Archive | May 2015

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள் – அரிய தகவல்

படித்ததில் பிடித்தது

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள் – அரிய தகவல்

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள் – அரிய தகவல்

மகாபாரதத்தில் கௌரவ பாண்டவர்களின் சித்தப்பா விதுரர் ஆவார். இவர் மதிநுட்பம் மிகுந்த

அமைச்சராக  தனது அண்ண‍ன் திருதராஷ்டர‌ரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமா வார்.

அத்தகைய பெருமை மிக்க விதுரர் கூறிய பதினேழு வகையான மூடர்களைத்தான் கீழே பட்டியலிடப்பட்டு ள்ள‍து.

பதினேழு வகையான மூடர்கள்

1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி யடைபவன்..

2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்ப‍வன்

3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்ப‍வன்

4)உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.

5)  தானத்தைக் கேட்கக்கூடாதவனிடம் கேட்பவன்.

6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய் யாமல்  தன்னைத் தானே புகழ்ந்துகொண்டிருப்ப‍வன்.

7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம்,  பொருளைக் கொண்டு பிழைப்பவன்).

8) பலமில்லாத‌வனாக இருந்துகொண்டு, பலமுள்ள‍வ னோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்

9) பிறரிடம் இருந்து உதவியோ அல்ல‍து பொருளை யோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது நினைவில் இல்லையே என்று சொல்பவன்.

10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன் அதாவது பிறர் மனைவியரை அடைபவன்

11) தனது மனைவியைக் குறித்து அவனே  பிறரிடம் தவறாகப் பேசுபவன்.

12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால்  விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.

13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன்.

14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.

15) தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிரு ப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.

16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித்தற்பெருமை பேசுபவ ன்.

17) எதிரிகளிடம் சரண்டைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.

ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர் என்று விதுரர் கூறியுள்ளார்.

vidhai2virutcham-விதை2விருட்சம்

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள் – அரிய தகவல்

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள் – அரிய தகவல்

மகாபாரதத்தில் கௌரவ பாண்டவர்களின் சித்தப்பா விதுரர் ஆவார். இவர் மதிநுட்பம் மிகுந்த

View original post 182 more words

Advertisements

பாலியல் கொடுமை

என்ன பாவம் செய்தேனோ இந்த புவிதனில் பெண்ணாக பிறப்பதற்கு, பாலியல் கொடுமையில் துன்பப்படுவதற்கா???

தானத்தில் சிறந்தது எது என்று போட்டி வைத்து உணவு, கண், உடல் உறுப்பு என்று பல வற்றைப் பேசிடுவோம். ஆனால் கொடுமைகளில் எது மிகவும் கொடுமையானது என்று கேட்டால், சொல்லிட பாலியல் கொடுமை – மட்டுமே எனது மனதினில் இன்று வலியாக, மாறாத வடுவாக உள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று அனைத்தையும் ஒரு சேர கொண்டு வந்தவிட்டனரே பாலியல் கொடுமையில் இருந்து காப்பற்ற எந்த கடவுளும் இல்லையோ???

உன் மகளுக்கு இப்படி ஒரு துன்பம் வந்தால் என்ன கோபம் வருமோ, அதனை வார்த்தைகளில் வெளிப்படுத்து என்று என் மகளே சொல்லிய போது அவளிடம் சொல்ல மனமில்லை, என் செல்வமே, உனக்கு இப்படி ஒரு நிலை இருந்தால் நான் இருந்து இருண்டு இறந்து இருப்பேன்.

VIDYA-TAMIL

vidya-2

இந்த வன்கொடுமை யாருக்கு நடந்தாலும் அடித்துக் கேட்கும் உரிமை அனைத்து மகளிருக்கும் இருக்கவேண்டும்.

இங்கு பெண்மைக்கு இழிவு ஏற்படுத்தும் இந்த அர்ப்ப ஆண்களை என்ன செய்ய? இவர்களைப் பெற்றவளும் பெண் தானே?

ஏன் இந்த வக்கிரம் இவர்களுக்குள் என்று ஆராய்ச்சி செய்யவா, இல்லை இந்த வன்கொடுமைக்கு ஆளான இந்த இளந்தளிர்களின் கனவுகள், லட்சியம் என்று யோசிக்கவா?

என்ன பாவம் செய்தனரோ உன்னை பெண்ணாக பெற்றதற்கு என்ற நிலை மாறிடுமா?

எத்தனை பெண் சிசுக்கள் கருவினிலேயே அழிகின்றன? இப்போது சிந்திக்கும் நேரத்தில் அது சரியே…

இந்த புவி தனில் பெண்ணாக நீ ஜனித்து, படித்திடவும் சிரமம், உன்னைக் காபந்து செய்து ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து, அவனுடன் நீ அனுசரனையாக நடந்து, உன்னுடைய இல்லறம் நல்லறமாக நடந்தால் மட்டுமே ஒரு தாயால் நிம்மதி பெருமூச்சு விட முடியும்.

ஆனால் இன்றைய சூழ்நிலை  எப்படி இருக்கிறது?

பள்ளி செல்லும் குழந்தைகளை பட்டு குட்டி, என் செல்லம், தங்கம் என்று கொஞ்சியவர்களாக இருந்த அண்ணன்மார்களும், தம்பிகளும், தகப்பன்களும், நல்ல மனம் படைத்த மாமன்களும், இன்று எங்கே?

