எது சொந்தம்

எது சொந்தம், எது நிரந்தரம் என்று அனைவரும் அறிந்ததே, எதுவுமில்லை நமக்கு சொந்தமில்லை

பெற்ற பிள்ளைகள் நம்மை விட்டுப் பிரிவர். பெற்றவர்களும் ஒரு நாள் நம்மை பிரிவர். என்னைப் பயிற்றுவித்த ஆசிரியர்களும் அந்த ஆண்டு மட்டுமே எனது சொந்தம், அடுத்த ஆண்டு புதிதாக வரும் மாணவர்களின் உரிமை.

பள்ளி சொந்தமில்லை, கல்லூரி சொந்தமில்லை நான் கற்ற கல்வி எனக்கு சொந்தம் எதுவரை நான் புண்படும் நேரம் பண்பட்டு என்னைச் சீர் செய்யும் நாள் வரையே.

பிரிவுகளே இல்லாமல் இருக்கப் போகிறோம் என்ற நட்புக்களும் அவரவர் விதி வரைந்தபடி திசைகொன்றாக பயனிகின்றனர் அவரது வாழ்க்கையின் லட்சியத்தைத் தேடி. மறந்து போகிறோம், நாயர் கடை டீயும், மதில் சுவர் அரட்டைகளும்.

நான் ஆசையாக வாங்கிய அணிகலன்கள், நான் ரசித்து பிறர் என்னை ரசிக்க வாங்கிய ஆடைகள் நான் உடல் பேனும் வரை மட்டுமே சொந்தம் இல்லை கிழிந்து போகும் வரை சொந்தம்.

நான் ஆசையோடு, தூய அன்போடு தேடி தேடி காதலித்து கை பிடித்த என் மனைவி முழுவதுமாக எனக்கே சொந்தம் அவள் ஒரு பிள்ளையை பெறும் வரை மட்டுமே. பின்னாளில் பிள்ளைகளுக்கே முன்னுரிமை என்றிடுவாள்.

என் பிள்ளைகளும் எனக்கான சொந்தமே, ஆயினும் அடுத்தவர் கரம் பிடித்துக் கொடுத்தவுடன் மகள் தனைக் கான செல்லுமுன் அழைத்துக் கேட்டிட வேண்டும் நீ இன்று வீட்டில் இருப்பாயே என் செல்வ மகளே உன்னைக் காண உன் பெற்றோர் விரும்புகின்றனர், நீ இல்லத்தில் இருப்பாயா இல்லை நான் வேறோர் தினம் வரட்டுமா என்று.  என் உயிரில் பிறந்து, உயிருக்கு உயிராக வளர்த்து, கண்ணில் தூசி விழாமல் பார்த்த மகளைக் காண அனுமதி வேண்டும்.

மகனோ வேறொரு மாய அவனுக்கான உலகில் தன்னையும் தன் வருங்காலத்தையும் எண்ணி வேற்று நாட்டில் பயனிப்பான். அவனுடன் பேசுவதும் கடினமாக இருக்கும் கால நேரம் இல்லாமல் கதைக்க இயலாது.

உடலில் தெம்பு இருக்கும் வரை பையில் காசு தேடி ஓடிடுவோம், என் நிலை என் பிள்ளைக்கு வேண்டாம் என எந்த நேரமும் இயந்திரமாக உழைத்திடுவோம்.

கையில் காசு இருக்கும் வரை, உறவுகளும் கூடி இருக்கும். உடல் மெலிந்து, நடை தளர்ந்து, தேகம் இளைத்து, நரை கூடிக் கிழப்பருவ மெய்தி இதோ நான் மரணித்திடும் தருவாயில், என் வீடு, என் மக்கள், என் உறவு, என் பணம், என் பதவி, என் புகழ், என்னுடையது என நினைத்த அனைத்தும் என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறது.

என்னுடையது என்னுடையது என்றாயே, இன்று எதை எடுத்துப் போக போகிறாய் உன்னுடன் என்று.

நான் பிறந்தவுடன் அன்போடும், ஆசையோடும், பூரிப்புடன் என் தாய் தந்தை வைத்தப் பெயரும் இன்னும் சில நொடிகளில் என்னைவிட்டுப் பிரிய போகிறது.

ஆம், என் தேகம் எனதில்லை, என் உயிர் எனதில்லை, என் பெயர் எனதில்லை, இன்னும் சில விநாடிகளில் என்னைப் சடலம், பிணம் என்றே சொல்லிடுவர். இவை அனைத்தும் அறிந்தும் நான், என்னுடையது, என் அறிவு, என் செல்வம், என் சொந்தம் என்று தேடி தேடி செல்கிறோம், செல்வதோடில்லாமல் மனம் அதில் அதிருப்திக் கொண்டால் அழுகிறோம். அதில் கட்டுண்டு சிறைபட்டு சின்னபின்னமாகிறோம்.

எது சொந்தம், நான் ஏன் பிறந்தேன், எதற்காக இவ்வுலகிற்கு அனுப்பபட்டேன்? என் பணி யாது, எங்கிருந்து வந்தேன், ஏன், எதற்காக என்று உணர்ந்தால் இந்த வலிகளைக் கடந்து மேலானதோர் வாழ்க்கை நான் என்ற அகங்காரமின்றி வாழ்ந்து ஒரு அடையாலம் தந்திடலாம் வருங்காலத்திற்கு.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s