Archive | March 2011

வைதேகி7

வைதேகிக்கு என்ன மாற்றங்கள் வேண்டுமா என்று கூட அவள் அத்தையைக் கேட்கவில்லை, தாமதமாக எழுந்துவிட்டோமே என்று மட்டுமே இருந்தது. மேலும் அலுவலகம் போக வேண்டுமே என்றும் தான், இன்றைக்கு ஏனோ அவளுக்கு ஆபிஸ் போகும் மன நிலையில் இல்லை. எப்படி இருந்தாலும் வீட்டிற்கு வந்தவர்களிடம் பேசாமல் இருக்க முடியாது.

ராஜேஷை பார்த்து என்ன எப்போது வந்தாய் என்று கேட்டேனே பதிலே சொல்லலை என்றாள். அதற்கு அவனோ கேட்டே தான் ஆனால் நான் பதில் சொல்வதற்குள் நீயே இருடா என்றுதான் போய்விட்டாயே என்றான். சாரி, அப்படியே இருந்தால் ஆபிஸ் போக முடியாது அதான். சரி இப்போ சொல்லு.

நாங்க வந்து 45 நிமிஷம் ஆச்சு என்றான். என்ன நீங்க பேசினதுகூட என் காதில் விழவே இல்லையே என்றாள். அதான் கேட்டேன் என்ன இரவு முழுக்க விழித்திருந்து கனவா என்று???

அப்படி எல்லாம் இல்லைடா என்றாள். அப்படி இல்லையேனு கவலைபடுறா மாதிரி இருக்கே என்றாள் அத்தை. போங்க அத்தை என்று சொல்லி அம்மா கொடுத்த காபியை குடித்தாள்.

என்னடீ நேத்திக்கு உன்னோட ஹீரோ ஆபிஸில் உன்னைப் பார்க்க வந்தானாமே என்றான் ராஜேஷ். அய்யோ அம்மா ஏம்மா இவன் கிட்டே போய் சொன்னே என்று சினுங்கினாள் வைதேகி. அவன் ஒன்னுமே கேட்கலையே உனக்கு அதற்குள் என்ன வெட்கம் என்று அத்தை ஒரு கேள்விக் கேட்கவும், வைதேகி தொடர்ந்தாள். சரி நானே சொல்லிடறேன். ஆமாம் நேற்று எனக்கு ஆபிஸ் நம்பருக்கு ஃபோன் வந்தது என்றாள். அவருக்கு என்னோட சம்மதத்தை அவரிடம் நேரடியாகச் சொல்லனும் என்றார்.

ஆபிஸுக்கு எல்லாம் வரலைடா என்றாள். வரலை இல்லை வரவிடலை. ஆபிஸுக்கு தான் வருவதாக சொன்னார். ஆனால் நான் தான் பஸ் ஸ்டாப்லையே பார்க்கிறேன் என்றேன் என்றாள். அப்புறம் என்ன ஆச்சுனு சொல்லு என்றான் ராஜேஷ், ஆவலாக இருப்பது போல பாவனைச் செய்தான். அவளோ ஒன்னும் ஆகலை என்றாள். ஏதோ கோயிலுக்கு போனீங்களாமே என்றான்? அய்யோ அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டியா என்றாள் வைதேகி??? நீ ஹோட்டலுக்குப் போய் காபி சாப்பிட்டேனு சொல்லவே இல்லைடீ என்றாள் அத்தையும் அவள் பங்குக்கு.

சரி சரி எல்லாம் தான் தெரிகிறதே அப்புறம் என்ன பிரச்சனை என்று கேட்டாள். எப்படி அத்தை நேரில் பார்க்கும்போது முடியாது என்று சொல்வது அதுவும் முதல் முறையாக தனியாக பார்க்கிறோம் ல சகஜமாக பேசுவதாக நினைத்து ஆனால் முகத்தில் வெட்கமும், என்னடா இது மாட்டிக் கொண்டோமே என்றும் இருந்தது.

அப்புறம் உங்க யாருக்கும் தெரியாத ஒரு விஷயமும் எனக்கு தான் முதல்ல தெரியும் என்றாள். என்னடீ என்றாள் அத்தை வேகமாக பயந்தபடியே. பதறாதீங்க இப்போ உங்களுக்கும் தெரிந்து இருக்கும் என்று தான் நினைக்கிறேன், அதான் நிச்சயதார்த்தம் பற்றி பேச தானே அம்மா வரச் சொன்னா உங்களை என்றாள். அவர் எனக்கு தான் முதல்ல சொல்லனும்னு தான் அவர் என்னை நேற்றுப் பார்க்க வந்தார் என்றாள்.

நீ என்ன சொன்னாய் என்று கேட்டான் ராஜேஷ்? இதில் நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? அது ஒரு தகவல் தான் எனக்கு. உங்களிடம் மட்டுமே அபிப்ராயம் எல்லாம் கேட்கப்படும். இப்பவே இப்படி சரண்டர் ஆயிட்டியேடி உனக்கே இது நியாயமா என்றான் ராஜேஷ்.

உன்னோட அம்மா சொல்றதுக்கு முன்னாடியே உன்னோட ஹீரோ எனக்கு ஃபோன் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட்டார். அவர் கூப்பிட்டவுடன் கோயிலுக்கு நீ வந்ததில் ஒரே குஷி போல இருக்கு அதான் எனக்கும் சொல்லிட்டார்.

கோயில் என்பதனால் தாண்டா போனேன் என்றாள். இருந்தாலும் கொஞ்சம் ஜாஸ்தி தான். இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கிறேன் என்றாள்.

எப்படி இருந்தாலும் நான் போயிருக்க கூடாது தான். ரொம்ப மாடர்னோனு நினைத்து இருப்பாங்களோ அவங்க வீட்டில என்று கேட்டாள். ஆஹா இது என்ன பெண்களுக்கு தானாகவே வந்து விடும் ஒரு விஷயம் என்று தனக்கு தானே எண்ணிக் கொண்டாள். உடனே அத்தை இது போவதற்கு முன் நினைச்சிருக்கனும் என்றாள்.

அதான் தப்புனு சொல்லிட்டேனே அத்தை. இனிமேல் நடக்காமல் பார்த்துக்கிறேன் என்றாள். இதுவரை என்னிடம் கோபமே படாத எல்லோரும் என்னைக் கோபித்துக் கொள்கிறீர்கள். உங்க எல்லோரோட கோபத்தோட எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்றாள் கண்களில் வழிந்த கண்ணீரோடு.

அடி அசடே, எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசறே, மொதல்ல கண்ணை துடை என்றாள் அவள் அத்தை. ராஜேஷோ அம்மா அவள் அழுவதே ராகவ்வை வேண்டாம் என்று சொல்லி விட்டோமே என்று தான். அழுதுக் கொண்டு இருந்த வைதேகிக்கும் சிரிப்பு வந்தது. அப்படி எல்லாம் இல்லை டா என்றாள்.

நீ ராகவ்வைப் பார்க்க கூடாதுனு யார் சொன்னா என்றான் ராஜேஷ். நிச்சயதார்த்தம் முடியட்டும் அதுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் வெளியில் போனால் யாராவதுக் கேட்டாள் பெருமையா சொல்லிக்கலாம் இது எனக்காக என்னுடைய வீட்டில் நிச்சயம் செய்த பெண், என்னைக் கல்யாணம் பண்ணிக்க போறார்னு.

