Archives

Chennai Day

இயற்கை அழகு என்பது 
அறுதியாக இல்லை - ஆனாலும் 
எழில் கொஞ்சும் மரீனா
விண்ணைத் தொடும் கோபுரங்கள்
அமைதி நிரம்பும் மசூதிகள் 
இதயம் தொடும் தேவலாயங்களும்
அடுத்து அடுத்து அமைந்து 
மதங்களுக்கும் அழகு சேர்க்கும் 
எங்கள் சென்னையில் 

மதங்களை கடந்து 
மனித நேயத்தை 
கண்டது எங்கள் சென்னை

மக்களில் கோடிஸ்வரனும் 
அன்றாடம் பிழைப்பைத் தேடுபவனும்
ஆறுதல் காணுவது 
எங்கள் இயற்கை அழகு மரீனா கடற்கரையில்

காதல் கொஞ்சிட மட்டும் அல்ல
பட்டாணி சுண்டல் சுவைத்திடவும்
வரம் வேண்டும் மரீனாவில் 

அழகு நட்சத்திரங்கள் அனைவரையும், 
ஆர்ப்பரிக்கும் சுப்பர் ஸ்டார் தந்ததும் 
புன்னகை மன்னன் கொடுத்ததும் 
எங்கள் சென்னை
புத்தம் புதிய நட்சத்திரங்களையும் 
கொடுப்பதும் எங்கள் சென்னை 

ஆபத்து காலத்தில் அப்போல்லோ 
மருத்துவமனை உண்டு
அதிகம் செலவில்லாமல் 
அனைத்து வசதிகளோடு
அரசாங்க மருத்துவமனையும் உண்டு

பார் போற்றும் மாநகரம்
எங்கள் சென்னை மாநகரம் 

மாநகரத்தில் மெட்ரோ உண்டு 
அனுதினம் பயணம் செய்ய 
இரயிலும் உண்டு, 
பறக்கும் ரயிலும் உண்டு
பத்து ரூபாயில் பயணம் செய்ய 
ஆட்டோ என்ற மூன்று 
சக்கரமும் உண்டு 
அதிகம் கொடுத்தால்
கால் டாக்ஸி உண்டு 

சென்னையின் நுழைவாயில்
முதல் எல்லை முடியும் வரை
நீண்ட தூர சாலை 
ஒரு கோடியில் இருந்து
மறுகோடிக்கு செல்ல 
மாநகர பேருந்தும் உண்டு 


IT க்கு தரமணி
BPOக்கு OMR
Industries க்கு கிண்டி, அம்பத்தூர்
ஆவின் பாலுக்கு மாதவரம்
துணி எடுக்க புரசைவாக்கம்
நகை எடுக்க இல்லை இல்லை
பின் முதல் தங்கம் வரை
மாம்பலம் போங்க,
இன்னும் இங்க ஏராளம்

ஆட்டோ மொபைல்ஸ் க்கு
எதுவேனும் 
MRF, TVS, HONDA, HUNDAI, TI Cycles,
எல்லாம் எங்கள் சென்னையிலே


இனியொரு விதி செய்ய 
எந்த பள்ளிகளை சொல்ல 
தொழிற்கல்வி கூடங்கள்
அரசாங்க பள்ளிகளும்
அரசு கலைக் கல்லூரிகளும்
சென்னை மருத்துவகல்லுரி
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்

எத்துனை சொல்ல 
சொர்க்கம் என்பது 
வான் மேலே பூமிக்கு கீழே 
இல்லை அனைத்தும்
எங்கள் மண் சென்னையில்

 

Advertisements

அம்மா

அம்மா

என் அம்மா என் செல்லம்மா
உன்னை போல் ஓர் உயிர் எனக்கு
என்றும் வேண்டுமம்மா…

என் கண்ணம்மா
நீ என் கண் அம்மா
என் பார்வைக்குள்
உன் பாச மழை ஊற்றம்மா…

கரும்பம்மா
உன் கனிவு தேனானா சுவையம்மா
அதில் எறும்பாக என் பணிகள் நூறம்மா…

அன்பு அம்மா
உன் அன்பல்லாம் அசல் அம்மா
போலி இல்லா
உன் புன்னகையில்
என்றும் என் பயணம் அம்மா…

