Archive | September 2015

It is between you and me

உன் வருகையை வர்ணமாக
மாற்ற மாதங்களாக காத்திருந்தேன்
உன் வருகை நெறுங்கிய
பொழுதுகளில் மலராக பூத்திருந்தேன்!!

நீயும் வந்து விட்டாய்
நானோ தாமதிக்கிறேன்
உன் முகம் காண என்னுள்ளே எழும் பதட்டம்
உன் இதய துடிப்பிடம் சொல்கிறது
இதோ வருகிறேன் என்று
உன்னை காண ஓடோடி வருகிறேன்
உன் முகம் கண்ட வுடன்
மருதாணி வைத்து சிவந்த
கைகளாக என் கன்னத்தில்
வெக்கம் கம்பலம் விரிக்க!!

அழகிய புன்னகையுடன்
நீ என் வெக்கத்தை உள்வாங்கி
மழளையாக சிரித்தாய்!!
அடக்க முடியாத வெக்கத்துடனும்
பேச முடியாத சிரிப்புடனும்
உன்னை கண்டவுடன்
என் கைகளை அசைத்தேன்!!
எம்மை சுற்றி இருப்பவர்கள்
எம்மையே நோக்க நாமோ
வெக்கத்துடன் தலை குனிந்தோம்..!

அந் நேர பொழுதுகளில் எத்தனை ஆணந்தம்??
கழித்தோம் பொழுதுகளை
இனிமையாக கழித்தோம்
குழத்தைகளுடன் குழந்தைகளாக மகிழ்ந்தோம்
எம்மை சுற்றி பல உறவுகள்
இருந்தும் நாம் இருவரும் கை
கோர்த்து இருப்பதாக உணர்ந்தோம்..!

உன் கரம் பற்றி நான் நடந்த நிமிடங்கள்
உன்னை அனைத்துக் கொண்டே
உறங்கிய இரவுகளில் நான் அடைந்த
நிம்மதியான உறக்கம் குழந்தையின்
தூக்கத்தை வென்று விடும்..!

நேரம் நகர்ந்தது
நாட்க்கள் உருண்டோடியது
பிரிவு மேகம் சூழ்ந்தது
காலம் கட்டாயப் படுத்தியது
என்னிள் இருந்து விடை பெரும்
நேரம் நெறுங்கியது..!

அக் காலையில் மனம் கனமாக மாறியது
ஒரு நிமிடத்தை கூட வீணாக்காத
எம் இதழ்கள் மௌனமாகியது
உன் மேல் என் நிழலும் படாமல்
தள்ளியே நின்றேன்
உன் கைகளுடன் என் கை சேர வில்லை
உன்னை கட்டி அனைக்க வில்லை
உன் முத்தம் இட வில்லை
உன் முகத்தை கூட நிமிர்ந்துபார்க்க
நான் சக்தி பெற வில்லை..!

உன் அருகில் வந்தால்
அழுது விடுவனோ என்று
உன்னை விட்டு தள்ளியே நின்றேன்
உன்னை முதல் முதல் பார்த்து கை காட்டிய
என் கைகள் நீ விடைபெரும்
நேரத்தில் கை காட்டிய போது
உன் கலங்கிய கண்களையும்
கவலையான முகத்தையும் பார்த்து
தலை ஆட்டி ஊமையாக ஒரு புறம்
நின்றேன்..!

முற்சக்கர வண்டி முன்னே நகர
முற்றம் நின்ற நான் சத்தம் இன்றி அழுதேன்
என் மௌனத்தை சிரிப்பென்று தான்
நீ நினைத்தாய் அந் நேரத்தில்
என் அமைதியான சிமிட்டல்கள்
மாரடைப்பு ஏற்ப்பட்டதிற்கு சமம் அன்பே…!

Neeyum-Naanum

I am living only for you

என்னில் பல நாட்களாக
நிலை மாற்றம்
எண்ணற்ற தடுமாற்றம்
வார்த்தைகளுக்குள் மொழி மாற்றம்!!

பசி இல்லை நிசியிலும்
நிம்மதி இல்லை
நித்தம் உன் புன்முறுவல்
முகம் தலையாட்டை
வலி தேங்கி வடிக்கிறேன்!!

வன்முறை செய்தே
உனக்காக உண்ணுகிறேன்
உன் மேல் உண்மையாக
பாசம் வைத்திட்டேனே
பாவி மனம் நோவி நோவி
நொந்து போயிட்டே!!

உன் பிரிவினால் கலங்குகிறேன்
கரையாமல் கரைகிறேன்
உளராமல் உளருகிறேன்
உறங்காமல் உறுகுகிறேன்!!

எங்கு நீ சென்றாழluம் தங்கமே
உன் குரலும் குழந்தை முகமும்
என்னுள் என்றும் பேசிக்
கொண்டே இருக்கும்!!

என்னிள் உன்னை பிரித்தெடுக்க
இயலாது மரணத்தை தவிர
மங்காத மனதோடு மாதங்களாக இல்லை
வருடங்களாக காத்திருப்பேன்
உனக்காக மட்டும் நான் நான் நான்
நானாக வாழுகிறேன்!! நீ நீ நீ! எனக்காக மட்டும்!!

love-happiness-girl-heart

I am feeling lonely without you

என்ன வாழ்க்கையோ இது?? உன்
பிரிவு என்னை கொல்லுதே!!
அடம்பிடிக்க தெறியாமல்
வாழ்ந்தேன் அவஸ்த்தைகளை
அடைக்கலம்
என் வசம் வந்து விட்டதே
இந்த காதல்??

