Yazhini-Part3

போறாளே பொன்னுதாயி” காலம் சென்ற சுவர்ணலதா பாடிய பாடல், அவருக்கு தேசிய விருது பெற்று தந்த பாடல். இதனால் தானோ இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் இவளை தேசிய விருது பெற்றவர் என்று பாராட்டுகிறார்கள்.

அன்னியன் திரைப்படத்திலிருந்து வரும், ரெமொ, காதல் யானை வருகிறது பாடலை இந்த செல்ல குட்டி பிசாசு பிச்சி உதறியது. இத்தனை சிறிய உருவத்திலிருந்து எத்தனை பிரம்மாண்டமான குரல். சீயான் விக்ரம், ரெமோ ஸ்டைலில் ஒரு முத்தம் கொடுத்தாலும், சீயான் ஸ்டைலில் ஒரு ஒலே போட்டது அருமை….

”பழம் நீயப்பா, ஞான பழம் நீயப்பா” என்று கே.பி.சுந்தராம்பாள் பாடிய விதம் ஆஹா ஓஹோ என்று புகழ வேண்டும், எனக்கு வார்த்தைகளுக்கு பஞ்சமாகிவிட்டது. உன்னால் மாலதியின் பாடல்களை பாட முடிந்தது என்று நினைத்து சந்தோசப் பட்டேன், நீயோ என்னால் கே.பி.எஸ் பாடலையும் பாட முடியும் என்று உணர்த்தினாய். இதை விட ஒரு அருமையான பாடல் உன்னால் அந்த சுற்றில் கொடுத்து இருக்க முடியாது, இதனோடு போட்டி போட வேறு பாடலும் இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பாடலை அங்கு நடுவர்களாக இருக்கும் பலரால் பாட முடியுமா என்பதை நினைத்துப் பார்த்தாள், உனக்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் கொடுத்திருப்பார்கள். (10க்கு 15 மதிப்பெண்)

ப்ரீ ஃபைனல்ஸில் பாடிய பாடல்களில் மன்மத ராசாவை பாடி எல்லோரையும் ஆட்டம் போட வைத்த அசத்தியவள் ஒரு அமைதியான பாடலான  ”உறவுகள் தொடர்கதை” பாடிஆச்சர்யத்தில் ஆழ்த்தியவள்.

இது உனக்கும் எங்களுக்குமான உறவு தொடரும் கதை, விஜய் டிவியுடனான உறவு முடியலாம், ஆனாலும், எங்களுடனான உறவு தொடரும்….

ஒரு மாதம் விடுமுறையில் சென்னையில் தனிமையான நிலைமையில் எப்படி இருப்பேன் என்ற கலக்கத்தோடு தான் வந்தேன், ஆனால் துனையாக யாழினி இருக்கிறாள். இந்த ஒரு மாத காலத்தில் என்னோடு குறைந்தது ஐந்து மணி நேரமாவது என்னுடய கம்ப்யூட்டரில் பாடியபடி இருந்தவள் இந்த யாழினி மட்டுமே. தனிமை மிகவும் இனிமை, இந்த அழகி, இதயத்தைற்கு இதமாக வருடுவதால்.

நல்ல திறமையுள்ளவர்களுக்கு, நேரம் நன்றாக அமைந்தால் தேசிய விருது என்ன அதையும் தாண்டி சர்வ தேச அளவில் விருதுகள் உனக்கு கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கௌதமின் ”உள்ளாத்தில் நல்ல உள்ளம்” பாடலுக்கு கண் கலங்கியவள் தான், ஆனாலும், என்னமோ உனது பாடல்களில் மயங்கியது போல் இவனது மற்ற பாடல்களுக்கு மயங்கவில்லை. நல்ல குரல் வளம் உள்ளது, மக்களை கவரும் பாடல்களை தரவில்லையோ என்ற ஒரு சிறு எண்ணம் என் மனதினில்.

