Archive | August 2015

தேடுகின்றேன் நான்

theedugirean

தேடுகின்றேன் நான்,

உண்மை பேசும் முக நூல் நட்புக்களை,

தேடுகின்றேன் நான்,

உயிராய் இருக்கும் நண்பர்களை,

தேடுகின்றேன் நான்,

உறவு சொல்லும் நண்பர்களை

தேடுகின்றேன் நான்,

 நான் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டும் நண்பர்களை

தேடுகின்றேன் நான்,

திருமணம் முடிந்தும் தோழிகளைத் தேடும் பெண்களை,

தேடுகின்றேன் நான்,

வாங்கிய கடனை திரும்ப கேட்பதற்கு முன் திருப்பிக் கொடுக்கும் உறவுகளை,

தேடுகின்றேன் நான்,

எனது இந்தியாவில் தொண்டன் அல்ல அரசியல் தலைவன் தீக்குளிப்பதை,

தேடுகின்றேன் நான்,

போலியில்லாத உறவுகளை

தேடுகின்றேன் நான்,

அன்பை போலியாக்கிடா மனிதரை

தேடுகின்றேன் நான்,

 நேசத்தை நாசமாக்கா மனிதரை

தேடுகின்றேன் நான்,

மதம் பேசாத மனிதனை

தேடுகின்றேன் நான்,

மனிதம் பேசிடும் மானிடனை

தேடுகின்றேன் நான்,

காதலில்லா, காமமில்லா மனிதனை நண்பனை

தேடுகின்றேன் நான்,

கைபிடி அளவே இதயம் அதில் காயமில்லா மனிதனை

தேடுகின்றேன் நான்,

தேடுகின்றேன் நான்,

தன்னுடன் பணி செய்யும் சக மனிதனின் வெற்றியில் பூரிப்படையும் நேசத்தை

தேடி த் தேடி அலைந்தாலும்,

தோற்றுப் போகிறேன், துவண்டு போகிறேன்

தேடுகின்றேன் நான்,

சோர்ந்து போகாதே என் கண்மனி எனும் என் தாயின் நேசத்தை உன்னிடமும்,

தேடுகின்றேன் நான்,

இவர்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை கடக்க என்ன செய்ய வேண்டுமென

Advertisements

Why am I a Hindu?

# படித்ததில் பிடித்தது

இஸ்லாமியனாய் இரு என குரான் சொல்கிறது… Quran Says to be a Muslim (Follower of Islam)
கிறிஸ்துவனாய் இரு என பைபிள் சொல்கிறது… Bible Says to be a Christian (Follower of Christianity)
மனிதனாய் இரு என கீதை சொல்கிறது…  Gita Says be a human ( Follow humanity), It doesnt ask us to be a Hindu.
கடவுள் ஏழாவது வானத்தில் இருக்கிறார் என குரான் சொல்கிறது… Quran says, God is in seventh cloud
நாலாவது வானத்தில் இருக்கிறார் என பைபிள் சொல்கிறது…Bible says God is in Fourth Cloud
கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது… Gita says god is in you
காபிர்களை (இசுலாமியர்கள் அல்லாதவர்களை) கொல் என குரான் சொல்கிறது… Kill those who are not Kabir – Quran ( I am not sure about this)
சிலை வழிபாடு செய்பவர்களை தண்டி என பைபிள் சொல்கிறது…. Punish those who worship Idols – Says Bible ( I am not sure about this as well)
உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது….. World is your family says Gita
: நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :👇👇👍  The reasons why I want to be an Hindu?

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம். Even if someone says there is no god, we don’t consider them as a sinner or a wrong doer.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம். There is no restriction or time frames defined to follow the religious sentiments like go to travel, pray this, pray these many times, no hardcore rules

3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம். There is no compulsion to visit Kasi or Rameshwar

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம். There is no defintion to lead a life as Hindu

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம். No need to use any Ornaments or any sort of materials to say that you are an HINDU

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை. There is no one as a leader to control the religion.

7. தவறு செய்தவன் சாமியாராக முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு. People has the guts and dignity to punish the saints or the wrong doers

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).

