வைதேகி3

வேலை நிமித்தமாக பல உளைச்சல்களுக்கு இடையில், என்னோட வைதேகியின் கதை மனதில் ஓடிக் கொண்டே இருந்தாள். கட்டுபடுத்தி எனது அலுவலகத்தில் இருக்கும் வேலைகளுக்கு மனதை திருப்ப அரும் பாடு பட்டேன். ஆனாலும் எனக்குள் அன்றே தோன்றியதை எழுதியிருந்தால் இப்போது பெண் பார்க்கும் வைபவம் முடிந்து இருக்கும்… ஆனால் இப்போது கொஞ்சம் கதையை இழுத்துவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்….

வைதேகி காத்திருந்தால், எல்லோருக்கும் இந்த பெண் பார்க்கும் தருணம் என்பது கனவுகளோடும், தன்னைக் காண வரபோகும் அந்த மனிதன் எப்படி இருப்பானோ என்ற கவலையும், அவனுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று யோசிப்பார்கள். ஆனால் வைதேகியோ, அந்த ஆணவமான ஆண்மகனை காண்பதற்கு காத்திருந்தாள் என்றே சொல்ல வேண்டும். அத்தனை ஆத்திரம், கோபம் அவளுக்குள். இத்தனை பெண்களை எப்படி வேண்டாம் என்று ஒருவனால் சொல்ல முடிந்தது? அப்படி என்ன தான் எதிர்பார்த்தான் அவன் என்று அவளுக்குள் ஒரு கொலைவெறியே இருந்தது முன்பின் தெரியாத அந்த நபர் மேல்.

ஆனாலும் அவளுக்குள் ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்றே சொல்ல வேண்டும். தன்னை முதன் முதலாக காண வருப்போகிறவனைப் பார்ப்பதற்கு. இம்ம் எதிர் பார்ப்பு இருந்தது, மற்றபடி தவிப்போ அல்லது ஒரு பதட்டமோ இல்லை. அவளின் அழகு மேல் அவளுக்கு ஒரு அபரிமிதமான நம்பிக்கையா அப்படி ஒரு எண்ணம் இல்லை அப்படியே இருந்தாலும் அதில் தவறில்லையே. அவளைப் பார்த்தபின் அவளையும் பிடிக்கவில்லை என்று சொன்னால் ஒன்பதோடு பத்தாக அவள் இருப்பால், அதுவே இவள் அவனை வேண்டாம் என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று பலவாறு தன்னை தயார் செய்து கொண்டு தான் இருந்தாள்.

வெள்ளிக் கிழமை காலையில் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் நேரம்,  அலுவலகதிலிருந்து வரும் போது தான் எப்போதும் (எப்போதாவது  தான்) செல்லும் அழகு நிலையம் சென்று புருவத்தை கொஞ்சம் அழகாக தீட்டிக் கொள்வோமா என்று யோசித்தாள். அதே நேரம் பக்கத்து வீட்டு ரேடியோவிலிருந்து பாடல் ஒன்று (அழகன் படத்திலிருந்து — சங்கீத ஸ்வரங்கள்) அங்கே இரவா பகலா… எனக்கும் மயக்கம் என்ற பாடல் வர, ஒரு நிமிடம் நின்று ரசிக்க, முதல் முறையாக கல்யாண மயக்கத்தில் தனக்குள் சிரித்துக் கொண்டே செல்ல, எதிரே அவளது அத்தை வந்தாள், அவளது சிரிப்பிற்கான காரணம் என்னடி பொன்னே என்று கேட்டபடியே வாசல் கதவினில் கை வைத்தாள். என்னடீ சிரிப்பு என்ற கேள்வியுடன் அருகினில் வந்து பாசமாக அனைத்தாள். அவளிடம் என்னடி எப்போது வருகிறார்கள் அந்த பையன் வீட்டில் இருந்து என்று கேட்டாள்.  அது சரி எப்போ வந்தாலும் இதே சிரிப்போட இரு. இந்த சிரிப்பினை கண்ட பின் எவன் உன்னை வேண்டாம் என்று சொல்வான் என்று தன் மருமகளின் அழகை ரசித்து, அனைப்பினில் ஒரு அழுத்தத்தை தர, போதும் அத்தை எப்போது கேளி, கிண்டல் தானா என்று பொய் கோபம் கொண்டாள். என்னடீ நிஜமாகவே கோபமா என்று மேலும் அவளை சீண்டினாள். அய்யோ அத்தை, நேரமாச்சு நான் கிளம்பறேன், சாய்ந்திரம் வந்து பேசறேனே என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள் இல்லை ஆளைவிடு என்று வெட்கத்தோடு ஓடினாள் என்றே சொல்ல வேண்டும்.

