Archive | April 2017

அதிகாரம்#1

அடையாள கொலைகள் 
ஏன்னங்கா சொந்த மச்சினனை கொல்ல சொல்றீங்க தனியா வா யா மாவட்டத்துக்கிட்ட சொல்லியாச்சு நீ தான் பண்ணணும். எவனே திங்கறதுக்கு நம்ம பய திங்கட்டும்னு சொல்றாப்ல என்னமே சொந்த தங்கச்சிய கட்ன மாதிரி பேசுற உங்க அம்மா நகையை வச்சு தேன் உங்கப்பன் கல்யாணத்தை முடிச்சர் நன்றி கொட்ட குடும்பத்தில இவன் ஒருத்தனுது உனக்கு உபயோகம இருக்கான் சந்தோஷபடு இல்லை ணே முரளி நீ பண்ணட்டி எவனாது பண்ண போறன் இப்ப இல்லாட்டி எலக்ட்சனுக்கு முன்னடி நடக்க போகுது காதும் காதும் வச்ச மாதிரி முடி #அடையாள_கொலை #அதிகாரம்_ஒன்று
Advertisements

அரசியல் களம்

எனது பழைய ப்ளாக் வாசகர்களின் வேண்டுகேளுக்கு இணங்க 6 வருடங்கள்தொகுத்து பகுத்து எழுதிய அடையாள கொலைகள் என்ற எனது நாவலின் சிறு சிறு பகுதிகளை பகிரலாம் என்று இருக்கிறேன்.
பழைய வாகர்களுக்கு போர் அடிக்காத வண்ணம் மறு பதிப்பாக விரைவில்  நாவல் இருக்கிறது.
ப்ளாக்கை முடக்கி இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகியும் வாசகர்களின் மின்னஞ்சல் மற்றும் நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் தர இயலவில்லை
அரசியல் களத்தோடு எழுதிய  முதல் புத்தகம் இந்த வருடம் புர்த்தியாகிவிடும்.
STARTING THE NEW AVATAR – ONCE AGAIN

Beauty of Friendship

Anantha, you will always be in our heart, even though we miss you from this world, we will meet one day in the heaven, please wait for this friend to join you.

இந்த உலகத்தில்
ஆயிரம் ஆயிரம்
உறவுகள்
பிறக்கின்றன…

ஆனால்
அன்பென்ற தீபம்
ஏற்றி வாழ்வை
பிரகாசிக்க
செய்கின்றன
ஒரு சில நட்பெனும்
உறவுகள் தான்…

அது போன்ற
ஒளியேற்றிய தோழா
ஏன் எங்களை
தவிக்க விட்டு
சென்று விட்டாய்…

பழகிய காலம்
எல்லாம்
இன்பத்தையும்
புன்னகைகளை
மட்டும் தானே
கொடுத்தாய்…

இன்று ஏன்
எங்களை
கண்ணீரில்
தத்தளிக்க விட்டு
சென்று விட்டாய்…

பிறப்பென்பது
நிரந்தரம் இல்லை
என்பதை
நீ இறந்து போன
மறுகனம் உணர்ந்தேன்…

உந்தன் இழப்பை
ஈடு செய்யத்தான்
முடியவில்லை
ஆயுள்வரை என் சிந்தையில்
உரைந்து இருக்கும்
உந்தன் நினைவுகள்…

கடந்து போன
காலத்தில்
என்னை அழகாக்கி
நீ எடுத்த புகைப்படங்கள்
இன்னும் எந்தன் அறையின்
சுவற்றினேலே
உந்தன் நினைவுகளுடன்
மாட்டி இருக்கின்றன…

உந்தன் புகைப்படத்திற்கு
மாலை போட்டு
பார்க்கும்
தைரியம் எனக்கில்லை…

இனிமேல் எந்தன்
முகத்தினில்
உன்னை பார்ப்பேன்…

உந்தன் தோழியாய்
இருந்த நாட்களில்
நண்பா என
உரிமையாக அழைப்பாயே
இனி அப்படி யார் தான்
என்னை அழைப்பார்…

நீ வாழ்ந்த காலத்தில்
என்னால்
சில உதவிகள்
செய்யாமல்
போயிருக்கலாம்
மன்னித்து விடு என
உந்தன் பிரேதத்திடம்
அழுது நிற்கிறேன்…

சென்று வா நண்பா
நாளை
நீ சென்ற இடத்திற்கு
நானும் வருவேன்….

#நட்பின்_இலக்கணம்

#நட்பின்_இலக்கணம்
கூடிப் பழகுதலும்,
அடிக்கடி சந்தித்தலும்,
ஒருவரையொருவர் விசாரித்தலும்
மட்டுமே நட்பாகிவிடாது
நண்பன் என்று சொல்லிக்கொள்கிற
எல்லாரும் நண்பன் அல்ல
வாழ்க்கையிலே
இன்னொருமுறை வராதா
என ஏங்கவைக்கும்
உன்னை போல ஒரு நட்பு
இன்னும் ஒன்று கிடைத்தாலும்
உன்னை போல வராதே
நண்பா
என்றும் நீயே
முதலாவதாக இருப்பாய்
என் ஆயுள் முடியும் வரை

Anatha_Narayanan_Srinivasan

என் எழுத்துக்களை
என்னை விட அதிகமாக
வாசித்தவன் நீயே
என் எண்ணங்களின் அதிர்வையும்
அது ஏற்படுத்திய வலிகளையும்
நன்கு உணர்ந்தவன் நீயே
என் வலிகளின்
ஆழத்தை உணர்ந்து
எனக்கு அதிகம்
ஆறுதல் கூறியதும் நீயே
என் இதயத்தின் ஓசைகளை
என் வார்த்தைகளில் வடிவம்
கண்டு வலியும் புரிந்து
என்னை வழி நடித்தியதும் நீயே
வலிகள் கடந்து போகும்
நல்ல நட்பாக நான் இல்லை
நாங்கள் இருக்கிறோம் என்று
அனைவரின் சார்பாகவும்
எனக்கு ஆறுதல் கூறியதும் நீயே
இன்றும் எழுதுகிறேன்
உனக்காக
உன்னை நினைத்து
நீ இன்றி
உன் நினைவுகளோடு
இப்படி ஒரு நாள் வரும்
என்று நினையாது
இருந்த காரணத்தினால்
முன்பிருந்த வலிகளை
காட்டிலும் அதிகமாக
இப்போதும் தேவை
உனது ஆறுதல்களே
நண்பா
நான் இருக்கிறேன்
என்று சொல்ல
நீ இல்லாத இந்த நாள்
என்னுடைய அத்தனை
துன்பங்களையும்
அசைபோட வைக்கிறதே