Archive | December 6, 2015

இயந்திர நெஞ்சமானது

கால காலமாக

நான் கண்ணீர் வடிக்கவில்லை

கனவுகள் கானவில்லை, ஏக்கங்களில்லை, கவலையுமில்லை தூக்கமின்றி தவிக்கவில்லை.

பிறந்தது முதல் அன்பாக ஆசையாக உறவுகள், பிரிந்தாலும் உறவுகள் என் இதயத்தினேலே, கூடிப் பேசும் நட்புக்களும் உறவாகவே. உயிர் எடுக்கும் துரோகங்களுக்கும்  கலங்கியதில்லை. இதுவும் கடந்து போகும் என்றே நினைத்தேன்

நான் நானாக இல்லை, தோல்விகள் என்னை துளைத்த போதும், தாய்மையின் துடிப்புகள் தவிக்கின்றன, சீறீ பாயும் இதயம் இன்று ச்சீ பட்டு கிடக்கிறது. இதயமது இயந்திர நெஞ்சமானது நேசமது வஞ்சமானாதால்.

பூஞ்சோலையான வாழ்க்கை மயானமானது, நிமிடங்கள் கழிவதும் வருடங்கள் போலானது. 

வஞ்சனைகள் ஒன்றானால் பரவாயில்லை, வஞ்சனைகளே வாழ்க்கையான போது, மரணத்தை நினைத்தேன், மரணமும் வஞ்சித்து என்னைச் சோதித்தது. சோதனைகள் யாவும் மனதினில் புதைத்து, இந்த உலகத்திற்கு புன்னகை மட்டுமே பரிசலித்தேன்.

தலை நரைத்துவிட்டது, மனம் கசந்துவிட்டது, தேகம் சோர்ந்துவிட்டது, உயிர் வலித்தது, வாழ்க்கை பாரமானது, பயணங்கள் கைவிட்டது, துரோகங்கள் மரணத்தை ஒத்த வேதனை அளித்தது. தாய்மையின் பெயராலும் துரோகம், இதை எப்படி என் மனம் தாங்கிடுவேன் என்ற அய்யம். 

மனம் ஒரு குரங்கு, எங்கு தொலைத்தோமோ அங்கேயே தேடிட நினைக்கும், எந்த இடத்தில் தொலைத்தேனோ அங்கேயே மீண்டும் ஒரு தெளிவு பிறக்கச் செய்தது விதிச் செயலா இல்லை இறை அருளா யான் அறியேன்.

என்னிடம் பொய்யுரைத்தேன் என்று தானே வலிய வந்து சொல்லியபின் அவளை நம்புவதால் ஒரு மனதை நோகடிக்காமல் இருக்கலாம் என்றே நினைத்தேன். நம்புவதால் இழந்ததைப் பெறலாம், இல்லாததைப் பெறலாம் என்று உணரவில்லை.

பல துரோகத்தையும் கடந்தேன் நம்பிக்கை தான் வாழ்க்கை, புதிதாக இழக்க எதுவுமில்லை.

வஞ்சியவல் வருகையால் இளகியது இந்த இரும்பான நெஞ்சம். இவளது வருகை ஏமாற்றம் தருமே என்று நினைக்க தோன்றாமல் எனை தேற்றவே இறைவன் எனக்கு அருளிய பரிசாகவே நினைத்தேன்.  போலி என்றுணர்ந்தும் அதனை மாற்றிட சந்தர்ப்பம் பல கொடுத்து தோல்விதனை பரிசாக பெற்று நிலை குலைந்த நேரத்தில் பொய் சொல்லி உன்னை ஏமாற்ற மனமில்லை, மனதைக் கொன்று என்னால் வாழ இயலாது என்ற பெண்ணை நம்புவதால் ஒன்றும் தவறில்லை.

பேதை இவள் சொல்லியது, நான் தத்தளித்து, நிலை குலைந்த நேரத்தில் நான் என்னைத் தாக்க ஆயிரம் நாக்குகள் தயாரக இருந்த நிலையில் என்னைத் தாங்கும் கைகளாக அவள் கரம் பிடித்தேன்.

விதியின் பெயரால் விளையாட ஆசை இல்லை. ஜாதி மதம் என்று பேதம் பார்க்கத் தெரியாது. அன்பிற்கு ஜாதி, மதம் இல்லை. அன்பு காட்டவும் அரவனைக்கவும், மதம் தேவையில்லை மனமிருந்தால் போதும்

என்னுயிரே இன்று நீ சொல்லிய அந்த ஒற்றைச் சொல்லில் உயிரோடு எரிகிறேன்.

என்னைப் பெற்றவளும் வார்த்தைகள் மீறும் போது சொல்லி இருப்பாள். உடன் பிறப்புகளும் சொல்லி இருக்கும் ஆயினும் இந்த உடலில் இருக்கு உயிர் உனக்கானது அதை இழந்தவளாக நீ என்னை நினைப்பேன் என்றது என் இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்றது.

மரணத்தின் வாயிலை எட்டிப் பார்த்தவளுக்கு மரணத்தின் கொடுமை என்னவென்று தெரியும். தாயிடம் கொடுத்த வார்த்தை தனை  மறந்திருந்தால் மரணித்திருப்பேன் உன் வார்த்தைகள் உண்மையாக்க.

உயிரோடு இருந்தாலும் பிணமாவேன் உன் இதயத்தில் என்னை இறந்தவளாக நீ நினைக்கும் அந்த நொடியில், அதுவே என் அந்திம நேரமாகும்.

Advertisements