வைதேகி8

வைதேகி கிளம்பி அலுவலகம் செல்ல ஆயத்தமான போது, ராஜேஷூம் தானும் கிளம்புவதாகச் சொன்னான்.  நான் உன்னை வழியில் இறக்கிவிடவா என்று கேட்டான். அவளுக்கும் நேரம் ஆனதால் அவளும் சரி வழியில் என்ன வந்து எனக்கு ரொம்ப லேட் ஆச்சு என்னை ஆபிஸில் விட்டுவிட்டு போ என்றாள்.

இருவரும் கிளம்பவும், பூரணி ராகவ் வீட்டுக்கு ஃபோன் செய்தாள். செய்து சுற்றி வளைக்காமல் உங்களுக்கும் பெண்ணை பிடித்து இருக்கு, எங்களுக்கும் உங்க மகனைப் பிடித்து இருக்கு, நிச்சயதார்த்த தேதியும் பார்த்து விட்டீர்கள். ஆனால் சீர் செனத்தி என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் பேசவே இல்லையே என்றாள். அதையும் பேசிட்டா நான் எனது தங்கையை வரச் சொல்லி உடனே கலந்து பேசி நிச்சயதார்த்தம் தேதி சொல்லிடறேன் என்றாள்.

எதிர் பார்த்தது போலவே, ராகவ் அம்மாவும் எங்களுக்கு எதுவும் எதிர்பார்ப்பு இல்லை. உங்களோட பெண்ணுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்க என்றாள். எங்களை பொருத்தவரை ராகவ்க்கு கல்யாணம் அதுவும் அவனுக்கு பிடிச்ச பெண்கூட நடந்தா போதும். அவனோட அம்மாவா இதைவிட வேறு எதுவும் நான் எதிர் பார்க்கவில்லை. என் பையனோட உங்க பெண் சந்தோசமா இருந்தா அதுவே சந்தோசம் எங்கள் அனைவருக்கும்.

சரி நான் இன்று இரவுக்குள் நிச்சயதார்த்தம் தேதி பற்றி சொல்லிடறேன் என பூரணி சொல்லி ஃபோனை தொடர்பினை துண்டித்தாள்.

உடனே அடுத்ததாக தனது தங்கைக்கு ஃபோன் செய்தாள் பூரணி. எடுத்ததும் ராகினி தான். ராகினி ராகவ் வீட்டிலிருந்து ஃபோன் வந்தது, நிச்சயதார்த்தம் மார்ச் 15 வச்சுக்கலாமா என்று கேட்டார்கள் என்றாள். உன்னைக் கேட்டுவிட்டு சொல்வதாகச் சொல்லி இருக்கேன். அவரும் நீயும் தான் நிச்சயதார்த்ததை நடத்தி தரனும் என்றாள். உங்களுக்கு தோது படுமானு சொல்லு என்றாள்.

என்னடி லூசு மாதிரி கேட்கிறே. அவருகிட்ட கேட்டா என்னை தான் கோச்சிபார், அவரோட பெண் டீ வைதேகி மார்ச் 15ஏ வைத்துக் கொள்ளலாம். அவர்கிட்டே இப்பவே சொல்லிடறேன். ஒன்னும் கவலை படாதே. நான் இந்த வாரம் வெள்ளிக்கிழமையே வரேன் என்றாள்.

நீ அவங்ககிட்ட சரினு சொல்லி ஏற்பாடு பண்ணச் சொல். நம்ம தரப்பில் இருந்து வர போகிறது 15-20 பேரு தான் இருக்கும்னு சொல்லிடு.

கல்யாணத்திற்கு எல்லோரையும் கூப்பிடலாம். வைதேகி யாரவது கூப்பிட போறாளானு கேளு. வேறு ஏதாவது பேசனுமா என்று வேகமாக கேட்டாள் ராகினி. ஒன்னும் இல்லைடி நீ எதுக்கும் அவர்கிட்டே பேசிட்டு எனக்கு ஒரு ஃபோன் பண்ணு என்றாள் பூரணி.

