வைதேகி11

வைதேகியுடன் தான் நடந்து வருவதுதான் அவனது வாழ்க்கையின் மிகவும் சந்தோசமாக தருணமாக ராகவ் எண்ணினான். வைதேகி ஏதாவது சாப்பிட்டுட்டு போகலாமா என்று கேட்கவும் வேண்டாம் இங்க பக்கத்தில ஏதாவது பார்க் போகலாமா என்றாள். எனக்கு உங்களோட கொஞ்சம் பேசனும் என்றாள்.

சரி என்று அவளுடன் பக்கத்தில் இருந்த ஒரு பார்க்கிற்கு சென்றான். என்ன பேசனும் உனக்கு, கட்டளை போடு உன் சித்தம் என் பாக்கியம் என்று ராகவ் சொல்லவும் சிரிக்க முடியாமல் ஒரு அசாதரண புன்னகையுடன் கொஞ்சம் சீரியசான விஷயம் தான் என்றாள்.

உங்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கனும்னு நினைக்கிறேன் என்றாள். என்ன தெரியனும், என் படிப்பு, வேலை, சம்பளம் என்று எல்லாம் தான் உனக்கு தெரியுமே என்றான். அதைப் பற்றி எனக்கு தெரியும், நீங்கள் எப்படி பட்டவர் என்று நீங்களே சொல்ல வேண்டும் என்றாள்.

எனக்கு நீ என்ன கேட்க நினைக்கிறாய் என்று சத்தியமாக புரியவில்லை. என்ன சொல்லு என்றான். உனக்கு என்ன கேட்கனுமோ அதை நேராக கேளேன். எதற்காக சுற்றி வளைத்து பேசுகிறாய். என்னிடம் உனக்கு என்ன தயக்கம்.

என்னை தப்பாக நினைக்க வேண்டாம், நான் உங்களை முழு மனசோட தான் கல்யாணம் செய்ய போகிறேன். அதுவும் இது மாதிரி ஒரு சூழ்நிலையில் இப்போது கேட்பது நியாயம் இல்லை தான். ஆனாலும் இதை மனதில் வைத்துக் கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை. இதை நான் என் மனதோடு வைத்து இருப்பது நமக்குள் ஏதாவது ஒரு மனக்கசப்பு வர காரணமாக இருந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது என்றாள்.

வைதேகி எனக்கு கோபம் வராது, ஆனால் நீ பேசுவது எனக்கு தலையும் புரியலை, காலும் புரியலை. எதுக்கு பீடிகை வேறு. சட்டென்று உடைத்துவிடு. அமைதியான என்னையும் உன் கலக்கம் கலங்க அடித்துக்கொண்டு இருக்கிறது.

ப்ளீஸ் ச்பீக் ஔட் என்று கொஞ்சம் டென்ஷனோடு கூறிட, வைதேகி மேலும் இதை இழுப்பது நியாயம் இல்லை என்று சுதாரித்து, ஸாரி, எனக்கு வேறு வழி தெரியலை. வேறு யாரிடமும் இதைப் பற்றி பேசிட முடியாது அதான் உங்களிடம் நேரிடையாக கேட்கிறேன்.

உங்களுக்கு லில்லி என்ற பெண்ணைத் தெரியுமா என்றுக் கேட்டாள்?? ஒரு முறை புருவத்தை உயர்த்தி ஹுஹ் யார் அந்த லில்லி?? என்ன விஷயம் என்றான். அவளுக்கும் உன்னுடைய சலனத்திற்கும் என்ன காரணம் என்றான்.

உங்களுக்கு லில்லியைத் தெரியாதா என திரும்பவும் கேட்டாள். லில்லினு ஒருத்தி என் கூட படிச்சிருக்கா. ரொம்ப அழகா இருப்பா. ரொம்ப மாடர்ன் பொண்ணு. எல்லாரோடும் நல்ல நட்பாக பழகியவள். எனக்கு பல நேரம் நோட்ஸ் கொடுத்து ஹெல்ப் பண்ணி இருக்கிறாள். எங்க கல்லூரி காலத்துலயே அந்த நட்பும் முடிந்தது. அதுக்கு அப்புறம் அவ எங்க இருக்கானுகூட தெரியாது.

