Tag Archive | ஏ.ஆர்.ஆர் பாடல்

Yazhini-Part2

ஆஷா போஸ்லே பாடிய செண்பகமே செண்பகமே” பாடலை மிகவும் சாதரணமாக பாடிய அந்த ஸ்டைல் இமாலய சாதனை இந்த இளம் கன்றால் மட்டுமே முடியும். இந்த பாடல் ஒன்றும் சாதரணமாக பாடக்கூடிய பாடல் அல்ல…..

எஸ்.பி.ஷைலஜா பாடிய ”ராசாவே உன்னை நான் எண்ணிதான்” பாடலை மிக அற்புதமாக பாடி அசத்தியவள் இந்த குட்டி… எப்படி உன்னால் இந்த சின்னஞ்சிறு வயதில் இத்தனை அழகாக இந்த பாடல்களை பாட முடிந்தது?

இவள் பாடிய அனைத்துப் பாடல்களும் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்திகிற பாடல்கள், அவை அனைத்திற்கும் ஏற்றார் போல இந்தக் குட்டி குயில் எப்படி அந்தப் பாடல்களுக்கு உயிர் கொடுத்தாள் என்று தெரியவில்லை.

”தேன் சிந்துதே வானம்” எப்படி தான் இந்த வாண்டு அத்தனை பாடல்களையும் மனப்பாடம் செய்ததோ? ”கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும், கையோடு கைகள் உறவாட வேண்டும், கண்ணங்களே இதம் பதம்” எனும் போது அவள் கொடுத்த அந்த பாவம், ஒராயிரம் ஜானகி பாடல்களைக் கேட்ட திருப்தி வந்தது. உன்னுடைய வயதில் இந்த உணர்வு பூர்வமான பாடலுக்கு இதை விட அருமையாக உயிர் கொடுக்க ஒருவராலும் இயலாது கண்ணே… உன் அம்மாவை உனக்கு சுத்திப்போட சொல்லுடா செல்லம்….

”நானே வருவேன் இங்கும் அங்கும்” என்ற பாடலுடன், அன்பே வா அருகிலே என்ற படலையும், அதனோடு காஞ்சனாவில் இருந்து ஒரு பாடலை இனைத்து பாடியது சூப்பர் குட்டி.

எந்த பாடலைச் சொல்வது? கடைசியாக பாடியமாதா உன் கோவிலில்” பாடல்தான் நான் இப்போது விரும்பிக் கேட்கும் சுப்பிரபாதம். காலை எழுந்தவுடன் யாழினியுடன் தான் எனது நாள் தொடருகிறது. என்ன ஒரு தெளிவு இந்த குழந்தையிடம்தான். இது விஜய் டிவி தந்த நம்பிக்கை நட்சத்திரமா, இல்லை விஜய் டிவி நேயர்களுக்கே வந்த நம்பிக்கை ஒளியா?

இந்த வாண்டு பாடிய போது எஸ்.ஜானகி பிள்ளைக் குரலில் பாடிடும்போது ஒரு சந்தோஷம் இருக்கும், ஆனால் அந்த எஸ்.ஜானகி பாடிய பாடலை இந்தக் குழந்தை பாடும்போது ஒரு பெருமை ! எப்படி இப்படி ஒரு அதிசயம் இந்த சின்ன குரலில் என்று ! !  உனக்கு கலைவானியின் அருள் நிறைய இருக்கிறது என்றே தோன்றுகிறது அதனால் தானோ யாழினி என்று பெயரும் வந்தது??

