வைதேகி12

வாழ்க்கையின் ஓட்டம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல் இருவரும் கல்யாண கனவுகளின் பயனத்தில் இருந்தனர்.

கனவுகளில் இருந்து இருவரும் விடுபட்டது வைதேகியின் வீட்டு வாசலில் தான். என்ன அப்படியே இருக்கீங்க வாங்க உள்ளே வைதேகியின் குரல் கேட்டு தான் ராகவ் நிதர்சனத்திற்கே வந்தான். பத்து நிமிஷத்தில எனக்கு பல நூறு கற்பனைகள் வீடு வரைக்கும் வந்ததே தெரியலை.

வைதேகி அந்த புடவையை கொண்டு போய் உன் அம்மா கிட்டே காண்பிச்சுட்டு நான் திரும்ப எடுத்து போகிறேன் என ராகவ் அந்த பையை எடுத்து வர, அவள் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள். அவளைக் கண்டதும் பூரணி என்ன வைதேகி என்ன கலர் புடவை வாங்கினே என்றுக் கேட்டுக் கொண்டே வந்தாள். அம்மா அவரும் வந்து இருக்கிறார் நானத்தோடு சொன்னாள். வாங்க மாப்பிள்ளை என்று உரிமையோடு அழைத்த்தை ரசித்தவாறே ராகவ் உள்ளே நுழைந்தான்.

இந்தாங்கோ உங்க பெண்ணோட நிச்சயதார்த்தப் புடவை, பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்கோ என்றான். புடவையை வாங்கி பிரித்துப் பார்த்தாள். மிகவும் நன்றாக இருக்கிறது, பரவாயில்லையே நல்லா தான் செலக்ட் பண்ணி இருக்கே வைதேகி என பூரணி சொல்ல, அவர் தான் செலக்ட் பண்ணினது.

உங்க பெண்ணோட சாய்ஸ் ரொம்ப காஸ்ட்லி போல இருக்கு என்று அவளை வம்புக்கு இழுக்க நினைத்தான். சாரி சும்மா கிண்டலுக்கு சொன்னேன். அவள் மனசில கற்பனை பண்ணி வச்சுண்டு இருக்கிற காம்பினேஷன் கிடைக்கலை அதனால நானே செலக்ட் பண்ணினேன். அவளுக்கும் பிடித்திருக்கிறது என்று அழுத்தமாக ராகவ் சொன்னதில் பூரணிக்கு மிகவும் சந்தோசம் அதை அழகாக ரசித்தாள்.

தன் வாழ்க்கை போல் வினோதமாக இல்லாமல் தன் மகளுக்கு ஒரு அனுசரனையான கணவன் அமைய போவதில் அவளுக்கு ஆனந்தம். அவளுக்கு தன் மகளின் வாழ்க்கை பற்றி கவலை படவேண்டாம் என்ற எண்ணம் அந்த ஒரு வார்த்தை அழுத்தத்தில் ஒரு நொடியில் கொடுத்திட்ட ராகவ் அந்த நேரத்தில் அவளுக்கு கடவுள் போல தெரிந்தான். மகள்களைப் பெற்றவள் ஆயிற்றே அவளுக்கு அப்படி தான் இருக்கும்.

தனது கணவன் இருந்து இருந்தால் கூட தன் மகள்களை இப்படி வளர்த்து இருக்க முடியுமோ என்னமோ. ஆனால் அவள் தனி மனுஷியாக தன் மகள்களை நன்றாகவே வளர்த்து இருக்கிறாள் என்று மனம் லேசானது.

அம்மா நீ காபி போடறியா இல்லை நான் போடனுமா என்றாள் வைதேகி. ஸாரி மாப்பிள்ளை. ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன் என்றாள்.

அதே நேரத்தில் பூரணி வைதேகி என்று குரல் கொடுக்க ஒரு நிமிஷம் என்று சொல்லி உள்ளே போனவள் காபியுடன் வந்தாள். இந்தா வைதேகி மாப்பிள்ளைக்கு காபியை நீயே கொண்டு போய் கொடு. அவள் கொஞ்சம் வெட்கத்தோடு தான் காபியுடன் நடந்து வந்தாள்.

என் கையால காபி வேணும்னு சொன்னீங்களே என்று விஷம சிரிப்போடு இந்தாங்க என்றாள் வைதேகி. உன் வீட்ல இருக்கிற தைரியம். இருக்கட்டும் கல்யாணத்துக்கு அப்புறமா இதே சிரிப்போட தா, அப்போ உன்னை கவனிச்சிக்கிறேன் என்று கண்ணடித்தவாறே சொன்னான். இன்னும் நிச்சயமே முடியலை அதுக்குள்ள ரொமன்ஸா என்று அவனை மேலும் சீண்டினாள்.

நானா இல்லை நீயா? எப்படி காபி கொண்டு வந்தேனு ஒரு தடவை யோசிச்சு பாரு, அப்புறம் யாரு ரொமண்டிக்கா இருக்கிறதுனு தெரியும்.

வைதேகி உனக்கு காபி வேண்டாமா என்று பூரணி அங்கு காபியுடன் வர அங்கு சகஜ நிலமைக்கு இருவரும் திரும்பினர்.

