வைதேகி14

லில்லி மிரட்டறது நிஜம், என்னால பயப்படாமல் இருக்க முடியாது இதுக்கு என்ன செய்ய போறீங்க? இதை இப்பவே வீட்ல சொல்லிடாலாமானு யோசிக்கிறேன் படபடப்புடன் வைதேகி சொல்லும் போது கொஞ்சம் ராகவ்க்கும் வயிற்றில் புளி கரைத்தது.

வைதேகி இதுவரை நீ யாரிடமும் சொல்லாமல் இருந்ததே பெரிய விஷயம் தான், இருந்தாலும் கொஞ்சம் யோசிக்கனும் வைதேகி, இந்த நேரத்தில நீ இப்போ இதை சொன்னா எல்லாரும் பயப்படுவாங்க, இந்த நிச்சயம் நிச்சயமா நிறுத்திடுவாங்கனு தான் தோன்றது. கொஞ்சம் அமைதியா இரு. இது கொஞ்சம் சென்சிட்டிவான விஷயம், ரொம்ப கேர்ஃபுல்லா தான் ஹண்டில் பண்ணனும். அவசர பட்டா நஷ்டம் நமக்கு தான்.

எனக்கு உன்னோட நிலமை புரியறது ஆனா எனக்கும் என்ன பண்றதுனு புரியலை. நான் இன்னைக்கு உன்னை பார்க்க வறேன் அப்போ என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணலாம். ப்ளீஸ் உன்னை ஆசுவாச படுத்திக்கோ மா.

வைதேகியோ எனக்கும் இதை வீட்டில் சொல்லனும்னு இல்லை, ஆனா நாளைக்கு ஏதாவது பிர்ச்சனைனு வரும்போது ஏன் இதை நீ அப்பவே சொல்லலைனு என்னோட அம்மா கேட்டா நான் என்ன பதில் சொல்றது? உண்மைய சொல்லனும்னா எனக்கு இப்போ உங்களை பார்க்க பயமா இருக்கு. லில்லி நம்மளை ரொம்ப நெருக்கமா வாட்ச் பண்றா. இன்னைக்கு நீங்க என்னை பார்க்க வேண்டாம். டிரெஸ் வாங்க ராஜேஷ் வருவான் அப்படி இல்லைனா, நீங்களே உங்களுக்கு செலக்ட் பண்ணிடுங்க.

என்ன வைதேகி இப்படி சொல்றே என்னை பார்க்க எதுக்கு பயப்படனும்? நான் என்ன உனக்கு வில்லன் மாதிரி தெரியறேனா? நான் எதுவும் தப்பு பண்ணலையே என்றான். நீங்க தப்பு பண்ணலை ஆனாலும் எதுவும் தப்பா நடந்துடக் கூடாதுனு பயப்படுறேன்.

நீங்க தப்பானவர்னா, டிரெஸ் வாங்க சொல்லி இருக்க மாட்டேனே. எனக்கு உங்களைப் பார்த்து அதனால மேலும் ஏதாவது வில்லங்கம் வந்துட்டா என்ன செய்றது என்று பாவமாக கேட்டாள்.

கவலை படாதே வைதேகி, எனக்கு உன்னைப் பார்க்கனும். என்னமோ என்னால உன்னை பார்க்கமா இருக்கிறது தப்புனு தோன்றது. லில்லி சும்மா மிரட்டறா.  நாம பயந்தா அவள் ஜெயிச்சுடுவா. எதுக்காக நான் உன்னை பார்க்காமல் இருக்கனும் சொல்லு என்றான்.

நான் ஐந்து மணிக்கு உன்னை ஆபிஸ்ல வந்து பிக்கப் பண்றேன். ராஜேஷ் வரலைனு எனக்கு ஏற்கனவே ஃபோன் பண்ணிச் சொல்லிட்டான், உன்னை அழைச்சுண்டு போகச் சொன்னான். எனக்கும் உனக்கும் கொஞ்சம் பேசி பழக சந்தர்ப்பம் கொடுத்து இருக்கான்.

