வைதேகி15

அம்மா என்ன சமையல் என்று கேட்டபடி கிச்சனுக்குள் நுழைந்தான். என்னடா வேணும் உனக்கு, ஏதாவது வேலை ஆகனுமா கிச்சனுக்கு வரமாட்டியே என்றாள். அதேல்லாம் ஒன்னுமில்லைமா வைதேகியைப் பார்க்க போறேன், சாப்பிட்டு போனா அவளோட ஓட்டலில் சாப்பிட முடியாதே என்ன சமையல்னு கேட்ட்டேன் என்றான்.

என்னடா அப்பவே சொல்லக்கூடாதா, உனக்கு பிடிக்குமே வீட்டிலும் இருக்கியேனு பருப்பு உசிலி பண்ணினேன், வைதேகிக்கும் கொஞ்சம் கொண்டு போய் கொடுக்கிறியா என்ன டா என்றாள்?

அம்மா சரி எனக்கு தட்டு வை, நான் சாப்பிட்டு போறேன். அவளும் சாப்பிட்டு இருப்பாள் என்று தான் நினைக்கிறேன். எப்படியும் 2 மணி வரை சாப்பிடமால் இருக்க மாட்டானு நினைக்கிறேன்.

சாப்பிட்டு முடித்து, அம்மா வாவ் எப்படி தான் நீ ஒரே டேஸ்ட்ல எப்பவும் பண்றியோனு தெரியலை என்றான். அம்மா வைதேகிக்கு சமையல் தெரிய சான்ஸ் இல்லை, நீ அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக் குடுத்திடுமா என்றான் அம்மாவை அனைத்தபடியே.

வைதேகிக்குஃபோன் செய்து, தான் கிளம்புவதாக சொல்லியபின், தன் அம்மாவிடம் சரி மா நான் கிளம்பறேன், கார் தான் கொண்டு போறேன். டின்னர் சாப்பிட வந்துடுவேன் என்று சொல்லி கிளம்பினான்.

வைதேகியும் அலுவலக வேலைகளை முடித்து, தன் சினேகிதியிடம் சொல்லிவிட்டு அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அவள் அலுவலகத்தின் வெளியில் வரவும், ராகவ்வும் காருடன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

வைதேகி காரில் ஏறியவுடன் கிளப்பினான். இரண்டு நிமிடம் இருவரும் எதுவும் பேசாமல் தான் இருந்தனர். பிறகு ராகவ் தான், ரொம்பவும் நெரிசலா இருக்கு. ஹே ஏதாவது லஞ்ச் சாப்ட்டியா? சாரி கொஞ்சம் லேட்டா கேட்டுட்டேன். அம்மா பருப்பு உசிலா பண்ணினா உனக்கும் கொண்டு போக சொன்னாள் நான் தான் மறந்துட்டேன்.

என்ன வைதேகி ரொம்ப அமைதியா இருக்கே என்றான். என்ன பேசறதுனு யோசித்து கொண்டு இருந்தே அதான் எதுவும் சொல்லலை. சாரி நானும் சாப்பிட்டுட்டேன். எப்படி டிஸ்டர்ப் ஆகியிருக்கோம்னு இப்போ புரியறதா உங்களுக்கு என்றாள். என்ன சொல்றே என்று அவன் கேட்கவும், உங்க முகத்தை பாருங்க நேத்திக்கு எப்படி இருந்தீங்க இப்போ எப்படி இருக்கு தெரியுமா? அதை தான் சொன்னேன்.

வைதேகி கவலை எனக்கும் இருக்கு, ஆனால் நீ நினைக்கிறா மாதிரி இல்லை. உனக்கு இருக்கிற பயத்தை எப்படி போக்குவதுன்னு கவலை தான் எனக்கு. நான் அவளைப் பற்றி கண்டு பிடிச்சுடுவேன். இப்பவே பண்ணனுமா இல்லை நம்மளோட நிச்சயத்திற்கு பிறகு பார்த்துக்கலாமா என்று தான் யோசிக்கிறேன். வேற ஒன்னுமில்லை. நான் தான் உன்கூட இருக்கேன்ல என்ன கவலை உனக்கு என்று அவள் கையை அழுத்தமாக பிடித்தான். கொஞ்சம் சமாதானம் ஆனது போல் தான் இருந்தது.

வைதேகி உன்னை வீட்டில விட்டுவிட்டு நான் ஒரு நண்பனை பார்க்க போறேன். போயிட்டு வந்து உன்னை பிக்கப் பண்றேன். ஓகே தானே என்றான்.

வைதேகி எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள். மொதல்ல வீட்டுக்கு போகலாம், அதுக்கு அப்புறம் பேசிக்கலாமே என்றாள். என்ன வைதேகி என் மேல கோபமா இருக்கியோ என்றான் ராகவ். கோபமா இல்லையே எதுக்கு கோபம், இது இயலாமை. என்ன பண்றதுனு தெரியலை. உங்ககூட பேசறது கனவா, கற்பனையானு தெரியலை, நிஜமா, நிதர்சனமா? இது சாஸ்வதமானு கூட தெரியலை. என்ன பேசறதுன்னும் புரியலை.

