வைதேகி4

பூரணி வைதேகியிடம் அழகு நிலையம் செல்லவில்லையா என்று கேட்க, வைதேகி அலுவலகத்தில் இருந்து தாமதமானதால் நேராக வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொன்னாள். அவளால் அன்று அழகு நிலையம் செல்ல முடியவில்லை. அதைப் பற்றி பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை.

மறு நாளும் இல்லத்திலேயே இருந்துவிட்டாள் வெளியில் எங்கும் செல்லாமல் ஓய்வில் இருந்தாள் என்பதைவிட போக முடியவில்லை. அம்மாவுக்கு உதவியாக வீட்டை சுத்தப் படுத்துவதும், அழகு படுத்துவதுமாக இருந்துவிட்டாள்.

சனி கிழமை இரவே பூரணியின் தங்கை வந்துவிட்டாள். அவளது கணவருக்கு வெளியூர் செல்ல வேண்டியதால் அவரால் வர முடியவில்லை என்றும் கண்டிப்பாக மேற்கொண்டு பேசுவதற்கு அவர் வந்து விடுவார் என்று கூறி அவர் வராததற்காக வருத்த பட்டாள். ஆனாலும் வைதேகி சித்தியிடம், சித்தப்பாவிற்கு வரகூடாது என்ற எண்ணமில்லை. நிஜமாகவே தவிர்க்க முடியாத வேலையாக இருந்து இருக்கும், என்னைவிட அவருக்கு எதுவும் முக்கியமில்லை சித்தி. எனக்காக எதுவும் செய்ய கூடியவர் அவர் என்று அவள் சொன்னது சித்திக்கு பெருமையாகவே இருந்தது.

ஞாயிறு காலை : 9.00 மணி

ஞாயிறு காலை பொழுது விடிந்தவுடனேயே எல்லோருக்கும் ஒரு வித தவிப்பு தொடங்கியது. குடும்பத்திற்கே முதல் பெண் வைதேகி. முதல் முறையாக அவளை பெண் பார்க்க வரப் போகிறார்கள். பூரணிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. என்ன செய்கிறோம், என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தே அவளுக்கு நேரம் போனது. வைதேகியோ அம்மாவை என்னம்மா இது ஒரு கல்யாணம் பண்ற அளவிற்கு இப்படி எதற்கு தவிப்பு. இது ஒரு சம்பிரதாய நிமித்தம் மட்டுமே. கொஞ்சம் நிதானமாகவும், பொருமையாகவும் இரு என்று எந்த ஒரு கவலையும் இல்லாமல் கூறினாள்.

ஞாயிறு காலை : 10.00 மணி

ஆனாலும் பூரணிக்குள் தனது வீட்டில் தன் மகளின் வாழ்க்கைக்காக எடுத்து வைக்கும் முதல் படியை தான் தனியாக இருந்து செய்கிறோமே என்று புலம்பினாள். வைதேகி அதையும் இதமாக, அம்மா அப்பா இல்லாமல் எங்களை இத்தனை ஆண்டுகள் பார்த்துக் கொண்டாய். எங்களின் தேவைகளை அறிந்து நீதானே செய்தாய். என்ன படிக்க வேண்டும் என்று நாங்கள் யோசிக்கும் முன் நீ இதை இதை படித்தால் இப்படி இருக்கலாம் என்று கூறிய நீயா இப்படி கவலைப் படுகிறாய்?.

நீயும் இல்லாமல் இருந்தால் எங்களின் நிலை என்ன என்று யோசித்தால், அப்பா இல்லையே என்ற குறை எங்களுக்கு வரவே வராதே மா என்று அமைதியாக கூறினாள். கவலைபடாதே, அப்பா இல்லை என்பதற்காக எதையாவது நீ கம்மியா செஞ்சியா மா,  எங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் தானே நீ பார்த்துக் கொண்டாய். அப்பா இருந்து இருந்தாலும் கூட இப்படி எங்களை பார்த்து கொண்டு இருப்பாரா என்று தெரியவில்லை. எப்படி தனது மகளுக்குள் இத்துனை பக்குவம் என்று தனது மகளை நினைத்து கர்வப் பட்டாள் பூரணி.

