நான் எழுதுகிற கவிதைகள் யாவும்
காதலை பற்றியே இருக்கிறதோ என
எனக்குள்ளே ஒரு உணர்வு.
எதை எதையோ எழுதிட
எனக்கும் கூட ஆசைதான்.
இருந்தும் தெரியவில்லை
எதைப்பற்றி எழுதுவதென்று.
ஏழையின் கண்ணீரைக்
கண்டவுடன்
கொதித்துவிடும் நரம்பு,
என்னால் என்ன செய்யமுடியும்
என்று ஏளனமாக
என்னை நானே
பார்ப்பது இயல்பு.
கண்ணால் காதல்
பேசும்
அடுத்த வீட்டு இளைஞன்,
அழகான சிரிப்பினில்
அனைவரையும்
கவர்ந்திடும்
மாடி வீட்டு பாப்பா,
கதை கேட்க
யாராவது வருவார்களா
என்று ஏங்கிடும்
எதிர்வீட்டு தாத்தா,
என்று எத்தனையோ
என்னைச் சுற்றி நடந்தாலும்,
எழுதிட நினைத்து
வார்த்தைகளை
சேர்த்திடும் நேரத்தில்
என் நினைவுகள்
சுற்றுவது
என்னை தேவதையாக
நினைக்கும்
உன்னை மட்டுமே….
Advertisements
வாவ்..எப்படி தோழி….மிகவும் அருமை…ரசித்தேன்
எல்லாம் உங்களை மாதிரி நண்பர்களால் தான்….
superb da.
thank you for your comments
எண்ணங்களை சிறைபடுத்தும் காதலைப்பற்றி அருமையான வரிகள்,keep it up
தங்கள் வரவுக்கும் மற்றும் பகிர்விற்கும் நன்றி ! !