வைதேகி5

ப்ரியாவோ திரும்பவும் மிகவும் அழுத்தமாக, அவனைப் பார்த்தவுடன் பிடித்ததா என்று கேட்டேன் என்று அவளை ஸ்னேகமாக அனைத்து, உன்னை எங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்றாள் ஒரு அழகான சிரிப்புடன்.

அவனும் நல்லவன் தான், எந்த விதமான பிக்கல் பிடுங்கள் இல்லாத குடும்பத்திற்கு தான் வரப் போகிறாய் என்று வேகமாக சொல்ல, வைதேகியால் சிரிக்கவும் முடியாமல், என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தாள்.

நீ சகஜமான மன நிலையில் இப்போ இல்லை, சரி இப்போதே எதுவும் சொல்ல வேண்டாம். உன்னுடைய அலுவலக எண் கொடு, நேரில் சொல்ல சிரமமாக இருந்தால், நான் நாளை உன்னை தொலைபேசியில் அழைக்கிறேன். அப்போது சொல் என்று தனது நாட்குறிப்பில் அவளது அலுவலக நம்பரை குறித்துக் கொள்ள ஆயத்தமானாள். வைதேகியும் வேறு வழியின்றி அலுவலக எண்ணை கொடுத்தாள்.

அதே நேரத்தில் உள்ளே வந்த ராஜேஷ், அவர்கள் புறப்படத் தயாராக இருப்பதாகவும், ப்ரியாவை அழைத்ததாக கூறினான். ப்ரியாவும் சைகையால் வைதேகிக்கு பை சொல்லி நாளை அழைக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும்படி சொல்லிச் சென்றாள்.

எல்லோரும் புறப்பட்டு போன பின் தன் கையில் காபியுடன் மகளைக் காண பூரணி வந்தாள். கூடவே அங்கு இருந்தவர்கள் அனைவரும் வர, வைதேகி அம்மாவிடம், காபியுடன் ஹாலில் இரும்மா, வேறு உடை மாற்றி வருகிறேன் என்று கூறினாள். ஐந்து நிமிடத்தில் ஒரு நைட்டியுடன் ஆஜரானாள்.

அம்மா உனக்கு பிடிச்சிருக்கா என்று வைதேகி பூரணியைக் கேட்க, அனைவரும் ஒன்றாக நகைத்தனர். என்னடீ இது உன்னைப் பார்த்து அம்மா கேட்க வேண்டிய கேள்வியை நீ அம்மாவைப் பார்த்து கேட்கிறாயே என்று அத்தை அவளைக் கேட்டாள்.

அத்தை உங்களுக்கு தெரியாதா என்ன நான் அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்ய மாட்டேன் என்று. அம்மாவுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் பிடிச்சிருக்கு என்றாள். இல்லைனா என்று ராஜேஷ் கேட்க வைதேகிக்கு கொஞ்சம் முகம் வாடியது, இருந்தாலும் மறைத்துக் கொண்டு எனக்கும் பிடிக்காது என்றாள்.

பூரணியோ ராகவ்க்கு என்ன குறை, லட்சனமாக இருக்கிறார், கை நிறைய சம்பாதிக்கிறார். சகோதரிகளுக்கும் கல்யாணம் ஆச்சு, எதுவும் தொல்லைகள் இல்லையே என்றாள்.

எனக்கு பிடிச்சிருக்கு என்பது முக்கியமில்லை வைதேகி, உனக்கு பிடிச்சிருக்கா என்று பூரணி கேட்டாள். அக்கா எனக்கு பிடிச்சிருக்கு என்றாள் அவளது தங்கை ரம்யா. உனக்கு இப்போ என்னடீ அவசரம் என்று சித்தியும் அவளை சீண்டினாள்.

ஆளாளுக்கு பேசி நேரம் கடத்தாதீர்கள் அவள் என்ன சொல்றா என்று கேட்போம் என்ற ராஜேஷ், வைதேகி நீ சொல்லுடீ உனக்கு பிடிச்சிருக்கா என்று நேரடியாக கேட்கவும். அவள் வெட்கித் தலைகுனிய அடடா மாட்டிட்டானா அந்த ராகவ், இல்லை மயக்கிட்டானா எங்க வைதேகியை என்று இது தான் சந்தர்ப்பம் என்று அவளை ஒரேடியாக கலாய்த்தான்.