அம்மம்மா உன் சமையல் எல்லாம்
அமுதம்மா
உன் விரல் பட்டால்
வைக்கோலும் ருசியம்மா…

வேறு என்னம்மா
உன்னோடு என்றும் நானம்மா
நம்மோடு எப்போதும் இதே பந்தம் அம்மா…

Na. Muthukumar

நா.முத்துகுமார்

உங்கள் பெயரை நான்  உச்சரிப்பதில்
என் நாவு பெறுமிதம் கொள்கிறது
பெயரில் முத்தை பதித்து மரணத்திற்கு இவ்வளவு
சீக்கிரம் முத்திரை பதித்தது ஏன்..?
{அழகே_அழகே} என்று நல்லதொரு வரி தந்தீர்
இன்று அழ வைத்து பெரும் துயரம் தந்தீர்
{ஆனந்தயாழை} என்று கவி தந்து
ஆழ் மனதில் இடம் கொண்டு
நினைத்து நினைத்து பார்த்தேன் என்று
உங்கள் வரிகளையே
எங்களை உச்சரிக்க வைத்து விட்டீர்..!!
{அவள் அப்படி ஒன்றும் அழகில்லை} என்று
பெண்களை அழகு படுத்தியது உங்கள் வரி
அப்பாவின் வலியை கொட்டி தீர்த்தது உங்கள் பேனா முனை
என் கவிதைக்கு உங்களை முன்மாதிரியாக
வைத்தேன் இன்று உங்கள் மறைவால்
என் பேனாவும் புலம்பி தவிக்கிறது..!!
ஒரு பாதி கதவாக நீங்கள்இருந்து
மறு பாதி கதவை உங்கள் மரணம் பூட்டி விட்டது
ஆனாலும் பூட்டை உடைத்தெரிவோம்
உங்கள் கவிதைகள் எங்கள் நெஞ்சில்
உயிர் வாழும் வரை…
மறைந்தாலும் மறையாத உங்கள் எழுத்துக்கள்
எங்களுக்கு உங்கள் நினைவுகளை கொடுக்கும்…
உங்கள் மரணத்திலும் என் கண்ணில் கவி படைத்த
சிறந்த படைப்பாளி உங்களுக்கு
எனது கவிதை மூலம் இரங்கல்கள்…
na-muthu

Controversial Beep Song

Normally I don’t prefer to comment on these subjects, but I am doing this only to promote the thappa pesadhe song by Punitha Raja. This song is meant for Women and need to reach as many as the beep song has reached, but it will not because this song is to glorify the today women.

A wonderful song came into the world of music at the perfect timing. After listening this everyone should stop criticizing the women/girls. This is not to say anything against Simbu and it says the truth and only TRUTH.

It is really a good song and especially the lines where it says that when your sister loves a wrong guy, you chose a guy of your own choice and get her married. This song deserves more views and likes than the Beep Song, but we will not promote good songs.

With the latest mega controversial Beep song, I really don’t understand what made Simbu to record such a song. Even though he claims that he has not released it or it is not meant for the public to listen.

By saying the above statement, he has agreed that he has penned the lyrics and it was sung by him. For the fame and popularity what he has in public, has he not ashamed to do write such a lyrics?

Does the love failures in his life caused this agony in him? If yes, he needs to correct his way of approach towards woman not by writing such kind of songs. These shows that the woman who all departed from his love life has reasons and it makes them valid.

He has given a chance for those ladies who crossed his life to give justice for their actions. How could you do this when you are living with your mother and you, is it what the industry taught you? what do you expect your ladies fans to say that this song is awesome.

Just because you were ditched by someone or betrayed by some women doesn’t mean that you can belittling of women.  There are songs with different meanings or double meanings but not to this level.  If this song is for your personal agitation against women and it was not meant to be released, then you should have kept it secretly.

As you know the lyrics, you are the music director (as told by him Anirudh has not done music to this), then why it was recorded, whenever you want to sing, you have the rights to sing inside the 4 walls.  If you hate the women or the girls, then try to avoid acting with women and try not to use them for your movies. That will show the manliness of Simbu rather than going and creating such crass songs.

beep song

Only one question to Simbu is will you sing this song in front of your mother, sister or any woman whom you meet for the first time? What is your response if someone sings this song in front of your mother? How will you react?

I am not a supporter or against this song as it is his personal view. But there was a question raised that what about the song daddy mummy veetil illa song, it doesn’t have any words where in you need to use the Beep :).

Think about the impact what it will give with the youngsters of our state. How a female standing in a bus stop need to react to this song, when a guy or group of guys sing the song as like a normal song?

