Archives

தனி_மரம்_தோப்பு_ஆகாது

இயற்கைக்கும் விதிவிலக்கு இல்லை.
பல குழந்தைகளோடு இருந்த கூட்டு குடும்பம் இன்று ஒத்தை பிள்ளையோடு தனி குடித்தனம்

காடாக இருந்த இடங்களிலும் இன்று ஒத்தை மரங்கள்
#தனி_மரம்_தோப்பு_ஆகாது…..

single-tree

Advertisements

அம்மா

அம்மா

என் அம்மா என் செல்லம்மா
உன்னை போல் ஓர் உயிர் எனக்கு
என்றும் வேண்டுமம்மா…

என் கண்ணம்மா
நீ என் கண் அம்மா
என் பார்வைக்குள்
உன் பாச மழை ஊற்றம்மா…

கரும்பம்மா
உன் கனிவு தேனானா சுவையம்மா
அதில் எறும்பாக என் பணிகள் நூறம்மா…

அன்பு அம்மா
உன் அன்பல்லாம் அசல் அம்மா
போலி இல்லா
உன் புன்னகையில்
என்றும் என் பயணம் அம்மா…

அம்மம்மா உன் சமையல் எல்லாம்
அமுதம்மா
உன் விரல் பட்டால்
வைக்கோலும் ருசியம்மா…

வேறு என்னம்மா
உன்னோடு என்றும் நானம்மா
நம்மோடு எப்போதும் இதே பந்தம் அம்மா…

Na. Muthukumar

நா.முத்துகுமார்

உங்கள் பெயரை நான்  உச்சரிப்பதில்
என் நாவு பெறுமிதம் கொள்கிறது
பெயரில் முத்தை பதித்து மரணத்திற்கு இவ்வளவு
சீக்கிரம் முத்திரை பதித்தது ஏன்..?
{அழகே_அழகே} என்று நல்லதொரு வரி தந்தீர்
இன்று அழ வைத்து பெரும் துயரம் தந்தீர்
{ஆனந்தயாழை} என்று கவி தந்து
ஆழ் மனதில் இடம் கொண்டு
நினைத்து நினைத்து பார்த்தேன் என்று
உங்கள் வரிகளையே
எங்களை உச்சரிக்க வைத்து விட்டீர்..!!
{அவள் அப்படி ஒன்றும் அழகில்லை} என்று
பெண்களை அழகு படுத்தியது உங்கள் வரி
அப்பாவின் வலியை கொட்டி தீர்த்தது உங்கள் பேனா முனை
என் கவிதைக்கு உங்களை முன்மாதிரியாக
வைத்தேன் இன்று உங்கள் மறைவால்
என் பேனாவும் புலம்பி தவிக்கிறது..!!
ஒரு பாதி கதவாக நீங்கள்இருந்து
மறு பாதி கதவை உங்கள் மரணம் பூட்டி விட்டது
ஆனாலும் பூட்டை உடைத்தெரிவோம்
உங்கள் கவிதைகள் எங்கள் நெஞ்சில்
உயிர் வாழும் வரை…
மறைந்தாலும் மறையாத உங்கள் எழுத்துக்கள்
எங்களுக்கு உங்கள் நினைவுகளை கொடுக்கும்…
உங்கள் மரணத்திலும் என் கண்ணில் கவி படைத்த
சிறந்த படைப்பாளி உங்களுக்கு
எனது கவிதை மூலம் இரங்கல்கள்…
na-muthu

நான் பெறாத செல்வமே

என் முன் தோன்றிய

மழலை முத்தே

தேடுகிறேன்  நீ எங்கே

தொலைத்தால் தேடிடலாம்

என் கண்ணே உன்னுள்

என்னை தொலைத்ததால்

தேடுகிறேன்  நீ எங்கே

நான் தேடும் முன்

என் கண்முன்னே வந்த

என் தேன் கனியமுதே,

தேடுகிறேன்  நீ எங்கே

நான் தரும் முன்பே

உன்னுள் வந்த பாசம்

எந்தன் நேசமே

தேடுகிறேன்  நீ எங்கே

வந்து விடு கண்மணியே

தந்துவிடு என் உயிரான

உன் அன்பினை

தேடுகிறேன்  நீ எங்கே

mazhalai

ப்ரியமானவளே

பொன்மகள் இவள் 
என்னை கொஞ்சிடும் போது
முழு மதியது அவள் முகத்தினில் கண்டு 
என் மதியது செயல் இழக்கும்,
உடல் முழுவதும் வண்ணத்து பூசிகள் சிறகடிக்கும். 
 