வைதேகியோ இல்லை வேண்டாம், எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு அதான் இன்னும் இங்க இருக்கேன், இதை முடிச்சுட்டு நான் வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன் என்றாள். எனக்கு மனசே சரி இல்லை நீங்க மட்டும் வாங்கிடுங்கோ என்றாள் மிகவும் சீரியஸாக.

சரி நீ வீட்டுக்கு போமா, நான் உன்னை வீட்லேந்து பிக்கப் பண்றேன். அவ்வளவு தானே என்றான். இல்லைனா சொல்லு நான் ஆபிஸ்க்கு வறேன், வந்து உன்னோட உன் வீட்டல உன்னை விட்டுட்டு அப்புறமா நான் போய் வாங்கறேன்.

வைதேகி எத்தனை மணிக்கு நீ கிளம்பலாம்னு இருக்கே சொல்லு. நான் வறேன், எனக்கு உன்னை பார்க்கனும். நீ இப்படி இருந்தா உன்னோட அம்மா ஈசியா கண்டுபிடிச்சிடுவா. உன்னோட பயத்தை போக்கனும். உனக்கு பக்கத்தில நான் இருக்கேன்கிற அந்த உணர்வு வரனும். ஏன் உன்னை நீயே கன்ஃப்யூஸ் பண்ணிக்கிறே.

நேத்திக்கு எப்படி இருந்தே, அப்படியே இரு. எனக்கு நீ தான், உனக்கு நான் தான் இதை எந்த கொம்பனாலும் இனிமே மாத்தமுடியாது. எப்படி நான் உனக்கு என்னோட அன்பை புரிய வைக்கிறதுனு தெரியலை. ஏதோ என்னோட புண்ணியம் உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு, ஆனாலும் இந்த பயம் தேவை இல்லாததுனு தான் எனக்கு தோனுது.

வைதேகியோ ரொம்ப நேரமா பேசிண்டு இருக்கேன், நான் 2 மணிக்கு கிளம்பலாம்னு இருக்கேன். நீங்க வாங்க நேர்ல பேசிக்கலாம். கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு ஃபோன் பண்ணுங்கோ என்று சொல்லி இனைப்பினை துண்டித்தாள்.

இந்தப் பக்கம் ராகவ்வின் தந்தை என்னடா மகனே, இப்பவே இவ்வளவு நேரம் பேசறே. இன்னும் நாலு நாள் இருக்கு டா நிச்சயத்திற்கு. கொஞ்சம் பொருத்துக்கோ, இன்னும் கல்யாணத்துக்கு நாள் பார்க்கலை என்றார். அவரோடு சேர்ந்த அவரது மனைவியும் மேலும் அவனை கிண்டல் செய்ய என்னடா நீயே போய் தேதியும் குறிக்கனுமா இல்லை அதையாவது நாங்க செய்யலாமா என்றாள்.

மகன் எதையும் ரசிக்காததைக் கண்ட அவள், என்னப்பா ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு, வைதேகி என்ன சொன்னா, ஏதாவது பிர்ச்சனையா என்றான். எதுவும் பிர்ச்சனை இல்லை. அவளை மதியானம் பார்க்க போறேன், இன்னைக்கு எனக்கு டிரெஸ் வாங்க ரெண்டு பேரும் போக போறோம் மா. கொஞ்சம் நிச்சய்தார்த்த டென்ஷன் தான் வேற ஒன்னுமில்லை மா. அம்மா வேற எதுவும் இல்லை.

