Archive | June 2015

சொல்லத்தான் நினைக்கிறேன்….

the hurting

யோசிக்கிறேன் உந்தன் உறவு வேண்டாம்  என்று சொல்லிட நினைக்கிறது ஆனாலும் யாசிக்கிறது உன்னை எந்தன் மனது….

தள்ளி நின்ற என்னை நோகடிப்பது தான் உன் நோக்கமே..
விலகிச் சென்றாலும், விலகாது என்னை விட்டொழியாமல்,

துரத்தி வந்து என்னை துன்புறுத்ததானோ??

வேண்டாம் உன் உறவு என்று நானிருக்க நினைத்திடும் வேளையில்,

அன்பாய் ஒரு வார்த்தைச் சொல்லி,

அதனுள் என்னைச் சிறை படுத்தும் உன் கொடிய உறவு வேண்டுமா?

எதற்காக இந்த போலி வேஷம்,

எதற்காக இந்த போலி உறவு,

எதற்காக இந்த போலி அன்பு,

எதற்காக வேண்டும் நீ எனக்கு என்று என்னை நினைக்க் வைத்த

உன்னை இன்னும் உறவாக மன்றாடுவது ஏனோ ??

கண்களில் கண்ணீர் கசிந்தால் துடைத்து விடலாம்,
இதயத்தில் இரத்தம் கசிகிறது, இந்த உயிரில்லாத உறவுக்காக….

மனம் மட்டும் வலிக்கவில்லை.

வாழ்க்கையும் வலிக்குதே.

Advertisements

Love

love

அன்பான அரவனைப்பு
ஆழமான நேசம்
இனிமையான காதல்
ஈதல் குணம்
உண்மை பாசம்
ஊமையாக்கும் உன் சுவாசம்
எனக்கே எனக்காக
ஏன் என்று கேட்டிடாமல்
ஐ என்று சொல்லி
ஒவ்வொரு நொடியும்
ஓடிடுமே இந்த இதயம்…

இவர்களும் மனிதர்களா?

friend-end

தந்தையிடம் சொல்ல முடியாததையும்

தாயிடம் பகிற முடியாததையும்

சகோதரனிடமும், கணவனிடமும்

சொல்ல முடியாத விஷயத்தையும்

அனைத்தும் சொல்லிடுவாள்

நண்பன் அவனை

சகோதரனாக எண்ணிடுவாள்

இவனை தன் நண்பன்

ஆயுள் வரை நட்புடன்

இருந்திடுவான் என எதிர்பார்ப்பில்

துரோகியாக நண்பன்

மாறிடும் நிலை வராது எனும் நம்பிக்கையில்

தன் மனதில் உள்ளதை நண்பனிடம்

சொல்லிய மன நிம்மதியில் அவள்…

தனக்குள் இருந்த மனபாரம்

குறைந்தது எனும் திருப்தியில்.

துரோகியாக நண்பன் மாறிடுவான்,

ஒரு சிறு விரிசல்

அந்த நட்புக்குள் வரும் நேரம்

சகோதரனும் சாக்கடையாவான்

தந்தை என்றுச் சொல்பவனும்

சிந்தையில்லாது மாறிடுவான்

நட்பும் உடைந்து போகும்

சுயமில்லாமல் வருவது

ஒன்று மட்டுமே இந்த பூவுலகில்

அன்னை என்பவள் அரவனைப்பு மட்டுமே…

இவை அனைத்தும் இருப்பது

பேதை பெண்களிடம் மட்டுமே ! ! 

இவளும் பத்தினி

vilai-maathu

 விலை மாது

தன் உடலை மூலதனமாக்கும்

தன் குடும்ப தேவைக்கும்,

தன் தேவைக்கும் மட்டுமே !

சுய இன்பத்திற்கு இல்லை.

வேசி என்று ஏசிடலாம்,

அவள் உடலைத் தான்

விற்கிறாள் தன்னைச்

சார்ந்தவர்கள்பசி தீர,

தன் குடும்பத்தின் நிலை மாற

சகோதரன் படிக்கிறான்
சகோதரிகளின் திருமணம்

அன்னையின் மருத்துவச் செலவு

அப்பாவின் அகம்பாவம் இன்னும் பல…

சுயம் இழந்து சுகம் கொடுக்கிறாள்

மனதை விற்கவில்லை

எவரையும் மயக்குவதுமில்லை

மனதைக் கொன்று,

தனது உடலை தானமக்கும்,

எவனோ ஒருவன் தன்

உடல் தேவையை தீர்த்துக் கொள்ளும்

மாமிச மிருகங்களிடம் சிக்கிச்

சின்னபின்னமாகிறாள்.