டின்னர் சாப்பிட்டுட்டு போகலாமா. ஏதாவது ஸ்பெஷலா அம்மாவை பண்ணச் சொல்லவா, ஃபேஸ் வாஷ் பண்ணிக்கறீங்களா என்று கேள்வி மேல கேள்வி கேட்டாள் வைதேகி.

இல்லை வேண்டாம் வைதேகி எனக்கு உடனே கிளம்பனும். என்னோட அம்மாவும் காத்துண்டு இருப்பா. சாப்பிட வர மாட்டேனு தான் சொன்னேன், இப்போ போய் அம்மாவை தொல்லை பண்ணாம, நான் போய் ஹோட்டலில் சாப்பிட்டு போறேன்.

தன் மகள் ராகவ் மேல் கொண்ட அன்பினை கண்டு ஒரு நிமிஷம் வாயடைத்து போனாள். இந்த பெண் எப்படி இன்னொரு வீட்டில் சென்று குடும்பம் நடத்த போகிறாள் என்று யோசித்தேனா என்று தன்னை தானே கடிந்து கொண்டாள்.

அடை பண்ண போறேன் சாப்பிட்டு போகலாமே மாப்பிள்ளை என்றாள் பூரணி. உங்களுக்கு எதுக்கு சிரமம்னு பார்த்தேன் வேற ஒன்னுமில்லை. இப்போ தான் நான் தனியா இங்க வந்து இருக்கிறேன், வந்தவுடன் இங்கு சாப்பிட்டு போய் நாளைக்கு யாருக்கு எதுவும் மனப் பிரச்சனை வரகூடாதுனு பார்க்கிறேன் என்று உண்மையை சொன்னது வைதேகிக்கு மிகவும் பிடித்தது.

இதை பெரிய விஷயமா மனசுக்கு கஷ்டமா எடுத்துக்காதீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் இந்த வீட்டில் உரிமையா, உங்களுக்கு ஒரு பிள்ளையாக வந்து சாப்பிடறேன். மகன் இல்லாத குறையை உங்களுக்கு மகனாக இருந்து சரி செய்கிறேன் என்று சொல்லி அந்த காபியை குடித்தான்.

உங்களுக்கும் ட்ரெஸ் வாங்கனும், நாளைக்கும் நாள் நல்ல இருக்கு, நீங்களே வாங்கிடறீங்களா இல்லை நான் ராஜேஷை வாங்க சொல்லவா என்றாள் பூரணி. அதனால என்ன நான் வாங்கிட்டு வைதேகியிடம் கொடுக்கிறேன். வைதேகியை எனக்கு செலக்ட் பண்ண தரியா என்றான். ஆனா பச்சை கலர் பேண்டும், பிங்க் கலர் சட்டையும் கேட்டுடாதே ப்ளீஸ் என்று சொல்லி சரி நான் கிளம்பறேன் நேரமாச்சு என்றான்.

அதே நேரம் அங்கு டெலிபோன் அழைக்க பூரணி எழுந்து அதை எடுக்க போனாள்.

ரொம்ப ஓவரா தான் இருக்கு உங்களோட கிண்டல். எனக்கு என்ன கலர் பேண்ட் வாங்கனும், என்ன கலர் சர்ட் வாங்கனும்னு தெரியாதா என்று அப்பாவி போல கேட்டாள் வைதேகி.

பூரணிக்கு அவள் தங்கை தான் நாளை வருவதாக சொல்ல அழைத்தாள்.

சரி நாழியாச்சு நான் கிளம்பறேன். வைதேகி அந்த புடவையை எடுத்து தா உன்னோட அளவு ப்ளவுஸையும் சேர்த்து கொடு என்றாள். அவள் அந்த பையை எடுத்தவுடன் நாசுக்காக அவன் நகர்ந்தான். அதை தருவதற்காக அவள் அவனை பின் தொடர்ந்தாள் வைதேகி. வைதேகி அவன் கார் வரைச் சென்று அவனிடம் அந்த பையை கொடுத்தாள். அவனை வழி அனுப்ப மனசில்லாமல் தான் Bye பார்த்து போங்கோ, போனதும் எனக்கு ஒரு ஃபோன் பண்ணிடுங்கோ, நேரா ரோட்டை பார்த்து நிதானமா வண்டி விடுங்கோ உதட்டினைக் கடித்தவாறே அவள் சொன்னாள். சரி பை என்று சொன்னவன், ஹே வைதேகி ஒரு நிமிஷம் என்று கூப்பிட்டு, வைதேகி ஐ லவ் யூ என்று சொல்லி அவள் முகத்தில் வந்த வெட்கத்தையும் அவளது அன்பினையும் ரசித்தவாரே காரை கிளப்பினான்.

அவன் கிளம்பி போய் ஒரு 15 நொடி வரை வைதேகி அப்படியே சிலையாக மாறி போனாள். ரோட்டின் கார்னர் போய் அவளுக்கு கைஅசைத்து அவள் கண்களில் இருந்து கார் மறைந்தும் போனது.