வைதேகி எங்கள் அனைவருக்கும் பிடிச்சிருக்கு மா, நீயும் உன் வாயால் ஒரு வார்த்தைச் சொன்னால் எங்களுக்கும் சந்தோசம். மேற்கொண்டு பேசுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றாள் அத்தை.

என்னம்மா கேட்கிற நீ, இப்படி வைதேகி வெட்கப் பட்டு எப்பவாவது நீ பார்த்து இருக்கியா, என்னமோ வாய திறந்து சொல்லுனு, அவ வாயை திறந்தால் இப்போ ஜொல்லு தான் மா வரும் என்று ராஜேஷ் நகைக்க, வைதேகியோ அவனை அடிக்க கை ஓங்கினாள்.

அம்மாடி என்னை அடிக்க என் மனைவி இருக்கா என்று கண்ணடித்தான், உனக்கும் ராகவ் இருக்கான். எப்படி எல்லாம் அடிக்கலாம், அனைக்கலாம்னு நீ கனவு காணு. நான் கிளம்பறேன் போய் வினோதாவை அழைத்து வருகிறேன். அவளும் மிகவும் சந்தோசப் படுவாள் என்றாள்.

ஹே நீ இப்போ போகலைன்னா உன்னை அவ உதைப்பா அதான் ஓடறியா என்றாள் எதிரே அவள் அத்தை இருப்பதையும் மறந்து. சாரி அத்தை என்று அத்தையைக் கட்டிக் கொண்டு. நீ உண்மைய தானே சொன்னே அதற்கு எதற்கு சாரி என்று அத்தையும் தன் பங்கிற்கு ராஜேஷை வாரி விட, இதற்கு மேல் இருந்தால் அவ்வளவு தான் அத்தனை பெண்டிரும் சேர்ந்து தன்னை ஒரு வழியாக்கிவிடுவார்கள் என்று கிளம்பினான்.

மாமி நானும் வினுவிம் அங்கேயே சாப்பிட்டு விடுவோம். எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லி சிட்டாக பறந்தான்.

அந்தப் பக்கம் ராகவ் குடும்பம் காரிலேயே வைதேகிப் பற்றி பேச ஆரம்பிக்க, ராகவ் கொஞ்சம் சும்மா இருங்கப்பா. அந்த பெண்ணிற்க்கு என்னைப் பிடிச்சிருக்கானு கேட்கனும்ல. இது ஒருவர் சம்பந்தபட்டது இல்லையே மா. அவங்க வைதேகியிடம் பேசி அவளுக்கும் பிடிச்சிருக்குனு சொல்லட்டும். அப்புறமா உங்க கேலி கிண்டல் எல்லாத்தையும் நானும் ரசிக்கிறேன்.

என்னவோ தெரியலை ப்ரியா அவளைப் பார்த்ததும் ஒரு நொடி நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். அவ எனக்கு வாழ்க்கை துனையா கிடைச்சா நான் தான் பாக்கியசாலி. அவகிட்டே எப்படி கேட்கிறது அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கானு. நீ கேட்டியா அவகிட்டே என்ன சொன்னா என்று பரபரப்பாக கேட்டதைப் பார்த்த ப்ரியா, அவளுக்கும் உன்னை பிடிச்சிருக்குனு தான்னு நினைக்கிறேன் ராகவ், ஆனாலும் அவள் வாய் திறந்து சொல்லவில்லை. சின்ன பெண்ல, நீ அப்படி சொன்னதும் அவ கொஞ்சம் பயந்துட்டானே சொல்வேன்.

ஆனா அவளோட ஆபிஸ் நம்பர் வாங்கி இருக்கேன், நாளைக்கு நான் கேட்டுச் சொல்றேன் டா என்றாள். அதற்குள் அவன் ப்ளீஸ் எனக்கு அவ நம்பர் குடு, நானே அவகிட்ட கேட்கிறேன். என்ன சொல்ற ப்ளீஸ் என்று தம்பி தவிப்பதை ரசித்தாள். ஆனாலும் அவளுக்கு அவனிடம் வைதேகியின் நம்பரைக் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசனை. எப்படி இருந்தாலும் தெரிந்துக் கொள்ள வேண்டியவன் அவன் தானே என்று தான் குறித்துவந்த எண்ணை அவனிடம் கொடுத்தாள். ஓ லவ்லி என்று தனது சகோதரியின் கண்ணத்தில் தட்டி தன் சந்தோசத்தை சொல்லிட, நான் வைதேகி இல்லை டா என்றாள்.

