Archives

வெண்டைக்காய் பச்சடி

வெண்டைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:-
வெண்டைக்காய் – 15
பச்சை மிளகாய் – 6
சின்ன வெங்காயம் – 6
கறிவேப்பிலை – சிறிது
துவரம் பருப்பு – ½  கப் (optional)
மஞ்சள் பொடி – சிறிது

சாம்பார் பொடி – ஒரு தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சையளவு (அ) தக்காளி – 4 (அ) 5
எண்ணெய் –  தாளிக்க தேவையான அளவு
கடுகு – சிறிது, சீரகம்- சிறிது
உளுத்தம் பருப்பு – சிறிது, உப்பு – தேவைக்கு.

செய்முறை:-
வெண்டைக்காயை குறுக்கில் (இரண்டாக நடுவில்) கீறி,  சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து, கடுகு,சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், வெண்டைக்காய் போட்டு, தேவையான அளவு  உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி வதக்க வேண்டும்.

வெண்டைக்காயிலுள்ள பிசு பிசுப்பு நீங்கி, வேகும் வரை வதக்க வேண்டும். பின் புளிக்கரைசலை அல்லது பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

இது சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும், சாதத்தோடு கலந்தும் சாப்பிடலாம்.

**** புளிப்பு அதிகமாகிப் போனால் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

கொத்தமல்லி-குழம்பு

கொத்தமல்லி குழம்பு

தேவையான பொருட்கள்:
========================

புளி – கொஞ்சம்
கொத்தமல்லி – ஒரு கட்டு
வெங்காயம் – இரண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் – நான்கு

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா பொடி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி- இரண்டு டீஸ்பூன்
தாளிக்க தேவையான அளவு ரிபைண்ட் ஆயில் – இரண்டு குழிகரண்டி +அரை  குழிகரண்டி
கடுகு,சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்

அரைக்க:
========
தேங்காய் துறுவல் – கால் கப்

கொத்தமல்லி தழைகள் – அலசி, சின்ன துண்டுகளாக நறுக்கிய பின், மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும்

செய்முறை:
=============
* வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும், சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.

* புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.

* பாத்திரத்தில் இரண்டு குழிகரண்டி  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம், தாளித்து பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.

* நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, தக்களியை சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து, மஞ்சள் தூளுடன், அரைத்தக் கொத்தமல்லி விழுதினை சேர்க்கவும்.

*பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

* பின்னர் புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். மிளகாய் பொடி (அ) சாம்பார் பொடி சேர்க்கவும்.

* பின்னர் அரைத்த தேங்காய் விழுதினை சேர்த்து,  மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான கொத்தமல்லி குழம்பு தயார்.