Archives

Yazhini-Part2

ஆஷா போஸ்லே பாடிய செண்பகமே செண்பகமே” பாடலை மிகவும் சாதரணமாக பாடிய அந்த ஸ்டைல் இமாலய சாதனை இந்த இளம் கன்றால் மட்டுமே முடியும். இந்த பாடல் ஒன்றும் சாதரணமாக பாடக்கூடிய பாடல் அல்ல…..

எஸ்.பி.ஷைலஜா பாடிய ”ராசாவே உன்னை நான் எண்ணிதான்” பாடலை மிக அற்புதமாக பாடி அசத்தியவள் இந்த குட்டி… எப்படி உன்னால் இந்த சின்னஞ்சிறு வயதில் இத்தனை அழகாக இந்த பாடல்களை பாட முடிந்தது?

இவள் பாடிய அனைத்துப் பாடல்களும் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்திகிற பாடல்கள், அவை அனைத்திற்கும் ஏற்றார் போல இந்தக் குட்டி குயில் எப்படி அந்தப் பாடல்களுக்கு உயிர் கொடுத்தாள் என்று தெரியவில்லை.

”தேன் சிந்துதே வானம்” எப்படி தான் இந்த வாண்டு அத்தனை பாடல்களையும் மனப்பாடம் செய்ததோ? ”கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும், கையோடு கைகள் உறவாட வேண்டும், கண்ணங்களே இதம் பதம்” எனும் போது அவள் கொடுத்த அந்த பாவம், ஒராயிரம் ஜானகி பாடல்களைக் கேட்ட திருப்தி வந்தது. உன்னுடைய வயதில் இந்த உணர்வு பூர்வமான பாடலுக்கு இதை விட அருமையாக உயிர் கொடுக்க ஒருவராலும் இயலாது கண்ணே… உன் அம்மாவை உனக்கு சுத்திப்போட சொல்லுடா செல்லம்….

”நானே வருவேன் இங்கும் அங்கும்” என்ற பாடலுடன், அன்பே வா அருகிலே என்ற படலையும், அதனோடு காஞ்சனாவில் இருந்து ஒரு பாடலை இனைத்து பாடியது சூப்பர் குட்டி.

எந்த பாடலைச் சொல்வது? கடைசியாக பாடியமாதா உன் கோவிலில்” பாடல்தான் நான் இப்போது விரும்பிக் கேட்கும் சுப்பிரபாதம். காலை எழுந்தவுடன் யாழினியுடன் தான் எனது நாள் தொடருகிறது. என்ன ஒரு தெளிவு இந்த குழந்தையிடம்தான். இது விஜய் டிவி தந்த நம்பிக்கை நட்சத்திரமா, இல்லை விஜய் டிவி நேயர்களுக்கே வந்த நம்பிக்கை ஒளியா?

இந்த வாண்டு பாடிய போது எஸ்.ஜானகி பிள்ளைக் குரலில் பாடிடும்போது ஒரு சந்தோஷம் இருக்கும், ஆனால் அந்த எஸ்.ஜானகி பாடிய பாடலை இந்தக் குழந்தை பாடும்போது ஒரு பெருமை ! எப்படி இப்படி ஒரு அதிசயம் இந்த சின்ன குரலில் என்று ! !  உனக்கு கலைவானியின் அருள் நிறைய இருக்கிறது என்றே தோன்றுகிறது அதனால் தானோ யாழினி என்று பெயரும் வந்தது??

”மழையே மழையே இளமை முழுதும்” என்ற பாடலைக் கேட்டபின் இவளது பக்தையில் இருந்து, பைத்தியமாகவே மாறிவிட்டேன். எஸ்.பி.பாலாவுடன் எஸ். ஜானகியுடன் இனைந்து பாடிய அருமையான பாடல், இவள் ஒருத்தியே பாடியது ஆச்சர்யமில்லை. ஆனால் இந்த பாடல் பல இளைஞர்களுக்கு கூட தெரியாது. அம்மா என்ற படத்தில், பிரதாப் போத்தனுடன், சரிதா இனைந்து நடித்த படம்., இந்த பாடல் வரிகள் மழையில் கதா நாயகியும், கதா நாயகனும் பாடிடும் மோகப் பாடல். அதனையும் இந்தக் குட்டி அழகாக பாடியது. பாடல் முடியும் தருணத்தில் ஒர் வார்த்தையில் இவளது குரல் கம்மியது, ஆயினும் அடுத்த வார்த்தையில் சரி செய்து பாடலை முடித்தாள். என்ன சொல்ல உன்னை கொஞ்ச வார்த்தைகள் இல்லை.

