வைதேகி7

வைதேகிக்கு என்ன மாற்றங்கள் வேண்டுமா என்று கூட அவள் அத்தையைக் கேட்கவில்லை, தாமதமாக எழுந்துவிட்டோமே என்று மட்டுமே இருந்தது. மேலும் அலுவலகம் போக வேண்டுமே என்றும் தான், இன்றைக்கு ஏனோ அவளுக்கு ஆபிஸ் போகும் மன நிலையில் இல்லை. எப்படி இருந்தாலும் வீட்டிற்கு வந்தவர்களிடம் பேசாமல் இருக்க முடியாது.

ராஜேஷை பார்த்து என்ன எப்போது வந்தாய் என்று கேட்டேனே பதிலே சொல்லலை என்றாள். அதற்கு அவனோ கேட்டே தான் ஆனால் நான் பதில் சொல்வதற்குள் நீயே இருடா என்றுதான் போய்விட்டாயே என்றான். சாரி, அப்படியே இருந்தால் ஆபிஸ் போக முடியாது அதான். சரி இப்போ சொல்லு.

நாங்க வந்து 45 நிமிஷம் ஆச்சு என்றான். என்ன நீங்க பேசினதுகூட என் காதில் விழவே இல்லையே என்றாள். அதான் கேட்டேன் என்ன இரவு முழுக்க விழித்திருந்து கனவா என்று???

அப்படி எல்லாம் இல்லைடா என்றாள். அப்படி இல்லையேனு கவலைபடுறா மாதிரி இருக்கே என்றாள் அத்தை. போங்க அத்தை என்று சொல்லி அம்மா கொடுத்த காபியை குடித்தாள்.

என்னடீ நேத்திக்கு உன்னோட ஹீரோ ஆபிஸில் உன்னைப் பார்க்க வந்தானாமே என்றான் ராஜேஷ். அய்யோ அம்மா ஏம்மா இவன் கிட்டே போய் சொன்னே என்று சினுங்கினாள் வைதேகி. அவன் ஒன்னுமே கேட்கலையே உனக்கு அதற்குள் என்ன வெட்கம் என்று அத்தை ஒரு கேள்விக் கேட்கவும், வைதேகி தொடர்ந்தாள். சரி நானே சொல்லிடறேன். ஆமாம் நேற்று எனக்கு ஆபிஸ் நம்பருக்கு ஃபோன் வந்தது என்றாள். அவருக்கு என்னோட சம்மதத்தை அவரிடம் நேரடியாகச் சொல்லனும் என்றார்.

ஆபிஸுக்கு எல்லாம் வரலைடா என்றாள். வரலை இல்லை வரவிடலை. ஆபிஸுக்கு தான் வருவதாக சொன்னார். ஆனால் நான் தான் பஸ் ஸ்டாப்லையே பார்க்கிறேன் என்றேன் என்றாள். அப்புறம் என்ன ஆச்சுனு சொல்லு என்றான் ராஜேஷ், ஆவலாக இருப்பது போல பாவனைச் செய்தான். அவளோ ஒன்னும் ஆகலை என்றாள். ஏதோ கோயிலுக்கு போனீங்களாமே என்றான்? அய்யோ அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டியா என்றாள் வைதேகி??? நீ ஹோட்டலுக்குப் போய் காபி சாப்பிட்டேனு சொல்லவே இல்லைடீ என்றாள் அத்தையும் அவள் பங்குக்கு.

சரி சரி எல்லாம் தான் தெரிகிறதே அப்புறம் என்ன பிரச்சனை என்று கேட்டாள். எப்படி அத்தை நேரில் பார்க்கும்போது முடியாது என்று சொல்வது அதுவும் முதல் முறையாக தனியாக பார்க்கிறோம் ல சகஜமாக பேசுவதாக நினைத்து ஆனால் முகத்தில் வெட்கமும், என்னடா இது மாட்டிக் கொண்டோமே என்றும் இருந்தது.

அப்புறம் உங்க யாருக்கும் தெரியாத ஒரு விஷயமும் எனக்கு தான் முதல்ல தெரியும் என்றாள். என்னடீ என்றாள் அத்தை வேகமாக பயந்தபடியே. பதறாதீங்க இப்போ உங்களுக்கும் தெரிந்து இருக்கும் என்று தான் நினைக்கிறேன், அதான் நிச்சயதார்த்தம் பற்றி பேச தானே அம்மா வரச் சொன்னா உங்களை என்றாள். அவர் எனக்கு தான் முதல்ல சொல்லனும்னு தான் அவர் என்னை நேற்றுப் பார்க்க வந்தார் என்றாள்.