9. நீயும் கடவுள்,
நானும் கடவுள்…
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள்,

பெண் ஆசையை ஒழிக்க
👉இராமாயணம்,

மண் ஆசையை ஒழிக்க
👉மகாபாரதம்,

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
👉பகவதம்,

அரசியலுக்கு
👉அர்த்தசாஸ்த்திரம்,

தாம்பத்தியத்திற்கு
👉காம சாஸ்திரம்,

மருத்துவத்திற்கு
👉சித்தா, ஆயுர்வேதம்,

கல்விக்கு
👉வேதக் கணிதம்,

உடல் நன்மைக்கு
👉யோகா சாஸ்த்திரம்,

கட்டுமானத்திற்கு
👉வாஸ்து சாஸ்திரம்,

விண்ணியலுக்கு
👉கோள்கணிதம்.

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.

12. , கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
“கொல்லாமை ” “புலால் மறுத்தல்”,
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் வரையறையை கொடுத்த மதம்.

13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.

13. முக்தி எனப்படும் மரமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.
👉👉இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்……
👉💪👑👑இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்

You are Gonna Miss me

u-r miss-me

தோல்விகள் எனக்கு புதியதில்லையே

தோற்பதற்கு கலங்கவும் இல்லை

உனக்காக தோற்றுப் போவதில் சந்தோசமே,

ஆனால் உன்னால் தோற்று போகிறேன்

என்று வருந்துகிறேன்

ஆம்,

உன்னோடு முட்டி மோதியத

நான் உன்னை ஜெயிக்க வேண்டும்

என்றில்லையே,

நீ என்னை முழுவதுமாக

இழந்த பின்  வருந்துவாயே

தோற்க்கப் போவது நீ

என்பதனால் நான் என்றும்

வருத்ததுடன்.

God No God

god-no-god

உன் பாவங்களை என் சிலுவையில்

சுமக்கிறேன் என்று சொல்ல நான் யேசுவும் இல்லை

உன் பாவங்களில் இருந்து உன்னைக்

காத்திடுவேன் என்று சொல்ல நான் கண்ணனும் இல்லை

உன்னைப் போல் பல பாவங்களையும் செய்யும்

சராசரி மனிதனைக் கடவுளாக்கிடும்  மானிடனே,

இறைவன் என்பவன்

ஒருவனே

என்பதனை என்று நீ அறிவாயோ??