உலக நாயகன் கமல் நடித்த சதிலீலாவதி என்ற படத்தில் வந்த ”மாறுகோ மாறுகோ” கமல் பேசிடும் வசனத்துடன், கோவை சரளாவின் வசனத்தையும் பேசியதுடன், சித்ரா பாடிய பாடலையும், இவள் பாடியதும் சூப்பர். கப்பக் கிழங்கா என்று கேட்ட போது சித்ரா மட்டும் அல்ல பார்த்தவர்கள் அத்தனைப் பேரும் சிரித்து இருப்பார்கள். இந்த பாடலை இவள் ஒருவளாகவே பாடியதும், வசனங்களை பேசியதும் இவளால் மட்டுமே முடியும். உனக்குள் ஒரு நல்ல நடிகை இருக்கிறாள் என்று சொல்லுவதைவிட உனக்குள் ஒரு நல்ல ரசிகை இருக்கிறாள்… அதனோடு உன்னிடம் நல்ல குரல் வளமும் இருப்பதால், இரட்டிப்பு மகிழ்ச்சி தர முடிகிறது உன்னால்…..

ஒரே நாள் என்ற பாடலை சீனியர் ஒருவருடன் பாடியதும், புத்தம் புது ஓலை வரும் என்ற பாடலை பாடிய போது, ஷாலினியும், ஷைலஜாவும் ரசித்தது என்னவோ என் மகள் பாடியதை ரசித்தது போல இருந்தது.

ஹேராம் என்ற படத்திலிருந்து வரும் ”நீ பார்த்த பார்வைக்கு” நான் என்ன சொல்ல, வந்திருந்த அத்தனை நடுவர்களும் உன்னை புகழ்ந்து தள்ளினார்கள். நான் சொன்னால் அது கமல் படப்பாடல் என்று புகழுவதாக வரும்… யாழினி பாடிடும் போது கமல் படப் பாடல்களும் அழகு பெறுகிறது.

”கடவுள் தந்த அழகிய வாழ்வு” என்ற பாடலில் கருணை என்று இந்தக் குழந்தை சொல்லிய வார்த்தையில் அந்த தருணத்தில் கடவுளின் வடிவமாக கருணையுடன் என் கண் முன்னே தெரிந்தாவள் நீ மட்டுமே. உன் முகத்தில் இருக்கும் அந்த கனிவு ஒன்று போதும் உன்னை வெற்றிக்கு கொண்ட செல்ல.

மனோவுடன் இனைந்து பாடிய ”ஆத்தங்கரை மரமே பாடல்” ஒன்று போதும், இவளுக்கு மேடைகள் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று சொல்ல… இவள் பாடிய அனைத்துப் பாடல்களுமே எந்தவித பயமும் இல்லாமல் பாடியவிதம் சூப்பரோ சூப்பர் மா.

அழகே உனது பலம், உனது குரல் மட்டும் இல்லை, உனது நம்பிக்கையும் தான் செல்லமே…. உன்னிடமிருந்து நான் கற்றுக் கொண்டது நம்பிக்கை, நான் மட்டும் அல்ல, உன்னை ரசித்த அனைவரும் ரசித்த விஷயமாக இருக்கும். நம்பிக்கை என்ற வார்த்தைக்கு யாழினி என்று அர்த்தமோ??? ஒரு சுற்றில் அனிதா குப்புசாமியும் அதையே சொன்னார், இந்த சின்ன பெண்ணிற்குள் எத்தனை நம்பிக்கை, உன்னை சுடர் விட செயத விஜய் டிவிக்கு ஒரு நன்றி.

”கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே” என்ற பாடல் இந்த வயது குழந்தைகள் பலருக்கு தெரியவே தெரியாது, இந்த மெல்லிசை குயில் ஒர் குத்து பாட்டையும் எவ்வளவு அழகாக பாடுகிறது என்று வியக்கும் நேரத்தில், மாலதி பாடிய ”கும்பிட போன தெய்வம்” பாடலை அசாதாரணமாக பாடி அசத்தியது இந்த மழலை. பேசிடும் போது மழலை, பாடிடும் போது அந்த கலைவாணியே இவள் உருவில் வந்து பாடுகிறாளோ என்றே தோன்றுகிறது.

”ஒத்தையிலே நின்னது என்ன” என்று சித்ரா வித்தியாசமான, ஒன்றும் தெரியாத குரலில் பாடிய பாடலை, அதே சித்ரா முன்னிலையில் பாடியதும், சித்ரா இந்த சிட்டு பட்டு குட்டியை பாராட்டிய விதம் – என்னை விட அருமையாக பாடினே நீ என்றதைவிட வேறு ஒரு ஆசிர்வாதமோ,  அவார்டோ எதுவும் தேவையில்லை. இப்படி திறந்த மனதுடன் இந்த சின்னஞ்சிறு குயிலை பாராட்ட ஆஹா அது எங்கள் தங்க குயில் சித்ராவால் மட்டுமே முடியும்.

மலையாளத்தில் எஸ். ஜானகியின் பாடலை பாடி சாக்லேட் ஷவர் வாங்கியது இந்த வயதில் இவளால் இது முடியும் என்றால், சர்வதேச அளவில் பாட முடியும் என்பதற்கு ஒரு சான்று. அந்தப் பாடலை மனப்பாடம் செய்தது மட்டும் இல்லாமல், அதனை சிறப்பாக பாடியது சபாஷ் தங்கம். நீ சுடர்விட்டு ஒளிர்வாய் என்பதற்கு இந்த சாக்லேட் ஷவர் ஒரு சான்று.

”நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா” என்ற எமது மகாகவியின் பாடலை இந்த குழந்தை பாடிய போது, இவளிடம் நானும் சரணடைந்தேன்.துன்பமினியில்லை சோர்வில்லை சோர்வில்லை தோற்பில்லை” எனும் வரிகளில் அன்பே உனது குரலில் வந்த வரிகளால் எனது துன்பங்களும் பறந்தது, சோர்வும் என்னை விட்டு விலகியது.

”காற்றோடு குழலின் நாதமே” என்று இவள் பாடியபோது, ஏழு கார்நாடக ஜாம்பவான்கள் அங்கு குழுமியிருக்க இவள் இந்த பாடலை பாடுகிறாளே என்று எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஆனால் இவள் பாடிடும்போது அங்கு இருந்த இசை அரசி சுதா ரகுநாதானின் முக பாவனைகளை கண்டபின் மட்டுமே கொஞ்சம் அமைதியானது என் மனது. ஆனால் இந்தக் சுட்டிப் பெண்ணோ யார் இருந்தா எனக்கு என்ன, எனக்கு என்ன வருகிறதோ அதைப் பாடுகிறேன், தவறுகளை திருத்திக் கொள்வேன் என்பது போல மிகவும் துணிச்ச்சலோடு கர்வமில்லாமல் பாடியது இந்தக் குழந்தை. நித்யஸ்ரீ இவளை பாராட்டிய விதம் அருமை. இந்தக் குழந்தையை பாராட்டாத இசைக் கலைஞர்கள் யாருமே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

சோகமான பாடல்கள் சுற்றில் இவள் பாடிய பாடலை என்ன சொல்வது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலகுறைவால் அமெரிக்கா சென்ற போது பட்டி தொட்டி எல்லாம் பாடப் பட்ட பாடல். ”இறைவா உன் மாளிகையில் “ என்ற பாடல் ஒளி விளக்குதிரைப்படத்தில்.இந்தக் குழந்தைக்கு இந்த பாடல் எப்படிபட்ட சூழ் நிலை பாடல் என்று தெரியுமா என்று கூட தெரியவில்லை, ஆனால் அவள் பாடியபோது அவளது முகம் சொல்லியது, எனக்கு இந்த பாடலின் வரிகள் மட்டுமல்ல சூழ் நிலையும் தெரியும் என்று. கண்ணே இந்தக் குரலில் பாடினாள், இறைவனே இங்கு வருவான் ஏன் அந்த உயிரை தரமாட்டான்??  சாதனா சர்கம் இந்த பாடலுக்கு பாராட்டும் போது, உன் வயதில் இந்த மாதிரி ஒரு பாடலை நான் பாடியிருக்க மாட்டேன் என்று சொன்னதும், சுபா என் கண்களில் கண்ணீர் கொண்டு வந்ததும், உன்னோடும் நானும் பகவானிடம் உருகினேன் என்று சொன்னார்கள் என்றாள், இவள் எப்படி பாடி இருப்பாள்?

இவள் பாடிய பாடல்கள் பல நான் மிகவும் ரசிக்கும் பாடல்கள் என்பதால் இவளை எனக்குப் பிடித்ததா? இல்லை என் மகள் அர்ச்சனா வளர்ந்தாள் இவள் போல தான் இருப்பாள் என்பதாலா? இவளை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் என் மகளை காணும் இன்பம் வருவதனாலா? கலைவானியே கண் முன்னே பாடுவதாக தோன்றுவதா எது என்று தெரியவில்லை. பல குழந்தைகள் நன்றாக பாடியபோதும், இவளின் குரலுக்கும், இவளது துணிவிற்க்கும், இவளது விடாமுயற்ச்சிக்கும் என்று பல ஆயிரம் வாக்குகள் நான் மட்டுமே போட வேண்டும் என்று தோன்றுகிறது…..

முந்தய பதிவு                                                                                                                 தொடரும்

Advertisements

Yazhini-Super Singer

யாழினி–ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்3

இதுவரை இரண்டு ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிகளில் பங்கு கொண்டு, தோல்வியை சந்தித்த இந்த குழந்தை யாழினி. மூன்றாவது முறையாக விஜய் டிவியில் தனது முத்திரை பதிக்க வந்ததை என்னவென்று சொல்வது? விடாமுயற்சியின் மறு உருவம், கடின உழைப்பாளி, தன்னம்பிக்கையின் மறுபெயர் யாழினி என்று சொல்லவா.

குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர். ஆனால் இந்த மழலையின் குரலைக் கேட்டபின் வேறு எதுவும் இனிது என்று சொல்ல மனமில்லை, உனது குரல் மட்டுமே இனிது யாழினி என்று தான் சொல்ல தோன்றுகிறது.