There is no use of making this as a big issue because there are 1000’s of good lyricist who doesn’t have the scope to enter into the magic world of Cinema.

A Plea to those who have some recognition in public, please do not do such activities as there are lot of people who are following you madly crazily. 

Thappa Pesathe – Beep Song for Simbu

 

Yazhini-Super Singer

யாழினி–ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்3

இதுவரை இரண்டு ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிகளில் பங்கு கொண்டு, தோல்வியை சந்தித்த இந்த குழந்தை யாழினி. மூன்றாவது முறையாக விஜய் டிவியில் தனது முத்திரை பதிக்க வந்ததை என்னவென்று சொல்வது? விடாமுயற்சியின் மறு உருவம், கடின உழைப்பாளி, தன்னம்பிக்கையின் மறுபெயர் யாழினி என்று சொல்லவா.

குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர். ஆனால் இந்த மழலையின் குரலைக் கேட்டபின் வேறு எதுவும் இனிது என்று சொல்ல மனமில்லை, உனது குரல் மட்டுமே இனிது யாழினி என்று தான் சொல்ல தோன்றுகிறது.

என்ன குரல், என்ன தெளிவான வார்த்தைகள், என்ன பாவம், உயிர் தருகிறாள் அனைத்து பாடல்களுக்கும். இவள் மழலை மாறாது பேசும் சிறு குழந்தையா  இவள் பாடும் பாடல்களின் வரிகளுக்கான அர்த்தம் புரிந்து பாடும் ஒரு பெரிய பாடகியா என்று வியக்க வைக்கிறது. ஒவ்வொரு பாடல்களுக்கும் அவள் கொடுக்கும் உணர்வுகள், அந்த பாடலுக்கு உயிர் கொடுக்கிறது.

மச்சான் மீசை வீச்சறுவா என்று பாடி இந்த தேர்வு குழுவினரால் தேர்ந்து எடுக்க பட்டாள்.

பொடி நடையா போறவரே” என்ற பாடலை பாடிய போது சூப்பர் நல்லா இருக்கு, நிறுத்துமா செல்லம் என்று நடுவர்கள் சொல்லியும் அடம் பிடித்து முழு பாடலையும் பாடினாள் இல்லை ஒரு ஆட்டத்துடன் தான் நிறுத்தினாள்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே இந்த குழந்தை ”நினைத்து நினைத்து பார்த்தேன்” என்ற பாடலின் சரணம் பாடியபோது ”பாடகி மகதியை”  மயக்கியது மட்டுமல்ல, கண்களை நனைத்தது. ஐந்து நடுவர்களையும் எழுந்து நின்று கைதட்ட வைத்தது. இது முடிவல்ல ஆரம்பம் மட்டுமே…..

பி.சுசீலா பாடிய ”மலருக்குத் தென்றல் பகையானால்” பாடல் பிறந்த வருடத்தில் யாழினியின் அம்மா கூட பிறந்து இருக்க மாட்டார், ஆனால் அந்த பாடலை இந்த குயில் பாடிய போது, அதில் இருந்த உயிரோட்டம், ஒரு நிமிடம் என்னை மெய் சிலிர்க்கச் செய்கிறது.

”நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா” என்ற பாடலில் அந்த முதல் வரியைகூட சுசீலா பாடிய விதத்தில் என்னால் பாட முடியாது. ஆனால் இந்த குழந்தை பாடியபோது அசந்துபோனேன், ஆச்சர்யப்பட்டேன்.

நேற்று இந்த நேரம்” பாடலில் ஒரு வார்த்தை கோலங்கள் என்று வரும் ஆஹா அருமையாக பாடினாள். உன்னால் இந்த பாடலும் நான் தினமும் ரசிக்கும் பாடல்கள் வரிசையில் வந்தது.

”லேசா லேசா” என்ற பாடலை பாடி என்னை லூசாகவே மாற்றினாள்

அச்சம் அச்சம் அச்சமில்லை என்ற பாடலை அச்சம் சிறிதும் இன்றி பாடினாள் இந்த சின்ன குழந்தை. ”வெண்ணிலவே வெண்ணிலவே”  ”குளிச்சா குத்தாலம்” என்று பல ஏ.ஆர்.ஆர் பாடல்களை பாடினாளும் என் மனதில் இவள் பாடிய பழைய பாடல்கள் என்றும் நீங்கா இடம் பெறும் பாடல்கள்.