Come back – Missing you

என் தேடல் நீதானே

உன்னைதேடி தொலைந்தேனே – என் தேனே,

உன் பார்வையில் தொலைந்தேனே

உன் குரலினில் தொலைந்தேனே

உன் கொஞ்சலில் தொலைந்தேனே

உன் கருத்தினில் தொலைந்தேனே

உன் காதலில் தொலைந்தேனே

உன் அன்பினில் தொலைந்தேனே

உன் உயிரினில் தொலைந்தேனே

உன் உறவினில் தொலைந்தேனே

உனக்குள் தொலைந்தேனே

உன்னால் தொலைந்தேனே

என் தேடல் நீதானே

உன்னைதேடி தொலைந்தேனே – என் தேனே,

thedi- thedi

ஏக்கம் கொண்ட மனதில்

தூக்கம் இன்றி தொலைந்தேனே

தேடித் தேடித் தேய்ந்தேனே

எனது நிழல் தேடி

வெயிலில் அலைந்தேனே

உறங்க இடம் தேடி

இருளில் மறைந்தேனே

தேடித் தேடித் தேய்ந்தேனே

சென்றவள் வருவாள் என்று

உன்னுள்  உனக்காக தொலந்தவள் இன்று

உன்னால்  தொலைந்தேனே

உன்னுள் தேடி தேடி தொலைந்தேனே

தேடி தேடி தொலைந்தேனே

எந்தன் கேள்விகளுக்கான பதிலாக

உனக்கு என்னை கொடுக்கவே

தேடி தேடி தொலைந்தேனே

உடைந்த மனதிற்கு இன்று

சாய தோல் இல்லையே

தேடி தேடி தொலைந்தேனே

வெளிச்சத்தில் இருந்தும்

விளக்கைத் தேடுகிறேன்,

நீயின்றி என் வாழ்க்கை இருளானதால்,

தேடுகிறேன் உன்னை இல்லை

என் வாழ்க்கையை – நீ

கிடைத்தால் வாழ்கிறேன்

தேடி தேடி வாழ்வதைக் காட்டிலும்

நீ என்னை தேடும் நிலை வாராதுபோனால்

தேடுவதும் பெரும்சுமைதான்

இறப்பதே ஒரு வரம்தான்

நீ என்னை நினைத்திடுவாய்,

நினைவுகளில் தேடுகிறாய் என்று

என் நினைவுகளால் மட்டுமே

இன்றும் என்றும் உன்னை

தேடி தேடி தொலைவேனே

Eswar-Allah-Tere-Naam

ஈஸ்வர் அல்லா தேரே நாம் – காந்தியால் எழுதப்பட்ட வரிகள், சுதந்திர போராட்டத்திற்கு காந்தியால் ராம பஜனாக பாடபட்ட பாடல், இதில் இஸ்லாமியர்கள் அல்லா எங்கணம் வந்தார் எதற்காக எழுதப் பட்டது என்று தெரியாது.

இஸ்லாமியர்களால் ராமனுடன் ஓப்புமைக்கு இயலாத அல்லாவை இனையாக சொன்னது ஏற்றுக் கொள்ளப்பட்டதாஎன்றும் எனக்கு தெரியாது.

நான் காந்தியைப் பின்பற்றுபவளும் இல்லை, ஆனாலும் இந்த ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று சொல்லும் போது ஒரு ஆனந்தம் வருவது என்னமோ உண்மை.

Allah-Eswar

காரண காரியங்கள் இல்லாமல் ஒரு அனுவும் அசையாது என்று இறை மீது நம்பிக்கை உண்டு. நான் மதங்களை கடந்து மனிதர்களை நேசிப்பவள், மதங்களின் வழியாக மனிதர்களை பார்ப்பவள் இல்லை, மனிதர்களின் வழியாக மதத்தினைப் பார்க்கிறேன்….. அதனால் தானோ என் மனம் அமைதியின்றி தவிக்கிறது….

நான் மனிதன் என்பதனால் வருந்தவில்லை, நீ இஸ்லாமியர் என்பதால் கலங்குகிறேன்…. இஸ்லாம் சொல்லும் எதிலும் நீ இல்லாமல் இருந்து அந்த மார்க்கத்தையும், மனிதர்களையும் எங்கு கொண்டு செல்வாயோ? 

“மது குடிக்கலாம் ஆனால் போதை வரக்கூடாது!“ என்பது மாதிரி! மதுவின் தேவையே போதைதானே? அது போல தான் இன்று மதம் என்பதும் மனிதனுக்குள் போதையாகியது…..

மதம் என்பதும் ஒரு போதையாகிப் போனது விந்தையே….

ராமனும் ரஹீமும் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் குருதியின் நிறம் சென்னிறமே… அவர்கள் இருவரின் பிறப்பும் இருவரின் சங்க்மத்தில் உருவானது தானே? உயிர் இருக்கும் வரை மட்டுமே ராமன், ரஹீம், இறந்த அடுத்த நொடியில் இருவரும் பிணமாக மட்டுமே கருதப்படுகிறார்கள்.

மூச்சிற்கு முன்னூறு முறை ராமா, அல்லா, யேசுவே என்று சொல்லி அத்துனை கெடுதலகளையும் செய்வேன், இறைவன் என்னை மன்னிப்பான், ஒரு தாயைவிட 70000 மடங்கு அன்பு கொண்டவன் என்று அடி மனதில் நினைத்து, நான் எந்தவொரு தகாத செயலைச் செய்தாலும் எனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று இருமாப்பில் இருக்கும் மானிடனே, மூடனாவாய் அந்த இறைவன் முன்பு. நல்லதை செய் நல்லதே நடக்கும், நல்லதை நினை, நல்லவையே பிறக்கும், எண்ணம் சிதறாமல் இருந்தால் உன் வாழ்க்கை சிதறாது. சிந்தையில் இறைவனின் எண்ணங்களை வை, அடுத்தவர் சிதையில் இல்லை…..

மதங்கள் என்பது மனிதனின் வாழ்க்கையை நெறி முறைப் படுத்தவே, இப்படி அடித்துக் கொண்டு சாஹவா? உன் மதம் உனக்கு பெரியதா, அதனை புனிதமாக பின்பற்றி அதன் புனிதத்தை எனக்கும் சொல்லிடு…

Be true to yourself

puzzle

விடுகதையா விடுதலையா?

உன்னை புரியாமல் இருந்ததால்
எனக்கு விடுகதையானாய்
உன்னை நன்கு
புரிந்துக் கொண்டதால்
விடுதலை ஆனேன்…..

என்றும் அன்புடன்

pen5