அத்தையும் தன் பங்கிற்கு அவளை தேற்றினாள். “ செல்லமே இங்க பாரு என் பட்டு போன்ற பெண் வைதேகி, யாரும் உன் மேல இப்போ இல்லை எப்பவுமே கோபப்பட மாட்டோம். நீயும் இப்படி செய்பவள் இல்லையே என்பதனால் தான் நாங்க சொன்னது எல்லாம். ஆனால் இது கோபம் இல்லை டீ கரிசனம் தான். அதுவும் அன்பினால் தான்.

அவருக்கும்(ராகவ்) அப்படி தானே அத்தை, என் மேல ஏதோ ஒரு அன்பு, பார்த்தவுடன் பிடிச்சுது, எனக்கும் பிடிச்சிருக்கானு கேட்டுத் தெரிஞ்சக்கனும்னு நினைக்க எத்தனை ஆம்பளைங்க இருக்காங்க என்றாள்?

எப்படி எப்படி அவரா?? யாருமா இதைச் சொல்றது என்றாள் பூரணி… என்கிட்டே வந்து என்ன பண்றான் என்று ரெண்டு நாளைக்கு முன்னாடி யாரோ கேட்டா டா ராஜேஷ் என்றாள்.

என்னம்மா இது நீயுமா போம்மா என்று வெட்கப்பட்டாள் வைதேகி.

நான் தான் உன்னை போய்ட்டு வா என் அன்பு மகளேனு உன்னைச் சொல்லனும். நான் எங்கே போறது என்றாள் பூரணி.

ரெண்டு நாளுக்குள்ள அவரு ரொம்ப வேகமா தான் இருக்கா அத்தை, நாம இவளோட கல்யாணத்தை தள்ளி போட முடியாது போல இருக்கே. அம்மாடீ பங்குனி போய் சித்திரைல தான் கல்யாணம் பண்ண முடியும், அதுக்கு முன்னாடி பண்ண முடியாது என்றான் ராஜேஷ் கண்ணடித்துக் கொண்டே.

கொஞ்சம் ஃபைனான்ஸும் ரெடி பண்ணனும். என்ன எதிர்பார்பாங்களோ என்றான் ராஜேஷ். அத்தை இதை எல்லாம் பேசி, பையனைப் பற்றி விசாரித்து அதுக்கு பின்னாடி தான் நிச்சயதார்த்தம் பண்ணனும்.

பத்து நாளில் நடக்கிற விஷயமா இது என்றான். வைதேகி முகத்தைப் பார்த்ததும் சரி சரி இப்பவே பேசிடலாம் வைதேகி. கவலை படாதே என்றான்.  அத்தை இப்பவே ஃபோன் பண்ணுங்க ராகவ் வீட்டுக்கு. என்ன எதிர் பார்க்கிறாங்கனு தெரிஞ்சுகிட்டா அதுக்கு ஏத்த மாதிரி பேசிடலாம்.

அம்மா எனக்கு நேரம் ஆகிறது, நீ எனக்கு சாப்பிட என்ன இருக்குனு சொல்லு என்றாள்?

என்னடீ சுரத்தே இல்லாம கேட்கிற என்றாள். இல்லைமா இதுல பேசறதுக்கு எனக்கு என்ன இருக்கு சொல்லு. நீங்க பேசி முடிவு பண்ண வேண்டியது மா என்றாள்.

சரி நான் இன்னிக்கு ஃபோன் பண்ணிக் கேட்கிறேன் என்றாள் பூரணி. ராஜேஷ் நீயும் ராகவ் அலுவலகத்தில் விசாரிக்க ஏற்பாடு பண்ணு என்றாள். சரி அத்தை. ராகவ்வோட விசிட்டிங் கார்ட் என்கிட்டே இருக்கு என்றான் அவன். நான் ரெண்டு நாளில் சொல்கிறேன்.

வைதேகி உன்னோட சித்தி சித்தப்பா எப்போ வரமுடியும்னு கேட்கனும் அதுக்கு அப்புறம் தானே நிச்சயதார்த்தம் பற்றி முடிவு பண்ண முடியும் என்றாள் பூரணி.

சித்தி சித்தப்பாக்கு ஃபோன் பண்றியா வைதேகி என்றாள் அவள் தாய். அம்மா என்ன விளையாடறியா?? நீ பேசி எப்ப வராங்கனு கேளு என்று சொல்லி அம்மா தந்த பொங்கலைச் ருசித்தாள். ராஜேஷையும் சாப்பிட சொன்னாள், அவனோ அவன் வினோதாவும் அதையே தான் தந்ததாகவும் வேண்டாம் என்றான்.

சரி நான் மாலையில் வினோவைப் பார்க்க வரேன்னு சொல்லு. இப்போ எனக்கு நேரம் ஆச்சு, நான் கிளம்பறேன் என்றாள்.

என்ன ஆனது வைதேகிக்கு ??? கிளம்பியவள் அலுவலகம் வந்தாளா???

முன்பக்கம்

அடுத்தபக்கம்

Advertisements

வைதேகி6

வைதேகி எப்படி ப்ரியாவுடன் பேசுவது, என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தாள், பின்னர் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கு நினைவில் இல்லை, யோசித்துக் கொண்டே தூங்கினாளா இல்லை ராகவ்வை நினைத்துக் கொண்டே தூங்கினாளா???

மறுநாள் எப்போதும் போல அவரவர்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, வைதேகியும் எப்போதும் போல அலுவலகம் கிளம்பினாள். அவளது அம்மா அவள் கிளம்புமுன் ஒருமுறை அவளை அழைத்து, வைதேகி, ராகவ் வீட்டிற்க்கு ஃபோன் செய்து, உனக்கும் இதில் சம்மதம் என்றுச் சொல்லிவிடவா என்றாள்.

அதான் நேத்திக்கே சொல்லிட்டேனேமா, இன்னும் என்ன சந்தேகம் என்றாள். இல்லை இது உன்னோட வாழ்க்கை டீ, இன்று நீ சொல்லும் இந்த வார்த்தையில் தான் உன் வாழ் நாள் பூர உன்னோடவே இருக்கும், உன்னோட சுக துக்கம் அனைத்துக்கும் நீ இப்போ சொல்லபோற பதில்ல தான் இருக்கு. அதனால் தான் நீ சரினு சொல்லியும் மேலும் ஒரு முறைக் கேட்கிறேன். ஏதாவது இரண்டாம் கருத்து இருந்தால் இப்போதே சொல்லிடு வைதேகி என்றாள்.

அப்படி எதுவும் இல்லை, நீ தாரளமாக அவர்களிடம் எனக்கும் பரிபூரண சம்மதம்னு சொல்லு போதுமா என்று சொல்லிவிட்டு சந்தோசமாக கிளம்பினாள். வாழ்க்கையில் ஒட்டம் எப்படி இருக்கும் என்று அறியாமல் அவள் அலுவலகத்திற்கு ஓட்டம் பிடித்தாள்.

