Tag Archive | அன்பு

தேவதையாக வந்தாய்

அன்பு மகளே!
தேவதையாக வந்தாய்!
தேனாய் இனித்தாய்!
பாசம் தந்தாய்
நேசத்தை ஊற்றினாய்
பரிவை வளர்த்தாய்
அன்பிற்கு அடையாமாக
அடைமொழியானாய்
உந்தன் பெயரைச்
சொன்னாலே உதடுகளில்
புன்னகை பூத்திடுது

சேயாகப் பிறந்தாயே எந்தன்
தாயாக வளர்ந்தாயே
உனக்கு சேவகம் செய்திடவே
யாசகம் செய்தேனோ
உன் தேவை யாவும்
நிறைவேற்றிடும் சேவகியாகவே
மாறிட தவமதனை செய்தேனோ

உன் கண் அசைவில்
கட்டளை இடு
என் சிரம்
அடிபணியும் என் செல்லம்
இவள் பாதங்களில்

அன்பு கட்டளைகளுக்கு
அந்த விண்மின்களும் தரை இறங்கும்
உந்தன் பாசம் சுவைத்திடவே

நீ வாடி நின்றால்
உள்ளம் தான் தாங்காதே!
நீ ஓடி வந்தது
அணைத்திட்டால் எந்தன்
இன்பம் என்றும் விலகாதே !

நீ கோபம் கொண்டு
முகத்தை திருப்பிக் கொண்டால்
என்ன செய்வேன் என் மகளே
உன்னைச் சிரிக்க வைக்க
முழு முட்டாளாக ஆவேனே!

காலமெல்லாம் நீ சிரிக்க
அதைக் கண்டு நான் ரசிக்கவும்
கண்ணீரை நான் மறைத்து
உன்னோடு சிரிப்பேனே!

பறவைகள் போலே
நீயும் சிறகடித்து பறந்திடு!
அந்த நிலவினைப் போலே
நீயும் புன்னகையில் ஒளி வீசிடு!

நீ காட்டும் அன்பிற்கும்
விண்ணிற்கும் இல்லையே எல்லை !
எந்த பிறவியில் ஏது பணி செய்து
இந்த ஜென்ம பந்தத்தின்
கடனை நானும் தீர்ப்பேனோ?
உலகம் உறவாக கொண்டேன்
இன்று உலகமே நீ என்று வந்தேன்
உணராத அன்பை உணர்ந்தேனே
உனக்குள்ளே எனக்காக
என் தேனே செந்தேனே
என் உயிர் நீ தானே
உறவானாய் உயிரானாய்
உறவுக்கு உயிரானாய்
என் உயிரே எனக்குள்ளே
எந்நாளும்

உனக்குள் வாழும்
என்னை என் உயிர்
இந்த உடல் பிரிந்தாலும்
நான் வாழ்வது நிச்சயம்

Advertisements

நான் பெறாத செல்வமே

என் முன் தோன்றிய

மழலை முத்தே

தேடுகிறேன்  நீ எங்கே

தொலைத்தால் தேடிடலாம்

என் கண்ணே உன்னுள்

என்னை தொலைத்ததால்

தேடுகிறேன்  நீ எங்கே

நான் தேடும் முன்

என் கண்முன்னே வந்த

என் தேன் கனியமுதே,

தேடுகிறேன்  நீ எங்கே

நான் தரும் முன்பே

உன்னுள் வந்த பாசம்

எந்தன் நேசமே

தேடுகிறேன்  நீ எங்கே

வந்து விடு கண்மணியே

தந்துவிடு என் உயிரான

உன் அன்பினை

தேடுகிறேன்  நீ எங்கே

mazhalai

ஊமையின் வார்த்தைகள்

வார்த்தைகளில் விளையாடுவது ஏன்??

90% கவிதைகள் பிறப்பது எப்போது???

அடுத்தவர் நமது நேசத்தைப் புரிந்திடாத போது மட்டுமே வார்த்தைகள் கொண்டு புரிய வைக்க நினைத்திடுவோம்…..ஒருவருக்கான கவிதைகள் நெஞ்சுக்குள் அருவிப் போல பொங்கிடும் நேரம் அந்த அன்பு நமக்கு கிடைக்காத போது மட்டுமே…

இதயத்தின் ஏக்கத்தினை இதழ்களால் சொல்லி புரியாதவரிடம், வார்த்தைகளில் சொல்லி புரிய வைக்க நினைப்பது நேசத்திவரின் இறுதி முயர்ச்சி, அந்த உறவிற்கான இறுதி ஊர்வலம்……

வார்த்தைகளால் உணர்த்த வருவதும், ஆழ்ந்த அன்பினை உணர்ந்தும் வருவது உண்டு.இரண்டிற்கும் வித்தியாசம் இருப்பது நீ அறியாதது விந்தையே……

விலாசம் இன்றி போகும் நேசமும் உண்டு, விரிசல் கொண்டு செல்லும் அன்பும் உண்டு. அன்பைப் புரியாதவர்கள் வார்த்தைகளையா புரிந்துக் கொள்வர்????