ஞாயிறு காலை : 11.00 மணி

இவ்வாறு பேசிக் கொண்டே இருக்கையில் ராஜேஷ் உள்ளே நுழைந்தான், தன் கையில் பழம், பூ முதலியவைகளோடு. வாடா என்று தன் மருமகனை வரவேற்றாள். உடனே வைதேகி, உனக்கு ஒத்தாசைக்கு பார் வந்துவிட்டான் உன்னோட மருமகன். என்ன வேலை உண்டோ அதை இவனைச் செய்ய சொல். இன்னைக்கு ஒரு நாளாவது நமக்குச் செய்யட்டும், தினமும அவன் மனைவிக்கு மட்டுமே வேலைகளை செய்கிறான் என்று அவனை வம்பிற்கு இழுத்தாள்.

உனக்கும் வேலை செய்யறதுக்குனு ஒரு ஆள் வந்துமாட்ட போறானே என்று  எனக்கும் தவிப்பா தான் இருக்கு என்ன பண்றது, கழுத்துல மூணு முடிச்சு போடும்போதே தெரியாதே இதுகளுக்கு வேலை செய்யறதே நமக்கு வேலையாகும்னு அவனும் அவளை வம்புக்கு இழுக்க பூரணி தனது வயலின் கச்சேரியிலிருந்து விடுபட்டு இவர்களின் சம்பாஷனையில் மூழ்கினாள்.

ராஜேஷ் எங்கடா உன்னோட தர்ம பத்தினி வினோதாவும், உன் அம்மாவும் என்று வைதேகியின் சித்தி கேட்க, நீங்க எப்போ வந்தீங்க மாமி என்று பரஸ்பரம் குசலம் விசாரித்தார்கள். அம்மா இப்போ வந்துடுவா, அவனது மனைவி, அவளுடைய அம்மா வீட்டிற்கு சென்று இருப்பதாகவும், இரவு இவன் போய் அழைத்துவர வேண்டும் என்றும் கூறினான்.

ஞாயிறு பகல் : 12.00 மணி

சரி வாடா சாப்பிட போகலாம் என்று அவனை அழைத்தாள் வைதேகி. என்னடீ இன்னைக்கு உனக்கு பசிக்கிறதா என்றான்? என்ன இது புதுசா கேட்கிற, தினமும் பசிக்கும் தானே? இன்னைக்கு என்ன பசிக்கக் கூடாதா?

உனக்குப் பிடிச்ச உருளை பொடிமாஸ் இருக்கு வா, நல்ல கொட்டிக்கோ என்றாள். எனக்கு வெறும் ரசம் சாதம் போதும். கொஞ்சம் தூங்கனும் என்றாள்.

அப்படியே மொத்தமுமாக எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டது கொஞ்சம் சந்தோசமாக இருந்தது வைதேகிக்கு, ஆனாலும் ஒரு வருத்தம் வினோதாவும், சித்தப்பாவும் இல்லாதது.

ஞாயிறு பகல் : 2.00 மணி

என்ன மாமி ஜாதகம் எல்லாம் பார்த்தாயிற்றா? பையன் எங்க இருக்கான், என்ன பண்றான், விசாரித்து விட்டீர்களா? இல்லைனா, அவனுடைய விவரங்களை என்னிடம் தாருங்கள் நான் விசாரித்து வருகிறேன் என்றான்.

என்ன நீ இப்பவே முடிவான மாதிரி ரொம்ப வேகமா இருக்கே என்று வைதேகி கேட்க, முடிவு என்ன வைதேகி உன்னை வேண்டாம் என்று எந்த மடையனாவது சொல்வானா என்றால். உள்ளே நுழைந்த அவனது தாய் ஒரு மடையன் சொல்லாமல் செய்தானே என்று தன் மகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததை ஜாடையாக கூறினாள்.