என்ன குரல், என்ன தெளிவான வார்த்தைகள், என்ன பாவம், உயிர் தருகிறாள் அனைத்து பாடல்களுக்கும். இவள் மழலை மாறாது பேசும் சிறு குழந்தையா  இவள் பாடும் பாடல்களின் வரிகளுக்கான அர்த்தம் புரிந்து பாடும் ஒரு பெரிய பாடகியா என்று வியக்க வைக்கிறது. ஒவ்வொரு பாடல்களுக்கும் அவள் கொடுக்கும் உணர்வுகள், அந்த பாடலுக்கு உயிர் கொடுக்கிறது.

மச்சான் மீசை வீச்சறுவா என்று பாடி இந்த தேர்வு குழுவினரால் தேர்ந்து எடுக்க பட்டாள்.

பொடி நடையா போறவரே” என்ற பாடலை பாடிய போது சூப்பர் நல்லா இருக்கு, நிறுத்துமா செல்லம் என்று நடுவர்கள் சொல்லியும் அடம் பிடித்து முழு பாடலையும் பாடினாள் இல்லை ஒரு ஆட்டத்துடன் தான் நிறுத்தினாள்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே இந்த குழந்தை ”நினைத்து நினைத்து பார்த்தேன்” என்ற பாடலின் சரணம் பாடியபோது ”பாடகி மகதியை”  மயக்கியது மட்டுமல்ல, கண்களை நனைத்தது. ஐந்து நடுவர்களையும் எழுந்து நின்று கைதட்ட வைத்தது. இது முடிவல்ல ஆரம்பம் மட்டுமே…..

பி.சுசீலா பாடிய ”மலருக்குத் தென்றல் பகையானால்” பாடல் பிறந்த வருடத்தில் யாழினியின் அம்மா கூட பிறந்து இருக்க மாட்டார், ஆனால் அந்த பாடலை இந்த குயில் பாடிய போது, அதில் இருந்த உயிரோட்டம், ஒரு நிமிடம் என்னை மெய் சிலிர்க்கச் செய்கிறது.

”நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா” என்ற பாடலில் அந்த முதல் வரியைகூட சுசீலா பாடிய விதத்தில் என்னால் பாட முடியாது. ஆனால் இந்த குழந்தை பாடியபோது அசந்துபோனேன், ஆச்சர்யப்பட்டேன்.

நேற்று இந்த நேரம்” பாடலில் ஒரு வார்த்தை கோலங்கள் என்று வரும் ஆஹா அருமையாக பாடினாள். உன்னால் இந்த பாடலும் நான் தினமும் ரசிக்கும் பாடல்கள் வரிசையில் வந்தது.

”லேசா லேசா” என்ற பாடலை பாடி என்னை லூசாகவே மாற்றினாள்

அச்சம் அச்சம் அச்சமில்லை என்ற பாடலை அச்சம் சிறிதும் இன்றி பாடினாள் இந்த சின்ன குழந்தை. ”வெண்ணிலவே வெண்ணிலவே”  ”குளிச்சா குத்தாலம்” என்று பல ஏ.ஆர்.ஆர் பாடல்களை பாடினாளும் என் மனதில் இவள் பாடிய பழைய பாடல்கள் என்றும் நீங்கா இடம் பெறும் பாடல்கள்.

”அலேக்ரா அலேக்ரா” கந்தசாமி படத்தில் இருந்து ஒரு பாடல், என்ன அழகு, இவள் சிரித்தபடி, மிகவும் ரசித்தபடி பாடியதும், உச்சஸ்தாயியில் பாடிய போது வியந்து போனேன். உஷா உதுப் இவளை பாராட்டியது உன்னுடைய குரல் நல்ல ப்வர்ஃபுல்லா இருக்கு, எனக்கு மிகவும் பிடித்தது. என்ன ஸ்டைல்டா டார்லிங் என்று சொன்னது மிகவும் சரி தான். உன்னால் இந்த பாடல் அழகு பெற்றது பொன்மணியே….

உன்னி மேனன் சொல்லியபோது, கண்களுக்கு விருந்து என்றார் இந்தக் குட்டியின் பாடலுக்கு. குப்புசாமியோ ஒரு படி மேலே போய், பாடுவதற்கு முன் இது ஒரு குட்டி செல்ல குழந்தை, நீ பாடியவுடன், அந்த குழந்தைக் காணாமல் போய், ஒரு சூப்பர் சிங்கராக யாழினி வருகிறாள்.

ராக் & ரோல் சுற்றில் இவள் என்னை பித்து பிடிக்க செய்தாள், ”யாரடி நீ மோகினி” என்ற பாடல். என்னை மட்டுமல்ல அனைவரையும் அசத்தினாள் இந்த சிட்டுக்குருவி. இதனுடன் வேறு ஒரு பாடலை, மூச்சு விடாமல் பாடி அசத்தியது இந்த குட்டி சாத்தான்.