ராகவ் பயப்படாதே என்று வைதேகிக்கு சொன்னதை நினைத்துப் பார்த்தான். அவனது முகத்தினை கண்ணாடியில் பார்த்த அவனுக்கு அப்போது தான் தெரிந்தது, பயத்தில் அவன் முகம் வெளரி இருந்தது. இது ரொம்ப சீரியஸா தான் எடுக்கனும். எப்படி இந்த லில்லியின் இருப்பிடத்தைக் கண்டு பிடிப்பது என்று யோசித்தான்.

கல்லூரி நாட்களில் அவனது நட்பு வட்டம் மிக சுருங்கியது அதுவும் இப்போது சுத்தமாக சுருண்டது. தான் உண்டு தன் வீடுண்டுனு இருந்தவனுக்கு இது மாதிரி பிரச்சனைகள் மிகவும் பெரிதாகாவே தோன்றியது. என்ன செய்யலாம் என்று யோசித்தவன், ஸ்லாம் புக்கில் சில நட்புக்களை தேடி அவர்கள் மூலமாக லில்லியை பற்றி கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கலாம்னு தோன்றியது.

தன்னுடைய அறையில் இருந்த பரனை அடுக்குக்குள் இருக்கும் அட்டை பெட்டியை எடுப்பது என்று முடிவு செய்து அவனது அறைக்கு சென்றான்.

பெட்டியை எடுத்து அதிலிருந்த இப்போது அருகிலிருக்கும் நண்பர்களின் விவரங்களை குறித்துக் கொண்டான்.எப்படி இவர்கள் மூலமாக லில்லியைப் பற்றி தெரிந்துக் கொள்ள முடியும்னு நினைத்தான்.

யோசித்து யோசித்து தலைவலி தான் அதிகமானது. இவ என்ன பெண், என்ன மடத்தனமான காதல். அவளோட அப்படி எதுவும் நெருக்கமாக இருந்தது மாதிரி தெரியலையே. அவகூட பேசி இருக்கேன் அது ஒரு தப்பா? இவ ஏதாவது ஏடாகூடாமா செய்வாளோ. வைதேகிக்கு இவளால ஏதாவது ஆபத்து வருமா?? இல்லை எனக்கு ஏதாவது பிரச்சனை வருமா?

யார்கிட்டே இதை சொல்வது, ராஜேஷிடம் சொல்ல்லாமா எதுக்கு வைதேகியிடம் பேசியபின் இதை சொல்லலாம். கொஞ்சம் நேரம் அமைதியாக இருக்கனும் இப்போதைக்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அமைதியா இருக்கிறது தான் புத்திசாலி தனம்.

எல்லோருக்கும் நிச்சயம்,கல்யாணம் எப்படி சந்தோசமாக இருக்கிறது, எனக்கு மட்டும் ஏன் இப்படி நான் எந்த பாவமும் செய்யலையே. நல்லது மட்டும் தான் நினைச்சேன்.

வைதேகியை பார்க்க போகிறோம் என்றால் அவன் மிகவும் சந்தோசமாக துள்ளிக் குதித்து, எறும்பு போல சுறுசுறுப்பாக கிளம்புவான். இன்று என்னமோ எப்படி அவளைப் பார்ப்பது, எப்படி அவளுடன் பேசுவது, என்ன பேசுவது என்று யோசித்தே அவனது நேரம் போனது. ராகவ் சாப்பிட வாடா என்று அம்மா குரல் கேட்டு அவன் கிளம்ப ஆயத்தமானான்.

அம்மா என்ன சமையல் என்று கேட்டபடி கிச்சனுக்குள் நுழைந்தான். என்னடா வேணும் உனக்கு, ஏதாவது வேலை ஆகனுமா கிச்சனுக்கு வரமாட்டியே என்றாள். அதேல்லாம் ஒன்னுமில்லைமா வைதேகியைப் பார்க்க போறேன், சாப்பிட்டு போனா அவளோட ஓட்டலில் சாப்பிட முடியாதே என்ன சமையல்னு கேட்ட்டேன் என்றான்

வைதேகி13

வைதேகி15

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s