”அலேக்ரா அலேக்ரா” கந்தசாமி படத்தில் இருந்து ஒரு பாடல், என்ன அழகு, இவள் சிரித்தபடி, மிகவும் ரசித்தபடி பாடியதும், உச்சஸ்தாயியில் பாடிய போது வியந்து போனேன். உஷா உதுப் இவளை பாராட்டியது உன்னுடைய குரல் நல்ல ப்வர்ஃபுல்லா இருக்கு, எனக்கு மிகவும் பிடித்தது. என்ன ஸ்டைல்டா டார்லிங் என்று சொன்னது மிகவும் சரி தான். உன்னால் இந்த பாடல் அழகு பெற்றது பொன்மணியே….

உன்னி மேனன் சொல்லியபோது, கண்களுக்கு விருந்து என்றார் இந்தக் குட்டியின் பாடலுக்கு. குப்புசாமியோ ஒரு படி மேலே போய், பாடுவதற்கு முன் இது ஒரு குட்டி செல்ல குழந்தை, நீ பாடியவுடன், அந்த குழந்தைக் காணாமல் போய், ஒரு சூப்பர் சிங்கராக யாழினி வருகிறாள்.

ராக் & ரோல் சுற்றில் இவள் என்னை பித்து பிடிக்க செய்தாள், ”யாரடி நீ மோகினி” என்ற பாடல். என்னை மட்டுமல்ல அனைவரையும் அசத்தினாள் இந்த சிட்டுக்குருவி. இதனுடன் வேறு ஒரு பாடலை, மூச்சு விடாமல் பாடி அசத்தியது இந்த குட்டி சாத்தான்.

”போட்டுத்தாக்கு வரா வரா போட்டு தாக்கு என்ற பாடலை அனாயசமாக பாடி அசத்தினாள். 

தொடரும்

மன்மதன் அம்பு

மன்மதன் அம்பு

உலக நாயகன் கமலின்  கதை திரைகதை வசனம்  மற்றும் அவரது நடிப்பில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்  மன்மதன் அம்பு.

சூப்பர் ஹிட் டைரக்டர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

வளர்ந்து வரும் பல சூப்பர் தயாரிப்பாளார்களில் ஒருவரான ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.

கமலோடு சேர்ந்து திரிஷா,மாதவன், சங்கீதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தொழிலதிபரான மதனின் (மாதவன்) காதலி பிரபல முன்ன்னி நடிகை நிஷா (நம்ம திரிஷா)வின் நிஜ (படத்தில் தான்) பெயர் அம்பு.

இவர்களின் காதல் நிச்சயத்தில் முடிந்து திருமணத்திற்காக காத்திருக்கும் நிலையில் கதை ஆரம்பிக்கிறது.

காதலியைகான அவரது திரைப்படத்தின் பாடல் பதிவாகும் இடத்திற்கு செல்ல அங்கு சூரியாவுடன் காதல் பாடலில் தனது வருங்கால மனைவி நெருக்கமாக நடிப்பதையும், மிகவும் சகஜமாக தட்டி பேசுவதையும் கண்டு மன புகைச்சல் எடுக்க கதை எப்படி போக போகிறது என்று யூகிக்க முடிகிறது. சூரியாவின் மகள் நிஷாவிடம் பேசவேண்டும் என அவர் கான்ஃப்ரண்ஸ் கால் போட அதையும் தவறாக புரிந்து கொள்கிறார் நமது சராசரி ஆண்மகனான மாதவன்.

தான் புதியதாக வாங்கிய ஒரு கோடி ரூபாய் ஹம்மர் காரை தனது காதலி பார்க்க வேண்டும் என்று வந்தவர், அவருக்காக காத்திருந்து மனதில் சலனத்துடன் அந்த புதிய வாகனத்தில் இருவரும் மலை பாதையில் செல்லும் போது, மாதவன் நிஷாவிடம் நீ கல்யாணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டு விட வேண்டும் என்கிறார்.

நிஷாவோ அவரிடம் தர்க்கம் செய்கிறார். நடிகை நான் என தெரிந்து தானே காதலித்தாய். நடிப்பது என்பது என்னுடைய தொழில். அதை விட முடியாது என்று சொல்லகிறார். இப்போதே உனக்குள் இத்தனை சந்தேகம். படங்கள் முடித்தவுடன் திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்று சொல்ல, இருவரும் சண்டை போடுகிறார்கள்.

