வைதேகி காத்திருந்தாள்-2

ஆரம்பம் என்னமோ அரை மணி நேரத்தில் எழுதிவிட்டேன், ஆயினும் அடுத்து இந்த கதையை எப்படி எடுத்துச்(இழுத்து) செல்வது என்று சிறிது தயக்கமே. தெரிந்தவர்கள் பலரும், என்னை அறியாதவர்களும் கூட அருமை என்று சொல்லியது கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும் ஒருவித பயம் எனக்குள் வந்தது. இந்த கதையோடு என் வாழ்க்கையும் இனைத்து விடுவார்களோ என்ற அச்சமும் எனக்குள்ளே எழுந்தது. எது எப்படி இருப்பினும் என்னுடைய கற்பனையை கட்டி போட மனமில்லாமல் தொடர்கிறேன்.

வைதேகியிடம் அவளுக்காக வரன் பார்க்க ஆரம்பித்தவுடனே அவளது உறவினர் கேட்ட முதல் கேள்வி உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று தான். அவளோ மிகவும் சாதரணமாக என்ன கமல் மாதிரி அழகா, அமிதாப் மாதிரி உயரமா, அப்படி இப்படினு கேட்டா உங்களால பார்க்க முடியுமா? ஏதோ எனக்கு யார் சரியா வருவாங்களோ அப்படி  பாருங்க என்று நறுக்கென்று சொல்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னால்.

தேடுதலே வாழ்க்கை இதில் இவர்கள் யாரைத் தேடி தந்தாலும் அவனுடன் சேர்ந்து தான் வாழ்க்கையை தேட போகிறோம்.

கனவுகள் பொங்கி வழிதலும் (அவளும் தான்) தனக்கானவனை எப்படி இருப்பான் என்று நினைத்து உள்ளம் பூரித்தலோ என்று எந்தக் கல்யாணக் கனவுகள் இல்லாமல், கவனம் சிதறாமல், காதல் சிறிதுமில்லாமல் எப்படி இருக்க முடிந்தது என்று வைதேகி இன்று யோசித்துக் கொண்டிருக்கிறால். 17 வருடங்களுக்கு பிறகு.

கண்ணனின் கோதைக்கு அவனை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சில் பரவசம் என்று கூட படித்ததில்லையா? இன்று யோசிக்கும்போது எப்படி ஜடமாக இருந்திருக்கிறாள் என்று உணர்கிறாள் தனக்குள்ளேயே நானி கோனுகிறாள் வைதேகி.

புதிதாக வேலைக்குச் சேர்ந்து சில நாட்களே ஆன காரணத்தினாலோ என்னமோ இந்த விவரம் பற்றி பேசுவதற்கு அவளுக்கென்று நெருங்கிய தோழிகள் அந்த நேரத்தில் யாரும் இல்லாமல் போனார்கள்.

நான் ஒரு தனிமை விரும்பியோ? ஆனால் தனிமை என்பது தேடினாலும் கிடைக்காது. தனிமையில் இனிமையை ரசித்தவள் தான் இந்த வைதேகி. நான் விரும்பிய தனிமை என்னை சுடுகிறதோ? என்று தன் வாழ்க்கையை அசை போடுகிறாள் வைதேகி இப்போது. தனிமை தந்த பாடங்களால் மட்டுமே அவள் வாழ்க்கையை அசை போடுவது. கூகிலில் கிடைக்காத ஞானமும் தனிமையில் கிடைத்திடும். இப்போதும் தனிமை என்பது இனிமை தான்.

ஆனால் ஆசைகளே இல்லாத கல் மனம் கொண்டவள் இல்லையே. அவளுக்கான அவனைப் பற்றி கற்பனை செய்தது இல்லை என்று சொல்ல முடியாது. அந்த தெரியாத நபரிடம் காதல் இல்லை என்றும் சொல்ல முடியாது. திருமணத்திற்கு பிறகு தான் காதல் என்பதில் அவள். நான், நீ என்றும், எனக்கான நீ, உனக்கான நான் என்று யோசிப்பதில் சிறிதும் நம்பிக்கை இல்லாதவள். நாம் இருவரும் சேர்ந்து ஒன்றாக யோசிப்போம், யோசிக்க வேண்டும் என்று நினைப்பவள்.