அத்தை உள்ளே பூரணி என்று குரல் ட்கொடுத்துக் கொண்டே சென்றாள். அவளை வரவேற்று, சாப்பிட வாருங்கள் என்றாள் பூரணி. என்னடி இது அடுத்த வீதியில் இருக்கிறேன். எனக்கு என்ன இந்த உபசாரம் என்றாள். என்ன நீ ஆபிஸிக்கு போகலையா, இன்னும் கிளம்பமா இருக்கியே என்றாள். போக வேண்டும், கொஞ்சம் மனசே சரி இல்லை அதனால் இன்று தாமதமாக வருவேன் என்று சொல்லி இப்போ தான் ஃபோன் பண்ணினேன் என்றாள். ஏன் என்ன ஆச்சு டீ இப்போ?? உனக்கு என்ன உடம்பு எதாவது சரியில்லையா என்றாள் மிகவும் அக்கரையாக.

அதற்கு பூரணியோ தனக்கு பயமாக இருக்கிறது, வைதேகி என்ன நினைக்கிறாள் என்றே புரியவில்லை.

நாங்கள் இருவரும் நல்ல நேசத்தோடு இருந்தாலும், அவள் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்வாளோ என்று பயமாக இருக்கு என்று புலம்பினாள். அத்தையோ மிகவும் சாதரணமாக அவளிடம் இது ஒரு பெரிய விஷயமில்லையேடி. அவளுக்கு பிடிச்சிருந்தா தானே நாம் மேற்கொண்டு பேசுவோம். அவளுக்கும் தெரியும் அவளுக்கு பிடித்தால் மட்டுமே நாம் மேற்கொண்டு பேசுவோம் என்று அவளுக்கு உன் மீது அத்தனை நம்பிக்கை. போடி போய் வேலையை பாரு எதுக்கு தான் கவலை படறது என்று இல்லையா உனக்கு. நீயா கவலை படுகிறாய் என்று பூரணியையும் கேளி செய்தாள்???

மேலும் அவள் வீட்டு வாசலில் கண்ட காட்சியை சொன்னாள். உன் பெண் ஒன்றும் சிறுமி இல்லை. கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல சன்யாசினியும் இல்லை. இப்போது வேண்டாம் என்று இருந்திருந்தால் அவள் வரன் பார்க்கட்டுமா என்று உன் தங்கை கேட்ட போதே வேண்டாம் என்று சொல்லி இருப்பாள். அப்பா இல்லாமல் அம்மா கஷ்ட படக் கூடாது என்பதில் எங்கள் எல்லோரையும் விட வைதேகி மிகவும் யோசிக்கிறவ. அவளுக்கும் தெரியும் அவளுக்கு பிறகு ரம்யா இருக்கா என்று.

ஆனா ஒன்னு சொல்றேன், அவள் இந்த வரன் வேண்டாம் என்று சொன்னால் அவளை கோபித்துக் கொள்ளாதே. அவளுக்கு எது சரி வரும் என்று நன்றாகத் தெரியும். அவளுக்குப் பிடிக்கலை என்றால் வேறு வரன் பார்த்துக் கொள்ளலாம் என்ன என்றாள். அவளோட வாழ்க்கை என்பதை விட அம்மா நமக்கு நல்லது தான் செய்வாள் என்ற நம்பிக்கை நம்ம கொழந்தை கிட்டே இருக்கு. அப்படி பட்டவளுக்கு, நீ அவளுக்கு பிடித்தமான வாழ்க்கையை தான் தரனும் டீ என்று தன் பேச்சிற்கு முற்று புள்ளியிட்டாள்.