அலுவலகத்தில் யாரும் இந்த விஷயம் தெரியாத காரணத்தால், அவளுக்கு அங்கு பெரிதாக இதைப் பற்றி பேச முடியாது. மேலும் அவள் செல்லும் நேரத்தில் யாரும் இல்லாததால் அவள் தான் விட்டுச் சென்ற பணியினை தொடர்ந்தால். ஏதோ ஆவணமாக்கல் பற்றி அமெரிக்க நிறுவனத்தின் திட்ட செயலர் கேட்டு அனுப்பியிருந்த ஃபக்ஸ் அவளது மேஜையில் வைத்து மிகவும் அவசரம் என்று எழுதி வைக்கப் பட்டு இருந்தது. அதனால் அந்த ஆவணத்தை படிப்பதிலும், அதனை திருத்தம் செய்து, மேற்கொண்டு அதனைச் சரி செய்யும் பணியில் மூழ்கிப் போனாள்.

ஆவணத்தைச் சரி செய்வது என்பது லேசான காரியம் அல்லவே, அதுவும் வேறு ஒருவர் செய்த வேலைக்கான ஆவணத்தை பார்ப்பதும், அதனை சரி செய்வதும் மிகவும் கடிணம் அதனை செய்த நபர் இப்போது இவர்களுடன் பணி புரியா காரணத்தினால்.

அவளது கணனியில் அந்த நபர் அவளுக்கு கொடுத்துச் சென்ற ஆவணங்களை ஓவ்வொன்றாக படித்து, எங்கு இப்போது திருத்தம் செய்தாலோ அதனை சரி செய்து ஆவணத்திற்கு எண் கொடுத்து முடிக்க அன்று மாலை ஐந்து மணி ஆனாது. ஐந்து மணிக்கு மேலாளருக்கு அந்த ஆவணத்தை கொடுத்துவிட்டு தன் இருக்கைக்கு வரும்போதே அவளது தொலைபேசி அழைத்தது. அப்போது தான் அவளுக்கு ப்ரியாவைப் பற்றிய நினைவே வந்தது. ராகவனைப் பற்றியும் தான்.

வேகமாக வந்து ரிசீவரை எடுத்து ஹலோ வைதேகி ஹியர் என்றாள். ஹை, நான் ராகவ் பேசறேன் என்றான். ராகவ் ஞாபகம் இருக்கா, நேத்த்திதிக்க்க்கு என்று இழுத்தான் சொல்லுங்கோ என்றாள் வைதேகி.

வைதேகி சாரி டூ பாதர் யூ. ஆபிஸ் நேரத்தில இப்படி பேசுவது நாகரிகம் இல்லை. உனக்கு ஆட்சபனை இல்லை என்றால், அலுவலக நேரம் முடிந்தவுடன் உன்னை நேரில் பார்த்து ஒரு பத்து நிமிடம் பேசனும் என்றான் ராகவ்.

அங்கு மேரி ஏதோ கேட்க அதே நேரம் வரவும் சைகையால் அவளுக்கு ஐந்து நிமிடம் என்றுச் சொல்லவும், அவள் அங்கிருந்து அவளது இருப்பிடம் சென்றாள்.

ஹலோ இருக்கியா என்று ராகவ் கேட்க, சரி இன்னும் 30 நிமிடத்தில் நான் கிளம்பி விடுவேன் எங்கு பார்க்கலாம் என்றாள்? உன் அலுவலக வாசலில் காத்திருக்கிறேன் என்று சொல்லவும், பதரி போய் வேண்டாம் பக்கத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே வரச் சொல்லி அந்த ஃபோனைத் துண்டித்தாள்.

என்ன மேரி என்ன வேண்டும் உனக்கு என்றாள், மேரியோ இப்போது வேண்டாம், நாளைக் காலைப் பார்த்துக் கொள்ளலாம், வைதேகி  நான் இப்போ கிளம்ப போகிறேன் என்றாள். நீங்க எப்போ போக போறீங்க என்று அவள் சாதரணமாக கேட்டதுகூட அவளுக்கு என்ன டா இவள் ஏதோ தெரிந்து கேட்கிறாளோ என்பது போல் தோன்றியது. இதோ இன்னும் பத்து நிமிடத்தில் என்றாள்.

அலுவலகத்திற்கு நேரத்திற்கு வருகிறார்களோ இல்லையோ முடியும் நேரத்திற்கு அனைவரும் ஒன்றாக கிளம்பிவிடுவார்கள். அதனால் வைதேகி ஒரு பத்து நிமிடம் காத்திருந்து பின்னர் கிளம்பினாள்.

வைதேகி பேருந்து நிறுத்தம் வருமுன்னரே அவளது கண்களில் ராகவ் தெரிந்தான், இருந்தாலும் பார்க்கதவள் போல கண்டுக் கொள்ளாமல் சென்றாள். அருகே சென்றதும் தான் பார்த்தவள் போல ஒரு சிறிய புன்னகை செய்தாள்.

வைதேகி இங்கு நின்றுக் கொண்டு பேசவேண்டாம், பக்கத்தில் ஒரு கோயில் இருக்கிறது செண்டிமெண்டா அங்கே போய்ட்டு அப்புறம் பேசலாமா என்றான்.

அவளும் அதே பேருந்தி நிறுத்ததில் தான் இந்த 6 மாதமாக வருகிறாள், ஆனாலும் ஒரு நாளும் அந்தக் கோயிலுக்கு போனது இல்லை. சரி இந்தக் கோயிலை நான் இவனுடன் தான் பார்க்க வேண்டும் என்பது விதி போல என்று எண்ணினாலோ?? எது எப்படியோ, இம் என்று தலை ஆட்டி, நாய்குட்டிப் போல அவன் பின்னே சென்றாள்.

வைதேகி நீல நிற சுடிதாரில் மிகவும் அழகாக இருந்தாள். ராகவ்வும் நீல நிற சட்டையில் வந்ததை வைதேகி கண்டு சிரித்தாள். இது தற்செயலான நிகழ்வு தான்.

ஜோடியாக இருவரும் கடவுளை வணங்கினர். ராகவ்க்கோ ஏகத்திற்கு சந்தோசம். அவளுக்குள் சந்தோசம் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. கோயிலை வலம் வந்து பின்னர் அங்கு பசுமையாக வெள்த்தோட்டத்தின் அருகே அமர்ந்தனர்.

உன்னோட அம்மா எங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி உனக்கும் என்னை பிடிச்சிருக்குனு சொன்னாங்க. எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை என்றான். சாரி திரும்ப திரும்ப கேட்க கூடாது தான், இருந்தாலும் எனக்கு என் காது பட கேட்க வேண்டும், கோயிலில் வைத்துக்  கேட்கிறேன் உனக்கு என்னை பிடிச்சிருக்கானு சொல்லு.

வெட்கத்தோடு தலையை மட்டும் அசைத்தாள் வைதேகி. கொஞ்சம் என்னைப் பார்த்துச் வாய் திறந்து சொல்ல முடியாதா என்று அவளை கேட்கவும், உங்களை மாதிரி என்னால சொல்ல முடியாது என்று மட்டும் மெதுவாக சொன்னாள்.

உன்னோட என் வாழ்க்கையை அமைச்சிக்கிறதில எனக்கு ரொம்ப சந்தோசம் மட்டும் இல்லை, ஒரு பெருமையும் கூட. உன்னை மாதிரி ஒரு பெண்ணை என் மனைவி என்று சொல்வதில்.