”போட்டுத்தாக்கு வரா வரா போட்டு தாக்கு என்ற பாடலை அனாயசமாக பாடி அசத்தினாள். 

தொடரும்

கேட்டேளே அங்கே

குத்து பாடல்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்று என்றாகிவிட்டது. குத்து பாடல் இல்லாத படம் ஓடாது என்ற நிலைக்கு தள்ளபட்டுவிட்டது. தொன்று தொட்ட காலம் முதல் இன்று வரை குத்து பாடல்கள். இலந்த பழம் என்று ஆரம்பித்து (அதற்கு முன்னேயும் இருக்க கூடும்,எனக்கு தெரியவில்லை) மல மல வரைக்கும் நீண்டு கொண்டே போகிறது இந்த பட்டியல்.

கண்ணை மூடிக்கொண்டு உடலில் உடுப்பு இருக்கிறதா என்று தெரியத நிலையில் ஆடும் ஆட்டம், அதற்கு ஒரு பாட்டு என்று. இப்போது பாதி பாடல்கள் குத்து பாடல்களாகவும், மீதி பாடல்கள் தங்களை துதிபாடும் பாடல்களாகவும் இருக்கிறது. பெண்களை கவர்ச்சியாக ஆள் பாதி ஆடை பாதி(எங்கே பாதி) என்றும், அவர்களுடன் ஆடும் ஆண்களுக்கு கோட்டு சூட்டு என்று போட்டு ஆடை குறைப்பு இல்லை எனும் அளவுக்கு அரங்கேற்றமிருக்கும்.

குத்து பாடல்கள் பல வந்திருந்தாலும், பல சூப்பர் ஹிட்டாகி மக்கள் மனதில் இடம் பிடித்தாலும், எனக்கு என்னமோ ஒரு குத்து பாட்டும் பிடிக்காது. கதைக்கு தேவை இருந்தால் மட்டுமே அதை வைக்க வேண்டும் என்று கூட சொல்லலாம்.

குத்து ஆட்டம் என்றால் என்னை பொருத்தவரை படத்தின் கதையோடு வர வேண்டும் அந்த விதத்தில் அமைந்தது மேலே குறிப்பிட்ட பாடல். இருப்பினும் நான் மிகவும் ரசித்த குத்து பாடல் அதுவும் மடிசார் புடவையில் ஒரு மாமி ஆடுவது.

பாடல் : கேட்டேளே அங்கே

படம் : பத்ரகாளி (1976)

இயக்கம் : ஏ.சி. திருலோகசந்தர்.

இசை : இளையராஜா

வரிகள் : வாலி

இந்த பாடலை பொருத்தவரை ஆரம்ப வரிகள் மட்டுமில்லை பாடல் முழுவதும் அருமையாக இருக்கும். சும்மா சொல்லக் கூடாது, ராணி சந்திரா மிகவும் அருமையாக ஆடியிருப்பார். வரிகளும் ஆபசமாக இல்லாமல் இருக்கும்.

கேட்டேளே அங்கே

அதை பார்த்தேளா இங்கே

எதையோ நினைச்சேள்

அதையே நினைச்சேன் நான்

ஆம்படையான் மனசு போல நடப்பேன்.

இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்

வாங்கோன்னா அட வாங்கோன்னா

கணவன் கடை தெருவில் நடனம் ஆடும் ஒரு பெண்ணின் ஆட்டத்தைக் காண வேண்டும் என்று சொல்ல நாயகிக் கோபம் கொண்டு இழுத்துவந்து வீட்டில்- தனது ஆத்தில் போடுவார் பாருங்கோ ஒரு ஆட்டம் அடேங்கப்பா இதுபோல பட்த்தின் திரைக்கதையோடு வந்த பாடல் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்தால் எதுவும் இந்த அள்விற்கு தோன்றவில்லை.

மடிசாறு புடவைக்கு இல்லாத அழகா

வேறாரு என்னாட்டம் நடை போட்டு வருவா

மடிசாறு புடவைக்கு இல்லாத அழகா

வேறாரு என்னாட்டம் நடை போட்டு வருவா

தெரியாதன்னா…. தெரியாதன்னா….. புரியாதன்னா…

வயசில்லயோ நேக்கும் வசியம் பன்னட்டுமா

(வாங்கோன்னா அட வாங்கோன்னா)

(கேட்டேளே அங்கே)

இப்போ பூ வைக்கிற பெண்களே ரொம்ப கம்மி அதிலும், கதம்பம் – சாமி படத்துக்கு கூட இப்போது எல்லாம் மல்லிகை தான்… தஞ்சாவூர் கதம்பம் ஸ்பெஷல் எப்படி தெரியும்.

