Archive | December 3, 2015

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

The most wonderful birthday wishes and it was a long way to reach me. I was overwhelmed with the way I received it.

hbd

என் உயிரான உம்மிக்கு முதன் முறை
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எனக்காக பல விதிமுறை இருந்தும் எனக்குப் பிடிக்காத விடயங்கலும் இருந்தும் உனக்குப் பிடித்தால் அதை செய்து விடுவதில்ஆனந்தம் அடைகிறேன்

யாருக்கும் இன்று வரை சொல்லவில்லை ! இருந்தும் சொல்லாத சொல் சேர்த்து செதுக்குகிறேன் என் உயிரான உயிருக்கு முதன் முறையாய் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என் அருகே ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தும் என் உள்ளத்தின் உள்ளே உட்கார்ந்தவள் நீ
என் எல்லையற்ற அன்பை பொழிய
எனக்காக கிடைத்த சந்தர்ப்பம் நீ
அதனால் சமர்ப்பிக்கிறேன் இச் சிறு கவியை
என் உயிரான உயிருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நீ என் உயிர் என்று சொல்லும் போதும்
அடங்க வில்லை.. உயிரை மீறிய ஏதோ ஒரு சொல் இருக்காதா தமிழ் அகராதியில் என்று தேடித் தவிக்கிறேன்.. நான் உன்னோடு கோர்த்து விட்ட உயிலான அன்பை
உனக்கு மட்டும் தான் தந்து இருக்கிறேன் என்ற கர்வம் எனக்குள்ளே உண்டு

உரிமையாய் உண்மையாய்
உனக்கே உனக்காய்
உனக்கு மட்டுமாய்
உயிர் உள்ள வரை உனக்காக உயிர் வாழும் என் காதல்…

என்னை எனக்கே நம்ம முடியவில்லை நான் இப்படி இருந்ததே இல்லை
எனக்காக மாற்றம் உன்னாள் எனக்குள் உருவானது
எங்கே என் திமிர்
எங்கே என் கோபம்
எங்கே என் பிடிவாதம்
உன்னாள் உனக்காய் தடம் மாறிப் போனது

உன் வருகைக்கு முன்
எத்தனையோ உறவுகள்
எத்தனையோ நட்புகள்
எத்தனையோ விதமான மனிதர்கள்
பல பல முகங்கள்
அத்தனையும் உன் ஒற்றை அன்பால்
மறந்து போனேன்
போலி அன்பு என்னவென்றும்
உன்னாள் உணர்ந்து கொண்டேன்

இந்த வாழ்ந்த சில நாட்களிளே
சிரிப்புக்கலை விட அழுகைகள்
மட்டும் தான்.. அடக்க முடியாத சினத்தாழும்.. அளவு கடந்த சினேகத்தாலும்.. கணக்கற்ற கண்ணீர்
புழம்பி இருக்கிறேன் நெறுங்கிய நட்புகளிடம் எனக்காக என் அன்புக்கு தகுதியான உயிர் ஒன்று கிடைக்காதா என அன்று அடைந்த பொருமையில் இன்று வெற்றி கண்டு கொண்டேன் உன் வருகைக்குப் பின்னால்

இந்த உலகில் பாக்கியம் என்று சொல்லிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கலாம் ஆனால் என்னைப் பொருத்த வகையில் தான் வைக்கும் பாசத்திற்க்கு சமமாக பாசம் வைத்து தனக்காக உண்மையாக ஒரு துளி கண்ணீர் சிந்தக் கூடிய உறவு கிடைத்தால் தான் பாக்கியம்
அப்படிப் பார்க்கப் போனால் நீ என் பொக்கிஷம் அல்லவா…???

