வைதேகி16

வைதேகியிடம் ஒன்பது பெண்களைப் பார்த்ததும், அவர்களைப் பிடிக்க வில்லை என்ற காரணத்தையும் சொல்ல வேண்டும் என்று பல நாட்களாக நினைத்தும் அவனால் சொல்ல முடியவில்லை. இன்று எப்படியாவது சொல்ல வேண்டும் என்று முடிவோடு இருந்தான்.

வைதேகி, நான் உன்னை பத்தாவது பெண்ணாக பார்த்தது. மேலும் பார்த்த அத்தனைப் பெண்களையும் நான் வேண்டாம் என்று சொன்னேன் என்றும் உனக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதுக்கு இப்போ என்ன என்றாள். ஒன்னும் இல்லை ஆனாலும் உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லனும். என்னமோ தெரியலை, உன்னைப் பார்த்ததும் பிடிச்சிடுச்சி, நான் வேறு எதுவும் யோசிக்கவில்லை என்றான். ஒன்றும் புரியாமல் விழித்தாள் வைதேகி. என்ன சொல்றீங்கனு எனக்கு சுத்தமா புரியலை. சுத்தி வளைக்காமல் நேரடியாக சொல்லுங்களேன் என்றாள் ராக்வ்விடம்.

வைதேகி நான் உன்கிட்டே மயங்கிட்டேன்னு சொல்றேன் புரியாத மாதிரி கேட்கிறே, என்ன என் வாயால் நான் சொல்லுவதைக் கேட்கனும்னா என்று அவன் சொன்னதில் பூரித்து தான் போனாள். சொர்க்கமே தன் காலடியில் இருப்பது போல தான் உணர்ந்தாள். இருந்தாலும் ராகவிடம் எனக்கு தான் தெரியுமே உங்களுக்கு என்னைப் பார்த்தவுடன் பிடித்தது என்று. அதற்கு இப்போ என்ன? என்ன சொல்லனுமோ அதை சீக்கிரமா சொல்லுங்களேன் என்று சினுங்கினாள்.

வைதேகி ஒன்பது பெண்களை நான் பார்த்தேன் பிடிக்கலைனு சொன்னேனு மட்டும் தான் உனக்கு தெரிந்து இருக்கும். நான் பார்த்த பெண்களில் ஒருவர் கூடவா சுமாராக இல்லாமல் இருந்து இருப்பார்கள். இல்லை அப்படி என்ன எதிர்பார்த்தேன் என்று எப்போதாவது யோசித்து இருக்கிறாயா என்றான். அவளோ சாதாரணமாக இதில் என்ன யோசிக்க இருக்கு இது எல்லாம் மனது சம்பந்தபட்டது. நான் எப்படி ஆராய்ச்சி பண்ண முடியும் என்றாள்.

சரி ஏன் அவர்களை பிடிக்கலைனு கேட்க மாட்டேன் ஏன் என்னை பிடிச்சதுனு வேணும்னா அதைச் சொல்லுங்கோ என்றாள் கொஞ்சலாக. வைதேகி உன்னை எனக்கு மிகவும் பிடித்த காரணத்தினால் என் ஆசை, லட்சியம், கனவு என்று இருந்த விஷயத்தைக் கூட உன்னிடம் சொல்லாமல் உன்னோடு நிச்சயம் வரை வந்து விட்டது. இன்னும் ஒரிரு நாளில் நமக்கு கல்யாண தேதியும் தெரிந்து விடும்.

கல்யாணத்திற்கு அப்புறம் தான் உன்கிட்டே சொல்லனும்னு இருந்தேன், ஆனால் நீ என் மேல வைச்சிருக்கிற நம்பிக்கையும், உன்னோட முடிவில் எந்த மாற்றமும் இருக்காதுனுதான்,  உன்கிட்டே இப்பவே என் மனசில இருக்கிறதைச் சொல்லனும்னு தோன்றது என்றான் ராகவ். அதனால் தான் நிச்சயதார்தத்திற்கு முன்னாலயே நான் உன்னிடம் சொல்ல பிரியப்படறேன்.