தஞ்சாவூர் கதம்பத்தை முழம் போட்டு வாங்கி

தலைமேலே வச்சிண்டு நின்னேனே ஏங்கி

மயங்கலையோ… மயங்கலையோ…

கொதிக்கலையோ, நனையலையோ…

(வாங்கோன்னா அட வாங்கோன்னா)

(கேட்டேளே அங்கே)

கோப படாமல், மிகவும் ரசிக்கும் விதமாக அவனின் ஆசையையும், அதே நேரத்தில் அவனிடம் கொஞ்சலோடு, தன்னைப் பற்றியும் தான்
அவனுக்காகத தான் என்று சொல்லிக் கொள்ள இந்த வரிகளைவிட வேறெந்த வரிகளால் முடியும்.

பொல்லாத ஆசைக்கு ஏன் இந்த அலைச்சல்

கல்லாட்டம் இருக்கேனே எனக்கென்ன குறைச்சல்

பொல்லாத ஆசைக்கு ஏன் இந்த அலைச்சல்

கல்லாட்டம் இருக்கேனே எனக்கென்ன குறைச்சல்

மூக்கிருக்கு… மூழியிருக்கு…

அழகில்லையோ நேக்கும

ஆடிக் காட்டடுமா

(வாங்கோன்னா அட வாங்கோன்னா)

(கேட்டேளே அங்கே)

மெலடி பாடல்கள் கேட்பது மனதிற்கு நன்றாக இருந்தாலும், அவ்வப்போது குத்து பாடல்கள் கேட்பது ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பது உண்மையே இந்த பாடலை பொருத்தவரை….

கண்ணதாசன் பாடல்கள்

கண்ணதாசனின் வரிகளில் ஒரு சின்ன அலசல்…

படம் : நெஞ்சில் ஒரு ஆலயம்
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர் : பி. சுசீலா

நெஞ்சில் ஒரு ஆலயம் திரைபடத்தில் வரும் ஒரு  ” என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?” ”சொன்னது நீதானா? சொல்! சொல்! என்னுயிரே! என்ற பாடல்கள்,  அந்த படத்தின் கதையோடு ஒட்டிய பாடல்கள்(அனைத்து பாடல்களுமே).

கணவன்(முத்துராமன்) கடும் வியாதியில் மரணத்தின் பிடியில் இருக்கும்போது, தன்  மனைவியிடம் கொண்ட காதலால் தன் இறக்குமுன் அவளை அவர்களது திருமன கோலத்தில் கண்டது போல் வர சொல்லும் நேரத்தில் வரும் பாடலுக்கான வரிகளில் அப்படியே சோகத்தை அள்ளித் தெளித்திருப்பார் கவிஞர். அந்த பெண்ணின் அத்தனை வேதனைகளையும், தன் கணவனிடம் அவள் கொண்ட அன்பையும் ஒரு பாடலில் உம்மால் மட்டும் தான் சொல்ல முடியும்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?

ஏன் இந்த கோலத்தைக் கொடுத்தயோ?

பறவை பறந்து செல்ல விடுவேனோ?

அந்தப் பரம்பொருள் வந்தாலும் தருவேனோ?

உன்னை அழைத்துச் செல்ல எண்ணும் தலைவனிடம்

என்னையே நான் தர மறுப்பேனா?

முத்துராமன் நான் இறந்துவிட்டால் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லுவார். அந்த நேரத்தில் மனைவி(தேவிகா) தன் மன நிலையைச் சொல்லும் விதமாக இந்த பாடல் வரும். மிகவும் அற்புதமான அழுகை பாடல் என்றால் கொஞ்சம் ஒவராதான் இருக்கும், ஆனாலும் அதற்கு தேவிகாவின் நடிப்பே காரணம்.இரண்டு பாடல்களிலும் என்னமோ பாடலைக் கேட்டவுடன் தேவிகா கண் முன் தோன்றுவார். சொன்னது நீ தானா என்று வரும் பாடலிலும் சரி வார்த்தைகளை கையாண்ட விதம் அவரால் மட்டுமே முடியும் அத்தனை உணர்ச்சிகளையும் காட்டிய தேவிகாவையும் பாராட்டியே ஆக வேண்டும்….

சொன்னது நீதானா? சொல்! சொல்! என்னுயிரே!

சம்மதம் தானா? ஏன்? ஏன்? ஏன் என்னுயிரே!

இன்னொரு கைகளில் யார், யார், யார்? நானா?

(எனை மறந்தாயே?) ஏன்? ஏன்? ஏன்? என்னுயிரே!

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான்
வளரும் உறவல்லவா (சொன்னது நீ தானா)

எப்படி எழுதினாரோ இந்த பாடலின் வரிகளை என்று யோசிக்கும் நேரத்தில், இந்த பாடலை எழுதிய பின் இசையிட்டாரா? இல்லை இசையைக் கேட்டபின் இந்த வரிகளை எழுதினாரா?

என்ன உயிர் கொடுக்கும் இசை. இந்த வரிகளுக்கான் உயிர் நிஜமாகவே இந்த இசையில் தான் கிடைத்தது என்று சொல்லிவிட முடியாது. இசைக்கு ஒரு பங்கு. வார்த்தகளைக் கையாண்ட கண்ணதாசனுக்கு ஒரு பங்கு உண்டு.