ஹே, உனக்கு ஒரு விஷயம் சொல்ல போறேன். நீ வீட்டுக்கு போனதும் எப்படியும் தெரியும் ஆனாலும் நான் தான் முதலில் சொல்ல வேண்டும் அதற்கு தான் உன்னை நான் நேர்ல பார்க்கனும்னு சொன்னேன். நம்மளோட நிச்சயதார்த்தம் இன்னும் 10 நாளில் நடக்கப் போகிறது என்றான் மிகவும் ஆனாந்தமாய்.

அவளுக்கு நிஜமாகவே இது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயமாக தான் இருந்தது. இருந்தாலும் இனிமையாகத் தான் இருந்தது. சொல்வது அவளின் ராகவ் ஆச்சே என்று. சரி போகலாமா என்றாள்??

அதுக்குள்ளே என்ன அவசரம்? முதல் முறையாக உன்னோட வெளியில் இருக்கேன் ஒரு காபி கூட வாங்கித் தரலைனு நீ காலத்துக்கும் என்னை குறைச் சொல்ல ஒரு சான்ஸ் கொடுக்கனுமா என்றான். அவனுடன், அவள் ஒரு காபி சாப்பிட வேண்டும் என்பதை அவன் நாசுக்காக சொன்ன விதத்தை, அவனது பேச்சு சுவாரஸ்யத்தை ரசித்தால் என்றே சொல்ல வேண்டும்.

சரி வா போகலாம், பக்கத்தில சரவண பவன் இருக்கு என்று அவன் சொல்ல, எனக்கு லேட் ஆச்சு, அம்மா கவலை படுவா என்று சொல்ல,  நான் கூடவே வந்து உன் அம்மா கிட்டே நான் தான் லேட் ஆக்கினேன் என்று சொல்ல வரேன், நீ கவலைப்பட வேண்டாம் என்றான்.

வேகமாக இருவரும் சரவண பவன் ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள், அவள் அக்கம் பக்கம் எல்லாம் பார்த்துக் கொண்டாள். என்ன யாரவது உனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்களா என்று கேட்டான் ராகவ். இல்லை, இருக்காங்களானு தான் பார்த்தேன் என்றாள் வைதேகி பாவமாக. இருந்தா வெளியில ஓடிடுவியோ? என் கூட தானே வந்து இருக்கிறாய் என்றான்.

நேற்று வந்து பெண் பார்த்துவிட்டு இன்றைக்கு வெளியில் சுத்தறேன்னு சொல்ல மாட்டாங்களா என்று அவள் கேட்டதும் ராகவ்க்கும் இது கொஞ்சம் ஓவரோ என்று தான் பட்டது. சரி சரி வந்துட்டோம் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு போகலாம். அதே நேரத்தில் சர்வர் வரவும், இரண்டு காபி என்றாள் வைதேகி, வேறு எதுவும் சொல்லி நேரமாகிவிட போகிறது என்பதற்காக. வேறு எதுவும் வேண்டாமா வைதேகி, ரொம்ப டையர்டா இருக்கியே என்றான்? சர்வரிடம் இரண்டு காபி மட்டும் சீக்கிரம் கொண்டு வருமாறு சொல்ல சர்வர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

உனக்கு எதாவது என்னைப் பற்றி தெரிஞ்சுக்கனுமா என்றான் ராகவ். ஆமாம் ஆனால் இப்போது இல்லை. வேறு ஒரு நாள் நிதானமாக பேசுகிறேன். இப்போ எதுவும் பேசும் மன நிலையில் நான் இல்லை. எனக்கு இப்படி இங்கு இருப்பது சங்கோஜமாக இருக்கிறது என்றாள்.

காபி வந்தவுடன் இருவருமே அதனை ரசித்து குடித்தனர். பின்னர் பில்லுக்கு பணம் வைத்து விட்டு இருவரும் நகர்ந்தனர். வா இந்த ஆட்டோவில போய்டலாம் என்றான் ராகவ். இல்லை நான் எப்பவும் போல பஸ்ல போகிறேன். என்றாள். என்ன நீ என்னை வர வேண்டாம் என்கிறாயா என்றான். அதே நேரம் பேருந்தும் வரவே, வைதேகி அதில் வேகமாக போய் ஏறி பை என்று சொல்லி கை அசைத்துச் சென்றாள். சரி டேக் கேர், நான் நாளைக்கு ஃபோன் செய்யறேன் என்று சைகை செய்தான்.

இருவரும் பேருந்து கண் மறையும் வரைப் பார்த்துக் கை அசைத்துக் கொண்டனர். அடுத்த பேருந்தும் வந்துவிட ராகவ் தனக்குள் சிரித்துக் கொண்டே சென்றான்.

வைதேகி வருவதற்கு லேட் ஆகவே அவளது அம்மாவிற்கு என்ன இதுமாதிரி ஒரு நாளும் லேட் ஆனது இல்லையே. எப்போது லேட் ஆனா சொல்லிடுவாளே என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.

அதே நேரம் அவள் வீட்டுத் தொலைபேசி சினுங்க, வேகமாக சென்று எடுத்தாள். இப்போ தான் மாமி வைதேகியை பஸ் ஏத்திவிட்டேன். சாரி வைதேகி இன்னும் 30 நிமிடத்தில் வந்துவிடுவாள் என்று ராகவ் சொன்னான். வந்தவுடன் அவளிடம் கோப படவேண்டாம் என்றான். பூரணிக்கு கோபம் தான் ஆனாலும் அவனது அக்கறையும், வைதேகி மேல் அவனுக்கு இருக்கும் கரிசணமும் ஒரு நொடியில் அந்த கோபத்தை ஓடவைத்தது.

ஒரு நிமிஷம் இருங்க அம்மா பேசனுமாம் என்றான். அம்மா, வைதேகி அம்மா என்று தனது தாயிடம் ஃபோனைக் கொடுத்தான். பரஸ்பரம் குசலம் விசாரித்து பின்னர் நிச்சயதார்த்திற்கு நாள் பார்த்தோம், அதற்கு முன் வைதேகியின் விருப்பத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று தான் அவளைப் பார்க்க போனான் ராகவ்.

மார்ச் 15 வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டாள். அதற்கு பிறகு பங்குனி மாசம் ஆரம்பித்துவிடும். இதை விட்டால் சித்திரையில் தான் நல்ல நாள் இருக்கும் என்றாள்.

பூரணி தனது சகோதரி, தனது நாத்தனாரிடம் பேசி, கலந்தாலோசித்து அவர்களுக்கு மறுநாள் காலை சொல்வதாகச் சொல்லி ஃபோனைத் துண்டித்தாள்.

பேசி முடித்த 20 நிமிடங்களில் வைதேகி வீட்டுக்கு வந்துச் சேர்ந்தாள். முகத்தில் சந்தோசம் இருந்தாலும், தனது தாயிடம் என்ன சொல்ல போகிறோம் என்று ஒரு தவிப்பு.

அவள் வந்து முகம், கை கால் அலம்பி, உடை மாற்றி வருவதற்குள் தனது கையில் காபியுடன் வந்தாள் பூரணி. அம்மா எனக்கு காபி வேண்டாம் என்றாள். ஏண்டீ நீ வந்தவுடன் காபி தரலைனு கோப படுவியே. என்னம்மா இப்போ சாப்பிட போகிற நேரத்தில காபி எதற்கு வேண்டாமே என்றாள்.

