Archives

ஹைடன் மந்திரம்

ஐபிஎல்-இல் எனக்கு பிடித்த அணி சென்னையின் சென்னை சூப்பர் கிங்ஸ். அதுவும் இந்திய கேப்டனின் தலைமையினால் என்று சொல்லலாம். நான் பிறந்த மண்ணை நானே ஆதரிக்கலை என்றால் அப்புறம் வேறு யாரு ஆதரிப்பார்கள்.

சென்னை சூப்பர் ராஜாக்கள், டெல்லி டேர் டெவில்ஸ் மோதும் ஐபிஎல் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட இதை எழுத வேண்டும் என்று தோன்ற வில்லை.

இன்று விடுமுறை நாள், நமக்கு நல்ல டைம் பாஸ் ஆகும் என்று நேற்றே நினைத்து அனைத்து வேளைகளையும் மதியம் 2.30(அங்கே 4 மணி) மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்று காலை முதலே ஒரு துடிப்புடன் தான் இருந்தேன், ஆம் தோனி இன்றி சென்னை ராஜாக்கள் எப்படி விளையாட போகிறார்கள். எதிர்த்து விளையாடும் அணியும் நன்கு பலம் வாய்ந்த டெல்லி டேர் டெவில்ஸ்.

என்னடா நம்ம இந்தியக் கேப்டன் தோனி இல்லையே ! ! ! தேவைக்கு நம்ம கேப்டன் விஜயகாந்தைக் கூப்பிடலாமா என்று எண்ணினேன். தமிழுக்கும், நம்ம சென்னைக்கும் பெருமை சேர்க்க அவரைவிட்டால் யாரால் முடியும், ஒரே பந்தில் ஒன்பது சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் அவரிடம் தானே உண்டு.

மேட்ச் ஆரம்பித்து முதல் நான்கு ஒவரிலேயே இதைப் பார்த்து என்னோட டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம், சேவாக் அடித்து, துவைத்து, கிழித்து முடிக்கட்டும் என்று ஒரு சின்ன தூக்கம் போடலாம் என்று நினைத்து டி.வி ஆஃப் செய்தேன்.

நான் தூங்க போனால் டெல்லி என்ன தூங்கி விடுமா, கொஞ்சம் கடினமான இலக்கை நிர்னையித்தனர் என்றே சொல்ல வேண்டும். ஆம் 185 ரன்கள் இருபது ஒவர்களில் எடுத்தனர் டெல்லி அணி.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியசென்னையின் பதிலடி ஆட்டம் கான டி.வி முன் அமர்ந்தேன்.

சின்ன பாப்பா பெரிய பாப்பா என்பது போல நம்ம குட்டி பார்த்தீவ் பட்டேலும், மேத்யூ ஹைடனும் களம் இறங்கினார்கள்.

சிறிது நேரத்திலேயே பரிதாபமாக பார்த்தீவ் ரன் ஔட்டாக, நான் மலையாக (மலையை) மட்டுமே நம்பியிருந்தேன்.

ஹைடன் அடித்தால் மட்டுமே இன்று வெற்றி கிடைக்கும். சிலிர்த்து எழவேண்டுமே சிங்கம் என்று பிரார்த்தனைகள் வேறு எனக்குள்.

ஆஹா வெகு நாளாக எதிர் பார்த்த ஹைடனின் சூராவளி ஆட்டம் ! !

ஹைடன் ஔட் ஆகும் வரை நான் இதைப் பற்றி யோசிக்கவில்லை. கூகிள் புஸ் போட நினைத்தேன் பின்னர் தான் தீர்மானித்தேன் இந்த ஆட்டம் எனக்கு மிகவும் பிடித்தது அதனால் ப்ளாகிடலாம் என்று.

ஆஸ்திரேலியர்களுடன் விளையாடும்போது இதை மாதிரி ரசித்தேனா, நிச்சயமாக இல்லை, ஹைடனின் ஆட்டத்தை ரசிக்க நான் ஆஸ்டிரேலியராக இருந்து இருக்கவேண்டும். இந்தியராக அவரின் ஆட்டத்தை ரசிக்கும் வாய்ப்பை கொடுத்த ஐபிஎல்-க்கு நன்றி.

சென்னையில் அடித்திருந்தால், மெரினா அலைகள் ஆர்பரித்திருக்கும். என்னமோ தலைநகரில் வரவேற்பு கொஞ்சம் குறைவு தான். ஏழு சிக்ஸர்களும், 9 நான்கும் அடித்து நுறு ரன்களும் அடித்துவிடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், மிஸ்ராவால் மிக அருமையாக வீசப்பட்ட பந்தை, மிதமானவேகத்தில் அடிக்க,  அருமையான கேட்ச்-ஐ பிடித்து அவரை வெளியேற்றினார் தில்ஷான்.

மைதானத்திற்கு வெளியே இப்படி அடிக்கவேண்டும், என்று பயிற்சி மேற்கொண்ட மோர்கெல் வந்த வேகத்தில் வெளியேறினார், இம்முறை, தில்ஷான் பந்து வீச நேராக பந்து மிஸ்ரா கையில் பிடிபட, நம்ம மோர்கெல் பெவிலியன் திரும்பினார், திரும்ப அங்கே போய் பிராக்டிஸ் பண்ணுங்க.

கெம்ப் பின் மிடில் ஸ்டம்பைத் தகர்த்த போதும் சென்னையின் வெற்றி நிச்சயமாகிவிட்டது.

