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கு கிளிப் பச்சை நிறம் வேண்டும் என்றாள். அவரும் தேடுவதற்காக செல்ல, ராகவ் உனக்கு செலக்ட் பண்ணவே தெரியாதோ என்று நினைத்தேன், பரவாயில்லை எது வேண்டுமோ அதைக் கேட்கும் தைரியம் இருக்கிறது. பதிலுக்கு உங்களையே செலக்ட் பண்ணி இருக்கிறேனே இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு என்றாள். அந்த பெரியவர் வந்து அந்த காம்பினேஷன்ல எதுவும் இப்போது இல்லை என்றார்.

மேலும் இது தொடர்ந்தாள் அவள் வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்று பயந்த ராகவ், பரவாயில்லை, நான் அவளுக்கு வேறு செலக்ட் செய்கிறேன் என்று சொல்லி  உன்னோட பெர்மிஷனோட நானே செலக்ட் பண்ணவா என்றான்.

அவளும் சரி என்று சொல்ல, அவள் முதலில் எடுத்த பச்சை நிற புடவையை எடுத்தான். அதனை பிரித்து பார்க்கையில் மிகவும் அழகாகவே பட்டது. ஏன் வைதேகி உனக்கு இது பிடிக்கலையா, இந்த புடவையில் மிகவும் அழகாக நீ இருப்பாய் என்று அவன் சொல்லியதும் வேறு எதுவும் செலக்ட் செய்ய மனமில்லாமல், அந்த புடவைக்கு ஏற்ற மாதிரி ப்ளவுஸ் வாங்குவது என்றும் முடிவானது.

கவலைப் படாதே என்று அவள் கரம் பற்றி,  உனக்கு பிடித்த அந்த கலர் காம்பினேஷனை என்னோட முதல் பரிசாக உனக்குத் தருவேன் என்றான்.  அந்த ஸ்பரிசத்தில் அவனது அன்பினை மொத்தமாக உணர்ந்தவளாக மகிழ்ந்தாள். இருவரும் மிகவும் சந்தோசமாக கிளம்பினார்கள்.

வைதேகி9                                                                                                                                                                  வைதேகி11