வைதேகி என்ன சொல்றதுன்னு புரியலை. உன்னை மாதிரி தான் நானும் கவலைல இருக்கேன். என் முகத்தைப் பாரு எவ்வளவு அழகா மீசைலாம் வச்சிருக்கேன், அழ முடியுமா, இல்லை உன் முன்னாடி பயப்படத்தான் முடியுமா சொல்லு மா. பயம் இருக்கு தான் இல்லைனு சொல்லலை, அதுக்காக நான் வருத்தமா இல்லை. என்ன பண்றதுன்னு மட்டும் தான் யோசிக்கிறேன்.

எது எப்படியோ வைதேகி எனக்கு உன்னோட இருக்கிற இந்த நேரத்தில பயம், கவலைனு எதுவும் இல்லாமல் இருக்க மட்டும் தான் ஆசை. இந்த நொடி மட்டும் தான் நம்மளோடது, இப்போ இருக்கிற நிலைமையில இது மட்டும் தான் நமக்கு சாஸ்வதம் என்று தோன்றது. இது மட்டும் தான் எனக்கு நிஜம்னு தெரியுது.

எதுக்காக முகத்தை தூக்கி வச்சிண்டு உன்னை நீயே கவலைல கொண்டு போறே. என்கிட்டே சொல்லிட்டேல விடு. நான் பார்த்துக்கிறேன். நல்லதோ கெட்டதோ உன்னை நெருங்க விடாமல் இதை நான் பார்த்துக்கிறேன். எல்லாம் என் தலைல போடு. நீ அமைதியா எப்பவும் என்னோட அழகான வைதேகியா இருக்கனும்.

நேற்று எப்படி இருந்தாயோ அதே மாதிரி எனக்கு நீ இன்றும் என்றும் இருக்கனும் அதுக்காக எதை வேனும்னாலும் தருவேன், என் உயிர் தவிர. ஏதேதோ பேசியே அவர்கள் வீடு வந்து சேர்ந்தனர். சரி வைதேகி நீ போ நான் வந்து உன்னை பிக்கப் பண்றேன் என்றான்.

உள்ளே வாங்க வந்து எங்க போறீங்க, என்ன பண்ணபோறீங்கனு சொல்லிட்டு போங்க. எனக்கு உங்களை வெளியில் அனுப்பவே பயமா இருக்கு என்றாள். சரி வரேன் வைதேகி. வைதேகி அத்தனை பிரியமா என்மேல?

வீடு பூட்டியிருந்தது, சாவியை எடுத்து திறந்து, உள்ளே சென்று ஃபேனைப் போட்டு பின் ஜன்னல் கதவுகளை திறந்தாள். ஐஸ் வாட்டர் வேனுமா இல்லை நார்மல் வாட்டர் போதுமா என்று கேட்டாள். கொஞ்சம் லைம் ஜூஸ் தரட்டுமா என்றாள்.

சில்லுனு லைம் ஜூஸ் தா. உனக்கும் கொஞ்சம் குறையும் என்றான் ராகவ். என்ன எனக்கு ரொம்ப பைத்தியமா?? நான் தெளியும்னு சொல்லலையே, குறையும்னு தானே சொன்னேன். உன்னோட டென்ஷன் குறையும். மண்டை சூடு குறையும்னு அர்த்தம். வேற ஒன்னுமில்லை டீ சரியா.

வைதேகி நீ ஜூஸ் கொண்டு வா, உன்கிட்ட இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும், ஆனால் அதை நீ எப்படி எடுத்துக்க போறே என்று எனக்கு தெரியாது என்றான். பெண் புத்தி பின் புத்தியாயிற்றே, அய்யோ இவன் என்ன பீடிகைலாம் போடறான். அப்படியே போகிறேன் என்று சொன்னவனை வீட்டிற்குள் அழைத்தது  தவறோ என்று யோசித்தவாறே கிச்சனுக்குள் எலுமிச்சையோடு போனாள் வைதேகி.

இரண்டு கையிலும் க்ளாஸ் தம்ளர்களுடன் வந்தாள். வந்தவுடன் அவனை பேசவிடாமல், எங்கே போக போறீங்க என்றாள். என்ன வைதேகி உன்கிட்டே பேசனும் என்றேன் கையில் ஜூஸ் கொடுத்து எப்போ போறீங்கனு கேட்கிறே என்று பாவமாக கேட்டான்.

அய்யோ அப்படி எதுவும் இல்லை, எங்கேயோ போயிட்டு வறேன்னு சொன்னீங்களேனு கேட்டேன் என்றாள். சரி நீங்க என்னமோ பேசனும்னு சொன்னீங்களே  அது என்ன மொதல்ல சொல்லுங்க அப்புறம் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க என்றாள்.

