Archives

Beauty of Friendship

Anantha, you will always be in our heart, even though we miss you from this world, we will meet one day in the heaven, please wait for this friend to join you.

இந்த உலகத்தில்
ஆயிரம் ஆயிரம்
உறவுகள்
பிறக்கின்றன…

ஆனால்
அன்பென்ற தீபம்
ஏற்றி வாழ்வை
பிரகாசிக்க
செய்கின்றன
ஒரு சில நட்பெனும்
உறவுகள் தான்…

அது போன்ற
ஒளியேற்றிய தோழா
ஏன் எங்களை
தவிக்க விட்டு
சென்று விட்டாய்…

பழகிய காலம்
எல்லாம்
இன்பத்தையும்
புன்னகைகளை
மட்டும் தானே
கொடுத்தாய்…

இன்று ஏன்
எங்களை
கண்ணீரில்
தத்தளிக்க விட்டு
சென்று விட்டாய்…

பிறப்பென்பது
நிரந்தரம் இல்லை
என்பதை
நீ இறந்து போன
மறுகனம் உணர்ந்தேன்…

உந்தன் இழப்பை
ஈடு செய்யத்தான்
முடியவில்லை
ஆயுள்வரை என் சிந்தையில்
உரைந்து இருக்கும்
உந்தன் நினைவுகள்…

கடந்து போன
காலத்தில்
என்னை அழகாக்கி
நீ எடுத்த புகைப்படங்கள்
இன்னும் எந்தன் அறையின்
சுவற்றினேலே
உந்தன் நினைவுகளுடன்
மாட்டி இருக்கின்றன…

உந்தன் புகைப்படத்திற்கு
மாலை போட்டு
பார்க்கும்
தைரியம் எனக்கில்லை…

இனிமேல் எந்தன்
முகத்தினில்
உன்னை பார்ப்பேன்…

உந்தன் தோழியாய்
இருந்த நாட்களில்
நண்பா என
உரிமையாக அழைப்பாயே
இனி அப்படி யார் தான்
என்னை அழைப்பார்…

நீ வாழ்ந்த காலத்தில்
என்னால்
சில உதவிகள்
செய்யாமல்
போயிருக்கலாம்
மன்னித்து விடு என
உந்தன் பிரேதத்திடம்
அழுது நிற்கிறேன்…

சென்று வா நண்பா
நாளை
நீ சென்ற இடத்திற்கு
நானும் வருவேன்….

Advertisements

#நட்பின்_இலக்கணம்

#நட்பின்_இலக்கணம்
கூடிப் பழகுதலும்,
அடிக்கடி சந்தித்தலும்,
ஒருவரையொருவர் விசாரித்தலும்
மட்டுமே நட்பாகிவிடாது
நண்பன் என்று சொல்லிக்கொள்கிற
எல்லாரும் நண்பன் அல்ல
வாழ்க்கையிலே
இன்னொருமுறை வராதா
என ஏங்கவைக்கும்
உன்னை போல ஒரு நட்பு
இன்னும் ஒன்று கிடைத்தாலும்
உன்னை போல வராதே
நண்பா
என்றும் நீயே
முதலாவதாக இருப்பாய்
என் ஆயுள் முடியும் வரை

Anatha_Narayanan_Srinivasan

என் எழுத்துக்களை
என்னை விட அதிகமாக
வாசித்தவன் நீயே
என் எண்ணங்களின் அதிர்வையும்
அது ஏற்படுத்திய வலிகளையும்
நன்கு உணர்ந்தவன் நீயே
என் வலிகளின்
ஆழத்தை உணர்ந்து
எனக்கு அதிகம்
ஆறுதல் கூறியதும் நீயே
என் இதயத்தின் ஓசைகளை
என் வார்த்தைகளில் வடிவம்
கண்டு வலியும் புரிந்து
என்னை வழி நடித்தியதும் நீயே
வலிகள் கடந்து போகும்
நல்ல நட்பாக நான் இல்லை
நாங்கள் இருக்கிறோம் என்று
அனைவரின் சார்பாகவும்
எனக்கு ஆறுதல் கூறியதும் நீயே
இன்றும் எழுதுகிறேன்
உனக்காக
உன்னை நினைத்து
நீ இன்றி
உன் நினைவுகளோடு
இப்படி ஒரு நாள் வரும்
என்று நினையாது
இருந்த காரணத்தினால்
முன்பிருந்த வலிகளை
காட்டிலும் அதிகமாக
இப்போதும் தேவை
உனது ஆறுதல்களே
நண்பா
நான் இருக்கிறேன்
என்று சொல்ல
நீ இல்லாத இந்த நாள்
என்னுடைய அத்தனை
துன்பங்களையும்
அசைபோட வைக்கிறதே