ஒன்னும் பெரிசா இல்லைமா பயபடாதே ஒரு லைன்ல சொல்லிடுறேன், உனக்கானவன் உனக்கு மட்டுமே தான். எனக்கு ஒரு சின்ன ஆசை, படிக்கிற காலத்தில் ஆழமா  மனசில விழுந்தது. கல்யாணத்திற்கு அப்புறமா ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்க்னும் என்று வேற ஒன்னும் இல்லை. நமக்குனு ஒரு குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடி அதைச் செய்யனும் என்று தான் என்றான்.  ஏன் எனக்கு இப்படி ஒரு ஆசை என்று எல்லாம் தெரியாது. ஏதோ படித்தபோது மனசில எழுந்த ஆசை. அது ஆலம் விருட்சம் போல என்னுள் ஊறிடுத்து.

உன்னோட விருப்பமும் தெரிஞ்சா எனக்கு ரொம்பவும் சந்தோசமா இருக்கும். உனக்கு பிடிக்கலைனு சொன்னால் நானும் என் கனவுகளை அப்படியே புதைச்சிடுறேன் வைதேகி. என்னோட வைதேகிக்காக இதை நான் மாத்திக்கறேன் என்று சொன்னவனை கொஞ்சம் கர்வத்தோடு பார்த்தாள். இதுக்கு எதுக்கு இத்தனை பீடிகை போட்டீங்கனு எனக்கு தெரியலை, இது நல்ல விஷயம் தானே என்று கேட்டவுடன் தான் ராகவ் முகத்தில் சிரிப்பே வந்தது.

வைதேகி 9 பெண்களை நான் வேண்டாம்னு சொல்லலை, அவங்க தான் என்னை வேண்டாம்னு சொன்னது. இந்த விஷயத்தை நான் அந்த பெண்களை பார்க்க போன போதே சொல்லிடுவேன், அவாளும் கேட்டுட்டு நல்ல விஷயம் தான் ஆனால் சாரினு ஒரு வார்த்தையில அவளோட மனசை சொல்லிடுவா. என்னமோ உன்கிட்டே எனக்கு கேட்கனும்னு தோனலை, இப்பவும் உனக்கு விருப்பமில்லைனு சொன்னா நான் அதை மாத்திக்க ரெடியா இருக்கேன் என்றான்.

வேற ஒரு விஷயமும் என்னோட  மனசில இல்லை. நமக்கு குழந்தைகள் வேண்டாம்னு சொல்லலை. அந்த பொண்கள் எல்லாம் என்னை வேற மாதிரி நினைச்சு தான் என்னை வேண்டாம்னு சொல்லி இருப்பாங்க. அப்படி எதுவும் எனக்கு குறை இல்லை.

வாழ்க்கையில் மொத்தமும் ஒரு சுய நல நோக்குடன் தான் போகும், என் அம்மா, அப்பா, உடன் பிறப்புகள், மனைவி, மக்கள்னு, ஏதோ கொஞ்சம் சமுதாயத்திற்காக பார்க்கலாமேனு.

பிறப்பால் யாரும் அனாதைகள் இல்லை, ஏதோ சமய சந்தர்ப்பத்தால் அவர்கள் அனாதைகளாக்க படுகிறார்கள். ஒரு பிள்ளையை வளர்ப்பதால் அந்த சமுதாயம் இல்லை என்ற நிலை வரபோறதில்லை, ஆனால் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். நான் இந்த சுய நல வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு ஒரு குழந்தையை அதையும் எனதாக்கி சுய நல வட்ட்த்திற்குள் வரவேண்டும் என்று தான். நீ நல்லா யோசிச்சுட்டு சொல்லுமா எதுவும் அவசரம் இல்லை. நான் எதுக்கும் ரெடியா தான் இருக்கேன். நீ வேண்டாம்னு சொன்னால் அதுக்காக நான் உன்னை வேண்டாம்னு சொல்ல மாட்டேன். இது நான் மட்டும் ஆசைபட்டால் நடக்கிற விஷயமில்லை வைதேகி. அப்பாவா நான் என்ன செய்தாலும் அம்மாவோட அன்பு கிடைக்கலைனா அது அனாதை தான். அந்த தண்டனையை நான் என் பிள்ளைக்கு தரவிரும்பலை மா. உனக்கு முழுசா சம்மதம்னா மட்டும் நாம ஒரு குழந்தையை தத்து எடுப்போம். சரியா. உனக்கு இஷ்டம் இல்லைனா இந்த ஆசையை அப்படியே மறந்துடுவோம், எனக்கு நீ வேண்டும் என்பது மட்டுமில்லை, உன்னோட அன்பு அந்தக் குழந்தைக்கும் முழுசா தரமுடியனும்.