அம்மா அப்படி எதுவும் இல்லை. அவளுக்கும் சரி எனக்கும் சரி அப்படி ஒரு எண்ணம் சிறு வயது முதலே இல்லையே மா. என்னோடு கூட பிறந்தவர்கள் இருந்து இருந்தால் ஒரு வேளை இவளை என் மாமன் மகளாக நினைத்து இருப்பேனோ என்னவோ, ஆனால் ஒரே தெருவிலும் வசித்தும், ஒரே பள்ளியிலும் படித்த நாங்கள் எப்போதும் ஒரு சகோதர சகோதரி போலவே இருந்தோம்.

வினோதாவை நான் விரும்புவதாக முதலில் வைதேகியிடம் தான் கூறினேன், அவளும் உனக்கு ஏற்றவள் தான், அத்தையை சமாளித்துக் கொள்ளாலாம் என்று எனக்கு தைரியம் சொன்னதே வைதேகி தானம்மா என்றான்.

உன்னைவிட எனக்கும் வைதேகியின் வாழ்க்கையின் மேல் அக்கறை உண்டு மாமன் மகனாக இல்லை, அவளது சகோதரனாக என்று. என்ன மாமி நான் சொல்வது சரி தானே என்றான். அதற்கு என்னபா நீ சொன்னால் சரியாக தான் இருக்கும் என்றாள் பூரணி.

சரி மாமி சொல்லுங்கோ, அந்த பையன் என்ன செய்யறான், பேரு என்ன, ஜாதகம் பார்த்தாச்சா?

பையன் பேரு ராகவன். வயது 27, அவிட்டம் நட்சத்திரம், ஜாதகம் மட்டும் பார்த்ததாகவும், 8 பொருத்தம் இருப்பதாக தனது ஆஸ்தான ஜோசியர் சொன்னதாக சொன்னாள். ஒரு தனியார் கம்பனியில் பொறியாளராக இருக்கிறான், 7000 சம்பளம் வாங்குகிறான் என்றாள்.

இப்போதே விசாரிப்பதற்கு என்ன அவசரம் என்றும் பூரணி கேட்டாள். வந்து பார்த்து பிடித்து இருந்தால், மேற்கொண்டு விசாரிக்கலாம் என்றாள். நீ தான் கொஞ்சம் இல்லை நல்லா விசாரித்துச் சொல்லனும் என்று மருமகனுக்கு கட்டளையிட்டாள். தங்கள் உத்தரவு என் பாக்கியம் என்று அவனும் விடாது மறுமொழி சொன்னான்.

பையன் வீட்டிலிருந்து ஞாயிறு மாலை என்று தான் சொல்லி இருந்தார்கள் எத்தனை மணிக்கு கிளம்புகிறோம் என்று சொல்லாத காரணத்தினால் ராகு காலம் கழிந்து 6 மணிக்கு பிறகு தான் வருவார்கள் என்று இவர்கள் நினைத்தார்கள்.

ஞாயிறு மாலை : 3.00 மணி

பேசிக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. பையன் வீட்டிலிருந்து ஃபோன் செய்து நாங்கள் இப்போது கிளம்பிவிட்டோம் இன்னும் அறை மணி நேரத்தில் அங்கு வந்துவிடுவோம். ராகு காலம் வருவதற்குள் வந்து பார்த்துவிடுகிறோம் என்று கூறினார்கள். வழி தெரியாவிட்டாள் யாரையாவது அனுப்பவேண்டும் என்று சொல்லி கட்டானது அந்த ஃபோன். அனைவரும் விழித்தனர்.

வைதேகியிடம் சீக்கிரம் தயாராகுமாறு சொல்ல, அவளோ இன்னும் 30 நிமிடத்தில் ஐந்து முறை தயார் ஆகலாம். நோ டென்ஷன் ப்ளீஸ் என்றாள். அவளது தங்கையோ அக்காவிடம், இந்த கலர் புடவை கட்டிக்கோ என்று சிகப்பு நிற பட்டுப் புடவை ஒன்றை எடுத்து தர, ராஜேஷும் ஹே இது சூப்பரா இருக்கு இதையே கட்டிக்கோ என்றுச் சொல்ல, அதற்குச் சரியாக சேரும் ரவிக்கையை தேடி எடுத்தாள். சரி எனக்கு 10 நிமிடம் கொடுங்கள் என்னை தயார் படுத்திக் கொள்கிறேன் என்றாள். ஹே என் ஆளு வரப் போறான், நான் ரெடியாகனும் எல்லாரும் இந்த அறையை விட்டு வெளியே செல்லுங்கள், என்று நாசுக்கா சொல்றா என்று கிண்டல் செய்த படியே அவன் நகர, எல்லோரும் வெளியே ஹாலுக்கு வந்தார்கள்.

