Archive | March 2017

நீர் இன்றி அமையாது உலகு

#நீர்_இன்றி_அமையாது_உலகு
 
மரம் எல்லாம் வெட்டியாச்சி
குளம் எல்லாம் வீடாகி போச்சி
கிணறு என்ற ஒன்று
இப்போது காணாமல் போனது
 
இப்போது வெயில் கொடுமை
ஒரு வீடு இருந்த இடத்தில்
பன்னிரண்டு என்று
அடுக்கு மாடி குடியுருப்புகள்
ஒரு வீட்டின் நீர் தேவை
இப்போது பன்னிரண்டு
வீட்டிற்கு தேவை
 
நீர் இல்லை ஆழ்துளையிட்டு
பூமியில் இருந்து நீரினை எடுத்து
இன்றைய நாட்கள் போகின்றது
நாளை உன் மகனுக்கும்
மகளுக்கும் என்ன இருக்கிறது
என்று சிந்திப்பாய் மனமே
save-water-save-life.91235931_std
Advertisements

BORN TO HARVEST

BORN TO HARVEST – FARMERS

ஒரு பெண் கருவினில் தங்கிடும் கருவை போலவே
ஒரு விவசாயி தன் நிலத்தின்
விதைகளை பாதுகாத்து காக்கிறான்

பிள்ளை அதன் வளர்ச்சியில்
எத்தனை மகிழ்ச்சி ஒரு தாயிற்கோ
அதனைவிட அதிக மகிழ்ச்சி
தன் மண்ணில் விளையும் பயிரினை
காணும் விவசாயிக்கு

farmer1

கையில் தவழும் பிள்ளையை
ஆற வருடி பாதுகாத்திடும் தாய் போல
கழனியில் வளரும் நாற்றினை ரசித்து
பருவப்பெண்ணைப் போல பாதுகாத்திடுவானே
இந்த விவசாயி

அந்த பருவ பெண்ணான
நெற்கதிர்கள் தலை சாய்க்கும் நேரத்தில்
புயல் தாக்கியோ தண்ணீர் இன்றியோ
பயிர் வாடினால், நெற்கதிரை காணாமல்
கடனால் தற்கொலை செய்து கொள்கிறான்
இன்றைய விவசாயி!

#BORN_TO_HARVEST_FARMERS

 

தேவதை

தேவதை இவள் பிறந்தவுடன்
அழகு கவிதை பிறந்தது என்றேன்
பிள்ளை இவள் சிரிப்பினை
குட்டி கவிதை என்றேன்

baby-2

செல்லம் இவள்
மழலையின் வார்த்தைகள்
எனது செவிகளுக்கு
தேன்பலா என்றேன்

பள்ளியில் கரும்பலகையில்
கிறுக்கியதை ஓவியம்
என்றே அகமகிழ்ந்தேன்
சிட்டாக ஓடி ஆடியதை
சிட்டுக்குருவியாக கண்டேன்

நாகரீக உடைதனில்
மார்கரெட் தாட்சர் என
புளகாங்கிதம் அடைந்தேன்

எந்தன் சேலையை சுற்றி
விளையாடிய போது
எனக்கே தாயாக  கண்டேன்

அம்மா அவுட்டாகிட்டே என்று
நீ சொல்லிடும் நேரம்
உனக்காக அவுட் ஆவதில்
எத்தனை ஆனந்தம் அடைகிறேன்

மழலை இவள் அழகில் மட்டும் அல்ல
கோபத்திலும் பாசத்திலும்
கூட தாய் எனை மிஞ்சுகிறாள்

பேசி பேசி கொல்கிறாய் என்றால்
மௌனம் பூசி கொல்கிறாள்
சிறு புன்னைகை கொடுத்து செல்கிறாள்
குழலை மிஞ்சும் மழலை

உலக கவிதைகள் தினம்

கவிதைகள் எழுதிடும் நாள்
அனைத்தும் கவிதைகள் தினமே
இன்று மட்டும் என்ன
இதற்கான தினமாக?
எனக்கு கவிதை எழுதிட தெரியாது
வார்த்தைகளால் வரிகளுக்கு
அழகு சேர்க்க நினைக்கிறேன்
அத்தனையும் இந்த கவிக்குயில்
சொல்லிடும் போதும் குரல்
திருடி செல்கிறது
வார்த்தைகள் இன்றி காற்றினில்
எழுதிய கவிதைகள் தான் அதிகம்
கவிதை எழுதிடும் நாள்
அனைத்தும் எனக்கு நல்ல தினமே
உலக கவிதைகள் தினம்

International women’s day

மகளிர் தினத்திற்கு கவிதை எழுத சொன்னா
என்ன அம்மா நீங்க இப்படி பன்றீங்களே மா…
எனது அம்மாவின் கவிதை

மகள் இவள் கேட்டுவிட்டாள்
மகளிர் தின வாழ்த்து…

எப்படி சொல்வேன் மகளே
நீ என் மகளாய் கிடைத்த தினமே
எனக்கு மகளிர் தினம் என்று…

ஆயிரம் உறவுகள் வந்தாலும்
மகள் அவள் வந்த தினம்
கொண்டாட படவேண்டுமே…

ஆனந்தமாக ஆயிரம் தொல்லைகள் தந்தாலும்
பூவே உன் புன்னகையில் மனம் லயிக்குமே
உனக்கான தினமாக கொண்டாடுவேன்
அனுதினமும் மகளிர் தினம் …

இந்த பூமகள் மத்தாபூவாய் சிரிக்கும்
நேரங்கள் அனைத்தும் தீபாவளியே
அனைத்து, இரு கன்னங்களில்
முத்தமிடும் நேரம்
பொங்கல் பண்டிகையே…

சர்க்கரை பொங்கலாய்
தித்திக்கும் அந்த முத்தங்கள்
ஐந்தேழுத்து எடுத்து எழுத்து
மந்திரமும் நான் அறியேன்
உன் அன்பெனும் மந்திரத்தால்
கட்டப்பட்டதால்…

உன் அன்புக்கரங்களில் தான்
என் புவி அடங்கி உள்ளது என்று
நான் சொல்லி தெரிய வேண்டுமோ…

என் கண்ணே கணியமுதே
காலமெல்லாம் நானிருப்பேன்
உனது நிழலாக
என்று உன்னோடு உனக்காக
இருந்தாலும்
இறந்தாலும்
வேண்டும் வேண்டும்
நீ எனக்கு மகளாக
மகளுக்கான தின வாழ்த்துக்கள்…

lady-1