பொதுவாக தங்கமே செல்லமே என்று
மகள்களை அன்னையர் கொஞ்சிடுவர் 
மகளவள் தங்கமே என்று சொல்லும் நொடியில்
நான் நெருப்பில்லாமல் நீரினில் உருகுகிறேன் 
மங்கையவள் கொஞ்சும் நேரம் 
மழலையாகவே  மாறிவிடுகிறேன்  
 
ஆறாத கோபம் கொண்டாலும் 
தங்கம் கோபமா என்று அவள் கேட்டிடும் போது 
சூரியனை கண்ட பனி போல
என் கோபங்கள் ஓடி ஒளிந்து கொள்ளும்
அவளது ஏற்றத்தில் மட்டுமே
எனது அக்கறை யாவும் என்று உணர்ந்ததினால்
தனது சீற்றத்தை எனக்கு
சீதனமாக கொடுத்திட்டால்
மகளுக்கு மதம் பிடிக்கும்
ஆனால் மதம் பிடிக்காது
மதம் அது பிரச்சனை ஆனால்
மதம் அதை உனக்காக தூக்கி எறிவேன்
நீ நானாகவும் நான் நீயாகவும் இருக்கும் போது
அன்பு நிலையாக இருக்குமேயானால்
இந்த இந்துவின் இதயத்தில் இஸ்லாம் குடியிருக்கும்
எல்லா மதமும் சம்மதம் ஆகும் என் உயிரே
பாவை அவள் பேனாவை கையில் எடுத்தால்
எழுதும் பாக்கள் அத்துனையும் அவள் அன்னை எனக்காகவே
இதயமது அவளுக்காக துடிக்க மறந்தாலும் எனக்காக துடித்துக் கொண்டே இருக்கும் நான் இறந்த பிறகும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை
motherhood

Love of my life

என் கண்ணே,
களங்கமில்லாத கனி அமுதே
தித்திக்கும் கற்கண்டே
திகட்டாத தேனமுதே
mom-daughter-2
தவமாய் தவமிருந்தும்
தளராமல்தான் சுமந்தும்
பெற்றெடுத்தாலும் கிடைக்காத
பூங்கரும்பே
என் பொன்னரும்பே,
என்ன தவம் நான் செய்தேன்
உன்னை நான் பெறவே
அன்னை என்ற
பாக்கியத்தை அருளிடவே
ஆனந்தம் நான் அடைந்திடவே
அவனியில் நீ அவதரிதையோ
உன் சிரிப்பில் நான் மயங்க
என்  சிரிப்பில் நீ மயங்க
உன் அணைப்பில் நான் மயங்க
என் அணைப்பில் நீ மயங்க
கோவங்கள் தாபங்கள் விலகி ஓட
சோகங்களும் உன் சிரிப்பினில் சிதறி ஓட
போராட்ட வாழ்க்கையும்
பொக்கிஷமாக மாறியது
தங்கமே உன் வரவால்
புண்ணான மனமும்
புன்னகையனதடா
வாழ்கை வசந்தமானது
பொன்மகள் உன் வருகையால்
புதிராக இருந்த என் வாழ்வில்
புதையலாக வந்தவளே
புதையலாக நீ இல்லாதிருந்தால்
புலம்பலே என் வாழ்க்கையடா
வறண்ட பாலைவனத்தில்
வளமாக்கும் மழை நீராய்
என் வாழ்வை வளமாக்கும்
அன்பு மகளாய் வந்தவளே
நீ எந்த வயிற்றில்
பிறந்திருந்தாலும்
உன்னால் வரும் பெருமையும் சிறுமையும்
அனைத்தும் எனக்கே சொந்தமடா
உறவாக இல்லை நீ
எந்தன் உயிராக இருப்பவளே
என் உயிரே நீ இல்லாமல்
என் வாழ்க்கை இல்லையடா

மங்கையின் துணிவு

CONFIDDENT WOMAN

என் வாழ்க்கையின்

வசந்தமென வர விரும்பினேன்

உன்னை, அவஸ்தைகள்

படபோகிறாய் என்று வேறு திசை

நோக்கிச் சென்றதனால்

பேதை இவள்  வாழ்வுதனை

முடித்துக் கொள்வாளோ??

இல்லையடா நான் வாழ்ந்து

அன்பாலே உலகை வெல்வேன்

அதன் மூலம்

என்னுள் இருக்கும்

உன்னை கொன்றுவிடுவேன் …!!!

என் வாழ்க்கை

கல்லும் முள்ளும்

இல்லாத பாதை

அல்லவே

அழகிய பாதையாக நீதான்

வரவேண்டும் என்று இருந்தேன்

இடையே இதுவல்ல

என் பாதை என்று

திசை மாறிட

எப்படி இரும்பாய் இருகிறாய் நீ ??

வேதனை என்னவென்று

விலங்கிடுமுன் வேள்வியாய்

பிறந்தவள் நானாடா !

உன்னை காதலித்த பின்

புரிந்து கொண்டேன்

எனது தவறு என்னவென்று

எந்தன் காதலது

கருமேகம் அல்லவே

நீ சென்றதும்

காற்றினில் கலைந்து போக !

இதயத்தில் எழுதியதில்லை

செதுக்கியது,

காலங்கள் பல ஆனாலும்

காதல் அழிவதில்லை

அழிவு என்பது

காதலர்களுக்கு மட்டுமே

உடலும் உயிரும் அழியலாம்

உணர்வுகள் அழிவதில்லை ! ! !