ஏதோ நீங்க இப்போ சொன்ன வார்த்தை ஆறுதலாக இருக்கு. எப்படி உங்களுக்கு நன்றி சொல்வேன் என்றாள் தன் நாத்தனார் தனக்கு கூறிய அறிவுரைக்கு. நான் என்னடி செஞ்சேன், ஏதோ எனக்கு தெரிந்ததை, மனசுல பட்டதை சொன்னேன் என்றாள். நான் எள் என்றால் நீ எண்ணையாக வருவாய், நான் சுள் என்றாலும் கோபம் கொள்ளாமல் என்னோடு அன்பாக இருக்கும் உனக்கும், உன் மகள்களுக்கும் என்னால் வேறு என்ன  செய்ய முடியும் சொல்.

அத்தைக்கு மனது நிறைய குறை தான் அவளது மகன் ராஜேஷ்க்கு வைதேகியை கல்யாணம் செய்யலையேனு. என்ன செய்வது, அவன் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்னை நேசித்து திருமணமும் செய்துவிட்டானே….

சரி உன் தங்கை எப்போ வரா என்று கேட்டுக் கொண்டே கிளம்ப ஆயத்தமானாள். இப்படியே யோசித்துக் கொண்டு இருக்காதே. நாளைக்கு வைதேகியை லீவு போட்டு விட சொல். வீட்டு வாசலில் பாரு ஒட்டடையா இருக்கு. அவளை அந்த வேலையை மட்டும் பார்க்க சொல். எப்போதும் போல அவளே வெளியில் கடைக்கு போய், பூ பழம் என வாங்க அனுப்பாதே. நான் ராஜேஷை வாங்கிட சொல்றேன் என்றாள். சரி நான் கிளம்பறேன் எல்லாம் அப்படியே போட்டபடி இருக்கு. அவா ரெண்டு பேரும் ஆபிஸ் கிளம்பின கையோட நான் கிளம்பி வந்துட்டேன்.

எப்போதும் போல முதல் ஆளாக அலுவலத்திற்குள் வைதேகி ஒன்பது மணிக்கு முன்னரே ஆபிசிற்கு வந்து விட்டாள். புது அலுவலகம் என்பதால் இல்லை, அது அவளது தாயிடமிருந்து கற்ற பாடங்களில் மிகவும் முக்கியமானது. எந்த இடமாக இருந்தாலும் ஐந்து நிமிடம் முன்னர் இருக்க வேண்டும் என்று சொல்லியே அவளை வளர்த்தாள். எப்போதும் வேலை என்பது பேருக்கு செய்ய கூடாது என்று தான் வேலைக்கு கிளம்புமுன் மகளை அனுப்பிவிடுவாள்.

அன்று அலுவலகம் வந்தவுடன் முதல் வேலையாக தனது மேலாளர் வந்து விட்டாரா என்று நோட்டம் விட்டாள். அவர் எப்போது பத்து மணிக்கு மேல் தான் வருபவர். பாவம் 70 கிமீ தூரம் பயணம் செய்பவர். ஆனால் அவள் எட்டிப் பார்க்க அங்கே அவர் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டாள். சரி யாரும் வந்து அவரிடம் பேச ஆரம்பிக்குமுன் தான் போய் பேசி விட்டு வந்துவிடலாம் என்று அவரது அறைக்குள் நுழைய கதவினில் டொக் டொக் என்றால். அவரது யெஸ் என்ற குரல் கேட்டு உள்ளே சென்றால், என்னமா என்றார். நாளை ஒரு நாள் தனக்கு விடுமுறை வேண்டும் என்றாள். அவள் மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடப்பதானால் ஏன் எதற்கு என்று எந்த தேவையில்லாத கேள்வியும் கேட்காமல் சரி என்று அவர் சொன்னதைக் கேட்டதும், நாளை முடிக்க வேண்டிய வேலையும் இன்று முடித்துவிட்டுச் செல்கிறேன் என்றாள். முடிந்தவரை செய். பின்னர் திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளலாம்.