இப்போ அவசரம் இல்லை நம்ம கல்யாணம் ஆனாவுடன் சொன்னால் போதும் என்று சொல்லி மனசில் இருந்த பாரம் குறைந்தவனாய் பெருமூச்சுவிட்டு உட்கார்ந்தான். வைதேகியோ அவன் அருகே வந்து ஒரு நேசத்தோடு அவன் தலைகோதி உச்சந்தலையில் ஒரு முத்தம் கொடுத்து அவனை அதிரச் செய்தாள். அவன் அவள் முகத்தைப் பார்க்கவும் வெட்கத்தோடு நானி கோனி உள்ளே ஓடினாள்.

ஹே வைதேகி, நான் கிளம்பறேன், இப்போ வெளியே வரபோகிறயா இல்லையா? என்றான். வைதேகியும் வேகமாக வந்தாள், ஒரு காபி சாப்பிட்டு போறீங்களா என்று கேட்டாள். வைதேகி அந்த காபியைவிட சுவையான ஒன்னு கொடுத்தியே அதை நெற்றியிலிருந்து கொஞ்சம் கீழே இறக்கி இதழில் கொடுத்து இருந்தாள், இரண்டு நாளைக்கு எதுவுமே சாப்பிடாம இருந்திருப்பேன் என்றான். அவளோ சீ போங்க என்றாள். சரி சரி இப்போ போலாமா என்றான்? ஒரு ஐந்து நிமிஷம் கொடுங்கோ நான் ரெடி ஆகிட்டு  வறேன் என்றாள்.

வைதேகி சொன்னபடி ஐந்து நிமிடத்தில் வரவும், எந்த கடைக்கு போகலாம்னு சொல்லு வைதேகி என்று கேட்டபடியே, அவளோடு கிளம்பினான் ராகவ். எந்த கடையில் வாங்கினால் உங்களுக்கு பிடிக்குமோ அந்த கடைக்கு போகலாம். சர் வா இங்க பக்கத்திலயே ஒரு கடை பார்த்தேன், அங்கேயே வாங்கிடலாம். ரெடிமேட் தான் வாங்குவேன் அதனால எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அது கொஞ்சம் நல்ல கடையா தான் இருந்த்து என்றான்.

அந்த கடையில் கூட்டம் அவ்வளவா இல்லாமல் இருந்தது, வைதேகி அவனிடம், கூட்டமே இல்லையே வேற கடைக்கு போகலாமா என்றாள்? நல்ல கடை தான் மா, இந்த நேரத்தில கூட்டம் இருக்காது. நாம இங்கயே வாங்கிண்டு உன்னை விட்டுவிட்டு நான் போய் அந்த பிசாசைப் பற்றி விசாரிக்கனும்.

அவர்கள் இருவரும் ஒரு நீல நிற ஷர்டையும், அதற்கு தோதாக ஒரு பேண்ட்டையும் வாங்கிக் கொண்டு வெளியில் வரும் நேரம், வைதேகி ஒரு வெள்ளை கலர் ஷர்ட்டும் வாங்கிக்கலாமா என்றாள். எதற்கு வைதேகி இது போதுமே என்றாள். இல்லை வேஷ்டியுடன் போட்டுக்க வெள்ளை கலர் நல்லா இருக்கும்னு தோனித்து அதான் என்றாள். இது போதும் வா என்று சொல்லி அவளை வீட்டில் விட்டுவிட்டு அவன் தன் நண்பனை பார்க்க கிளம்பினான். பார்த்து போங்க என்ன ஏதுனு ஒரு ஃபோன் செய்யறேளா என்று கேட்கவும், கவலைப்படாதே ஃபோன் பண்றேன் என்று சொல்லிக் கிளம்பினான்……

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s