அது சரி, நான் என்னம்மோ நீ வெளியில் யாருடனாவது காபி சாப்பிட்டு வந்தியோனு நினைச்சேன். ஒரு நிமிடம் தாயைப் பார்த்தாள். பின்னர் என்னடி ஏன் லேட்டு என்று நான் கேட்கனுமா? இல்லை நீயே சொல்லுவியா?

நானே சொல்லிடறேன், உன்னோட மாப்பிள்ளை வந்தார் என்னைப் பார்க்க, ஆபிஸ் பக்கத்தில இருக்கிற கோயிலுக்கு சென்றோம். பின்னர் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு பை கூட சொல்லாம பஸ்ல ஏறிட்டேன்.

என்னோட சம்மதத்தை அவர் காது பட தெரிஞ்சுக்கனுமாம் அதற்காக வந்தார் என்றார். சரி சரி இதையே பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்றாள் பூரணி மிகவும் கண்டிப்பான குரலில்.

வழக்கம்போல இரவு சாப்பிட்ட உடன் தூங்கிவிடும் வைதேகி அன்று தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். அவளது எண்ணமெல்லாம் ராகவ்வும், அவளது அம்மாவின் கோபமும் தான் இருந்தது. இதுவரை தனது தாயார் இப்படி கடுமையாக பேசியது இல்லையே. இவனால் இன்று இப்படி பேசிவிட்டாளே என்று யோசித்தபடியே உறங்கி போனால்.

காலை அத்தையின் குரல் கேட்டு தான் விழித்தாள். என்னம்மா ராத்திரி எல்லாம் தூங்காமல் காலைல தூங்கிட்டியோ என்று ராஜேஷ் கேட்க, நீ எப்போ வந்தே என்றாள்? இருடா வரேன். ஆபிஸீக்கு நேரமாச்சு. அம்மா காபி தா என்று ப்ரஷுடன் பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு வெளியில் வந்தவளுக்கு பூரணி காபியைக் கையில் கொடுத்தாள். இது எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு மருமகளே என்று அத்தை கேட்டாள். நீ ஒருவனுக்கு காபி போட்டு தர போகிற நாள் சீக்கிரம் வந்தாச்சு வைதேகி. நிறைய மாற்றங்கள் தேவை உன்னிடம்.

வைதேகிக்கு என்ன மாற்றங்கள் வேண்டுமோ???

முன்பக்கம்

அடுத்த பக்கம்

வைதேகி5

ப்ரியாவோ திரும்பவும் மிகவும் அழுத்தமாக, அவனைப் பார்த்தவுடன் பிடித்ததா என்று கேட்டேன் என்று அவளை ஸ்னேகமாக அனைத்து, உன்னை எங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்றாள் ஒரு அழகான சிரிப்புடன்.

அவனும் நல்லவன் தான், எந்த விதமான பிக்கல் பிடுங்கள் இல்லாத குடும்பத்திற்கு தான் வரப் போகிறாய் என்று வேகமாக சொல்ல, வைதேகியால் சிரிக்கவும் முடியாமல், என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தாள்.

நீ சகஜமான மன நிலையில் இப்போ இல்லை, சரி இப்போதே எதுவும் சொல்ல வேண்டாம். உன்னுடைய அலுவலக எண் கொடு, நேரில் சொல்ல சிரமமாக இருந்தால், நான் நாளை உன்னை தொலைபேசியில் அழைக்கிறேன். அப்போது சொல் என்று தனது நாட்குறிப்பில் அவளது அலுவலக நம்பரை குறித்துக் கொள்ள ஆயத்தமானாள். வைதேகியும் வேறு வழியின்றி அலுவலக எண்ணை கொடுத்தாள்.

அதே நேரத்தில் உள்ளே வந்த ராஜேஷ், அவர்கள் புறப்படத் தயாராக இருப்பதாகவும், ப்ரியாவை அழைத்ததாக கூறினான். ப்ரியாவும் சைகையால் வைதேகிக்கு பை சொல்லி நாளை அழைக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும்படி சொல்லிச் சென்றாள்.

எல்லோரும் புறப்பட்டு போன பின் தன் கையில் காபியுடன் மகளைக் காண பூரணி வந்தாள். கூடவே அங்கு இருந்தவர்கள் அனைவரும் வர, வைதேகி அம்மாவிடம், காபியுடன் ஹாலில் இரும்மா, வேறு உடை மாற்றி வருகிறேன் என்று கூறினாள். ஐந்து நிமிடத்தில் ஒரு நைட்டியுடன் ஆஜரானாள்.

அம்மா உனக்கு பிடிச்சிருக்கா என்று வைதேகி பூரணியைக் கேட்க, அனைவரும் ஒன்றாக நகைத்தனர். என்னடீ இது உன்னைப் பார்த்து அம்மா கேட்க வேண்டிய கேள்வியை நீ அம்மாவைப் பார்த்து கேட்கிறாயே என்று அத்தை அவளைக் கேட்டாள்.

அத்தை உங்களுக்கு தெரியாதா என்ன நான் அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்ய மாட்டேன் என்று. அம்மாவுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் பிடிச்சிருக்கு என்றாள். இல்லைனா என்று ராஜேஷ் கேட்க வைதேகிக்கு கொஞ்சம் முகம் வாடியது, இருந்தாலும் மறைத்துக் கொண்டு எனக்கும் பிடிக்காது என்றாள்.

பூரணியோ ராகவ்க்கு என்ன குறை, லட்சனமாக இருக்கிறார், கை நிறைய சம்பாதிக்கிறார். சகோதரிகளுக்கும் கல்யாணம் ஆச்சு, எதுவும் தொல்லைகள் இல்லையே என்றாள்.

எனக்கு பிடிச்சிருக்கு என்பது முக்கியமில்லை வைதேகி, உனக்கு பிடிச்சிருக்கா என்று பூரணி கேட்டாள். அக்கா எனக்கு பிடிச்சிருக்கு என்றாள் அவளது தங்கை ரம்யா. உனக்கு இப்போ என்னடீ அவசரம் என்று சித்தியும் அவளை சீண்டினாள்.

ஆளாளுக்கு பேசி நேரம் கடத்தாதீர்கள் அவள் என்ன சொல்றா என்று கேட்போம் என்ற ராஜேஷ், வைதேகி நீ சொல்லுடீ உனக்கு பிடிச்சிருக்கா என்று நேரடியாக கேட்கவும். அவள் வெட்கித் தலைகுனிய அடடா மாட்டிட்டானா அந்த ராகவ், இல்லை மயக்கிட்டானா எங்க வைதேகியை என்று இது தான் சந்தர்ப்பம் என்று அவளை ஒரேடியாக கலாய்த்தான்.

வைதேகி எங்கள் அனைவருக்கும் பிடிச்சிருக்கு மா, நீயும் உன் வாயால் ஒரு வார்த்தைச் சொன்னால் எங்களுக்கும் சந்தோசம். மேற்கொண்டு பேசுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றாள் அத்தை.

என்னம்மா கேட்கிற நீ, இப்படி வைதேகி வெட்கப் பட்டு எப்பவாவது நீ பார்த்து இருக்கியா, என்னமோ வாய திறந்து சொல்லுனு, அவ வாயை திறந்தால் இப்போ ஜொல்லு தான் மா வரும் என்று ராஜேஷ் நகைக்க, வைதேகியோ அவனை அடிக்க கை ஓங்கினாள்.