நீ என்ன சொன்னாய் என்று கேட்டான் ராஜேஷ்? இதில் நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? அது ஒரு தகவல் தான் எனக்கு. உங்களிடம் மட்டுமே அபிப்ராயம் எல்லாம் கேட்கப்படும். இப்பவே இப்படி சரண்டர் ஆயிட்டியேடி உனக்கே இது நியாயமா என்றான் ராஜேஷ்.

உன்னோட அம்மா சொல்றதுக்கு முன்னாடியே உன்னோட ஹீரோ எனக்கு ஃபோன் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட்டார். அவர் கூப்பிட்டவுடன் கோயிலுக்கு நீ வந்ததில் ஒரே குஷி போல இருக்கு அதான் எனக்கும் சொல்லிட்டார்.

கோயில் என்பதனால் தாண்டா போனேன் என்றாள். இருந்தாலும் கொஞ்சம் ஜாஸ்தி தான். இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கிறேன் என்றாள்.

எப்படி இருந்தாலும் நான் போயிருக்க கூடாது தான். ரொம்ப மாடர்னோனு நினைத்து இருப்பாங்களோ அவங்க வீட்டில என்று கேட்டாள். ஆஹா இது என்ன பெண்களுக்கு தானாகவே வந்து விடும் ஒரு விஷயம் என்று தனக்கு தானே எண்ணிக் கொண்டாள். உடனே அத்தை இது போவதற்கு முன் நினைச்சிருக்கனும் என்றாள்.

அதான் தப்புனு சொல்லிட்டேனே அத்தை. இனிமேல் நடக்காமல் பார்த்துக்கிறேன் என்றாள். இதுவரை என்னிடம் கோபமே படாத எல்லோரும் என்னைக் கோபித்துக் கொள்கிறீர்கள். உங்க எல்லோரோட கோபத்தோட எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்றாள் கண்களில் வழிந்த கண்ணீரோடு.

அடி அசடே, எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசறே, மொதல்ல கண்ணை துடை என்றாள் அவள் அத்தை. ராஜேஷோ அம்மா அவள் அழுவதே ராகவ்வை வேண்டாம் என்று சொல்லி விட்டோமே என்று தான். அழுதுக் கொண்டு இருந்த வைதேகிக்கும் சிரிப்பு வந்தது. அப்படி எல்லாம் இல்லை டா என்றாள்.

நீ ராகவ்வைப் பார்க்க கூடாதுனு யார் சொன்னா என்றான் ராஜேஷ். நிச்சயதார்த்தம் முடியட்டும் அதுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் வெளியில் போனால் யாராவதுக் கேட்டாள் பெருமையா சொல்லிக்கலாம் இது எனக்காக என்னுடைய வீட்டில் நிச்சயம் செய்த பெண், என்னைக் கல்யாணம் பண்ணிக்க போறார்னு.

அத்தையும் தன் பங்கிற்கு அவளை தேற்றினாள். “ செல்லமே இங்க பாரு என் பட்டு போன்ற பெண் வைதேகி, யாரும் உன் மேல இப்போ இல்லை எப்பவுமே கோபப்பட மாட்டோம். நீயும் இப்படி செய்பவள் இல்லையே என்பதனால் தான் நாங்க சொன்னது எல்லாம். ஆனால் இது கோபம் இல்லை டீ கரிசனம் தான். அதுவும் அன்பினால் தான்.

அவருக்கும்(ராகவ்) அப்படி தானே அத்தை, என் மேல ஏதோ ஒரு அன்பு, பார்த்தவுடன் பிடிச்சுது, எனக்கும் பிடிச்சிருக்கானு கேட்டுத் தெரிஞ்சக்கனும்னு நினைக்க எத்தனை ஆம்பளைங்க இருக்காங்க என்றாள்?

எப்படி எப்படி அவரா?? யாருமா இதைச் சொல்றது என்றாள் பூரணி… என்கிட்டே வந்து என்ன பண்றான் என்று ரெண்டு நாளைக்கு முன்னாடி யாரோ கேட்டா டா ராஜேஷ் என்றாள்.