அவளைப் பற்றி பேசவா இத்தனை பீடிகை. என்ன இப்படி என்னை பயமுறுத்திட்டியே. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு என்று நீ சொன்ன நிமிடத்தில் இருந்து உன்னுடன் வாழ ஆரம்பித்துவிட்டேன். இன்னும் ஏதாவது என்றாள் உரிமையாக கேள். உன் சம்மதம் சொன்ன அந்த நொடியில் உனக்கும் எனக்கும் திருமணம் முடிந்தது. இனி நடக்கவுள்ளது எல்லாம் இந்த உலகத்திற்காக மட்டுமே.

அது சரி அவளைப் பற்றி இப்போ என்ன கேள்வி. இது தான் உன்னோட கேள்வியா? அது சரி அவளைப் பற்றி உனக்கு எப்படி தெரியும் என பதில் கேள்வி ராகவ்விடமிருந்து வரவும், இப்போதாவது கேட்கனும் என்று உங்களுக்கு தோனித்தே அதுக்கே சந்தோசம் என்றாள்.

சரி எல்லாம் நான் தெளிவா சொல்லிடறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு ஒரு ஃபோன் வந்தது. ஒரு பெண் பேசினாள், உங்களைப் பற்றி பேசனும் என்று சொல்லி அவளது பெயர் லில்லி எனவும், உங்களோட படித்ததாகவும் அவள் உங்களை காதலிப்பதாகவும் சொன்னாள். மேலும் அது ஒன் சைடு தான் என்றும் அவளே சொன்னாள்.

எனக்கு உங்க மேல இருந்த நம்பிக்கைல அவகிட்ட இப்போதைக்கு நான் தான் உங்களோட காதலி என்றும் சொல்லிட்டேன் இருந்தாலும், இருந்தாலும் என்ன உனக்கு ஒரு சந்தேகமா என்றான்???

இல்லை ஒரு பெண் உங்களை காதலிப்பதோ இல்லை அவள் சொல்லாத காதல் பற்றியோ எனக்கு கவலை இல்லை ஆனால் அவள் உங்களை தீவிரமாக நேசிக்கிறா, உங்களை உங்களுக்கு தெரியாமல் பின் தொடர்கிறாள். கொஞ்சம் எனக்கு பயமா இருக்கு என்றாள்.

என்ன சொல்றே வைதேகி நீ, அது எப்படி முடியும், அவ இங்க எங்க இருக்கா, மும்பை தான் அவளோட ஊரு அங்க இருக்கிறவ எப்படி என்னை பின் தொடர முடியும் என்றான். நீ ஏதோ யோசித்து பயப்படுறியோனு எனக்கு தோன்றது.

ராகவ்வின் கைப்பற்றி அப்படி என்னோட கற்பனையாக இருந்தால் நானே சந்தோச படுவேன். உங்களுக்கு லில்லி என் தெரிந்த பெண் இருக்கிறாள். எனக்கு அவள் ஃபோன் பண்ணினதும் உண்மை. கொஞ்சம் யோசித்து பார்த்தீங்கனா உங்களுக்கே புரியும் என்னோட பயம் நியாயமாகவும் இருக்கும் என்றாள்.

என்ன சொல்றே, கொஞ்சம் சீரியசா பேசும் போது திரும்ப என்ன புதிர். முழுசா நனைஞ்ச பின்னாடி எதுக்கு முக்காடு? ஏதோ முதல்ல பேசறதுக்கு தான் யோசிச்சேனா இப்போ என்னம்மா உனக்கு.

