காதலினால் சாதல் கொண்டாயோ!
தெளிந்த நதியாக
இருந்த
என் மனத்தில்
காதல் என்ற
கல்லை வீசி
ஏன் கலங்கடித்தாய் ??
இரும்பாக இருந்த
என் இதயத்தை
காதல் என்று
குண்டைப் போட்டு
துரும்பாக்கி
ஏன் சிதைத்தாய்?
வானில்
சிட்டுக் குருவியாய்
சிறகடித்த
என்னை
காதல் என்று
ஏன்
கூட்டில்
சிறைப் பிடித்தாய் ???
இவ்வளவும்
செய்து
இன்று நீ
ஏன் என்னை
மறந்து மறித்தாயடா ??
என் காதலுக்காக
சாதலும் மேல் என்றா????
உன் காதல்
புரிந்து கொள்ள
நான் காலம்
தாழ்த்து இருந்தேன்
என் காதல்
புரியாமல் நீ
காலனிடம் சேர்ந்தாயேடா??
Advertisements
கொஞ்சம் முன்னாடியே சொல்லிருக்கலாம்!அருமை..
கொஞ்சம் லேட் அகிடுச்சி அதுக்குள்ளே அவன் லேட் ஆகிட்டான்