அதன் பின்னர் பூரணியும், வைதேகியின் அத்தையும் வெளியே கிளம்பினார்கள். போகும் வழியில் தொலைபேசியில் பேசிய விஷயங்களை அத்தையிடமும் கூறினாள்.

வைதேகி அலுவலகத்தில் வந்ததில் இருந்தே மிகவும் மும்முரமாக ஏதோ வேளையாக இருந்தால். மேரியும் முந்தினம் விட்டுச் சென்ற விவரங்களை கலந்தாலோசித்ததில் அதிலும் வைதேகியின் கைவண்ணாம் தேவைபட்டதால் அவளுக்கு வேலை நிறைய தான் இருந்தது, ராகவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும் வரை.

ஆனால் வைதேகி முந்தினம் தாய் கோபித்ததும், அத்தையின் அறிவுரையும் மட்டுமே மனதில் தோன்றியதால், தான் அலுவலகத்தில் பிஸியாக இருப்பதாக கூறி அவள் அந்த உறையாடலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தாள். இருந்தாலும் அவளுக்கு மனம் வலித்தது. அதன் பின் வேலையில் மனதும் லயிக்கவில்லை.

மேரி வந்து என்ன ஆச்சு என்று கேட்கும்வரை வைதேகி என்ன செய்தாள் என்று அவளுக்கே தெரியாது.

என்னமோ தெரியலை மேரி தலை வலிக்குது என்று சாக்கு சொன்னாள்.

வைதேகியிடம் பேசமுடியவில்லை என்பது வருத்தமாக இருந்தாலும், அவன் சந்தோசமாகவே இருந்தான். கற்பனைக் கோட்டைகள் பல கட்டி இருந்தான் என்றே சொல்ல வேண்டும்.

ராகவ் கற்பனைகளில் பறந்தான், வைதேகியுடன் டூயட் பாடினான் என்றே சொல்ல வேண்டும். கற்பனையில் ராகவ் தனது பைக்கில் வைதேகியுடன் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் பவனி வந்தாள்.

வைதேகிக்கு நிச்சயதார்த்த புடவையில் இருந்து, திருமணத்திற்க்கு கூரைப் புடவை வரை அனைத்தையும் தானே அவளுக்கு ஏற்றார்போல வாங்க வேண்டும் என்று மனதில் நினைத்த நேரத்தில், அவனிடம் காபி கோப்பையை அம்மா கொடுக்க, இங்க உட்காரு வைதேகி என்று சொல்ல, அவள் அம்மா அவனது தலையில் தட்டி வைதேகி வந்தவுடன் உனக்கு இப்படி காபி தர போறாளோ இல்லை நீ அவளுக்கு காபி போட்டு தர போறியோ தெரியலையே என்று அவனை நினைவுலகிற்கு அழைத்து வந்தாள்.

தனது மகன் கனவினை கலைத்து விட்டோமே என்று இருந்தாலும், அவன் அசடு வழியும் காட்சியை தான் ரசித்ததோடு இல்லாமல் அவன் தந்தையையும் அழைத்தாள்.

அவரோ இது எல்லாம் சகஜம் தான், விடுமா அவன் தனது கனவுலகில் சந்தோசமா இருக்கட்டும். காதல் வாழ்க்கை ஆரம்ப காலத்தில் கனவில் சுகம் தான். குடும்ப வாழ்க்கையின் பிரச்சனைகளை நினைத்தால் எவனும் கல்யாணம் பண்ணமாட்டான் மா என்று கனிவாக சொல்ல அவளும் அது சரி தான் என்று நாசுக்காக நழுவினாள்.

மறுபடியும் கனவுக்குள் செல்ல ஆயத்தமானான் ராகவ்….

முன்பக்கம்

அடுத்த பக்கம்

Advertisements

2 thoughts on “வைதேகி8

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s