”மழையே மழையே இளமை முழுதும்” என்ற பாடலைக் கேட்டபின் இவளது பக்தையில் இருந்து, பைத்தியமாகவே மாறிவிட்டேன். எஸ்.பி.பாலாவுடன் எஸ். ஜானகியுடன் இனைந்து பாடிய அருமையான பாடல், இவள் ஒருத்தியே பாடியது ஆச்சர்யமில்லை. ஆனால் இந்த பாடல் பல இளைஞர்களுக்கு கூட தெரியாது. அம்மா என்ற படத்தில், பிரதாப் போத்தனுடன், சரிதா இனைந்து நடித்த படம்., இந்த பாடல் வரிகள் மழையில் கதா நாயகியும், கதா நாயகனும் பாடிடும் மோகப் பாடல். அதனையும் இந்தக் குட்டி அழகாக பாடியது. பாடல் முடியும் தருணத்தில் ஒர் வார்த்தையில் இவளது குரல் கம்மியது, ஆயினும் அடுத்த வார்த்தையில் சரி செய்து பாடலை முடித்தாள். என்ன சொல்ல உன்னை கொஞ்ச வார்த்தைகள் இல்லை.

உலக நாயகன் கமல் நடித்த சதிலீலாவதி என்ற படத்தில் வந்த ”மாறுகோ மாறுகோ” கமல் பேசிடும் வசனத்துடன், கோவை சரளாவின் வசனத்தையும் பேசியதுடன், சித்ரா பாடிய பாடலையும், இவள் பாடியதும் சூப்பர். கப்பக் கிழங்கா என்று கேட்ட போது சித்ரா மட்டும் அல்ல பார்த்தவர்கள் அத்தனைப் பேரும் சிரித்து இருப்பார்கள். இந்த பாடலை இவள் ஒருவளாகவே பாடியதும், வசனங்களை பேசியதும் இவளால் மட்டுமே முடியும். உனக்குள் ஒரு நல்ல நடிகை இருக்கிறாள் என்று சொல்லுவதைவிட உனக்குள் ஒரு நல்ல ரசிகை இருக்கிறாள்… அதனோடு உன்னிடம் நல்ல குரல் வளமும் இருப்பதால், இரட்டிப்பு மகிழ்ச்சி தர முடிகிறது உன்னால்…..

ஒரே நாள் என்ற பாடலை சீனியர் ஒருவருடன் பாடியதும், புத்தம் புது ஓலை வரும் என்ற பாடலை பாடிய போது, ஷாலினியும், ஷைலஜாவும் ரசித்தது என்னவோ என் மகள் பாடியதை ரசித்தது போல இருந்தது.

ஹேராம் என்ற படத்திலிருந்து வரும் ”நீ பார்த்த பார்வைக்கு” நான் என்ன சொல்ல, வந்திருந்த அத்தனை நடுவர்களும் உன்னை புகழ்ந்து தள்ளினார்கள். நான் சொன்னால் அது கமல் படப்பாடல் என்று புகழுவதாக வரும்… யாழினி பாடிடும் போது கமல் படப் பாடல்களும் அழகு பெறுகிறது.

”கடவுள் தந்த அழகிய வாழ்வு” என்ற பாடலில் கருணை என்று இந்தக் குழந்தை சொல்லிய வார்த்தையில் அந்த தருணத்தில் கடவுளின் வடிவமாக கருணையுடன் என் கண் முன்னே தெரிந்தாவள் நீ மட்டுமே. உன் முகத்தில் இருக்கும் அந்த கனிவு ஒன்று போதும் உன்னை வெற்றிக்கு கொண்ட செல்ல.

மனோவுடன் இனைந்து பாடிய ”ஆத்தங்கரை மரமே பாடல்” ஒன்று போதும், இவளுக்கு மேடைகள் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று சொல்ல… இவள் பாடிய அனைத்துப் பாடல்களுமே எந்தவித பயமும் இல்லாமல் பாடியவிதம் சூப்பரோ சூப்பர் மா.

அழகே உனது பலம், உனது குரல் மட்டும் இல்லை, உனது நம்பிக்கையும் தான் செல்லமே…. உன்னிடமிருந்து நான் கற்றுக் கொண்டது நம்பிக்கை, நான் மட்டும் அல்ல, உன்னை ரசித்த அனைவரும் ரசித்த விஷயமாக இருக்கும். நம்பிக்கை என்ற வார்த்தைக்கு யாழினி என்று அர்த்தமோ??? ஒரு சுற்றில் அனிதா குப்புசாமியும் அதையே சொன்னார், இந்த சின்ன பெண்ணிற்குள் எத்தனை நம்பிக்கை, உன்னை சுடர் விட செயத விஜய் டிவிக்கு ஒரு நன்றி.

”கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே” என்ற பாடல் இந்த வயது குழந்தைகள் பலருக்கு தெரியவே தெரியாது, இந்த மெல்லிசை குயில் ஒர் குத்து பாட்டையும் எவ்வளவு அழகாக பாடுகிறது என்று வியக்கும் நேரத்தில், மாலதி பாடிய ”கும்பிட போன தெய்வம்” பாடலை அசாதாரணமாக பாடி அசத்தியது இந்த மழலை. பேசிடும் போது மழலை, பாடிடும் போது அந்த கலைவாணியே இவள் உருவில் வந்து பாடுகிறாளோ என்றே தோன்றுகிறது.

”ஒத்தையிலே நின்னது என்ன” என்று சித்ரா வித்தியாசமான, ஒன்றும் தெரியாத குரலில் பாடிய பாடலை, அதே சித்ரா முன்னிலையில் பாடியதும், சித்ரா இந்த சிட்டு பட்டு குட்டியை பாராட்டிய விதம் – என்னை விட அருமையாக பாடினே நீ என்றதைவிட வேறு ஒரு ஆசிர்வாதமோ,  அவார்டோ எதுவும் தேவையில்லை. இப்படி திறந்த மனதுடன் இந்த சின்னஞ்சிறு குயிலை பாராட்ட ஆஹா அது எங்கள் தங்க குயில் சித்ராவால் மட்டுமே முடியும்.

மலையாளத்தில் எஸ். ஜானகியின் பாடலை பாடி சாக்லேட் ஷவர் வாங்கியது இந்த வயதில் இவளால் இது முடியும் என்றால், சர்வதேச அளவில் பாட முடியும் என்பதற்கு ஒரு சான்று. அந்தப் பாடலை மனப்பாடம் செய்தது மட்டும் இல்லாமல், அதனை சிறப்பாக பாடியது சபாஷ் தங்கம். நீ சுடர்விட்டு ஒளிர்வாய் என்பதற்கு இந்த சாக்லேட் ஷவர் ஒரு சான்று.

”நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா” என்ற எமது மகாகவியின் பாடலை இந்த குழந்தை பாடிய போது, இவளிடம் நானும் சரணடைந்தேன்.துன்பமினியில்லை சோர்வில்லை சோர்வில்லை தோற்பில்லை” எனும் வரிகளில் அன்பே உனது குரலில் வந்த வரிகளால் எனது துன்பங்களும் பறந்தது, சோர்வும் என்னை விட்டு விலகியது.

”காற்றோடு குழலின் நாதமே” என்று இவள் பாடியபோது, ஏழு கார்நாடக ஜாம்பவான்கள் அங்கு குழுமியிருக்க இவள் இந்த பாடலை பாடுகிறாளே என்று எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஆனால் இவள் பாடிடும்போது அங்கு இருந்த இசை அரசி சுதா ரகுநாதானின் முக பாவனைகளை கண்டபின் மட்டுமே கொஞ்சம் அமைதியானது என் மனது. ஆனால் இந்தக் சுட்டிப் பெண்ணோ யார் இருந்தா எனக்கு என்ன, எனக்கு என்ன வருகிறதோ அதைப் பாடுகிறேன், தவறுகளை திருத்திக் கொள்வேன் என்பது போல மிகவும் துணிச்ச்சலோடு கர்வமில்லாமல் பாடியது இந்தக் குழந்தை. நித்யஸ்ரீ இவளை பாராட்டிய விதம் அருமை. இந்தக் குழந்தையை பாராட்டாத இசைக் கலைஞர்கள் யாருமே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