பூரணி மகள் வானத்தில் பறப்பது கண்டு சந்தோசபட்டாலும், அவளை இப்படியே விடக்கூடாது என்று, வைதேகி என்னம்மா அப்படியே ராகவ்வோட இப்பவே போகனும்னு மனசு சொல்றதா என்றாள்.

அதேல்லாம் ஒன்னுமில்லை போம்மா என்று வேகமாக வீட்டிற்குள் ஓடினாள். என்னம்மா ஒரே கேளியும் கிண்டலுமா இருக்கு. ஏன் இவ்வளவு நேரம் உன்னோட காம்பினேஷன் நிறைய கடைக்கு போய் நீ தேடினீங்களா??  இல்லை மா ஒரே கடைக்கு தான் போனோம், வேற கடைக்கு போய் தேடலாம்னு கூட எனக்கு தோனலை என வைதேகி கூறினாள். கொஞ்சம் நேரம் எல்லா ரேஞ்ச் சாரீஸ்லையும் அந்தக் காம்பினேஷன் தேடினேன். எதுலையும் கிடைக்கலை என்றாள்.

அப்புறம் அவரே இந்த கலர் செலக்ட் பண்ணி இதுவும் உனக்கு நல்ல இருக்கும்னு சொன்னதும் நானும் சரி சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் ஒரு பார்க்ல கொஞ்ச நேரம் பேசறதுக்காக இருந்தோம்.

கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்தோம்,  then கிளம்பி வந்தோம். நான் தான் ஹோட்டல் போக வேண்டாம் என்று சொல்லிட்டேன். பாவம் இப்போ தனியா போய் சாப்பிட போறார் என்று வருந்தினாள். அடடா என்ன கரிசனம் என்று மகளை நோக்கிக் கூறவும். அம்மா மடி மீது முகத்தை மறைத்தாள். இன்னும் எத்தனை நாள் என் மடியில் முகம் புதைப்பாய் வைதேகி என்று கேட்கவும், தன் தாயை பிரிய வேண்டி இருக்குமே என்ற பயம் அவளுக்குள் திரும்பவும் வந்தது.

அம்மாவை விட்டு விட்டு எப்படி இருப்பேன் என்று எதுவும் வைதேகி யோசிக்கும் முன்னரே ராகவ் அவள் மனதில் முழுமையாக குடிக் கொண்டான்.

அம்மா எனக்கு பெரிய கவலையே, நீ இல்லாமல் எப்படி இருப்பேன் என்று அவளை கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள். ஹே அசடே இது என்ன வைதேகி போய் நிச்சயதார்தத்திற்கு புடவை வாங்கிண்டு வந்துட்டு என்ன இது அசடு மாதிரி அபசகுணமா அழரியே. உனக்கே இது நல்லா இருக்கா. இது எல்லா பொண்களோட வாழ்க்கையிலும் நடக்கிறது தானே, அதுக்கு என்ன பெரிய விசனம் என்றாள்.

அது கால போக்கில் மாறிடும் டீ கொழந்தே என்றாள். இந்த கொழந்தேக்கு இப்போ எதுக்கு மா கல்யாணம் என்றாள். இந்த கொழந்தே கல்யாணம் ஆகி ஒரு கொழந்தையோட வந்தாலும் கூட எனக்கு நீ கொழந்தை தான் டீ என்று மகளை கண்களை துடைத்தவாறே கட்டிக் கொண்டாள்.

அம்மா எனக்கு ஒரே ஒரு அடை கொடு, நான் சாப்பிட்டு படுக்க போகிறேன் என்றாள். வைதேகி மாப்பிள்ளையை ஃபோன் பண்ணச் சொன்னியா என்றாள், சொன்னேன், அவர் போய் சேர இன்னும் கொஞ்சம் நேரமாகும்னு நினைக்கிறேன் என்றாள்.

சரி வா நான் அடை வார்த்து தரேன் நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு. இப்படி சாப்பிட்டா உடம்பு வைட் போடும் டீ. கொஞ்சாமா சாப்பிட்டாலும் நேரா நேரத்திற்கு சாப்பிடனும். வைதேகி எனக்கு ஒரு நாள் நீ சமைத்து போடனுமே எப்போ போட போறே, இங்க இருந்து போறதுக்கு முன்னாடி போடறியா இல்லை உன் கைவண்ணம் காண நான் ராகவ் வீட்டிற்கு வரனுமா?

என்னம்மா இப்படி கேட்கிறே, எனக்கு என்ன தெரியும், என்னை நீ இதுவரை சமைக்க விட்டதே இல்லையே என்றாள். சமையல் ஒன்னும் பெரிய விஷய்ம் இல்லைடீ, ரொம்ப சிம்பிள். எல்லாம் ரெடியா இருந்தா 30 நிமிஷம் போதும் என்றாள். சரி அதுக்கு என்ன நாளைலேந்து நான் சமைக்க வரேன் அவ்வளவு தானே என்றாள் வைதேகி. தன் அம்மா தன்னை சீக்கிரமாகச் சமையல் கற்றுக் கொள் என்று சொன்னதை அவளும் ஆமோதித்தாள்.

வைதேகி11  

வைதேகி13

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s