ஆஜித் – யாழினி செல்ல மகள் என்றாள் ஆஜித் செல்ல மகன் தான், ஆனாலும், மகளிடம் போட்டி போடும் அளவில் ஆஜித் இல்லை. ஏன் எனில் பாடல்கள் தேர்வுகள் தான் காரணம். இன்னும் கொஞ்சம் பழைய பாடல்கள் பாடினால் மட்டுமே இந்த மகன், சூப்பர் சிங்கர் என்று சொல்ல முடியும். நீ பாடிய அனைத்து பாடல்களும், அனைவரையும் கவரும் வகையில் இல்லை. ஆஜித் – உன்னால் பிரகாசமாக வரமுடியும், இன்னும் கொஞ்சம் முயற்சி தேவை, பாடல்கள் தேர்வில் கவனம் தேவை.

சுகன்யா, பிரகதி இருவரும், உங்களுடன் போட்டிப் போட்டால் அது அவர்களுக்கு அழகு இல்லை. மேலும் நான் இவர்கள் பாடிய பாடல்களை அவ்வளவாக ரசித்தது இல்லை. வாணி ஜெயராம் பாடிய பாடல்களை இவர்கள் பாடிய போது என் மனதில் இவர்கள் சோபிக்கவில்லை. சுமார் என்றே தோன்றியது. இது என்னுடைய கருத்து மட்டுமே.

செஃபியின் போறாளே போறாளே என்ற பாடல் வாகை சூடவா வாவ், அருமையாக பாடினாள். இவளது பிற பாடல்களைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது.

யாழினியின் முதல் ப்ளஸ் பாயிண்ட், அவளது நம்பிக்கை, தைரியம், குரல் என்று ஏகத்திற்கு சொல்லலாம், ஆனாலும் இவை அனைத்திலிருந்தும் மேலோங்கி இருப்பது அவளுக்காக தேர்வு செய்த பாடல்கள்….

உன்னுடைய அம்மா சொல்வது போல நீ ஒரு தெய்வ குழந்தைதான், எங்கள் அனைவரது இல்லத்திலும் நீ ஒரு செல்லக் குழந்தை தான்.

நல்லதொரு நிகழ்ச்சியினை நடததிவரும் விஜய் டிவியினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எத்தனை கலைஞர்களை உருவாக்குகிறீர்கள் என்பது முக்கியமில்லை ஆனாலும் தரமானாவர்களும், திறமை மிக்கவர்கள் சிலரும் ஓரம்கட்டப்பட்டனர்.

மிகவும் அருமை அதிலும் இந்த சுட்டிக் குழந்தையை வளர்ச்சியில் உங்களது பங்கு அதிகம் அதற்காக எனது நன்றி.. ஆனாலும் உங்களது ஃபைனல் தேர்வுகள் இதுவரை நியாயமாக இருந்ததாக மக்களுக்குத் தெரியவில்லை.

யாழினி – உன்னுடைய மன தைரியத்தை எப்படி சொல்வது, என்ன என்று சொல்வது? செமிஃபனல்ஸிலிருந்து வெளியேறிய போது வருத்தமில்லை, இதுவரை நான் வந்தது எனக்கு சந்தோசம் என்று சொல்லும் அந்த துணிவு இந்த சிறிய பெண்ணிற்குள் எப்படி வந்தது? வேறு யாருக்காவது, இந்த மகுடம் சூட்டப்பட்டால், நீ கலங்கமாட்டாய் கண்ணே, ஆனால் உனக்காக எங்கள் கண்களில் கண்ணீர் இருக்கும்…

சுட்டி பெண்ணே, மகளாக கருதுவதால் உன்னை வணங்காமல், வாழ்த்துகிறேன். இறுதிப் போட்டி என்று இலக்கு இல்லாமல் அனைவரையும் அசத்திவிடு ! ! ! உனக்கு கடவுளின் அன்பும், ஆசிர்வாதமும் என்னைப் போன்று பல லட்ச மக்களின் மனமும் உன்னுடன் இருப்பதால், கலக்குவாய் என்ற நம்பிக்கையுடன் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறேன். பரிசு என்பதைவிட, நம்பர் 1 என்பதைவிட எத்தனை இதயங்கள் உன்னை நேசிக்கின்றன இந்த விஜய் டிவியின் மூலமாக என்று மட்டும் நினைத்துக் கொள். எங்களுக்கு என்றுமே நீ தான் நம்பர் 1

Advertisements
This entry was posted on October 24, 2012, in General. Bookmark the permalink.