ஏ ஆணினமே ! ! எங்கே செத்து மடிந்து விலங்கினமாக இன்று வலம் வருக்கிறாயோ?

உனக்குள் இருந்த உறவுகள் எங்கே? அழகான சின்னஞ்சிறு குழந்தைக்கும் ஒரு குமரிக்கும்,, கிழவிக்கும் வித்தியாசம் தெரியாத விலங்கினமாகவா உன்னைப் பெற்றால் உன் அன்னை? அவளும் ஒரு பெண் தானே?

4 வயது குழந்தையிடம் வெறித்தனமான செயல் புரியும் மானங்கெட்ட மானிடனே, உன்னை விலங்கினத்தோடு சேர்த்தால் அந்த விலங்கினம் அசிங்கபடும்.

எங்கு கேட்டிலும் வக்கிரம் மட்டுமே, இந்தியாவில், இலங்கையில் அக்கிரமங்கள் ச்ய்ய ஆ

வித்யாவிற்கும், சரண்யாவிற்கும்  நடந்தது கொடுமையிலும் கொடுமை. கோயிலுக்கு சென்ற பள்ளி மாணவி என்ன நடந்தது என்று கூட தெரியாத நிலை.  பள்ளிச் செல்லும் மாணவிகளிடம் பாலியல் பலாத்காரம் செய்யும் உன்னை ஈன்றதும் ஒரு பெண் தானோ….

ஏதோ உனது உடல் பசிக்கு உன்னை விலங்காக மாற்றியதற்கு ஏதோ காரணம் சொன்னாலும், நண்பர்களையும் , தனது சகாக்களையும் அழைத்து அந்த சின்ன பெண்ணை சின்ன பின்னமாக்கி பிணமாக்கிட உன்னால் எப்படியடா முடிந்தது?

உனது சகோதரியையோ, மனைவியிடமோ, மகளிடமோ இல்லை தாயிடமோ இப்படி நடந்தால் என்ன செய்வாய்? தாரமில்லை, தமக்கையில்லை, பெண்களின்றி வளர்ந்தேன் என்று சொல்லிடலாம், ஆனால் தாயின்றி நீ பிறக்கவில்லையே?? இப்படி ஒரு மகனைப் பெற்ற அந்த கொடியவளை என்ன செய்ய?

உன் உடற்பசிக்கு விலைமாதர்கள் உள்ளனரே, ஏனடா பச்சிளம் குழந்தைகளோடு உனக்கு இந்த வெறி?

vidya-1

இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமானால், ஒரு வழி தான் ஆணினத்தை கருவினிலே அழித்திட வேண்டும். ஆண்களில்லா உலகம் அழிவை நோக்கி தான் செல்லும், ஆயினும் என் குல பெண்கள் கற்புடன் வாழும், உயிருடன் வாழ வழி வகுக்கும்.

இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள் என்று கேட்கிறாய், மன்னித்துவிட வேண்டும், ஆமாம் சுய நினைவுடன் தான் சொல்கிறேன் இவர்களை இந்த காட்டு மிருகங்களை மன்னித்துவிட வேண்டும் ஆனால் மன்னிக்கும் முன்அவர்களது ஆணுருப்புகளை அறுத்தெரிந்து அரை மனிதர்களாக உலவிடச் செய்ய வேண்டும்.

நான்கு தலைகள் அறுக்க படுவதால் யாருக்கும் பயனில்லை, இன்னும் நானூறு மிருகங்கள் பிறந்துவிடும். இவர்களுக்கு மேற்கூரிய தண்டனையை அமல் படுத்தி பாருங்கள், தனது மனைவியைக் கூட அவள் அனுமதியின்றி தொட மாட்டார்கள்.

கொலைகார பாவிகளாக மாறியவர்களை இன்னும் மனிதன் என்று சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம், நீதிமன்றம் வேண்டாம், மரணம் வேண்டாம், அறுத்திடு அவனின் ஆணி வேரினை, பயம் வரும் இனி வரும் ஆண்மை அற்ற அர்ப்பனுக்கும்….

வீரம் என்பது எது என்று அரியாமல் அட்டூழியம் செய்யும் மன நலம்குன்றிய மானிடனே, நீ மாமனிதனாக வலம் வருவாய் என்றே உன்னை உன் அன்னைச் சுமந்து இருப்பாளடா, இப்படி மிருகமாக நீ வலம் வர என்ன காரணமோ?

எந்த ஒரு பெண்ணையும் அவளது அனுமதியின்றி அடைவதற்கு பெயர் ஆண்மை என்று எவனடா உனக்கு எடுத்துரைத்தான், அழைத்து வா, எட்டி மிதிக்கிறேன்…

ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளை தீண்டிடும் போது நீ புலியாக மாறுகிறாய், ஆனால் அங்கே உன் விலங்கினம் மட்டுமே விளையாடும். வீரம் என்பது பெண்ணை அடைவதில் இல்லை, அவளை அன்போடு அனைப்பதில் என்று உனக்கு அறைந்து சொல்லும் அன்னை அவள் உனக்கு இல்லாமல் போனது வருத்தமே ! !