உன்னோடு நானும் என்னோடு நீயும் ஒரு நொடியும் பிரியாமல் இருக்கும் இந்தப் பிரியத்தை எதற்கு எழுதிட வேண்டும்…

எழுதிடுவேன் உனக்கும் எனக்குமான உறவினையும் நீ புரிந்து விலகி போனால்.புரியாத அன்பிற்கு புரிய வைக்க எழுதிடலாம், புரிந்த அன்பிற்கு ஏன் எழுத்துக்களால் சொல்ல வேண்டும்…….

நீயும் நானும் தனித்தனியே விலகி இருந்தால் மட்டுமே எழுதிட வேண்டும். உன் மீது நம்பிக்கை இல்லாத போது எழுதிட வேண்டும். நீ வேறு நான் வேறு இல்லையே….

அன்பை வார்த்தைகளால் சொல்லிடலாம் ஆனால் வாழ்ந்து காட்டும்போது மட்டுமே விலங்கிடும் அத்துனை சுலபமானது இல்லை அன்பை வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கு கொடுப்பது…

என் ஊன் உயிரோடு கலந்தவருக்கு கவிதைகள் தேவையில்லை, காவியங்களாகும் நமது நேசம் – எந்தன் கவிதையாக நீ இருக்க உனக்கு என்று கவிதைகள் தேவையில்லை….. 

அபாயம் காத்திருக்கிறது

என் அன்பினில்

சிறகடிபாய் என

நினைத்தேன்,

ஆனால்

என் அன்பினில்

என்னையே

சிக்கவைக்கும்

மந்திரம்

உன்னிடம் மட்டுமே…

என் அன்பை

நிராகரித்து

பாசத்தை புரகணித்து

என்னை

தனிமைச் சிறையில்

கைதியாக்கி செல்லும்

வித்தை

உனக்கு மட்டுமே

அத்துப்படி ! ! !

உன்னைச் சிறைசெய்ய

நினைப்பவர்களுக்கு

இது ஒரு எச்சரிக்கை ! ! !

அபாயம் காத்திருக்கிறது

விலகிச் செல்லுங்கள் ! ! !

எழுதிகிறீர்களா?

கவிதைகளே எழுதுவதில்லையா என எனது நண்பன் ஒருவன் கேட்ட பின்னர் தான் என் எண்ணங்கள் துருபிடித்துப் போனது அவளது நினைவுகளில் என்று உணர்ந்தேன்.

ஆமாம்

வார்த்தைகளில் வலிகளை மறக்க நினைத்ததாலோ என்னமோ வார்த்தகள் வரவில்லை, விளையாடவும் இல்லை.

அன்பின் அரவனைப்பில்

இருந்தபோது

கவிதைகள் பிறந்தது

அன்பின் வலியில்

கவிதைகள் வளர்ந்தது

அவளால் உணரமுடியாத

கவிதைகளால்

என் வார்த்தைகளும் மரித்தது ! ! !

நண்பனே ! ! !

வீழ்ந்தாலும் விதையாவேன்

விருட்சமாவேன்

என்று சொல்வது எளிது

அன்பில் விழுந்தால்

எழுவது சுலமில்லை. (அவளது நினைவுகளில்

சிக்கி சிறை பூண்டதால்)

அன்பிற்கு நான் அடிமையா?

அனுபவம் இல்லாத சிறியவன் நீ, ஆயினும் அன்பு அதிகம் உள்ளவன். ஆனாலும் உன் வார்த்தைகளில் உள்ள உரிமையை அறிவேன். என் மீது கொண்ட அன்பினால் நீ அதனை சொன்னாய்…

அக்கா அன்பிற்கு அடிமையாகி விட்டீர்கள், உங்கள் ரணம் ஆறவேண்டும். இந்த அன்பெனும் வட்டத்திலிருந்து வெளியில் வாருங்கள். உங்களை காணுங்கள் சகோதரி என்றான் என்னுடன் பிறவா சகோதரன்.

அன்பிற்கு அடிமையாகக் கூடாது என்றால் எதற்கு தான் அடிமையாகலாம் என் அன்புச் சகோதரனே?

ஆண்டவன் நடத்தும் நாடகத்தில் நீயும், நானும் ஒன்று. அந்த இறைவன் கொடுத்த என் வாழ்க்கை அனுபவத்தில் நந்தவனமும் உண்டு, நொந்த மனமும் உண்டு.