அவனோ அந்த எண்ணுடனையே டூயட் பாட ஆரம்பித்துவிட்டான் என்னம்மோ அந்த பேப்பர் வைதேகியாகிப் போனது மாதிரி.  இதற்குப் பெயர் தான் காதலோ?

இங்கு  வைதேகி வீட்டில், பூரணிக்குக் காலையில் இருந்த படபடப்பு அடங்கியது. ஆனாலும் தன் மகளைப் பிரியப் போகிறோமே என்று தனக்குள் கொஞ்சம் சோகம் ஆரம்பித்தது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

வீட்டு ஃபோன் மணி அடிக்க, சித்தி வேகமாக ஓடினாள், வைதேகியின் சித்தப்பா தான் என்று தெரிந்ததால். ஹலோ என்று சொல்லாமலே சொல்லுங்க என்றாள் அவள். இம், வந்தாங்க, பையன் நல்லா இருக்கான், குடும்பமும் நல்லாதான் இருக்கு. பையனுக்கு வைதேகியை ரொம்ப பிடிச்சிருக்குனு பட்னு சொல்லிட்டாருங்க.

எல்லாம் ஃபோன்லையே கேட்கனுமா என்று கேட்டு(கோபித்து)விட்டு, வைதேகி சித்தப்பா மேற்கொண்டு பேச எப்போ வரணும்னு கேட்கிறார் என்றாள். நீங்க அவகிட்டயே கேளுங்களேன் என்று சொல்லி வைதேகி சித்தப்பாகிட்ட ரெண்டு வார்த்தை சொல்லுடீ என்று ரிசீவரை அவளிடம் கொடுத்தாள்.

சொல்லுங்கோ சித்தப்பா என்றாள். என்னம்மா உனக்கு பிடிச்சிருக்கா என்றார். இந்தப் பக்கம் அமைதி ஆனாலும் அவர் மௌனம் சம்மதம் என்று அர்த்தம்மா என்றார். சரியா தான் சொல்றீங்க சித்தப்பா என்று அவரிடம் தனக்கு ராகவைப் பிடித்திருப்பதாக நாசுக்காக சொல்லி ஃபோனைத் துண்டித்தாள். மேற்கொண்டு சித்த்ப்பா வந்தவுடன் பேசிக் கொள்வோம் என்று பூரணி சொன்னாள்.

ராஜேஷும் வினோவும் உள்ளே நுழைந்தார்கள். நைசாக வைதேகி உள்ளே செல்ல முற்பட அவளை கை பற்றி இழுத்தாள் வினோ. எங்க ஓடிப் போக பார்க்கிறே என்றாள்.

வாங்க மேடம் உங்களுக்கு இப்போது தான் இந்த வீட்டு வழி தெரிஞ்சுதா? இல்லை உன்னை வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடனுமா. என்னோட தோழியாகவது இருந்து இருக்கலாம்ல. அவனோட சேர்ந்து வந்து இருக்கலாம்ல என்றாள்.

சரி சரி கோபித்துக் கொள்ளாதே. எனக்கும் வரவேண்டும் என்று தான். அம்மாவைப் பார்த்தும் ஒரு மாசம் ஆச்சுடீ. தப்பு தான் சரி சொல்லு எப்படி இருக்கார் உன்னோட ஹீரோ என்று அவள் கேட்கவும் வைதேகி நிஜமாகவே எழுந்து உள்ளே செல்ல முற்பட்டாள்.

இரு வினோதா ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று தனது அறைக்குள் சென்றாள். ராஜேஷும் வினோ நீ போய் அவகிட்ட கேளு என்று சொல்லி அவளை அந்த அறையிலேயே பேசிடச் சொல்லி கண்ணால் சொன்னான். பின்னாலயே வினோவும் சென்றாள். ஹே நான் பாத்ரூம்க்கு போகிறேன் என்றாள். நான் உள்ளே வரலை இங்கேயே இருக்கேன் என்றாள் வினோ.