அம்மாடி என்னை அடிக்க என் மனைவி இருக்கா என்று கண்ணடித்தான், உனக்கும் ராகவ் இருக்கான். எப்படி எல்லாம் அடிக்கலாம், அனைக்கலாம்னு நீ கனவு காணு. நான் கிளம்பறேன் போய் வினோதாவை அழைத்து வருகிறேன். அவளும் மிகவும் சந்தோசப் படுவாள் என்றாள்.

ஹே நீ இப்போ போகலைன்னா உன்னை அவ உதைப்பா அதான் ஓடறியா என்றாள் எதிரே அவள் அத்தை இருப்பதையும் மறந்து. சாரி அத்தை என்று அத்தையைக் கட்டிக் கொண்டு. நீ உண்மைய தானே சொன்னே அதற்கு எதற்கு சாரி என்று அத்தையும் தன் பங்கிற்கு ராஜேஷை வாரி விட, இதற்கு மேல் இருந்தால் அவ்வளவு தான் அத்தனை பெண்டிரும் சேர்ந்து தன்னை ஒரு வழியாக்கிவிடுவார்கள் என்று கிளம்பினான்.

மாமி நானும் வினுவிம் அங்கேயே சாப்பிட்டு விடுவோம். எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லி சிட்டாக பறந்தான்.

அந்தப் பக்கம் ராகவ் குடும்பம் காரிலேயே வைதேகிப் பற்றி பேச ஆரம்பிக்க, ராகவ் கொஞ்சம் சும்மா இருங்கப்பா. அந்த பெண்ணிற்க்கு என்னைப் பிடிச்சிருக்கானு கேட்கனும்ல. இது ஒருவர் சம்பந்தபட்டது இல்லையே மா. அவங்க வைதேகியிடம் பேசி அவளுக்கும் பிடிச்சிருக்குனு சொல்லட்டும். அப்புறமா உங்க கேலி கிண்டல் எல்லாத்தையும் நானும் ரசிக்கிறேன்.

என்னவோ தெரியலை ப்ரியா அவளைப் பார்த்ததும் ஒரு நொடி நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். அவ எனக்கு வாழ்க்கை துனையா கிடைச்சா நான் தான் பாக்கியசாலி. அவகிட்டே எப்படி கேட்கிறது அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கானு. நீ கேட்டியா அவகிட்டே என்ன சொன்னா என்று பரபரப்பாக கேட்டதைப் பார்த்த ப்ரியா, அவளுக்கும் உன்னை பிடிச்சிருக்குனு தான்னு நினைக்கிறேன் ராகவ், ஆனாலும் அவள் வாய் திறந்து சொல்லவில்லை. சின்ன பெண்ல, நீ அப்படி சொன்னதும் அவ கொஞ்சம் பயந்துட்டானே சொல்வேன்.

ஆனா அவளோட ஆபிஸ் நம்பர் வாங்கி இருக்கேன், நாளைக்கு நான் கேட்டுச் சொல்றேன் டா என்றாள். அதற்குள் அவன் ப்ளீஸ் எனக்கு அவ நம்பர் குடு, நானே அவகிட்ட கேட்கிறேன். என்ன சொல்ற ப்ளீஸ் என்று தம்பி தவிப்பதை ரசித்தாள். ஆனாலும் அவளுக்கு அவனிடம் வைதேகியின் நம்பரைக் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசனை. எப்படி இருந்தாலும் தெரிந்துக் கொள்ள வேண்டியவன் அவன் தானே என்று தான் குறித்துவந்த எண்ணை அவனிடம் கொடுத்தாள். ஓ லவ்லி என்று தனது சகோதரியின் கண்ணத்தில் தட்டி தன் சந்தோசத்தை சொல்லிட, நான் வைதேகி இல்லை டா என்றாள்.

அவனோ அந்த எண்ணுடனையே டூயட் பாட ஆரம்பித்துவிட்டான் என்னம்மோ அந்த பேப்பர் வைதேகியாகிப் போனது மாதிரி.  இதற்குப் பெயர் தான் காதலோ?

இங்கு  வைதேகி வீட்டில், பூரணிக்குக் காலையில் இருந்த படபடப்பு அடங்கியது. ஆனாலும் தன் மகளைப் பிரியப் போகிறோமே என்று தனக்குள் கொஞ்சம் சோகம் ஆரம்பித்தது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

வீட்டு ஃபோன் மணி அடிக்க, சித்தி வேகமாக ஓடினாள், வைதேகியின் சித்தப்பா தான் என்று தெரிந்ததால். ஹலோ என்று சொல்லாமலே சொல்லுங்க என்றாள் அவள். இம், வந்தாங்க, பையன் நல்லா இருக்கான், குடும்பமும் நல்லாதான் இருக்கு. பையனுக்கு வைதேகியை ரொம்ப பிடிச்சிருக்குனு பட்னு சொல்லிட்டாருங்க.

எல்லாம் ஃபோன்லையே கேட்கனுமா என்று கேட்டு(கோபித்து)விட்டு, வைதேகி சித்தப்பா மேற்கொண்டு பேச எப்போ வரணும்னு கேட்கிறார் என்றாள். நீங்க அவகிட்டயே கேளுங்களேன் என்று சொல்லி வைதேகி சித்தப்பாகிட்ட ரெண்டு வார்த்தை சொல்லுடீ என்று ரிசீவரை அவளிடம் கொடுத்தாள்.

சொல்லுங்கோ சித்தப்பா என்றாள். என்னம்மா உனக்கு பிடிச்சிருக்கா என்றார். இந்தப் பக்கம் அமைதி ஆனாலும் அவர் மௌனம் சம்மதம் என்று அர்த்தம்மா என்றார். சரியா தான் சொல்றீங்க சித்தப்பா என்று அவரிடம் தனக்கு ராகவைப் பிடித்திருப்பதாக நாசுக்காக சொல்லி ஃபோனைத் துண்டித்தாள். மேற்கொண்டு சித்த்ப்பா வந்தவுடன் பேசிக் கொள்வோம் என்று பூரணி சொன்னாள்.

ராஜேஷும் வினோவும் உள்ளே நுழைந்தார்கள். நைசாக வைதேகி உள்ளே செல்ல முற்பட அவளை கை பற்றி இழுத்தாள் வினோ. எங்க ஓடிப் போக பார்க்கிறே என்றாள்.

வாங்க மேடம் உங்களுக்கு இப்போது தான் இந்த வீட்டு வழி தெரிஞ்சுதா? இல்லை உன்னை வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடனுமா. என்னோட தோழியாகவது இருந்து இருக்கலாம்ல. அவனோட சேர்ந்து வந்து இருக்கலாம்ல என்றாள்.

சரி சரி கோபித்துக் கொள்ளாதே. எனக்கும் வரவேண்டும் என்று தான். அம்மாவைப் பார்த்தும் ஒரு மாசம் ஆச்சுடீ. தப்பு தான் சரி சொல்லு எப்படி இருக்கார் உன்னோட ஹீரோ என்று அவள் கேட்கவும் வைதேகி நிஜமாகவே எழுந்து உள்ளே செல்ல முற்பட்டாள்.