அவள் தனது அறையில் ஒரு டவலுடன், குளியலறைக்குச் சென்றாள். முகம், கை, கால் அலம்பி அவள் மெதுவாக தனது கூந்தலை வருடிய படியே குளியலறையிலிருந்து வந்தாள். நேரமானதைக் கண்டு வேகமாக அவளது அந்தக் கூந்தலை பின்னினாள். முகத்திற்குச் சிறிது பவுடர் பூசினாள். எப்போது வைக்கும் வட்ட பொட்டினை வைத்தாள். நெற்றியில் போட்டுடன் எப்போதும் வைக்கும் சிறிய விபூதியும், அந்த வட்ட பொட்டிற்குக் கீழே ஒரு சிறிய கீரலாக சிகப்பு நிற குங்குமும் இட்டாள்.

ஞாயிறு மாலை : 3.20 மணி

புடவையைக் கட்ட ஆயத்தமானாள். வீட்டு வாசலில், ஒரு கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்டாள். ஆவல் மிகுதியில் வாசலில் எட்டிப் பார்த்தாள் அதற்குள் வீட்டிற்குள்ளிருந்து ராஜேஷும், பூரணியும், மற்றும் அவளது மாமாவும் வாசலுக்குச் சென்று காரிலிருந்தவர்களை வரவேற்றார்கள் தான் ஆனாலும் அவளை பொருத்தவரை மறைத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அவளது தங்கை ரம்யா குரல் கொடுத்தாள் அக்கா ரெடியா என்று. இதோ ஆச்சு டீ என்று புடவையை கட்டினாள் வேகமாக.

ராகவன் வீட்டிலிருந்து, அவனது, தாய், தந்தை, மற்றும் அவனது சகோதரிகள் இருவரும் வந்திருந்தனர். அவர்களை அன்போடும், மரியாதையாகவும் உள்ளே அழைத்து வந்தான் ராஜேஷ். வைதேகியின் உறவுகள் அனைவரையும் அவர்களுக்கு அறிமுக படுத்தினான், இது வைதேகியோட அம்மா பூரணி, சித்தி, அத்தை, அவளது தங்கை ரம்யா என்றும் நான் வைதேகிக்கு மாமவோட மகன் என்றும் தான் அந்த வீட்டில் ஒரு மகன் போல என்று அவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கும் முன்னரே கூறினான்.

ராகவனும் – ஐம் ராகவ், என்னோட அப்பா, அம்மா, இவர்கள் இருவரும் என்னோட சகோதரிகள். எங்களோட்து இப்போ ரொம்ப சின்ன குடும்பம், நான் எனது பெற்றோர் மட்டுமே. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி அவர்களும் சென்னையிலேயே இருக்கிறார்கள் என்று ஒரு தன் குடும்பத்தைப் பற்றி சொன்னான்.

பெண்ணைப் பார்க்கலாமா என்று ராகவனின் தந்தைக் கேட்க, ஐந்து நிமிடம் கொடுக்கவும் என்று கூறி ராஜேஷ் வேகமாக உள்ளே சென்றான். வைதேகியின் அருகே சென்றவன் ஆச்சரியப்பட்டான். ஹே என்ன இது உனக்குள்ளும் பயமா?? என்ன டென்ஷன் ?? இந்த முகத்தோட போனாய் என்றால் எல்லாருக்கும் தெரிந்து விடும் நீ பதட்டபடுகிறாய் என்று. வைதேகி ஒரு விஷயம் சொல்லவா, அவன் ரொம்ப நல்ல இருக்கான், உனக்கு ஏற்றார் போல தான் இருக்கான், எதற்கும் பதட்டபடாதே, உனக்கும் பிடிக்கும் என்று தான் நினைக்கிறேன். என்னை விட நல்ல உயரம், நல்ல நிறம், கொஞ்சம் பாடி பில்டர் மாதிரி இருக்கிறான். உனக்கு பிடித்த காம்பினேஷன்ல பேண்ட் ஷர்ட் போட்டு இருக்கிறான் என்று ஏகத்துக்குச் சொல்ல, இவளே நீ என்னை இன்னும் டென்ஷனாக்கப் பார்க்கிறாய். எனக்கு இந்த வேஷம் எத்தனை நேரத்திற்கு என்று நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன். வேற ஒரு டென்ஷனும் இல்லை என்றாள்.