ஆனால் இசையும், வரிகளும் மட்டும் போதுமா? அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடவேண்டாமா. ஆம் பாடியவரை விட்டுவிட்டால் எப்படி. நம்ம சுசீலா பாடிய பாடல் தான் இது.

தன் குரலில் அத்தனைச் சோகத்தையும், தன் கணவன் மீது வைத்து இருக்கும் அன்பையும் அந்த பாடலில் அப்படியே கொட்டி இருப்பார். ஏக்கத்தையும் துக்கத்தையும், சந்தோசத்தையும் பல நடிகைகளுக்கு அவர்களுக்கு ஏற்றார் போல பாட இவரால் மட்டுமே முடியும். இன்றும் இது சுசீலா பாடிய பாடல் என்று இருந்தாலும் கண் முன் தேவிகாவை கொண்டு வருவது அவரது குரலில் காட்டும் வித்தியாசமே….

அந்த பாடலைக் காண இங்கே சொடுக்கவும் –> என்ன நினைத்து என்னை அழைத்தாயோ, சொன்னது நீ தானா

இதை இப்படியே முடிக்க மனமில்லாத காரணத்தினால் தொடரும் கண்ணதாசனின் பாடல்கள்

அல்வா சாப்பிடுவது போன்றது

அடுத்தவரை விமர்சிப்பது நமக்கு அல்வா சாப்பிடுவது போன்றது ! ! !

அடுத்தவரை விமர்சிப்பது என்பது மிகவும் எளிதானது சிறிய உதரணம் ! ! !

ராஜா எனும் இளைஞன் ஒருவன் இருந்தான், அவன் சிறந்த ஓவியராக வேண்டும் என்று எண்ணி தலைசிறந்த ஓவியரை தனது குருவாக தேர்ந்தெடுத்து ஓவிய பயிற்சிப் பெற்றான். சிறந்த மாணவனாகவும், ஒவியப் பயிற்சியில் சிறந்தும் விளங்கினான்.

இந்த இளம் ஓவியன், தனது ஒவியத் திறனை சோதிக்க எண்ணினான். அதற்காக தனது முழு திறனையும் உபயோகித்து ஒரு சிறந்த ஓவியம் தீட்ட முற்பட்டான். மூன்று நாட்கள் முழுமூச்சுடன் முயன்று முடிவில் ஒரு அழகான ஓவியத்தை தீட்டி முடித்தான்.

அந்த ஓவியத்திற்கு மக்களின் கருத்து எப்படி இருக்கிறது, தன் ஓவியம் வரையும் திறன் எப்படி, சபையினில் எப்படி வரவேற்கபடுகிறது என்று அரிய முற்பட நினைத்தான்.

ஒருநாள் அதிகாலையில் அவன் தனது படைப்பான ஓவியத்தினை மக்கள் நடமாடும் நெரிசலான சாலையில் வைத்தான். வைத்துவிட்டு, அந்த பலகையின் கீழ் “ பண்புள்ள மக்களே, இந்த ஓவியமானது என் படைப்பு, நான் இந்த தொழிலுக்கு புதியவன். ஆதாலால்  இந்த படைப்பினில் எதேனும் பிழை இருப்பின் அந்த இடத்தில் X என்று குறியிடவும் ” என்று குறிபிட்டிருந்தான்.

அவன் மாலையில் வீடு திரும்பும் வேளையில், தனது ஓவியத்தினை எடுத்துச் செல்ல எத்தனித்து, ஓவியத்தின் அருகில் சென்றபோது, அவன் தூள் தூளாக சிதைந்து போனான். அவனது ஓவியம் முழுவதிலும் X என்ற குறியிடப்பட்டு இருந்தது. ஒரு சிலர் அதன் மீது அவர்களது விமர்சனத்தையும் எழுதி இருந்தார்கள். இந்த ஓவியத்தை தீட்டிய நம்ம இளைஞனுக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை.

உடைந்த இதயத்துடன் அவன் தனது குருவிடம் ஓடினான். அவர் முன் கண்ணீர் மல்க நின்றான். தேம்பி அழுதவாரே, அவன் தனது குருவிடம் நடந்ததை கூறினான். தன்னுடன் கொண்டு சென்ற அவனது உபயோகமில்லாத ஓவியத்தைக் காண்பித்தான்.

ராஜா தனது மூச்சினை நன்கு சுவாசித்து, ஒரு பெருமூச்சினை விட்டு பின்னர் அவனது குருவிடம் ” நான் உபயோகம் இல்லாதவான் ஆகிவிட்டேன், இதைத்தான் நான் கற்றுக் கொண்டேன் என்றால் எனக்கு ஒரு ஓவியனாகும் தகுதி சிறிதும் இல்லை என்றும், மக்கள் அவனை நிராகரித்து விட்டார்கள் என்றும் புலம்பினான். எனக்கு இப்படி வாழ்வதைக் காட்டிலும் செத்து மடியலாம் போல இருக்கு” என்று கூறினான்.