நீர் இன்றி அமையாது உலகு

#நீர்_இன்றி_அமையாது_உலகு
 
மரம் எல்லாம் வெட்டியாச்சி
குளம் எல்லாம் வீடாகி போச்சி
கிணறு என்ற ஒன்று
இப்போது காணாமல் போனது
 
இப்போது வெயில் கொடுமை
ஒரு வீடு இருந்த இடத்தில்
பன்னிரண்டு என்று
அடுக்கு மாடி குடியுருப்புகள்
ஒரு வீட்டின் நீர் தேவை
இப்போது பன்னிரண்டு
வீட்டிற்கு தேவை
 
நீர் இல்லை ஆழ்துளையிட்டு
பூமியில் இருந்து நீரினை எடுத்து
இன்றைய நாட்கள் போகின்றது
நாளை உன் மகனுக்கும்
மகளுக்கும் என்ன இருக்கிறது
என்று சிந்திப்பாய் மனமே
save-water-save-life.91235931_std

BORN TO HARVEST

BORN TO HARVEST – FARMERS

ஒரு பெண் கருவினில் தங்கிடும் கருவை போலவே
ஒரு விவசாயி தன் நிலத்தின்
விதைகளை பாதுகாத்து காக்கிறான்

பிள்ளை அதன் வளர்ச்சியில்
எத்தனை மகிழ்ச்சி ஒரு தாயிற்கோ
அதனைவிட அதிக மகிழ்ச்சி
தன் மண்ணில் விளையும் பயிரினை
காணும் விவசாயிக்கு

farmer1

கையில் தவழும் பிள்ளையை
ஆற வருடி பாதுகாத்திடும் தாய் போல
கழனியில் வளரும் நாற்றினை ரசித்து
பருவப்பெண்ணைப் போல பாதுகாத்திடுவானே
இந்த விவசாயி

அந்த பருவ பெண்ணான
நெற்கதிர்கள் தலை சாய்க்கும் நேரத்தில்
புயல் தாக்கியோ தண்ணீர் இன்றியோ
பயிர் வாடினால், நெற்கதிரை காணாமல்
கடனால் தற்கொலை செய்து கொள்கிறான்
இன்றைய விவசாயி!

#BORN_TO_HARVEST_FARMERS

 

தேவதை

தேவதை இவள் பிறந்தவுடன்
அழகு கவிதை பிறந்தது என்றேன்
பிள்ளை இவள் சிரிப்பினை
குட்டி கவிதை என்றேன்

baby-2

செல்லம் இவள்
மழலையின் வார்த்தைகள்
எனது செவிகளுக்கு
தேன்பலா என்றேன்

பள்ளியில் கரும்பலகையில்
கிறுக்கியதை ஓவியம்
என்றே அகமகிழ்ந்தேன்
சிட்டாக ஓடி ஆடியதை
சிட்டுக்குருவியாக கண்டேன்

நாகரீக உடைதனில்
மார்கரெட் தாட்சர் என
புளகாங்கிதம் அடைந்தேன்

எந்தன் சேலையை சுற்றி
விளையாடிய போது
எனக்கே தாயாக  கண்டேன்

அம்மா அவுட்டாகிட்டே என்று
நீ சொல்லிடும் நேரம்
உனக்காக அவுட் ஆவதில்
எத்தனை ஆனந்தம் அடைகிறேன்

மழலை இவள் அழகில் மட்டும் அல்ல
கோபத்திலும் பாசத்திலும்
கூட தாய் எனை மிஞ்சுகிறாள்

பேசி பேசி கொல்கிறாய் என்றால்
மௌனம் பூசி கொல்கிறாள்
சிறு புன்னைகை கொடுத்து செல்கிறாள்
குழலை மிஞ்சும் மழலை

உலக கவிதைகள் தினம்

கவிதைகள் எழுதிடும் நாள்
அனைத்தும் கவிதைகள் தினமே
இன்று மட்டும் என்ன
இதற்கான தினமாக?
எனக்கு கவிதை எழுதிட தெரியாது
வார்த்தைகளால் வரிகளுக்கு
அழகு சேர்க்க நினைக்கிறேன்
அத்தனையும் இந்த கவிக்குயில்
சொல்லிடும் போதும் குரல்
திருடி செல்கிறது
வார்த்தைகள் இன்றி காற்றினில்
எழுதிய கவிதைகள் தான் அதிகம்
கவிதை எழுதிடும் நாள்
அனைத்தும் எனக்கு நல்ல தினமே
உலக கவிதைகள் தினம்