இரு வினோதா ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று தனது அறைக்குள் சென்றாள். ராஜேஷும் வினோ நீ போய் அவகிட்ட கேளு என்று சொல்லி அவளை அந்த அறையிலேயே பேசிடச் சொல்லி கண்ணால் சொன்னான். பின்னாலயே வினோவும் சென்றாள். ஹே நான் பாத்ரூம்க்கு போகிறேன் என்றாள். நான் உள்ளே வரலை இங்கேயே இருக்கேன் என்றாள் வினோ.

வெளியில் வந்தவளை, இப்போ சொல்லு உன் ஆளு எப்படி இருக்கான் சாரி சாரி இருக்கார் என்று கேட்டாள். நீ எப்படி வேனும்னாலும் சொல்லு வினோ, நான் ராஜேஷை வாடா போடா என்று தானே பேசுகிறேன் என்றாள். வைதேகி நீங்கள் இருவரும் சிறு வயது முதல் ஒன்றாய் வளர்ந்தவர்கள் அதனால் அப்படி சொல்லும் போது எனக்கு அதில் வேற்றுமை இல்லை. ஆனால் ராகவிற்கு மரியாதை கொடுத்து தானே ஆகனும்.

வைதேகி உனக்கு பிடிச்சிருக்கா ராகவனை என்று என் கண்ணைப் பார்த்துச் சொல் என்றாள். என்ன ஏதோ பழி வாங்குகிற மாதிரி இருக்கு? நான் உன்னிடம் எங்க ராஜேஷை பற்றிக் கேட்ட மாதிரில் கேட்கிற?? அடிப்பாவி நீ எங்கே வைத்துக் கேட்டாய், நான் உன்னைப் பெண் பார்த்துவிட்டு போன ஆளை உனக்கு பிடிச்சிருக்கானு கேட்கிறேன். நீ எனக்கு காதல் கடிதம் கொடுத்தவனை எனக்கு பிடிச்சிருக்கா இல்லையானு கேட்டே… சரி எங்களோடது இனிமையான காதல் தான் ஆனால் ரொம்ப பழசு.

உன் கதைக்கு வா… நீ எப்போ காதலிக்க போறே? அம்மா பிடிச்சிருக்குனு சொல்லிட்டாள், நீ என்ன சொன்னே. சீரியஸா சொல்லு உனக்கு பிடிச்சிருக்கா இல்லையானு? எனக்கும் பிடிச்சிருக்குடீ. ஆனாலும் என்றாள் வைதேகி. அது என்ன ஆனா ஆவனானு, பிடிச்சிருக்கு அவ்வளவு தான்.

எங்களோட கல்யாணம் எப்படி நடந்தது என்று உனக்கு தான் நல்ல தெரியுமே. உன்னோட கல்யாணம் ஊர் கூட்டி மாப்பிள்ளை அழைத்து, ரொம்ப விமரிசையாக செய்ய வேண்டும் என்று ராஜேஷ் ஆசை படுறார்.

உன்னோட கல்யாண வைபோகம் ஆரம்பம் எங்கள் எல்லாருக்கும் சந்தோசம்னு தெரியாதா? நீயும் சந்தோசமா இருந்தா தான் உங்க அத்தை கொஞ்சம் மனசு நிம்மதியாகும். என்ன இருந்தாலும் அவளோட அண்ணன் மகள் நம்ம வீட்டுக்கு வரலையேனு குறை இருக்கும்.

ராஜேஷ் வெளியிலிருந்து குரல் கொடுத்தான், என்ன மகாராணி போகலாமா?? நாளைக்கு ஆபிஸ் போகனும். நீ அவகூட இருந்தா வைதேகியால் கனவு காண முடியாது. வா வா அவளும் நாளை ஆபிஸ் போகனும் என்றான்.

அத்தையும் வினோதாவும் ராஜேஷுடன் கிளம்ப வாசல் வரை வந்து வழி அனுப்பினாள் வைதேகி. சீக்கிரம் போய் சாப்பிட்டுவிட்டு படுக்க போடி என்றாள். நான் நாளைக்கு உனக்கு ஃபோன் பண்றேன் என்றாள் வினோ. அப்போது தான் அவளுக்கு நாளை ப்ரியா ஃபோன் பண்ணுவாளே என்ன சொல்லுவது எப்படி பேசுவது என்று யோசித்தாள்……..

முன்பக்கம்

அடுத்த பக்கம்

வைதேகி4

பூரணி வைதேகியிடம் அழகு நிலையம் செல்லவில்லையா என்று கேட்க, வைதேகி அலுவலகத்தில் இருந்து தாமதமானதால் நேராக வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொன்னாள். அவளால் அன்று அழகு நிலையம் செல்ல முடியவில்லை. அதைப் பற்றி பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை.

மறு நாளும் இல்லத்திலேயே இருந்துவிட்டாள் வெளியில் எங்கும் செல்லாமல் ஓய்வில் இருந்தாள் என்பதைவிட போக முடியவில்லை. அம்மாவுக்கு உதவியாக வீட்டை சுத்தப் படுத்துவதும், அழகு படுத்துவதுமாக இருந்துவிட்டாள்.

சனி கிழமை இரவே பூரணியின் தங்கை வந்துவிட்டாள். அவளது கணவருக்கு வெளியூர் செல்ல வேண்டியதால் அவரால் வர முடியவில்லை என்றும் கண்டிப்பாக மேற்கொண்டு பேசுவதற்கு அவர் வந்து விடுவார் என்று கூறி அவர் வராததற்காக வருத்த பட்டாள். ஆனாலும் வைதேகி சித்தியிடம், சித்தப்பாவிற்கு வரகூடாது என்ற எண்ணமில்லை. நிஜமாகவே தவிர்க்க முடியாத வேலையாக இருந்து இருக்கும், என்னைவிட அவருக்கு எதுவும் முக்கியமில்லை சித்தி. எனக்காக எதுவும் செய்ய கூடியவர் அவர் என்று அவள் சொன்னது சித்திக்கு பெருமையாகவே இருந்தது.

ஞாயிறு காலை : 9.00 மணி

ஞாயிறு காலை பொழுது விடிந்தவுடனேயே எல்லோருக்கும் ஒரு வித தவிப்பு தொடங்கியது. குடும்பத்திற்கே முதல் பெண் வைதேகி. முதல் முறையாக அவளை பெண் பார்க்க வரப் போகிறார்கள். பூரணிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. என்ன செய்கிறோம், என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தே அவளுக்கு நேரம் போனது. வைதேகியோ அம்மாவை என்னம்மா இது ஒரு கல்யாணம் பண்ற அளவிற்கு இப்படி எதற்கு தவிப்பு. இது ஒரு சம்பிரதாய நிமித்தம் மட்டுமே. கொஞ்சம் நிதானமாகவும், பொருமையாகவும் இரு என்று எந்த ஒரு கவலையும் இல்லாமல் கூறினாள்.

ஞாயிறு காலை : 10.00 மணி

ஆனாலும் பூரணிக்குள் தனது வீட்டில் தன் மகளின் வாழ்க்கைக்காக எடுத்து வைக்கும் முதல் படியை தான் தனியாக இருந்து செய்கிறோமே என்று புலம்பினாள். வைதேகி அதையும் இதமாக, அம்மா அப்பா இல்லாமல் எங்களை இத்தனை ஆண்டுகள் பார்த்துக் கொண்டாய். எங்களின் தேவைகளை அறிந்து நீதானே செய்தாய். என்ன படிக்க வேண்டும் என்று நாங்கள் யோசிக்கும் முன் நீ இதை இதை படித்தால் இப்படி இருக்கலாம் என்று கூறிய நீயா இப்படி கவலைப் படுகிறாய்?.