என்ன மாயம் செய்தாயோ
நேசத்தை மட்டும் நெய்து
என்னை அன்பால் அனைத்துக்
கொண்டாயே!!

உசிரே போகுதே
உன் முகம் பார்க்கும்
நாள் தான் எப்போது??
அழுகிறேன் உனக்காக
உன் வருகைக்காக
கருமுகில் கண்ட மேகமாய்!!

இந்த வலிகள் மாறும் கண்ணே
உன்னை கட்டி அனைத்தாலே
பாதி வலி போய்விடும் அன்பே!!

எப்படியும் உன்னை பார்ப்பேன்
பேசுவேன் இருந்தும்
என்னை மீறியே உன்னை
Missபன்னிட்டே இருப்பேனஅன்பே!!

கோபிப்பேன் கொஞ்சுவேன்
சண்டைகள் போடுவேன்
சேட்டைகள் செய்வேன்!!
இருந்தும் தன்னை மீறி
உன்னை Loveபன்னிக்கிட்டே
இருப்பேன் அன்பே!!

விழியில் வடித்து வடித்து காலம்
கடத்துகிறேன்
உன் கால் தடத்தை எதிர்
பார்த்து பூமி போல் பொருமையுடன்!!

lonely-without-u

Dream Girl

என் கனவுத் தாரகையே
உன் சொப்பனம் கன்ட
கவிஞனாய் உன் மூலம்
பாக்கியம் பெற்றேன்
என் விடியல் கனவிடம்!!

கனவின் மடியில்
நான் உறங்க
என் கவியின் மடியில் நீ
உறங்கிக் கொண்டாயே
மலரில் உறங்கும்
பனித்துளி போல!!

என்ன அழகோ நீ
மெய்சிலிர்ந்தேன்
விடியந்தவுடன்
வினவினேன்
என்னுள்ளே எனக்கான
தேவதை நீ தானோ??

என்னில் ஏதோ சந்தோஷம்
என் விழியில் வதனம்
வர்ணமாய் நீ வந்ததால்
வரிகளிள் அடக்க வார்த்தை
இன்றி தடுமாறினேன்!!

எப்போதும் துயில்
கொள்வேன்
என் கனவின்
நுனியிலாவது
வந்து விடு
என்அருகில் நீ இருக்கும்
நிம்மதியை பூர்த்தி செய்ய
இந்த கனவை தவிர
எவரaluம் இயலாது!!

இமை மூடிய நேரத்தில்
உன் சிங்கார புன்னகையும்
சிக்கன அமைதியும்
கனவுகளிலும் கண்டு
கரைந்தே போகிறேன்!!

நித்திரையில் நித்தம்
வந்து விடு நிதமும்
நினைவில் உன்னை
கோலம் போட்டு
அலங்கரித்துக் கொண்டே
இருக்கும் பாக்கியம்
தந்து விடு …!

dream

Krishna Nee Begane Baro

ahlan

கண்ணா வருவாயா…….

காலம் கடந்து அழைக்கிறேன் கண்ணா,

இந்த மானுடம் தழைத்திட,

தர்மம் நிலைத்திட

மனிதன் வாழ்ந்திட உனக்கு

அறைக் கூவல் விடுகிறேன்

ஆம் அஹ்லன் எனும் சிறுவன்

அழிய காரணம் யாரோ தெரியாது

ஆனால் தர்மம் வீழும் போது

இந்த அவினியில் நான் வருவேன் என்றாயே?

அஹ்லன் உன்னை அழைக்கவில்லையோ?

இப்போது உன்னை அழைக்கிறேன்,

மற்றுமொரு அஹ்லன் இறக்காமல்

இருக்க வரம் தர நீ வர வேண்டும்.

எப்போது நீ வருவாய்? எங்கணம் வருவாய்?

மதங்கள் இல்லா உலகம் வேண்டும்,

மனிதன் வாழ மனிதம் வேண்டும்

எப்படி செய்யப் போகிறாய்?

மதம் வளர்க்க பாடுபடும் உள்ளத்தில்

மனிதம் வளர்க்க ஆனையிட

நீ எப்போதுவருவாயோ?

எங்கணம் வருவாயோ??

மதம் பிடித்தவர்கள் மாண்டு இருந்தால்

உன்னை அழைத்திருக்க மாட்டேன்

இங்கு மாண்டவர் எல்லாம் மதம் தெரியாத

மனிதம் புரியாத பாலகனாயிற்றே ! !

மாதா பிதா மட்டும் தெரிந்து..

மானமும் தெரியாது, மதமும் தெரியாது

வாழ்க்கையும் புரியாது அழகாக சிரித்து

துள்ளித் திரியும் அந்தச் சிட்டுக்கு தெரியுமா

மதத்தின் பெயரால்மாண்டுவிட

போகிறோம் என்று?

மதம் பிடித்த இந்த மதவாதிகளை

மரணம் ஆட்க் கொள்ளட்டும்

அன்பு மனதில் மனிதம் வளரட்டும்

அப்பாவிகளை கொள்ளாமல் காக்க

என் கண்ணா நீ வா வா வா

krishna-nee-begane