வைதேகி9

வைதேகியைப் பற்றி கனவுகளுடனே ராகவ் அன்று சிறிது கண் அயர்ந்து தான் போனான். அவனை அவன் அம்மா வந்து எழுப்பிய பின் தான் அவன் உறங்கியதே அவனுக்கு தெரிந்தது. நேரத்தைப் பார்த்து பதறினான். முகம் அலம்பி வருகிறேன், ஒரு காபி தா அம்மா என்று கேட்டபடியே எழுந்து சென்றான்.

அதே நேரம் வைதேகிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஹலோ வைதேகி ஹியர் என்று சொன்னவுடன், நான் உங்க்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல்.

நான் நேராக விஷயத்துக்கு வருகிறேன். ராகவ்வை நான் விரும்புகிறேன். என்னோட காதல் இன்னும் சொல்லாத காதல் தான். இது ஒரு தலை காதல் தான். உங்களுக்கும் ராகவ்க்கும் நிச்சயம் என்று கேள்வி பட்டேன்.

அவனோட சாரி ராகவ்வோட எல்லா நிபந்தனைகளும் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டவள் தொடர்ந்தாள். இது வெறும் ஃபோன் கால்னு நினைக்க வேண்டாம், நீங்கள் விரும்பினால் நேரில் சந்திக்கவும் தயார் என்று கூறவும், வைதேகிக்கு கொஞ்சம் பகீர் என்று தான் இருந்தது. இருந்தாலும், இன்னும் நிச்சயம் முடியவில்லை அதற்குள் விசாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.

இப்போ உனக்கு சாரி உங்களுக்கு என்ன வேனும், இதை என்னிடம் சொல்வதில் என்ன பலன்? என்ன நான் ராகவ்வை கல்யாணம் பண்ணகூடாது என்று மிரட்டறீங்களா? இல்லை உங்களோட காதலை நான் ராகவ்கிட்டே சொல்லனுமா என்று கேள்வி கேட்கவும் மறுமுனை அமைதியானது.

ஹாலோ ஆர் யூ தேர் என்று கேட்ட வைதேகி, மேலும் பேசினால் எப்படி என்னுடைய தொலைபேசி எண் உங்களுக்கு கிடைத்தது??? யார் கொடுத்தார்கள் என்று கேட்டவளுக்கு ராகவ் விளையாடுகிறானோ என்றும் தோன்றியது. யாரும் கொடுக்கவில்லை, நானாக தான் கண்டு பிடித்தேன். ராகவ் உங்களைச் சந்தித்தது, நீங்கள் இருவரும் கோயிலுக்குச் சென்றது எல்லாம் நான் நேரில் கண்டேன், ஐ மீன் ராகவ்வை பின் தொடர்ந்தேன். பின்னர் உங்களின் அலுவலகம் கண்டு பிடித்தவுடன் நம்பர் கண்டு பிடிப்பது சுலபம் தானே.

இப்படி தான் அவர் பார்த்த பெண்களுக்கு ஃபோன் பண்ணி அவரது திருமணத்தை தடுத்தீர்களா குரலில் ஒரு கோபம்??

உங்கள் பெயரைச் சொல்லுங்க நான் ராகவ்விடம் கேட்கிறேன். அவருக்கு உங்களை பிடித்து இருந்தால் நான் ஒதுங்கி கொள்வதில் எனக்கு பிரச்சனை இல்லை என்று குரல் உடைந்து சொன்னாள். எனக்கு தெரிந்த வரை ராகவ்வின் காதலி இப்போதைக்கு நான் மட்டுமே. அவரது கண்களில் என்னை காணும் போது இருக்கும் காதலில், அன்பில் இருந்து நான் அறிந்தது.

வைதேகி நான் மும்பையில் பிறந்து சென்னையில் வளர்ந்தவள். என் பெயர் லில்லி. ராகவ்வின் கல்லூரியில் அவனுடன் படித்தவள்.

எனக்கு வேலை இருக்கிறது, வேறு ஏதாவது சொல்லனுமா எனவும், இல்லை தேங்கஸ், பை என்று இனைப்பினை துண்டித்தாள் லில்லி. அவளுக்கு வேண்டியது தன்னுடைய காதலை சொல்ல வேண்டும். வைதேகியை குழப்ப வேண்டும் என்பதே….