இங்க பாரு எதுக்கும் பயப்படாதே நான் தான் இருக்கேன்ல என்றான். அதான் எனக்கும் பயமா இருக்கு என்றாள். ஆமாம் மும்பைல இருக்கிறவளுக்கு என்னோட ஆபிஸ் நம்பர் எப்படி கிடைச்சது? நீங்களும் நானும் கோயிலுக்கு போனது, ஹோட்டல் போனது என்று எல்லாம் நேரில் பார்த்தவள் போல எப்படி சொல்ல முடியும் என்றாள். அவள் உங்களை தீவிரமாக நேசிப்பது மட்டுமில்லை, நோட்டமிடுவதும் எனக்கு தெரிந்தது. எங்கேயோ இருக்கிறாளா இல்லை இங்கு பக்கத்தில் இருக்கிறாலா??? வேறு யார் மூலமாவது உங்களை தொடர்கிறாளா என்று எதுவும் தெரியலை என்றாள்.

அவள் சொல்லியதைக் கேட்ட ராகவ்க்கே கொஞ்சம் கலவரம் பிறந்தது. எப்படி இது சாத்தியம், இரண்டு மாதம் முன் அவன் நண்பன் பேசும் போது கூட அவளைப் மும்பையில் பார்த்ததாகச் சொன்னது தான் அவனுக்கு ஞாபகம்.

வா வைதேகி முதல்ல இங்க இருந்து கிளம்புவோம். காரில் போய்க் கொண்டே பேசுவோம், உனக்கு நேரமாகிறது. உன்னை வீட்டில் விட்டுட்டு நான் திரும்ப வருகிறேன் என்றான்.

என்ன உங்களுக்கும் பயமா இருக்கா என்றாள். பயம் இல்லை வைதேகி ஆனால் என்ன செய்வது  என்று எதுவும் புரியவில்லை. கொஞ்சம் நிதானமாக யோசிக்க வேண்டும். சரி இந்த விஷயம் நீ வேறு யாரிடமும் சொல்லாதே. எங்க வீட்டிற்கும் தெரிய வேண்டாம் என்றான்.

இதை நான் பார்த்துக்கிறேன். நீ இதுக்கு எல்லாம் பயப்படாதே சரியா, வா போகலாம் என்று அவள் கைப் பற்றி நடந்தான். அந்த ஒரு நிமிடம் அப்படியே சொர்க்கமாக இருந்தது வைதேகிக்கு.

வைதேகி காருக்குள் வந்தவுடன், வேற ஏதாவது கடைல நீ கேட்ட மாதிரி காம்பினேஷன் இருக்கானு பார்த்து இருக்கலாமோ என ராகவ் கேட்டதும் தான் அவளுக்கும் அப்படி செய்து இருக்கலாமோ என்று தோன்றியது. எனக்கு ஷாப்பிங்க செய்து பழக்கமில்லை, எல்லாம் என்னோட அம்மா தான் வாங்குவா அதனால எனக்கு தோனலை என்றாள் வைதேகி. உங்களுக்கு இது தான் ஃப்வரைட் ஷாப்னு சொன்னீங்களே. ஃப்வரைட்னு ஒன்னும் இல்லை வைதேகி கொஞ்சம் செண்டிமெண்ட், எல்லா விசேஷத்துக்கும் இங்க தான் வாங்குவோம் அதான் உன்னையும் இங்க கூட்டிண்டு வந்தேன். Superstitious belief என்று சொல்ல முடியாது எதுக்கு ரிஸ்க் அவ்வளவு தான்.

ஒரு காபி சாப்பிடலாமா என்றான், பத்து நிமிஷத்தில வீட்டுக்கு போய்டுவோம், என்னோட அம்மா கையால நல்ல காபி தரச் சொல்றேன். அம்மா கையலையா அதுக்காக நான் உன்னை உன் வீடு வரை கொண்டு விடனுமா என்றான் கொஞ்சம் ஆசையோட. அதுக்கு என்ன எங்க அம்மா போட்டு தரட்டும் நான் கொண்டு வந்து என் கையால தரேன்.

வாழ்க்கையின் ஓட்டம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல் இருவரும் கல்யாண கனவுகளின் பயனத்தில் இருந்தனர்.

 

வைதேகி10

கனவுகள் தொடரும்

Advertisements

2 thoughts on “வைதேகி11

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s