என்னம்மா இது நீயுமா போம்மா என்று வெட்கப்பட்டாள் வைதேகி.

நான் தான் உன்னை போய்ட்டு வா என் அன்பு மகளேனு உன்னைச் சொல்லனும். நான் எங்கே போறது என்றாள் பூரணி.

ரெண்டு நாளுக்குள்ள அவரு ரொம்ப வேகமா தான் இருக்கா அத்தை, நாம இவளோட கல்யாணத்தை தள்ளி போட முடியாது போல இருக்கே. அம்மாடீ பங்குனி போய் சித்திரைல தான் கல்யாணம் பண்ண முடியும், அதுக்கு முன்னாடி பண்ண முடியாது என்றான் ராஜேஷ் கண்ணடித்துக் கொண்டே.

கொஞ்சம் ஃபைனான்ஸும் ரெடி பண்ணனும். என்ன எதிர்பார்பாங்களோ என்றான் ராஜேஷ். அத்தை இதை எல்லாம் பேசி, பையனைப் பற்றி விசாரித்து அதுக்கு பின்னாடி தான் நிச்சயதார்த்தம் பண்ணனும்.

பத்து நாளில் நடக்கிற விஷயமா இது என்றான். வைதேகி முகத்தைப் பார்த்ததும் சரி சரி இப்பவே பேசிடலாம் வைதேகி. கவலை படாதே என்றான்.  அத்தை இப்பவே ஃபோன் பண்ணுங்க ராகவ் வீட்டுக்கு. என்ன எதிர் பார்க்கிறாங்கனு தெரிஞ்சுகிட்டா அதுக்கு ஏத்த மாதிரி பேசிடலாம்.

அம்மா எனக்கு நேரம் ஆகிறது, நீ எனக்கு சாப்பிட என்ன இருக்குனு சொல்லு என்றாள்?

என்னடீ சுரத்தே இல்லாம கேட்கிற என்றாள். இல்லைமா இதுல பேசறதுக்கு எனக்கு என்ன இருக்கு சொல்லு. நீங்க பேசி முடிவு பண்ண வேண்டியது மா என்றாள்.

சரி நான் இன்னிக்கு ஃபோன் பண்ணிக் கேட்கிறேன் என்றாள் பூரணி. ராஜேஷ் நீயும் ராகவ் அலுவலகத்தில் விசாரிக்க ஏற்பாடு பண்ணு என்றாள். சரி அத்தை. ராகவ்வோட விசிட்டிங் கார்ட் என்கிட்டே இருக்கு என்றான் அவன். நான் ரெண்டு நாளில் சொல்கிறேன்.

வைதேகி உன்னோட சித்தி சித்தப்பா எப்போ வரமுடியும்னு கேட்கனும் அதுக்கு அப்புறம் தானே நிச்சயதார்த்தம் பற்றி முடிவு பண்ண முடியும் என்றாள் பூரணி.

சித்தி சித்தப்பாக்கு ஃபோன் பண்றியா வைதேகி என்றாள் அவள் தாய். அம்மா என்ன விளையாடறியா?? நீ பேசி எப்ப வராங்கனு கேளு என்று சொல்லி அம்மா தந்த பொங்கலைச் ருசித்தாள். ராஜேஷையும் சாப்பிட சொன்னாள், அவனோ அவன் வினோதாவும் அதையே தான் தந்ததாகவும் வேண்டாம் என்றான்.

சரி நான் மாலையில் வினோவைப் பார்க்க வரேன்னு சொல்லு. இப்போ எனக்கு நேரம் ஆச்சு, நான் கிளம்பறேன் என்றாள்.

என்ன ஆனது வைதேகிக்கு ??? கிளம்பியவள் அலுவலகம் வந்தாளா???

முன்பக்கம்

அடுத்தபக்கம்

Advertisements

2 thoughts on “வைதேகி7

  1. தோழி அருமை..வசனங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்..பேச்சு நடையாகவே எழுதினால் இன்னும் சுவாரசியம் கூடும்…

    • நன்றி நண்பா,

      உனது கருத்தினை மனதில் ஏற்றி விட்டேன். வைதேகி9ல் அமல் படுத்தபடும்.

      பேச்சு நடையில் இல்லாமைக்கு நேரமினைமையே காரணம்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s