தன்னுடைய இருக்கைக்கு வந்தவள் தனது வேலையை செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு ஆபிஸ் பையன் காபி கொடுத்திடும்போது தான் பார்த்தாள் மணி 11.30 அதுவரை நேரம் போனதே தெரியவில்லை. அவளது அருகினில் இருந்த மேரி என்ன பா நாளை லீவாமே என்ன விஷயம் என்றாள். அவளிடம் அதிகமாக அந்த அலுவலகத்தில் பேசும் இருவரில் ஒருவள் மேரி, மற்றும் ஒருவன் இப்போது காபி கொடுத்துவிட்டு போன இஸ்லாம். பொதுவாக அம்மா கை ஃபில்டர் காபியை தவிர்த்து வேறு எங்கும் காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவள். இந்த அலுவலகத்தில் வந்த அன்று இஸ்லாம் தந்த இன்ஸ்டண்ட் காபியின் சுவையினால் இப்போது தினமும் இரண்டு காபி அதிகமாக குடிக்கிறாள்.

மேரியின் கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு சிரிப்பினை பதிலாக்கி வேலையில் மூழ்கினால். சொல்லக் கூடாது விஷயம் என்றால் சொல்ல வேண்டாம் என்று மேரியும் நாசுக்காக கூற, சொல்லக் கூடாத விஷயம் என்று அப்படி எதுவும் இல்லை. வேலை முடித்தவுடன் சொல்கிறேன் என்றாள்.

அப்படியே அன்றைய நாள் முழுவதும் வேலையிலேயே மூழ்கிப் போனாள். எல்லோரும் கிளம்பும் முன் கிளம்பி விடுபவள். அன்று அவளது வேலையில் தன்னை மறந்தாள்.

எப்போ கிளம்ப போறீங்க மேடம் என்று இஸ்லாம் கேட்க, தனது கைகடிகாரம் ஆறு மணி கடந்து முப்பது நிமிடங்கள் ஆனதை சொன்னது. ஐந்து நிமிடம் கொடுப்பா என்றாள். தனது வீட்டிற்கு ஒரு ஃபோன் செய்து தனது தங்கை ரம்யாவிடம் இப்போது தான் கிளம்ப போகிறேன் அம்மா வந்தவுடன் சொல்லிடு என்று கூறி அலுவலகத்திலிருந்து புறப்பட்டாள்.

எப்போதும் போல பேருந்து கூட்டமாக இல்லாமல் அதிசயமாக அவளுக்கு அமர்ந்து செல்ல இடம் கிடைக்க, பரவசத்துடன் அன்றைய தினம் எப்படி போனதே தெரியவில்லை என்று யோசித்தாள். பேருந்திலிருந்து இறங்கி, வீட்டை நோக்கி நடந்தாள். எப்போதும் வீரு நடை போடுபவள் இன்று அன்ன நடைபோட்டு சென்றது அவளுக்கே வினோதமாக இருந்தது. பின்னர் தனது நடையை துரிதப் படுத்தினாள். மாற்றங்கள் இல்லாதது எதுவுமில்லையோ…..

முன் பக்கம்

அடுத்த பக்கம்

Advertisements

5 thoughts on “வைதேகி3

  1. நீங்கள் மேற்கூறிய மாதிரி கொஞ்சம் இழுத்துதான் விட்டீர்கள் ..மற்றபடி,வைதேகியின் எதிர்பார்ப்பு சுவை கூட்டுகிறது..

  2. ஒரு சின்ன நெருடல்….வைதேகிக்கு ராஜேஷ் மேல் காதலா??? எனக்கு மட்டும் சொல்லுங்களேன்??? உறவு முறையில் மணப்பது எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று…நானும் மாமன் பொண்ணைக் கட்டியவன் தான்…..

    • இல்லை ராஜேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சி சார்… மேலே படியுங்கள் அவர்களின் உறவு எப்படி என்று தெரிந்து கொள்வீர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s