சோகமான பாடல்கள் சுற்றில் இவள் பாடிய பாடலை என்ன சொல்வது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலகுறைவால் அமெரிக்கா சென்ற போது பட்டி தொட்டி எல்லாம் பாடப் பட்ட பாடல். ”இறைவா உன் மாளிகையில் “ என்ற பாடல் ஒளி விளக்குதிரைப்படத்தில்.இந்தக் குழந்தைக்கு இந்த பாடல் எப்படிபட்ட சூழ் நிலை பாடல் என்று தெரியுமா என்று கூட தெரியவில்லை, ஆனால் அவள் பாடியபோது அவளது முகம் சொல்லியது, எனக்கு இந்த பாடலின் வரிகள் மட்டுமல்ல சூழ் நிலையும் தெரியும் என்று. கண்ணே இந்தக் குரலில் பாடினாள், இறைவனே இங்கு வருவான் ஏன் அந்த உயிரை தரமாட்டான்??  சாதனா சர்கம் இந்த பாடலுக்கு பாராட்டும் போது, உன் வயதில் இந்த மாதிரி ஒரு பாடலை நான் பாடியிருக்க மாட்டேன் என்று சொன்னதும், சுபா என் கண்களில் கண்ணீர் கொண்டு வந்ததும், உன்னோடும் நானும் பகவானிடம் உருகினேன் என்று சொன்னார்கள் என்றாள், இவள் எப்படி பாடி இருப்பாள்?

இவள் பாடிய பாடல்கள் பல நான் மிகவும் ரசிக்கும் பாடல்கள் என்பதால் இவளை எனக்குப் பிடித்ததா? இல்லை என் மகள் அர்ச்சனா வளர்ந்தாள் இவள் போல தான் இருப்பாள் என்பதாலா? இவளை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் என் மகளை காணும் இன்பம் வருவதனாலா? கலைவானியே கண் முன்னே பாடுவதாக தோன்றுவதா எது என்று தெரியவில்லை. பல குழந்தைகள் நன்றாக பாடியபோதும், இவளின் குரலுக்கும், இவளது துணிவிற்க்கும், இவளது விடாமுயற்ச்சிக்கும் என்று பல ஆயிரம் வாக்குகள் நான் மட்டுமே போட வேண்டும் என்று தோன்றுகிறது…..

முந்தய பதிவு                                                                                                                 தொடரும்

Advertisements

Yazhini-Super Singer

யாழினி–ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்3

இதுவரை இரண்டு ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிகளில் பங்கு கொண்டு, தோல்வியை சந்தித்த இந்த குழந்தை யாழினி. மூன்றாவது முறையாக விஜய் டிவியில் தனது முத்திரை பதிக்க வந்ததை என்னவென்று சொல்வது? விடாமுயற்சியின் மறு உருவம், கடின உழைப்பாளி, தன்னம்பிக்கையின் மறுபெயர் யாழினி என்று சொல்லவா.

குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர். ஆனால் இந்த மழலையின் குரலைக் கேட்டபின் வேறு எதுவும் இனிது என்று சொல்ல மனமில்லை, உனது குரல் மட்டுமே இனிது யாழினி என்று தான் சொல்ல தோன்றுகிறது.

என்ன குரல், என்ன தெளிவான வார்த்தைகள், என்ன பாவம், உயிர் தருகிறாள் அனைத்து பாடல்களுக்கும். இவள் மழலை மாறாது பேசும் சிறு குழந்தையா  இவள் பாடும் பாடல்களின் வரிகளுக்கான அர்த்தம் புரிந்து பாடும் ஒரு பெரிய பாடகியா என்று வியக்க வைக்கிறது. ஒவ்வொரு பாடல்களுக்கும் அவள் கொடுக்கும் உணர்வுகள், அந்த பாடலுக்கு உயிர் கொடுக்கிறது.

மச்சான் மீசை வீச்சறுவா என்று பாடி இந்த தேர்வு குழுவினரால் தேர்ந்து எடுக்க பட்டாள்.