நான் சொல்ல வந்ததை அப்புறமா பேசிக்கலாம். என்னோட ஃப்ர்ண்ட்ஸ் சிலரோட விலாசங்களை எடுத்தேன். அவர்களைப் போய் பார்த்து, லில்லியைப் பத்தி விசாரிக்கலாம்னு இருக்கேன். ஏதாவது உபயோகமா கிடைச்சாக்க நல்லா இருக்கும்.

நானும் உங்களோட வரட்டுமா என்றாள் வைதேகி வேகமாக, நானே அவங்களை எல்லாம் பல வருஷம் கழிச்சு பார்க்க போறேன். எப்படி இருக்குமோ, அங்க அவங்க இருக்காங்களோ இல்லையோ எதுவும் தெரியாது மா எதுக்கு நீ வேற வைதேகி. என்கூட வந்து எதுக்கு அலையனும், நீயே ரெஸ்ட் எடுக்க தானே லீவு போட்டே.

இல்லை தனியா நீங்க போக வேண்டாமேனு தான்னு சொன்னேன். என்ன வைதேகி உன்னோட பயம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கிற மாதிரி இருக்கு ஏன் அவ அப்படி உன்கிட்டே என்ன சொன்னா? என்னை கொன்னுடுவேன்னு மிரட்டினாளா என்று ராகவ் கேட்கவும், அவன் வாயைப் பொத்தினாள், அப்படி எதுவும் பேசாதீங்க, அவள் அப்படி சொல்லலை, ஆனாலும் அவ பேசினது கொஞ்சம் ரௌடித்தனமாக இருந்தது.

ஒரு பெண் அப்படி எதுவும் பண்ண மாட்டா வைதேகி. கவலை படாதே. இன்னைக்கு ஒரு நாள் நான் தனியா போகிறேன். வேற ஏதாவது சொல்றாளானு பார்ப்போம். எப்படியும் ரெண்டு மூணு நாளில் நான் அவளைப் பற்றி கண்டுபிடித்து விடுவேன் என்றான்.

சரி நீங்க ஜூஸ் குடிங்க, நான் ஃபேஸ் வாஷ் பண்ணிண்டு வறேன் என்றாள். இரு வைதேகி நான் இப்போ கிளம்ப போகிறேன். ஏதாவது உருப்படியா கிடைக்கனும்னு வேண்டிக்கோ. நான் வந்து உன்னை கூட்டிண்டு போகிறேன் சரியா என்றான்.

இந்த மூணு மணிக்கு உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரு வீட்டில இருப்பாங்க. நம்ம ஷாப்பிங்க் முடிச்சிட்டு அதுக்கு அப்புறம் நீங்க போனீங்கன்னா யாரையாவது பார்க்க முடியும்ல என்றாள்.

அதுவும் சரி தான். இன்னும் ஒரு மணி நேரத்தில நாம போகலாம், இருங்க நான் இப்ப வறேன் என்று பாத்ரூம் சென்றாள்.

வைதேகி உடைமாற்றி கொஞ்சம் தெளிவான முகமாக, கொஞ்சம் பவுடர் பூசியதில் மாற்ற முயற்சித்தாள். மேலும் ராகவ் சொன்ன சிரித்த, அழகு முகமாக என்று யோசித்து கொஞ்சம் வெற்றிக் கண்டாள். முன்பு போல் இல்லாமல் எப்பவும் போல சாதரணமாக வந்த அவளை பார்த்த ராகவ்வின் முகமும் சந்தோசமானது.

வாவ் என்ன இது வைதேகி எப்படி இந்த மாற்றம், கொஞ்ச நேரத்தில் என்று அவள் கையைப் பற்றி இழுத்தான். சற்றும் எதிர்பார்க்காத வைதேகி நிலை தடுமாறி, அய்யோ என்று கத்தி, அவன் மேல்  விழுந்தாள். ஹே சாரி வைதேகி ஏதோ ஒரு உற்சாகத்தில் அப்படி இழுத்துவிட்டேன். இப்படி கத்தாதே, யாராவது தப்பா நினைச்சுக்க போறாங்க என்றான். சாரி நான் கொஞ்சம் சத்தமா கத்திட்டேன்ல என்று வைதேகி வழிந்தாள்.

வைதேகி நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லனும். உன்னைப் பெண் பார்க்க வந்த நேரத்தில் இருந்து இதைச் சொல்லனும்னு நினைக்கிறேன் ஆனால் என்னால சொல்ல முடியலை.

இன்னமும் வைதேகியிடம் தான் ஒன்பது பெண்களை பார்த்த விஷயமும் அவை அனைத்தும் கைகூடாத விஷயத்தைச் சொல்லாதது என்னமோ போல் இருந்தது. இப்போதே சொல்லிவிடலாம் என்று யோசித்தான்…..

 

வைதேகி14

வைதேகி16

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s