நிஷாவின் கவனம் சிதற, எதிரில் வரும் காரினில் மோத பெரிய விபத்து என்று எண்ணினால் அப்படி எதுவும் இல்லாமல், சிறு கீரல் தான், அதற்குள் அந்த வழியாக வரும் ஒரு பேருந்து நிற்க அதிலிருந்து அனைவரும் நிஷாவைச் சூழ அங்கு ஒரு தீபாவளியே நடக்கிறது.

இதன் பிறகு விடுமுறைக்காக வெளி நாடு செல்கிறார் நிஷா. அங்கு அவரை பின் தொடர்கிறார் மேஜர் R.மன்னார் (கமல்). காட்சிகள் செல்ல செல்ல என்று பொய் உரைக்காமல் சிறிது நேரத்திலேயே, அவரை அனுப்பியது மதன் என்று சொல்லியது சப்பென்றானதோ ???

மன்னார் நிஷாவின் நடவடிக்கைகளை லைவ் ரிலே போல மதனுக்கு சொல்கிறார், மதனிடன் நீங்கள் நினைப்பது போல இல்லை, அவர் மிகவும் நல்லவர் என்று சொல்ல, அப்படியா சரி நீ சென்னைக்கு வந்துவிடு என்கிறார். நீ எதுவும் கண்டுபிடிக்கவில்லை அதனால் உனக்கு நான் எதுவும் பணம் தரவேண்டாம். நீ வேண்டுமானால் அந்த கப்பலில் பயணம் செய்து ஊரைச் சுற்றி வா என்கிறார். மன்னாரின் நண்பரின் உயிர் காக்க பணம் தேவை என்பதால் மட்டுமே இந்த உளவாளி வேலைக்கு வந்தார்.

நண்பன் ஆபத்தான் நிலையில் இருப்பதால் பணம் இல்லாமல் ஊருக்கு செல்ல முடியாது.

என்ன செய்கிறார், எப்படி செய்கிறார், மதனின் அம்பு மன்னாரின் மன்மதன் லீலைகள் எதுவுமின்றி மன்னாரின் அம்புவாக மாறியது எப்படி என்பதே திரைக்கதை.

மன்னார், மதனகோபால், அம்புஜாக்‌ஷி …. ஒரு ட்ரையாங்குலர் லவ் ஸ்டோரியை என்றும் சொல்லலாம். படத்தை பார்த்தபின் இது சகலகலா வல்லவனின் தில் என்றும் சொல்லலாம். மன்மத லீலை என்று வந்த உனது படமா இது ???

தனது வயதிற்கான முதிர்ச்சியுடன், அழகாக பவனி வந்து இருக்கிறார் திரையில் உலக நாயகன். நாயகி பாஸ்போர்டினை வழிபரியிடம் தொலைக்க அதனை கண்டு பிடிக்க  ஒரு சின்ன சண்டை, சூப்பர் ஒரு சாராசரி சண்டையாக மிகவும் நாசுக்காக எடுத்தவிதத்திற்கு ரவிக்குமாருக்கு ஒரு சபாஷ் என்றாலும் அந்த ஸ்டைல் அது கமலுக்கே உரித்தானது. Who Is the hero பாடலில் வரும் ஸ்டைல் நடனத்திற்குள் விசில் பறந்ததில் ஒரு பரவசம் எனக்குள். இன்றும் உன்னை ரசிக்க ஆண்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

திரிஷாவிடம் இத்தனை நடிப்பு திறனா என்று பிரம்மிக்க வைத்தார் என்றே சொல்லவேண்டும். நல்ல கதாபாத்திரம் அதற்கு அப்படியே பாந்தமாக பொருந்தியுள்ளார். சொந்த குரலில் பேசியுள்ளார்.

மாதவனுக்குதான் கொஞ்சம் பிசகாகி போச்சி… இன்னுமும் கொஞ்சம் ரசனையோடு கொண்டு வந்து இருக்கலாம். எப்போது தண்ணியில் மிதக்கும் பணக்கார, திமிர் பிடித்த ஆளாக காட்டியிருப்பது கொஞ்சம் ஓவர்தான். தனது பங்கினை நன்றாகவே செய்து இருக்கிறார். பாடல் வெளியீட்டு விழாவில் சொல்லி இருந்தார் எப்போதுமே கமல் சார் தான் மன்மதன் என்று அது முற்றிலும் உண்மையே.