உன்னால் முடிந்தால்

அவளுக்கு ஆதரவு கரம் கொடு

ஸ்னேகம் காட்டு

சீர் பட திளைத்திடு…

சீர்கேடாக பேசிடாதே

தன் மனதிற்குப் பிடித்தவனுக்கு

மனதை மட்டுமே கொடுக்க முடியும்,

இவளும் பத்தினி தான்.

அரிதாரம் பூசும் வேசம் வேண்டாம்,
அமைதியான அன்பு போதும்.
ஆர்ப்பரிக்கும் ஆர்ப்பாட்டம் வேண்டாம்,
ஆசையாக அனைத்திடும் கைகள் போதும்.
இழுப்பறிக்கும் இம்சைகள் வேண்டாம்,
இனிமை தரும் இதயம் போதும்.
ஈ என இளித்திட வேண்டாம்
ஈகையுடன் பார்வை போதும்.
உரிமை இல்லாத நட்பு வேண்டாம்,
உண்மையான உயிராக வேண்டும்.
ஊருக்கு உறவு வேண்டாம்,
ஊனாகி உயிராகி உண்மையுமாய் வேண்டும்
எண்ணம் எல்லாம் வேண்டாம்
எண்ணிய நேரம் நீ வேண்டும்
ஒரு நாளும் மறவாத என்று வேண்டாம்
ஒவ்வொரு நொடியும் உன்னோடு வேண்டும்.

என் இதயத்தின் மொழிகள்

என் இதயத்தின் மொழிகள்

யார் அறிவார் என்னையன்றி….

உனக்கான சிதறல்கள்  ! ! !

happy girl-1

சிட்டுக் குருவியாகவே பறந்து

திரிந்தேன் உன் அறிமுகம்

கிடைக்கும் வரை, இன்று

நினைவுகளில் மூழ்கி,

என்னைத் தொலைத்து

சிறகுகளிருந்தும் தவிக்கிறேன்

பறக்க முடியாமல்

உன் நினைவுகள் பெருஞ்சுமையாக

அமைதியாக இருந்த என் வாழ்வில்

அலைகள் போலவே

ஆர்ப்பரித்து வந்ததது ஏனோ?

அவைகள் போலவே

என்னை தனித்துவிட்டு செல்லவோ?

காவலாக நீ இல்லாமல் போனது

எனது காலக் கோலாரா?

இல்லைக் காதலில் கோலாரா?

div-2

20 வருடம் வாழ்ந்திருந்தாலும் கிடைத்து இருக்காது,

இந்த இனிமை

இதயத்தின் ஏக்கமும் நீ

இதயத்தின் இயக்கமும் நீ

இதயத்தின் இனிமையும் நீ

இதயத்தின் இதமும் நீ

இதயத்தின் இன்னலும் நீ

இடரலும் நீ,

பதம் பார்ப்பதும் நீ

எனது இன்பமாக நீயும்,

உனது தீராத துன்பமாக நானும்

வாழ்ந்திருந்தால், இந்த நாள்

ஒரு பெரும் சுமையாகும்.

சிலருக்குப்

பெருஞ்சுமையாக வாழ்க்கை

சிலருக்குப்

புரியாத புதிராக வாழ்க்கை

புரிதலில் இல்லை வாழ்க்கை,

பிரிதலில் இல்லை வாழ்க்கை

உன்னைப் புரிந்தும்

பிரிந்தும்

பிரியம் மாறாமல்

இருக்கிறோம் என்ற

இனிமை இன்னும்

இருபது ஆண்டுகள்

கொண்டு செல்லும் என்னை

div-1

மன்னவன்

அவன்தன் மனம் குளிர,

மங்கை இவள் எடுத்த

இனிமை, தனிமைக் கோலம்.

ஆயினும் இனிமை,

நான் உன்னோடு

இருப்பதனால் தானோ?

நினைவுகளோடு

மட்டும் நீ இருப்பதால்

இன்னும் இனிமையாகவே

என் வாழ்க்கை

இகம்பர வாழ்தலும்,

இரண்டொர வாழ்தலும்

இல்லாது போனாலும்

என்னோடு நீயில்லை

நீயின்றி நானில்லை

என்றும் தனிமையில்…

Without you

நினைவுகளில் நீ இல்லை,

ஆயினும் வேறு ஒருவருக்கு இடமில்லை

மறக்க தான் நினைக்கிறேன்

நீ வேறு நான் வேறு என்று,

நினைத்த மாத்திரத்தில்

நான் எனும் நினைவு

தொலைந்து போகிறது

எனக்குள் நீ மட்டுமே

இருப்பதால்,

இருந்தும் இறந்தவளாகவே

girl-writing