வெளியில் வந்தவளை, இப்போ சொல்லு உன் ஆளு எப்படி இருக்கான் சாரி சாரி இருக்கார் என்று கேட்டாள். நீ எப்படி வேனும்னாலும் சொல்லு வினோ, நான் ராஜேஷை வாடா போடா என்று தானே பேசுகிறேன் என்றாள். வைதேகி நீங்கள் இருவரும் சிறு வயது முதல் ஒன்றாய் வளர்ந்தவர்கள் அதனால் அப்படி சொல்லும் போது எனக்கு அதில் வேற்றுமை இல்லை. ஆனால் ராகவிற்கு மரியாதை கொடுத்து தானே ஆகனும்.

வைதேகி உனக்கு பிடிச்சிருக்கா ராகவனை என்று என் கண்ணைப் பார்த்துச் சொல் என்றாள். என்ன ஏதோ பழி வாங்குகிற மாதிரி இருக்கு? நான் உன்னிடம் எங்க ராஜேஷை பற்றிக் கேட்ட மாதிரில் கேட்கிற?? அடிப்பாவி நீ எங்கே வைத்துக் கேட்டாய், நான் உன்னைப் பெண் பார்த்துவிட்டு போன ஆளை உனக்கு பிடிச்சிருக்கானு கேட்கிறேன். நீ எனக்கு காதல் கடிதம் கொடுத்தவனை எனக்கு பிடிச்சிருக்கா இல்லையானு கேட்டே… சரி எங்களோடது இனிமையான காதல் தான் ஆனால் ரொம்ப பழசு.

உன் கதைக்கு வா… நீ எப்போ காதலிக்க போறே? அம்மா பிடிச்சிருக்குனு சொல்லிட்டாள், நீ என்ன சொன்னே. சீரியஸா சொல்லு உனக்கு பிடிச்சிருக்கா இல்லையானு? எனக்கும் பிடிச்சிருக்குடீ. ஆனாலும் என்றாள் வைதேகி. அது என்ன ஆனா ஆவனானு, பிடிச்சிருக்கு அவ்வளவு தான்.

எங்களோட கல்யாணம் எப்படி நடந்தது என்று உனக்கு தான் நல்ல தெரியுமே. உன்னோட கல்யாணம் ஊர் கூட்டி மாப்பிள்ளை அழைத்து, ரொம்ப விமரிசையாக செய்ய வேண்டும் என்று ராஜேஷ் ஆசை படுறார்.

உன்னோட கல்யாண வைபோகம் ஆரம்பம் எங்கள் எல்லாருக்கும் சந்தோசம்னு தெரியாதா? நீயும் சந்தோசமா இருந்தா தான் உங்க அத்தை கொஞ்சம் மனசு நிம்மதியாகும். என்ன இருந்தாலும் அவளோட அண்ணன் மகள் நம்ம வீட்டுக்கு வரலையேனு குறை இருக்கும்.

ராஜேஷ் வெளியிலிருந்து குரல் கொடுத்தான், என்ன மகாராணி போகலாமா?? நாளைக்கு ஆபிஸ் போகனும். நீ அவகூட இருந்தா வைதேகியால் கனவு காண முடியாது. வா வா அவளும் நாளை ஆபிஸ் போகனும் என்றான்.

அத்தையும் வினோதாவும் ராஜேஷுடன் கிளம்ப வாசல் வரை வந்து வழி அனுப்பினாள் வைதேகி. சீக்கிரம் போய் சாப்பிட்டுவிட்டு படுக்க போடி என்றாள். நான் நாளைக்கு உனக்கு ஃபோன் பண்றேன் என்றாள் வினோ. அப்போது தான் அவளுக்கு நாளை ப்ரியா ஃபோன் பண்ணுவாளே என்ன சொல்லுவது எப்படி பேசுவது என்று யோசித்தாள்……..

முன்பக்கம்

அடுத்த பக்கம்

Advertisements

4 thoughts on “வைதேகி5

  1. தெளிந்த நீரோடையாய் கதைக்களம் அமைந்துள்ளதே..எனக்கு உள்ளூர ஒரு பயம் எழுகின்றது..எதாவது ஒரு திருப்பம் கதைக்குள் வந்தால் என்னை நிலை குலையச் செய்து விடும்…post பெண் பார்க்கும் படலம் சுவையாய் இருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s