சந்தேகம்

சந்தேகம்

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். உறவுகளுடன் வாய் விட்டுப் சிரித்து பேசிட நீண்ட நாள் நோயும் பறந்து போகும்….. சந்தேகமும் ஒரு நோய் தான், ஆம் மன நோய். அதீத அன்பு இருக்கும் இடத்தில் சந்தேகம் தானாக பிறக்கும். சந்தேகம் வந்த பின் சகஜமாக பேச முடியாது. சந்தேகம் வருவதற்கு முன், உறவுகள் பலமாக இருக்கும். சந்தேகம் ஒருவித்த்தில் இயலாமையைக் காட்டுகிறது.

மனம் விட்டுப் பேச முடிந்தால் மட்டுமே உறவுகள் பலமாகும்.  உறவுகளில் என்றாலும் சரி, நட்புகள் என்றாலும் சரி  மனம் விட்டுப் பேச முடியாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் மனம் குழப்படைகின்றன.

மனம் விட்டுப் பேசுவது குறைந்து போவதால் கற்பனைககளும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் உறுதி செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் மனித இயல்பு. அதிலிருந்து வெளியில் வருவது அத்தனை சுலபமானது இல்லை. ஆனால் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விடும்.

சந்தேகம் என்ற பூதகண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது ஒன்றிற்க்கு எத்தனை தப்பான அர்த்தங்கள் முடியுமோ அத்தனையும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும்,  நம்முடைய சந்தோஷங்களும் தான்.

புரியாத போது நாமாக ஒரு அர்த்தம் உருவாக்காமல் அடுத்தவரிடம் வாய் விட்டுக் கேட்டு விடுங்கள். முற்றிலும் முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேட்கத் தயங்காதீர்கள். நீங்களாக ஒரு முடிவினைத் தீர்மானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்ளும் போது ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அடுத்தவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நீங்கள் நினைப்பதை உங்கள் உறவுகளிடமும், நண்பர்களிடமும்  கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாக இருக்க்க கூடும். அப்படியில்லை என்றாலும் நீங்கள் சொன்னதில் உள்ள நியாயத்தை கண்ட பிறகு அவர்கள் செய்த்து தவறு என்று புரிந்து அவர்களை திருத்திக் கொள்ளவும், மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இப்படி அந்தந்த சமயத்தில் சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்ளாமல், உறவுகளில் விரிசல் ஏற்பட காரணமாக இருப்பது மனம் விட்டுப் பேசுதாலே என்று நாம் அறிய சந்தர்ப்பமில்லாமல் போகிறது. மனம் விட்டு பேசுதலே எளிய முறையாகும், நமக்கு மிகவும் சாத்தியமானதும் கூட. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் இதை போன்ற தொடர் செய்கைகளினால் பெரிதாகிப் போய் பிரிவினையை ஏற்படுத்தி வாழ்க்கையில் வசந்த்த்தை அழித்து விடுகிறது.

வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் உறவுகளில் பிளவு ஏற்படாமல் இருந்து இருக்கலாமோ, எனது நட்பு சேதமடையாமல் இருந்திருக்குமோ என்று பல ஆண்டுகள் கழித்து மனம் வருந்தும் ஒரு சந்தர்ப்பம் அமைந்துவிட்டால் என்ன செய்வோம் என்று கொஞ்சம் சிந்தித்தால் நமது வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்குமோ?

இதை அனுபவத்தில் மட்டுமே சொல்கிறேன். ஆம் வருத்த படுகிறேன். எனக்கு சந்தேகம் என்று சொல்ல முடியாது ஆனாலும், அடுத்தவர்களின் சந்தேகத்தின் விளைவால், வாழ்க்கையில் எத்தனை தொலைத்து இருக்கிறேன் என்று எனக்கு மட்டுமே தெரியும். அவர்களின் சந்தேகத்தை போக்கிட ஒரு வழி அன்றைய தினத்தில் எனக்கு தெரியவில்லை. இன்று யோசிக்கும்போது இதனை இவ்வாறு கையாண்டு இருந்தால் வாழ்க்கை வேறு விதமாக அமைந்து இருக்குமோ என்று ஒரு சிறு உறுத்தலோடு தான் இந்த பதிவினை பதிவாக முயன்றேன்

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

Advertisements

4 thoughts on “சந்தேகம்

  1. correct uma now days u r became like proffeional writer. try to improve it more one day u will get world biggest award( murthy litreature award )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s