நான் படித்த சோகத்தினையும் நந்தவனமாக மாற்ற அந்த இறைவனால் மட்டுமே முடியும்.

ஆளத் துடிக்கும் மனசுகள் தான் இன்று அதிகம். அமைதியாக ஆனந்தமாக, அன்பை சுமக்கும், உயிர்கள மிகக் குறைவு அதனையும் வேண்டாம் என்கிறான் என் சகோதரன்?

எங்கும் வஞ்சம், எதிலும் வஞ்சகம், அரை டன் அன்பையும், ஒரு பை நிறைய பண்பையும் பரணில் போட்டு விட்டு,பணத்தையும், பகட்டையும், பண்பாடு கெட்ட மனதோடு என்னை போகச் சொல்லுகிறாயா?

அன்போடும், பண்போடும், நம்மைச் சார்ந்தவர் மீது அக்கறையோடும் இருந்தால் எங்களுக்கு புனிதப் பட்டப் பெயர்கள் – லூஸு, வாழத்தெரியாதவர், பைத்தியக்காரர்கள்.

மிருகமாகவே வாழுங்கள், அடுத்தவரின் பசி அறியாது அடுத்தவரின் வலி அறியாது, அடுத்தவரின் துன்பமறியாது, அடுத்தவரின் இன்பத்தினையும் கொலைவெறியுடன் தான் காண்போம்.

வாழ்க்கை என்பது, சுயநலம் என்ற சிறிய வட்டத்துக்குள் மட்டும் சிதைந்து போவது தான் என்பது இன்றைய நிலை. அடுத்தவர்கள் காலை வாரி விடவும் அவர் சுதாரிக்கும் முன்னே சுகம் காணவும் கற்றவர்களே, பெரும் வேதனைகளையும் சுமக்கும் சிலுவைகளாக நீங்கள் மாறவேண்டாம், அதனை மறக்க கைகொடுக்கும் (உத்தமர்களாக வேண்டாம்), நல்ல உள்ளமாக இருத்தல் கூடாதா?

மனித மனங்களை அறுத்து சுவைக்க பழகிக் கொண்டதால் நாமும் மிருகமும் ஒன்றே.

காலையில் கற்பழிப்பு, மாலையில் கருச்சிதைவு என்று வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களே, கொஞ்சம் உங்கள் வேகத்தினை குறைத்திடுங்கள் இல்லையேல், மிருகம் போல நம்மை நாமே அடித்துக் கொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

எதற்கும் அடிமை ஆகாமல் மனிதன் இருக்க முடியும், ஆனால் அன்பிற்கும் அடிமை இல்லை என்றால் அவன் பெயர் என்ன என்று எனக்கு தெரியவில்லை.

முயற்சித்தால் மூடனாக நான் மாறலாம், ஆனால் நல்ல இதயத்துடன் இன்பமாக இறக்க விரும்புகிறேன், இதயமற்ற அரக்கியாக அல்லவே.

உலகத்தில் மிகவும் தேவையான ஒன்று பணமோ, பொருளோ இல்லை, மனித நேயம், அது இருந்தால் போது மற்ற அனைத்தும் மனிதன் வசமாகும் எனபதில் எனக்கு ஐயமில்லை.

அற்பப் பிறவிகள் தரும் சோதனைகளை சோகங்களாக கொள்ளாமல், சாதனைகளாக எண்ணுவேன், எத்துனை பேர் காயப் படுத்தினாலும் வீழ மாட்டேன், வீழ்ந்தாலும் அன்பு என்ற விதையாகவே வீழ்வேன், விருட்சமாவேன் என்ற நம்பிக்கையில்.

அன்பென்ற ஆயுதம் கொண்டு வெல்ல முடியாவிடில் அந்த ஆயூதத்தால் மடிவது மகிழ்ச்சி ! !

இப்போதும் உனது அன்புக்கு அடிமையாகியே இதனை பதிவிடுகிறேன். முடிந்தால் இதுவும் வேண்டாம் என்று சொல்லேன்.

(It’s all about love again, I will translate this shortly)

நான் – நீ

ன்பை கொடு,

அதிகமாக கொடுக்காதே!

சையாய் இரு,

ஆணவமாக இருக்காதே!

னிமையாக இரு,

இதயத்தைக் இழக்காதே !

தல் இசைபட வாழ் !

தவிகள் செய்,

மையாக இருக்காதே!

னது என்று சொல்லாதே,

மாற்றமே மிஞ்சும்!

யத்தோடு பேசாதே,

க்கியமாகிவிடு!

ளிமையமாக வை,

டி ஒளியாதே!