வைதேகி நிஜமாகவே குழம்பி தான் போனாள். வைதேகியின் முகத்தில் இருந்த அந்த அமைதி தொலைந்து என்ன செய்வது, என்ன செய்ய போகிறோம் என்று அவள் மிரண்டு தான் போனாள். யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இதை எப்படி கையாள்வது என்று யோசித்தாள்.

என்ன செய்வது, இதனை யாருடன் முதலில் பேசுவது, தன்னுடைய வீட்டில் சொல்வதா, இல்லை ராகவ்வையே கேட்பதா என்று யோசித்த நேரத்தில் மறுபடியும் அவளது மேஜையில் இருந்த தொலைப்பேசி அழைத்தது.

தன்னை சுதாரித்து ஹலோ எனவும், மறுமுனையில் மிகவும் சாதரணமாக எப்படி இருக்கே வைதேகி, ராகவ் பேசறேன். வைதேகியின் பெண் புத்தியில், சிறிது நேரத்திற்கு முன்னர் வந்த ஃபோன் காலும், ராகவ் உடனே அழைக்கவும் கொஞ்சம் சந்தேக வந்தது.

இருந்தாலும் அவள் ஒன்றும் பேசாமல், ராக்வ்விடம் உங்க ஃபோனை தான் எதிர் பார்த்தேன் சொல்லுங்கோ என்றாள்..

ஓ ரியலி, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. ரொம்ப சந்தோசமாக இருக்கு வைதேகி. நாளைக்கு நம்மளோட நிச்சயதார்த்திற்கு உனக்கு புடவை வாங்க வேண்டுமாம். உன்னால் எப்போ வர முடியும் என்று சொன்னால் அதற்கு ஏற்றார் போல நாம போய் வாங்கலாம்.

நான் வரனுமா நீங்களே வாங்கலாமே. உங்க சிஸ்டர்சோட போய் வாங்கறது பெட்டர் ல. உனக்கான புடவையை நீயே செலக்ட் பண்ணனும்னு நான் நினைக்கிறேன் அதனால் தான் நீ வரனும்னு சொல்றேன்.

அம்மா கிட்டே கேட்கனும், நீங்களே பேசிடுங்களேன், அன்னிக்கு பார்த்துட்டு லேட்டா போனதற்கே எல்லோரும் என்னைக் கோச்சிண்டா. தயவு செய்து என்னை தப்பா நினைச்சுக்க வேண்டாம். நாளைக்கு நானும் உங்களோட கொஞ்சம் தனிமையில் பேசனும்.

ச்சே என்ன இருக்கு உன்னை தப்பா நினைக்க, என் வீட்டிலயும் ரெண்டு பொண்ணுங்க இருந்தப்போ என்னோட அம்மா அப்பாவும் அப்படி தான் இருந்தாங்க.

அது மாதிரி இனிமேல் நடக்காமல் நான் பார்த்துக்கிறேன் என்று கனிவாக சொன்னான் ராகவ்.

உன்கிட்ட கேட்டுட்டு உன்னோட அம்மா கிட்டே பேசலாம்னு தான் உனக்கு முதலில் ஃபோன் பண்ணினேன்.  நாளைக்கு பார்க்கலாம், பை என்று கூறி அழைப்பினை துண்டித்தான் ராகவ்.

ராகவ் ஃபோனை துண்டித்துவிட்டான். ஆனாலும் வைதேகியின் மனம் அவனையே சுற்றியது. ராகவ்வின் அன்பு பிடியில் சிக்கினாள் வைதேகி. அன்பாக பேசி பழகும் ஒருவருடன் யாருமே வெகு விரைவில் ஐக்கியம் ஆகிவிட முடியும். அதுவும் அனுசரனையாக அன்பு கிடைத்தால் வேறு என்ன வேண்டும்?

அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல் என்று பல்வேறு பரிணாமங்கள் இருந்தாலும் இப்போது இவர்களுக்கு இந்த பாசமும் நேசமும் காதலாகவே வைதேகிக்கு தெரிந்தது.

வைதேகி நாளை என்ன பேச போகிறாள் என்று ராகவ்க்கு தெரியாது…ராகவ்விற்க்கு ஒரு வில்லி இருப்பதும் தெரியாது. ராகவ்வின் வில்லி அடுத்து என்ன செய்ய போகிறாள் என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்….

வைதேகி8

அடுத்த பக்கம்

Advertisements

2 thoughts on “வைதேகி9

  1. மிகவும் அருமை..கடந்த பதிவுகளைக் காட்டிலும் இந்த பதிவு முதிர்ச்சி..கதையிலும் திருப்பம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s