பொடி நடையா போறவரே” என்ற பாடலை பாடிய போது சூப்பர் நல்லா இருக்கு, நிறுத்துமா செல்லம் என்று நடுவர்கள் சொல்லியும் அடம் பிடித்து முழு பாடலையும் பாடினாள் இல்லை ஒரு ஆட்டத்துடன் தான் நிறுத்தினாள்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே இந்த குழந்தை ”நினைத்து நினைத்து பார்த்தேன்” என்ற பாடலின் சரணம் பாடியபோது ”பாடகி மகதியை”  மயக்கியது மட்டுமல்ல, கண்களை நனைத்தது. ஐந்து நடுவர்களையும் எழுந்து நின்று கைதட்ட வைத்தது. இது முடிவல்ல ஆரம்பம் மட்டுமே…..

பி.சுசீலா பாடிய ”மலருக்குத் தென்றல் பகையானால்” பாடல் பிறந்த வருடத்தில் யாழினியின் அம்மா கூட பிறந்து இருக்க மாட்டார், ஆனால் அந்த பாடலை இந்த குயில் பாடிய போது, அதில் இருந்த உயிரோட்டம், ஒரு நிமிடம் என்னை மெய் சிலிர்க்கச் செய்கிறது.

”நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா” என்ற பாடலில் அந்த முதல் வரியைகூட சுசீலா பாடிய விதத்தில் என்னால் பாட முடியாது. ஆனால் இந்த குழந்தை பாடியபோது அசந்துபோனேன், ஆச்சர்யப்பட்டேன்.

நேற்று இந்த நேரம்” பாடலில் ஒரு வார்த்தை கோலங்கள் என்று வரும் ஆஹா அருமையாக பாடினாள். உன்னால் இந்த பாடலும் நான் தினமும் ரசிக்கும் பாடல்கள் வரிசையில் வந்தது.

”லேசா லேசா” என்ற பாடலை பாடி என்னை லூசாகவே மாற்றினாள்

அச்சம் அச்சம் அச்சமில்லை என்ற பாடலை அச்சம் சிறிதும் இன்றி பாடினாள் இந்த சின்ன குழந்தை. ”வெண்ணிலவே வெண்ணிலவே”  ”குளிச்சா குத்தாலம்” என்று பல ஏ.ஆர்.ஆர் பாடல்களை பாடினாளும் என் மனதில் இவள் பாடிய பழைய பாடல்கள் என்றும் நீங்கா இடம் பெறும் பாடல்கள்.

”அலேக்ரா அலேக்ரா” கந்தசாமி படத்தில் இருந்து ஒரு பாடல், என்ன அழகு, இவள் சிரித்தபடி, மிகவும் ரசித்தபடி பாடியதும், உச்சஸ்தாயியில் பாடிய போது வியந்து போனேன். உஷா உதுப் இவளை பாராட்டியது உன்னுடைய குரல் நல்ல ப்வர்ஃபுல்லா இருக்கு, எனக்கு மிகவும் பிடித்தது. என்ன ஸ்டைல்டா டார்லிங் என்று சொன்னது மிகவும் சரி தான். உன்னால் இந்த பாடல் அழகு பெற்றது பொன்மணியே….

உன்னி மேனன் சொல்லியபோது, கண்களுக்கு விருந்து என்றார் இந்தக் குட்டியின் பாடலுக்கு. குப்புசாமியோ ஒரு படி மேலே போய், பாடுவதற்கு முன் இது ஒரு குட்டி செல்ல குழந்தை, நீ பாடியவுடன், அந்த குழந்தைக் காணாமல் போய், ஒரு சூப்பர் சிங்கராக யாழினி வருகிறாள்.

ராக் & ரோல் சுற்றில் இவள் என்னை பித்து பிடிக்க செய்தாள், ”யாரடி நீ மோகினி” என்ற பாடல். என்னை மட்டுமல்ல அனைவரையும் அசத்தினாள் இந்த சிட்டுக்குருவி. இதனுடன் வேறு ஒரு பாடலை, மூச்சு விடாமல் பாடி அசத்தியது இந்த குட்டி சாத்தான்.

”போட்டுத்தாக்கு வரா வரா போட்டு தாக்கு என்ற பாடலை அனாயசமாக பாடி அசத்தினாள். 

தொடரும்