ஞாயிறு மாலை : 3.30 மணி

அப்படி என்றால் சரி வா போகலாம் என்றான். ஹே இந்த புடவையில் நான் எப்படி இருக்கேனு சொல்லவே இல்லை? எல்லாம் ஓகே தானே என்றுக் வைதேகிக் கேட்க அவனோ ஓரக்கண்ணால் பார்க்க இவளோ வெட்கப் பட்டு சிரிக்க இது தான் சந்தர்ப்பம் என்று அவளை வா போகலாம் என்றான். ஹே நீ அங்க போய் அவங்களுக்கு காபி எல்லாம் கொடுக்க வேண்டாம், வெறும் நமஸ்காரம் மட்டும் பண்ணு போதும் என்றான்.

வைதேகியின் சித்தி அவர்களுக்கு காபி எடுத்துச் செல்ல, அதற்குள் வைதேகியும் அங்கு அதே நேரத்தில் வர அவளிடமே  காபி ட்ரெயைக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்தாள்.

நேராக அவனது பெற்றோருக்கு கொடுத்து பின்னர் ராகவனுக்குக் கொடுத்தாள். ஒரு பார்வை இருவரும் ஒருவருக்கொருவர் பார்வைகளை பரிமாறிக் கொண்டனர். அவளையும் மீறி சிரித்தால் காரணம் அவளுக்கு பிடித்த நீலக் கலர் சட்டையும், லை சாண்டல் கலர் பேண்டில் இருந்த ராகவன் அழகாக மட்டுமில்லை, கம்பீரமாகத் தான் இருந்தான்.

ஞாயிறு மாலை : 3.32 மணி

அந்த ஒரு நொடிப் பார்வை தான் அவர்களின் வாழ்க்கை ஆரம்பிக்க போகிறது என்று ராகவனுக்கு மணி அடித்ததோ. அவள் நமஸ்கரித்தாள் பின்னர் பாடத் தெரியுமா என்று சம்பிரதாயக் கேள்விகள் கேட்டது என்று எதுவும் ராகவன் காதில் விழவில்லை.

வைதேகியை நீ உள்ளே போ என்று ராஜேஷ் சொல்லியதில் நிஜமாகவே ஒரு சகோதர கரிசனம் தெரிந்தது. அவள் அங்கு அவளாக இருக்க முடியாத நிலை என்பதை நன்கு உணர்ந்தவனாதலால் அவளை உள்ளே செல் என்று உத்தரவே போட்டான். அவளும் இது தான் சாக்கு என்று உள்ளே செல்ல ஆயத்தமானாள்.

ராகவனுக்கு அப்போது தான் விழித்தவன் போல அவளைப் பார்த்தான். பார்த்த அந்த நொடியில் என்ன தோன்றியதோ தெரியவில்லை. எனக்கு உங்க பெண்ணை பிடித்திருக்கிறது. அவளுக்கு என்னைப் பிடித்து இருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்றான்.

வைதேகிக்கு அதிர்ச்சி என்றே சொல்லலாம். ஒரு நிமிடத்தில், ஒரே பார்வையில் அவளை பிடித்திருக்கிறது என்று சொன்னதாலா? அதனைக் கேட்டவாறே அவள் உள்ளேச் சென்றாள். அதனை ஒரு நொடியில் அவள் முகத்தில் காட்ட அதனை அவனது சகோதரி ஒருவள் பார்த்து அவளுடனேயே உள்ளேச் சென்றாள்.

