Archive | May 2017

முதலும் நீ முடிவும் நீ

கருப்பிலே உடையனிந்தேன்
காத்திருந்தேன் உனக்காகவே
கற்பை உன்னிடம் கொடுத்திடுவே
எந்தன் கருவிலே கலந்திடவே
சரசங்கள் செய்தாய்
சாகசங்கள் புரிந்தாய்
நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
நமக்குள் இனிமேல் எல்லைகள் இல்லை
தொல்லைகள் செய்கிறாய்
இம்சைகள் செய்கிறாய்
சேவகம் புரிகிறாய்
சண்டைகள் போடுகிறாய்
சமாதானமும் செய்கிறாய்
கோபங்களால் கொள்கிறாய்
அன்பாய் அணைக்கிறாய்
அக்னியை எரிகிறாய்
காதலால் கவர்கிறாய்
காமத்தில் களிக்கிறாய்
உயிரை தொடுகிறாய் – உறவே
உன்னை என்னவென்று சொல்வேன்
ஆதியும் நீயே என் அந்தமும் நீயே

1

Advertisements