குருவோ புன்முறுவலுடன் அவனைப் பார்த்து. மகனே, நீ வரைந்த ஓவியத்தில் சிறிதாக தவறு இருக்ககூட வாய்பில்லை என்றும் உறுதியாக கூறுகிறேன். நீ எவ்வளவு சிறந்த ஓவியன் என்பதனை நான் உனக்கும் இந்த மக்களுக்கும் நீரூபிக்கிறேன் என்றார்.

ராஜாவுக்கோ தனது குரு நாதர் சொல்வதை நம்ப முடியவில்லை. அவன் குருவிடம், நீங்கள் கூறுவது போன்று என்னிடம் அத்துனை வல்லமை இருக்கிறதா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது,  மேலும் எனக்கு என் மீது இருந்த நம்பிக்கை தொலைந்தது விட்டது. எனக்கு நீங்கள் மேலும் தவறான நம்பிக்கையை தந்து விடாதீர்கள் என்று கண்ணீருடன் கேட்டுக் கொண்டான்.

நான் சொல்வதை குறுக்குக் கேள்விகள் எதுவும் கேட்காமல் செய்.  நான் மற்றவற்றை பார்த்து கொள்கிறேன். கண்டிப்பாக இது பயன் உள்ளதாக இருக்கும். மனதை தளர விடாதே என்றார்.

ராஜாவோ தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும், குருவினது சொல்லுக்கு கட்டுபட்டு, அதற்கு ஒப்புக் கொண்டான். இரண்டு நாட்கள் கழித்து அவன் முன்னர் தீட்டிய ஓவியத்தினை அப்படியே வரைந்து அவனது குருவிடம் தந்தான். அந்த நேர்த்தியான, அழகான ஓவியத்தைக் கண்ட குரு அவனிடம் ஒன்றும் கூறாமல் புன்னகையுடன் என்னுடன் வா என்றார்.

ராஜா முன்னர் தனது ஓவியத்தை வைத்த அதே நெரிசலான சாலையில் அவனது இந்த புதிதாக வரைந்த ஓவியத்தையும் அதே இட்த்தில் வைத்தனர்.

இப்போது குரு மேலும் ஒரு பலகையினை எடுத்து, அதில் “பண்புள்ள மக்களே, இந்த ஓவியமானது என் படைப்பு, நான் இந்த தொழிலுக்கு புதியவன். இங்கு ஒரு பெட்டியில் வண்ணங்களும், தூரிகைகளும் வைத்துள்ளேன்.

மேலானவர்களே எனக்கு சிறிது சாதகமாக உதவி புரியுங்கள். இந்த படைப்பினில் ஏதேனும் பிழை இருப்பின் தயவு செய்து இங்கு இருக்கும் தூரிகையை எடுத்து இதனை சரி செய்யவும் ” என்று குறிபிட்டிருந்தார். குருவும் ராஜாவும் வீடு திரும்பினர்.

மாலையில் அவர்கள் இருவரும், அந்த ஓவியத்தை வைத்த இட்த்திற்கு வந்தனர். ராஜாவிற்கு ஆச்சர்யமாக இருந்த்து.ஒரு சிறிய திருத்தம் கூட அதில் இல்லை. அடுத்த நாளும் அவர்கள் அங்கு சென்றார்கள்.

அந்த ஓவியத்தை யாரும் இது வரை தொடவில்லை. அந்த ஓவியத்தினை ஒரு மாதம் வரை வைத்து இருந்தார்கள். அப்போதும் அதில் யாரும் திருத்தம் செய்யவில்லை.

அடுத்தவரை விமர்சிப்பது என்பது மிகவும் எளிதானது, ஆனால் மேம்படுத்துவது என்பது மிகவும் கடினமானது.

அடுத்தவரின் குறைகளைச் சொல்லுவதைக் காட்டிலும், அவரின் மனபோக்கு, திறமை, ஓழுக்கத்தினை  மேம்படுத்துவது எப்படி என்று யோசிக்க வேண்டும். மேலும், நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் என்பது அடுத்தவரின் விமர்சனத்தினால் வருத்தப்பட்டுக் கொள்ள கூடாது. மேலும் அந்த விமர்சனங்களை எப்படி உடைப்பது என்று யோசிக்க வேண்டும்.

அந்த விமர்சனங்களில் உள்ள  நிரை குறைகளை ஆராய்ந்து தன்னை மேலும் சிறந்த மனிதராக மேம்படுத்துவதற்கு உபயோகமாக எடுத்துக் கொள்ளவும்….

காதல் வைத்து

காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன்

காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை…
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்த்த மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிறக்கத்தில் தான்

காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன்

உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழருதடீ
உன்னிடத்தில் நான் போசியது எல்லாம்
உயிருக்குள் ஒழிக்குதடீ
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்,

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன்

என்ன சத்தம் இந்த நேரம்

படம் : புன்னகை மன்னன் , குரல் : பாலு

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா.. (என்ன)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ (என்ன)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்