தத்துப் பிள்ளை
இரு உடல்களின்
சங்கமத்தில்
உருவாகியிருந்தால்
எந்தன் உருவமாகவே
இருந்து இருப்பாய்
இது உணர்வுகளில்
பிறந்ததால், என்
உயிரோடு கலந்தாயோ?
நான் உனக்கு
உயிர் கொடுக்கவில்லை
மாறினாய் நீ எனது உயிராக….
உன்னை என் கருவினில்
சுமந்திருந்தால்
பத்து மாதம் மட்டுமே
சுமந்து இருப்பேன்
உன்னை
மனதினில் சுமப்பதால்
அன்பே என்
அந்திம நேரம் வரை…
Advertisements
நெஞ்சை தொடும் அற்புதமான வரிகள் ….
நண்பா,
ஏதோ நான் கிறுக்குவதை
ரசிப்பதற்கும் நீங்க ஒரு ஆள்
இருக்கீங்க என்ற நம்பிக்கை தான்…..
superb one
Only those who knows the feelings of it, can feel it as good one and I am really impressed my dear….