சங்கீதவிற்கு சவலான கதாபாத்திரம் என்று சொல்ல முடியாது. சங்கீதா சும்மா பேசினாலே கவர்ச்சி தான் என்று இல்லாமல் காமெடியும் கலந்து இருக்கிறார்.என்னமோ சங்கீதாவின் வேடத்திற்கு ஊர்வசி சிறப்பாக இருந்து இருப்பர் என்று தோன்றுகிறது. கதையோடு ஒட்டுவதற்கா, இல்லை கதா நாயகியோடு ஒட்டுவதற்காகவோ சங்கீதாவை போட்டுவிட்டார்.

ரமேஷ் அரவிந்தையும், ஊர்வசியும் ஊருகாயாக வைத்து இருந்தாலும் உருக்கமாக காட்சிகள்.

படத்தின் பாடல்கள் சூப்பரோ சூப்பர் என்று சொல்ல முடியாது.

கமலின் வரிகள் வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவருக்கு, பாடல் புரிந்தவருக்கு பிடிக்கும். வரிகளுக்கான விமர்சனம் தேவையில்லாதது. ஆடைகுறைத்து முகம் சுளிக்கவைக்கும் நடனம் மில்லாத படம் எது ???

திரைக்கதையில் தொய்வு என்று எதுவும் இல்லை. முதல் பாதி ஆரம்பித்த நிதானம், மறுபாதியில் தொடர்ந்திருந்தால் நிச்சயம் ரசனையில்லாமல் போயிருக்கும்.

படத்தின பலம் – நிஷா சாரி த்ரிஷா, கமல், திரைகதை, லொகேஷன், பிரம்மாண்டமான கப்பல்.

இதன் படப்பிடிப்பு பிரான்ஸ், இத்தாலி, க்ரீஸ் ,மலேஷியா ஆகிய வெளிநாடுகளில் நடந்துள்ளது. மூன்று மணிக்கூறுக்கும் குறைவான நேரத்தில் பல நாடுகளின் அழகிய காட்சிகளை கான முடிந்தது.

நீலவானம் என்ற பாடலை முழுவதுமாக பின்னோக்கிய(flash back- Reverse) காட்சிகளாய் காண்பித்தது ரசிக்கும் படியாக இருந்தது.

பலவீனம் – வசனம். இதையே க்ரேசி மோகனிடம் கொடுத்து இருந்தால், மற்றுமொரு மெகா காமெடி படமாக இருந்திருக்கும்.

முழு நீள நகைச்சுவை மற்றும் ரொமான்டிக் படமாக அமைந்திருக்கும். இப்போ இதில் காமெடி இல்லை என்று சொல்லவில்லை.

ஒன்றிரண்டு பாடல்களாவது கொடுத்து இருக்கலாம் மாதவனுக்கு.

சங்கீதா மாதவனின் கதாபாத்திரம். காமெடிக்காக இனைக்கப் பட்ட அந்த தயாரிப்பளருக்கு பதில் ஒரு தமிழ் காமெடி நடிகரை போட்டு இருக்கலாம்.

மன்மதன் அம்பு – இது மன் மதன் அம்பு மூன்று கதாபாத்திரங்களின் பெயர், நீங்களாக கற்பனை செய்து மன்மதன் அம்பு பாயுமா இல்லையா என்று எல்லாம் யோசிக்க வேண்டாம்.

ஹாசினியின் பார்வையில் என்ன சொல்கிறார் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

சீரியலும் நானும்

சீரியலும் சீர்கேடுகளும்

என்ன எழுதவது என்று யோசித்த நேரத்தில், தோழி ஒருவரின் பதிவினைப் தற்செயலாக படிக்க நேர்ந்தது. மெகா சீரியல்கள் பார்ப்பவர்களுக்கு சிறப்பு விருது என்றும் அதற்கும் தகுதி சுற்று, கால் இறுதி சுற்று முதல் இறுதி சுற்று வரையும் (இதிலும் வைல்ட் கார்டு சுற்று வருமாம்) என்று அவரது பதிவு ஆரம்பித்த்து…

எண்ணற்றத் தொலைக்காட்சிகள் பெருகிவிட்டதால், மெகா சீரியல்கள் பல ஆண்டுகள் கடந்தாலும் நாம் நம்மை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பதில் சிறுது வருத்தமே. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

புதுதில்லியில் இருந்தவரை தொலைக்காட்சி பார்க்கவே நேரமின்மையால் தொடர்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி என்று இருந்தேன். ஆனால் அது ஒரு காற்புள்ளியாகவே இருந்து இருக்கிறது என்று எனக்கே தெரியாமல் இருந்திருக்கிறேன். இரவு ஒரு மணி நேரம் பழைய பாடல்கள் கேட்டுக் கொண்டே உணவு, நட்புகளுடன் உறையாடல் என இருந்தேன்.

