Archive | August 4, 2015

neeyum naanum

நீயும் நானும் — நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசம்

எண்ணில் அடங்கா எண்ணங்களை
என்னில் அடக்கிட சொல்கிறாய்…..
வார்த்தைகளில் சொல்லிடவே
விழைகிறாய்,
வாழ்ந்து காட்டிடு
நானின்றி நீ எனக்காக
எப்படி என்னுள்
நீ இருப்பது நிஜமோ
அப்படியே
உனக்குள் நான் இருப்பது
உண்மை என்றால்…..

எனக்குள் இருக்கும்
தன்னை இழந்தும்
உன்னை இழக்க விரும்பாத உயிரை
இழந்தபின் வருந்தி என்ன பயன் ??
சோகம் கூட சுகமானது –
உண்மை என்னை தாங்குவதால்

react-same-old-way

Advertisements