எப்படியோ வரும் ஞாயிறு பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்பது முடிவானது. அதற்கு பின்னும் எதுவும் கேட்காமல் இருக்க முடியாது என்று வைதேகிக்கு தோன்றியதோ என்னமோ, தன் தாய் பூரணியிடம் போய் என்ன செய்கிறான் அவன் என்று கேட்டாள். அவள் தாய் திடீரென்று வந்து என்ன செய்கிறான் என்று மகள் கேட்டதும் ஒன்றும் புரியாமல் யாரைப் பற்றிக் கேட்கிறாய் என்றாள். அதான் என்னை பார்த்துட்டு பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட வரானே அவனைப் பற்றி தான் கேட்கிறேன்.

அப்பாடா, இப்போதவாது இவள் கேட்டாளே என்று தோன்றினாலும் உள்ளுக்குள் என்னடா வரபோகிற மாப்பிள்ளையை அவன் இவன் என்று சொல்கிறாளே என்று பயந்தாள்.

ஏண்டி கொஞ்சம் மரியாதையாக கேட்க கூடாதா என்று மென்மையாக வைதேகியிடம் கேட்டாள். அவளோ இப்போ என்னம்மா, அவன் வந்து பார்க்கட்டும், பார்த்து பிடிச்சிருக்குனு சொல்லட்டும். ஏற்கனவே 9 பேரை வேண்டாம் என்று சொன்னவன் தானே. அவனுக்கு என்ன மரியாதை. அவன் என்னை பிடிச்சிருக்குனு சொன்னா அது அவனுக்கு ஏழரை சனி பிடிக்க போகிறது என்று அர்த்தம் தான் என்று எடுத்தெரிந்து பேசினாள். இதற்கு மேல் இவளிடம் இதைப் பற்றி இப்போது பேச வேண்டாம் என்று அமைதி காத்தாள் அவளது தாய்.

இதன் பிறகும் வைதேகியின் மனதில் ஏதோ ஒரு இனம் தெரியாத குழப்பம். வைதேகி குழப்பவாதி இல்லை ஆனாலும் தேவையே இல்லாத கோபம். ஒருவிதத்தில் எரிச்சலாக இருந்தது. இன்னமும் கண்ணால் காணாத ஒருவன் மேல் ஏன் இந்த வெறுப்பு.

பெண்ணினம் மேல் உள்ள காதலோ? ஆம் 9 பெண்களைப் பார்த்து வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான் என்று அவள் அன்னை அவளிடம் சொன்னது தவறோ. இவளையும் வேண்டாம் என்று சொல்லி விட்டால், மகள் மனம் நொந்து விடக் கூடாது என்று அக்கறையோடு சொல்லியது தவறோ? அதுவே அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

எப்படி இருந்தாலும் அந்த பெண் பார்க்க வந்த படலம் கொஞ்சம் இனிமையான படலமே.

முன் பக்கம்

அடுத்த பக்கம்

Advertisements

4 thoughts on “வைதேகி காத்திருந்தாள்-2

 1. வைதேகி அருமையாக கதை சொல்கிறாள்!அவளிடம் மாட்டப் போகும் மாப்பிளையை நினைத்துதான் மனம் பதறுகிறது..பாவம் பையன்!இப்போவே அவன் இவன் கிறா..ஹா..ஹா..

  • வைதேகியிடம் அவன் மாட்டப் போகிறானா இல்லை வைதேகி மாட்டப் போகிறாளா என்று இன்னும் முடிவு செய்யலையே 🙂

 2. வைதேகிக்கு யார் மீது கோபம்? சமுதாயத்தின் மீதா? அல்லது அதன் சடங்குகளின் மீதா?? ஏன் இந்த விரக்தி மனப்பான்மை!!!

  • கோபம் சமுதாயத்தின் மீது இல்லை,
   9 பெண்களை வேண்டாம் என்று சொல்லிய ஆண் மகன் மேல கோபப் படுவது.

   அப்படி என்ன எதிர்பார்த்தான் என்பது நியாயமான கோபம் தானே???

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s