உயிர் உள்ள வரை உன்னோடு நான் வாழ வேண்டும்
இரவில் தெரியும் நிழவாக இல்லாமல் வெயிலுக்கு வரும் நிழலாகவும் இல்லாமல்
உன் உயிர் உள்ள வரை உண்மையான உறவாக உரிமையோடு வர வேண்டும்

வா என்றும் போ என்றும்
செல்லமாக மறியாதை இல்லாமல்
சொல்ல வேண்டும்!
என் பிள்ளை என்றும்குழந்தை
என்றும் நீ கொஞ்சிடும் வேளை
உன் பிள்ளையாகவே
மறு முறை பிறந்திட ஏங்குவேன்

கருவில் சுமந்தவள் தான் அன்னை என்று அறிவேன் இதயத்தால் சுமந்தாழும் அன்னை என்று உம் மூலம் தான் அறிவேன்..
என் அன்னையாக நீ இருந்தும்
என்னை மீறீயே உன்னை என் பிள்ளையாக நினைப்பேன்..

என்னை நீ சுமக்க வில்லை
தூக்க வில்லை
பால் கூட சுவைக்க வில்லை
எப்படி என் உயிரோடு கலந்த உயிராக மாறினாய்..
உயிராக உன்னை நினைத்து உனக்காக சிந்தும் கண்ணீரும் உனக்காக இழக்கும் இழப்புக்களும் எனக்கு பாக்கியம் தான்

என்னை நம்பி வந்தால் பணம் தான் இல்லை ஆனால் பாசத்தை வைத்து நல்ல படியாக பார்த்துக் கொள்வேன்
எனக்கென்று ஏது தேவை..??
நீ மட்டும் தான் என் தேவை
உன்னை வைத்து தேவை இல்லை எனக்கு வேறு தேவை….

தினம் தினம் நான் திரும்பும் திசை எல்லாம் நீ வேண்டும்
என் தாலாட்டாக உன் வாய்ப் பேச்சுக்கள் வேண்டும்
வார்த்தை இல்லை என்றாலும் மௌனங்களாள் கதை பேச வேண்டும்

நீ இருக்கும் நிமிடங்களிள் நான் அடையும் நிம்மதிக்கு எல்லை இல்லை நம் அன்பில் கோபம் இல்லை குறோதம் இல்லை சண்டை போட்டாலும் அந்த அன்பான சமாதாபோல் வேரில்லை

உன்னிள் இருந்து எது வந்தாழும் எனக்கு சந்தோஷமே
என்னை அடி திட்டு சண்டை போடு
அடுத்த நொடியே பேசி விடு
எது வேண்டாழும் தாங்கிப்பேன்
உன் அமைதியை மட்டும் ஒரு நொடியேனும் தாங்கிக்க மாட்டேன்

நீ இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைக்கும் போதெல்லாம் நான் உயிரோடயே இருப்பதில்லை
நீ இல்லை என்றால் நிச்சயம் வாழ்வேன்
உன் பிரிவை தாங்காத பைத்தியமாய்

ஊன் வேண்டாம்
உறக்கம் வேண்டாம்
நீ மட்டும் போதும்
எனக்காக உன் உயிர் உள்ள வரை நீ வேண்டும்
நீ சந்தோஷமாக இருக்க வேண்டும்

நீயே பார் இந்தப் பார் அழகாகியது உன் பிறப்பால் தான
உன் தாயின் கருவரை இறங்கி
இத் தரணியில் தடம் பதித்தாய்
எத்தனையோ வருடம் தான்டி வாழ்ந்திட்டாய்
எத்தனையோ கவலை கஷ்டம் தான்டி வாழ்ந்திட்டாய்
இந்த பிறந்தநாளிள் தான் நான் உன்னோடு இனி வரும் பிறந்தநாளிளும் உன்னோடு நான் இருந்திடுவேன்

இதயம் திறந்து இந்த இனிய நாளிள் வாழ்த்துகிறேன் நோய் நொடி இன்றி உடலாலும் உள்ளத்தாலும் குன்றிடாது வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என் உயிரான உம்மிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எனக்கு நீ உனக்கு நான் நமக்கு நாம்
நீ நான் நாம் என்று ஆயுள் முழுதும் நமக்காக நாம் விரிசல் இன்றி வாழ்வோம்

hbd-1

Advertisements