வைதேகி உள்ளே சென்றவுடன், அவளது அம்மா, சித்தி, ராஜேஷ் என்று அனைவரும் உள்ளே செல்ல முற்படுகையில், ராகவனின் சகோதரி ப்ரியா உள்ளே அவளுடன் இருப்பதைக் கண்டு அமைதி காத்தனர்.

வைதேகி, நீ ரொம்ப அழகா இருக்கே, என்னோட தம்பிக்கு மனைவியாக போகிறாய், நாங்கள் வாங்கி வந்த இந்த பூவினை நானே வைத்துவிடவா என்று கேட்டபடியே அவளது தலையினில் அவள் கையில் கொண்டு வந்த மல்லிகைப் பூவினை வைத்தாள். ப்ரியாவோ தன்னை ராகவனின் அக்கா என்றும் அவன் அவர்கள் வீட்டுச் செல்லப் பிள்ளை என்றும். தனது தம்பியைக் கைபிடிப்பவள் கண்டிப்பாக பாக்கியச்சாலி என்றும் சொல்லி உனக்கு என் தம்பியைப் பிடிக்கலையா என்ன? உன் முகத்தினில் நான் மாற்றத்தினைக் கண்டேன் என்றாள். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, ஒரு அதிர்ச்சி தான் இப்படி நான் எதிர்பார்க்கலை. அவன் எப்பவுமே அப்படி தான் பட் என்று சொல்லிடுவான்.

ஆனாலும் உனக்குப் பிடிச்சிருந்தால் மட்டுமே மேற்கொண்டு பேசலாம் என்று அவன் சொன்னானே. உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா என்று சொல் என்று ப்ரியா தொடர்ந்தாள்.

வைதேகி என்ன சொன்னாள்

முன்பக்கம்

அடுத்த பக்கம்

Advertisements

6 thoughts on “வைதேகி4

 1. நாள்,நட்சத்திரம்,மணி நேரம்னு போறதப் பாத்தா சொந்தக் கதை மாதிரி தெரியுதே???இவ்ளோ நாள் கதையா இருந்தது ,இப்போ ஸ்க்ரீன் ப்ளே ஆகிடுச்சி..அருமை!

  • தோழா,

   ஏதோ உன்னுடைய கவிதையின் பொய்யா, நிஜமா என்று கேட்டதற்காக இப்படியா???
   என்னப்பா இது ஏதோ சுவாரஸ்யத்திற்காக நான் நேரம் காலம் எல்லாம் கொடுத்தேன்.
   அவ்வளவு தான்.

 2. “””பையன் பேரு ராகவன். வயது 27, அவிட்டம் நட்சத்திரம், ஜாதகம் மட்டும் பார்த்ததாகவும், 8 பொருத்தம் இருப்பதாக தனது ஆஸ்தான ஜோசியர் சொன்னதாக சொன்னாள்””””

  என்ன அனு! எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்.இன்னும் பழைய பஞ்சாங்கம் போல் ஜாதகம் பார்த்துக்கொண்டு? இதை எல்லாம் நம்புகிறீர்களா???

  கதையின் முன் பகுதியில் வைதேகி முற்போக்கு சிந்தனை உள்ளவள் எனத்தோன்றியது…இங்கு வழக்கம் போல் பெண் பார்க்கும் படலம்…நல்ல வேலை …. பாடாமல் போய் விட்டீர்கள்…என்ன பாட்டு???? ஹாங்…..

  வசந்தத்தில் ஓர் நாள்

  பவுர்ணமி நேரம்

  வைதேகி காத்திருந்தாலோ…… என் தேவி….

  ஆமாம்…………. அனு………………… வைதேகி இருக்கட்டும்…..உங்களுக்கு சங்கீதம் தெரியுமா???

  • சங்கீதம் கேட்க தெரியும், ரசிக்க தெரியும்.
   இந்த கதை ஆரம்பித்தது 18 ஆண்டுகள் முன்னர் சார்.
   கண்டிப்பாக ஜாதகத்தை நம்புகிறேன்.

   நம்பிக்கை தானே வாழ்க்கை ! ! !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s