உத்யோக நிமித்தமாக தில்லியைவிட்டு அரபு தேசம் வந்தவுடன், நமக்கு பொழுது போக்கு என்பது நம்முடைய மடிகணனி தான் என்றிருந்தேன். காலக் கோலாறால் என்னைத் தேடி என் அறை வரை சன் தொலைக்காட்சி துரத்தியது. வேலை நேரம் போக சன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தால், நேரம் போவதே(வீணாவதே) தெரியவில்லை.

ஏற்கனவே சில சீரியல்களின் விசுவாசி இப்போது மாலை நேரத்தின் சீரியல்கள் அனைத்தையும் நான் பார்க்காவிட்டால் சன் தொலைக்காட்சி கவிழ்ந்து விடுமே என்ற கவலையில் இந்த மெகா தொடர்களில் என் முழு நேரத்தையும் வீணடிக்கிறேன் என்று நன்றாக தெரிந்தும் அதையே செய்கிறேன்.

இப்போது நேரம் அதிகமாக இருப்பதால் நல்ல முறையில் பல விஷயங்களில் பயன் படுத்தலாம். நல்ல வெயில் காலத்தில் நடை பயிற்சி செய்ய முடியாது ஆகையால் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாயிற்று. சீரியல்கள் பார்ப்பதால் சமைக்கவேண்டும், சாப்பிட வேண்டும் என்பது கூட மறந்து போகிறேன்.

நாம் சீரியல்களில் மூழ்கிவிட்டு, நம்மை சீரியல்கள் ஆக்ரமித்துவிட்டது என்று புலம்புகிறோம்.

நேற்று ஒரு நண்பர் என்னை காண வேண்டும், இந்த இட்த்தில் இருக்கிறேன் வருகிறாயா என்று கேட்க நானும் மிகவும் நிதானமாக நீ எவ்வளவு நேரம் அங்கு இருப்பாய் என்று கேட்டேன். அவ்ரோ இன்னும் அறை மணிக்கூறு இருப்பேன் என்றார். நான் என்னுடைய சீரியல் முடிய இன்னும் 15 நிமிடங்கள் இருப்பதால் வருவதற்கு 40 நிமிடம் பிடிக்கும் வேறொரு நாள் நாம் பார்க்கலாம் என்று கூறிவிட்டேன்.

அவரைக் காணாத்தால் எனக்கோ அல்லது அவருக்கோ எதுவும் நஷ்டமில்லை. அவரைச் சென்று பார்த்திருந்தால் என்னாகும் என்று யோசித்தேன். இரண்டு கிலோமீட்டர் நடை பயிற்சி கிடைத்திருக்கும். காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் (நம்ம அரசாங்க அலுவலர்களைப் போல் ) உட்கார்ந்த இடத்தை விட்டு நகருவது இல்லை. நம்முடைய வேலை அப்படி. எந்த நெருக்கடியான நிலையாக இருந்தாலும் உட்கார்ந்தே சிறிது சிந்திப்பது அல்லது இனைய தளத்தில் இருப்பது மட்டுமே. இப்படி இருக்க் கிடைத்த நடை பயிற்சிக்கான பொன்னான வாய்ப்பினை தவற விட்டதாகவே இருந்தது.

எதாவது மாற்றங்கள் செய்யவில்லை என்றால் என்னுள் எந்த மாற்றமும் இருக்காது  என்று எண்ணியதுடன் வேகமாக முடிவும் எடுத்தேன் சீரியல்களைப் பார்க்கும் நேரத்தில் நடை பயிற்சியில் ஈடுபடுவதும், மற்றும் எனக்குத் தேவையான சமையலைச் செய்து சாப்பிடவேண்டும் என்றும்… பார்ப்போம் என் எண்ணம் தின்னமாகிறதா இல்லை சீரியல்கள் என்னை வெல்கிறதா என்று காலம் தான் சொல்லவேண்டும் ?