இன்றைய கேப்டன் சுரேஷ் ரெய்னா, இந்திய கேப்டன் தோனி போன்றே மிகவும் நிதானமாக ஆடி வெற்றியை தேடி தந்தார்.

வெற்றி ஹைடனின் அதிரடிக்கு கிடைத்த வெற்றி. மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டுடன் ஹைடன். சூப்பர் சிக்ஸ் மட்டும் இல்லை சூப்பர் ஸ்மைலுடன்.

ஐபிஎல்-இல் மட்டும் இல்லை சென்னை-னாலே தலைநகருக்கு கொஞ்சம் நடுக்கம்தான.

தொடரட்டும் இந்த வெற்றி நம்ம சென்னை சூப்பர் ராஜாக்களுக்கு ! ! !

Advertisements

sachin200

வயிறு நிரம்ப போட்டால் தான் விருந்தா? காதுகளுக்கு விருந்து கொடுத்தார் சுசிலா ஒரு வாரம் முன்பு… அடடா என்று இருந்தது அது போன வாரம்…

இன்று பலரது கண்களுக்கு டி.வி மூலமாக விருந்து.

இடம்: க்வாலியர், நாள்: 24-பிப்ரவரி 2010.

சாதனை: ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் – டபிள் டன்

சாதனையாளர் : சாதனைகளுக்கு மட்டுமே சொந்தகாரர் & ஒன் & ஒன்லி மாஸ்டர் பேட்ஸ்மேன் – சச்சின் ரமேஷ் டெண்டுள்கர்

எதிர்த்து அடிய அணி: தென் ஆப்ரிகா (கென்யா, வங்காள தேசத்துடன் இருந்தாலும் சாதனை சாதனையே)

என் கண்களுக்கு http://live.cricbuzz.com ஒரு வரப்பிரசாதமாகவே இருந்தது. ஆம் முதல் பந்து முதல் கடைசிப் பந்து வரை வர்னனையை படித்து மகிழ்ந்த பல்லாயிரம் கோடியில் நானும் ஒருவராய்.

இந்தியராக பிறந்த அனைவரும் பெருமைக் கொள்ளும் நேரம்..

இது வரை பலரது சாதனைகளை உடைத்து வந்தார் சச்சின். இதுவரை யாரும் செய்யாத சாதனைகளும் வர இருக்கிறது அதற்கான முன்னோட்டமே இந்த  இரட்டை சதம் 200/200.

என்ன தவம் செய்ததோ அந்த பந்து சச்சினின் மட்டையில் பட, அனைத்திற்கும் இன்று புகழ் தான். பந்து வீசியது யாராக இருந்தாலும் சச்சினை திட்டித் தீர்த்து இருப்பார்கள், ஆனாலும் உங்களுக்கும் புகழ் தான். ஆம் நீங்கள் வீசிய நேர்த்தியான பந்துகளை எங்கள் தங்கமாம் சச்சின் அடித்து நொறுக்கியதால். 25 பௌண்டரிகளும் கண்களுக்கு விருந்து தான்.(ஹைலைட்ஸ்ல தான் பார்த்தேன்)

சச்சினின் டபிள் ஹண்ட்ரட். சிகரங்களைத் தொட்டவர் தான்.. ஆனாலும், சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப் பட்ட ரெக்கார்டை சச்சின் உடைப்பார் என்று சிறிதும் நினைக்காத நேரத்தில்… வாவ் ஃப்ண்டாஸ்டிக்.

என்ன ஒரு ஆட்டம்.. பதினாறில் ஆடிய ஆட்ட்த்தை இப்போது ஆடிக் காண்பித்து, நான் என்றும் பதினாறு என்று அவரைப் பற்றிய சர்ச்சைகளுக்கு மட்டையால் பதில் சொன்னார் என்றால் அது தவறு, மட்டையால் அடித்துச் சொன்னார்.

சச்சினை அவுட்டாக்க எதாவது தென் ஆப்ரிக்கா முயன்றனரா என்ற சந்தேகம் என்னைப் போல உங்களுக்க்கும் தோன்றியதா?

194 ரன்களே இதுவரை அதிக பட்ச ஸ்கோராக இருந்தது, பாகிஸ்தானின் சயீது அன்வர் சென்னையில் அடித்து 194ஐ கடந்து 196 என்ற இருந்தபோது எனக்குள் ஏற்பட்ட கர்வம், இந்தியர்கள் அனைவருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும்.

சச்சின் 199இல் இருக்கும்போது, தோனி அடித்த நான்கும், ஆறுகளும், விருந்தாகவோ வான வேடிக்கையாகவோ தெரியவில்லை… கடங்காரன் நம்ம ஹீரோவ ஒரு ரன் அடிக்க விடமாட்டான் போல இருக்கேன்ற டென்ஷன் எல்லோருக்கும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சச்சினின் இந்த சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெற்றியுடன் தான் கொண்டாட போகிறோம். தெ.ஆ – 107/6 இன்னும் நான்கு விக்கெட்டுகள் விழுந்துவிடும் பட்சத்தில், நம் சந்தோசம் 200 மடங்காகும் என்பதில் சந்தேகமில்லை.

உலகக்கோப்பை கனவு நினைவாகும் நேரம் நெருங்கிவிட்டது – உன்னால் உன்னால் முடியும் தோழா.