நட்பிற்கே நீ ஒரு படைப்பாளி

 கவியரசனின் பிறந்த நாளில் எந்தன் படைப்பாளிக்கான படைப்பு

அவன் தூரிகையில் அவனது அவதாராம்

Image

தன் எழுத்துக்களால்

அனைவரையும்

ஆட்கொள்வான்

(ஆட்கொல்வானும்)இவன்

தனக்கு தானே

புனை பெயர் சூட்டிக்

கொண்டான்

எழுத்திலும் வல்லவன் தான்

எழுத்துகலன் மட்டுமல்ல

தூரிகையிலும்

தூதுவிடுவான் இவன்

தேவதைகளும், தாரகைகளுடன்

போட்டிப் போடுவார்கள்,

அவன் தூரிகை

தங்களிடம் பேசவேண்டும் என்று

தேவதைகளும் தோற்று போவர்

இவன் தூரிகை பேசிய

எம்குலப் பெண்களின்

படைப்புகளில்

இவனது படைப்புகளில்

கருத்து தெரிந்தால்

காமம் இல்லை,

காமம் என்றாலும்

வார்த்தைகளால்

விளையாடுவான்

அவனது எழுத்துக்களை

வாசிக்குமுன் உதடுகளில்

புன்னகை

அவனோடு சண்டையிடும்போது

மனதில் புன்னகை

எளியவருக்கு அன்பானவன்

ஏழைகளின் நண்பன்

படித்தாரி தான்

ஆனால் கபடதாரி அல்ல,

அன்பானவர்கள் அனைவருக்கு

இவன் படைப்பாளி

பல படைப்புகளுக்கு உன்னோடு சண்டை போட்டதுண்டு அது தூய நட்பின் நம்பிக்கையில். பல படைப்புகளில் உன்னால் எனது அறிவுக்கும் உணர்வுக்கும் சண்டை வந்ததும் உண்டு. ஆயினும் என்னைவிட்டு பிரிய விடாமல், அந்த திராவிடனாக (விடாது கருப்பு) என்று என் கரம் பிடித்து உன் நட்பில் என்னை அழைத்துச் செல்லும் அழகை ஆராதிக்கிறேன்.

என் வாழ் நாள் உள்ள வரை என் இதய துடிப்புகள் உனக்கு நன்றிகள் சொல்லும் உன் அன்பான அறிமுகத்திற்கு…. என் வாழ்க்கையில் நீயும் ஒரு பிரம்மனாகவே இருக்கிறாய் பல அறிமுகத்தில். எதற்கு என்று நான் சொல்ல வேண்டாம், அந்த கடவுளின் (பாலாஜி) பெயரால் நன்றிக் கடன்களுடன் நம் பயணம் தொடரும்…… இன்று போல் என்றும் வாழ்க….. வாழ்க வளமுடன்.,

 

என்றும் உன்னுடன்

 சீற்றத்தில் சீதையாகவே

Advertisements

2 thoughts on “நட்பிற்கே நீ ஒரு படைப்பாளி

 1. காதலுக்குள்தான் ஊடலும், கூடலும் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை..நட்புக்குள்ளும் அது உண்டு என நயமாக உணர்த்தியவள் நீ..
  சீற்றத்தில் சீதையாகி, பழகுவதில் பேதையாகும் குழந்தை மனதுக்காரி நீ..
  எத்துனை தூரத்தில் நீ இருந்தாலும், அத்துணை அருகாமையில் உள்ளதுபோல் பேசும் பாசக்காரி நீ..
  படைப்பாளிக்கும், என் அத்தை பாசக்காரிக்கும் சண்டை வரும் போகும்..
  அன்பு என்றும் நிலைத்திருக்கும்..
  நன்றி…

  • உன் அன்பினில் என் இதயம் நிறைந்தது, கண்கள் நனைந்தன, உதடுகள் சிரித்தது….
   உனக்கும் எனக்குமான அன்பு கடல்களை கடக்க வல்லது நண்பா…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s