எனக்கான உனது அன்பு

1_amma

சுவைத்துப் பார்க்கிறேன்
உன் இதயத்திலிருந்து
வந்த வார்த்தைகளை
கவிதைகளா அவை –
இல்லை
காவியமடி எனக்கு.
சுவசமாக இருந்தேன்
உனது கவிதைகளின் வாசகத்தில்
எனது வாசத்தை உணர்ந்தேன்
உனது வரிகளில்.

மனதில் சலனம் வந்தாலும்
சண்டைகள் வந்தாலும்,
இடைவெளி என்பது
சிறிதும் இருந்தது இல்லை

தூரத்தில் இருந்தாலும்,
துடிப்பது ஒன்றாகிப் போன
இரண்டு இதயங்களும் தான்
சில நொடிகள் துடிக்க வைத்தாலும்
துடிதுடித்துப் போகிறாயடி செல்லமகளே !!!

தொலைவாக நாம்
இருந்தாலும் என்
தொலைதூர பார்வைக்குள்
உன்னை படம் பிடிக்கிறேன்

தொடமுடியாத தூரத்தில்
நீ இருந்தாலும்
உன் சுவசத்தில்
கட்டி அனைக்கிறாய்
என்னைக் கட்டி ஆள்கிறாய்.

கையளவு இதயம் தான்
உலகளவு பாசம் வைத்தாய்
சொக்கித்தான் போகிறேன்
சொர்க்கமாக நீ சிரிப்பதால்.

கண்ணுக்கு தெரியாத
தூரத்தில் நீ இருந்தாலும்
காற்றுகூட புகமுடியாமல்
என்னைக் கட்டி அனைக்கிறாய்

தூரத்தில் இருந்தாலும்
நினைக்காத நேரமில்லை
நினைக்கும் நேரமெல்லாம்
உனது சில்லரைச்
சிரிப்பினில் சிறை வைக்கிறாய்

love-1

என் பிள்ளை இவள்
கொஞ்சலில் கொஞ்சம்
மெய்மறந்து தான் போகிறேன்
உன்னோடு வாழ்ந்தது விட்டேன்
சில காலம், ஆனால் அவைக்
கொஞ்சமே, அந்த கொஞ்சலோடு
வாழ்வது யாருக்கும்
கிட்டிடாத ஆனந்தமே;

சிறிது நேரம் நீ மௌனித்தாலும்
ஆராத சோகம் என் நெஞ்சோடு சேரும்

பல நாடுகள் கடந்திருந்தாலும்
பக்கமிருக்கும் உனது பாசம்
உந்தன் குரல் வழியில் – அது
எப்போதும் என்னைத் தொட்டு பேசும்
இது நமக்கு மட்டுமே தெரிந்த நேசம்

என்னுள் கலந்தாயடி
உன்னுள் உறைந்தேனடி
உணர்வாகினாய் உதிரமுமாகினாய்
என் உயிரின் உருவமாகினாயடி

thevathai-ival

உன்னை நினைத்தே எனது
நினைவுகள் சுழலுவதில்
ஆச்சரியமில்லை
என்னை மட்டுமே நினைத்து
எப்படியடி உனது நினைவுகள்
என்றே வியக்கிறேன்.

விடையில்லா கேள்வி குறியாக
இருந்த என் வாழ்வில்
என் வாழ்வின் விடையாக வந்தவளே
ஆயிரம் கோடி கொடுத்தாலும்
கிடைக்காத பொக்கிஷமடி
எனக்கான உனது அன்பு

mother-child-sleep

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s