நீயும் இல்லாமல் இருந்தால் எங்களின் நிலை என்ன என்று யோசித்தால், அப்பா இல்லையே என்ற குறை எங்களுக்கு வரவே வராதே மா என்று அமைதியாக கூறினாள். கவலைபடாதே, அப்பா இல்லை என்பதற்காக எதையாவது நீ கம்மியா செஞ்சியா மா,  எங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் தானே நீ பார்த்துக் கொண்டாய். அப்பா இருந்து இருந்தாலும் கூட இப்படி எங்களை பார்த்து கொண்டு இருப்பாரா என்று தெரியவில்லை. எப்படி தனது மகளுக்குள் இத்துனை பக்குவம் என்று தனது மகளை நினைத்து கர்வப் பட்டாள் பூரணி.

ஞாயிறு காலை : 11.00 மணி

இவ்வாறு பேசிக் கொண்டே இருக்கையில் ராஜேஷ் உள்ளே நுழைந்தான், தன் கையில் பழம், பூ முதலியவைகளோடு. வாடா என்று தன் மருமகனை வரவேற்றாள். உடனே வைதேகி, உனக்கு ஒத்தாசைக்கு பார் வந்துவிட்டான் உன்னோட மருமகன். என்ன வேலை உண்டோ அதை இவனைச் செய்ய சொல். இன்னைக்கு ஒரு நாளாவது நமக்குச் செய்யட்டும், தினமும அவன் மனைவிக்கு மட்டுமே வேலைகளை செய்கிறான் என்று அவனை வம்பிற்கு இழுத்தாள்.

உனக்கும் வேலை செய்யறதுக்குனு ஒரு ஆள் வந்துமாட்ட போறானே என்று  எனக்கும் தவிப்பா தான் இருக்கு என்ன பண்றது, கழுத்துல மூணு முடிச்சு போடும்போதே தெரியாதே இதுகளுக்கு வேலை செய்யறதே நமக்கு வேலையாகும்னு அவனும் அவளை வம்புக்கு இழுக்க பூரணி தனது வயலின் கச்சேரியிலிருந்து விடுபட்டு இவர்களின் சம்பாஷனையில் மூழ்கினாள்.

ராஜேஷ் எங்கடா உன்னோட தர்ம பத்தினி வினோதாவும், உன் அம்மாவும் என்று வைதேகியின் சித்தி கேட்க, நீங்க எப்போ வந்தீங்க மாமி என்று பரஸ்பரம் குசலம் விசாரித்தார்கள். அம்மா இப்போ வந்துடுவா, அவனது மனைவி, அவளுடைய அம்மா வீட்டிற்கு சென்று இருப்பதாகவும், இரவு இவன் போய் அழைத்துவர வேண்டும் என்றும் கூறினான்.

ஞாயிறு பகல் : 12.00 மணி

சரி வாடா சாப்பிட போகலாம் என்று அவனை அழைத்தாள் வைதேகி. என்னடீ இன்னைக்கு உனக்கு பசிக்கிறதா என்றான்? என்ன இது புதுசா கேட்கிற, தினமும் பசிக்கும் தானே? இன்னைக்கு என்ன பசிக்கக் கூடாதா?

உனக்குப் பிடிச்ச உருளை பொடிமாஸ் இருக்கு வா, நல்ல கொட்டிக்கோ என்றாள். எனக்கு வெறும் ரசம் சாதம் போதும். கொஞ்சம் தூங்கனும் என்றாள்.

அப்படியே மொத்தமுமாக எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டது கொஞ்சம் சந்தோசமாக இருந்தது வைதேகிக்கு, ஆனாலும் ஒரு வருத்தம் வினோதாவும், சித்தப்பாவும் இல்லாதது.

ஞாயிறு பகல் : 2.00 மணி

என்ன மாமி ஜாதகம் எல்லாம் பார்த்தாயிற்றா? பையன் எங்க இருக்கான், என்ன பண்றான், விசாரித்து விட்டீர்களா? இல்லைனா, அவனுடைய விவரங்களை என்னிடம் தாருங்கள் நான் விசாரித்து வருகிறேன் என்றான்.

என்ன நீ இப்பவே முடிவான மாதிரி ரொம்ப வேகமா இருக்கே என்று வைதேகி கேட்க, முடிவு என்ன வைதேகி உன்னை வேண்டாம் என்று எந்த மடையனாவது சொல்வானா என்றால். உள்ளே நுழைந்த அவனது தாய் ஒரு மடையன் சொல்லாமல் செய்தானே என்று தன் மகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததை ஜாடையாக கூறினாள்.

அம்மா அப்படி எதுவும் இல்லை. அவளுக்கும் சரி எனக்கும் சரி அப்படி ஒரு எண்ணம் சிறு வயது முதலே இல்லையே மா. என்னோடு கூட பிறந்தவர்கள் இருந்து இருந்தால் ஒரு வேளை இவளை என் மாமன் மகளாக நினைத்து இருப்பேனோ என்னவோ, ஆனால் ஒரே தெருவிலும் வசித்தும், ஒரே பள்ளியிலும் படித்த நாங்கள் எப்போதும் ஒரு சகோதர சகோதரி போலவே இருந்தோம்.

வினோதாவை நான் விரும்புவதாக முதலில் வைதேகியிடம் தான் கூறினேன், அவளும் உனக்கு ஏற்றவள் தான், அத்தையை சமாளித்துக் கொள்ளாலாம் என்று எனக்கு தைரியம் சொன்னதே வைதேகி தானம்மா என்றான்.

உன்னைவிட எனக்கும் வைதேகியின் வாழ்க்கையின் மேல் அக்கறை உண்டு மாமன் மகனாக இல்லை, அவளது சகோதரனாக என்று. என்ன மாமி நான் சொல்வது சரி தானே என்றான். அதற்கு என்னபா நீ சொன்னால் சரியாக தான் இருக்கும் என்றாள் பூரணி.

சரி மாமி சொல்லுங்கோ, அந்த பையன் என்ன செய்யறான், பேரு என்ன, ஜாதகம் பார்த்தாச்சா?

பையன் பேரு ராகவன். வயது 27, அவிட்டம் நட்சத்திரம், ஜாதகம் மட்டும் பார்த்ததாகவும், 8 பொருத்தம் இருப்பதாக தனது ஆஸ்தான ஜோசியர் சொன்னதாக சொன்னாள். ஒரு தனியார் கம்பனியில் பொறியாளராக இருக்கிறான், 7000 சம்பளம் வாங்குகிறான் என்றாள்.

இப்போதே விசாரிப்பதற்கு என்ன அவசரம் என்றும் பூரணி கேட்டாள். வந்து பார்த்து பிடித்து இருந்தால், மேற்கொண்டு விசாரிக்கலாம் என்றாள். நீ தான் கொஞ்சம் இல்லை நல்லா விசாரித்துச் சொல்லனும் என்று மருமகனுக்கு கட்டளையிட்டாள். தங்கள் உத்தரவு என் பாக்கியம் என்று அவனும் விடாது மறுமொழி சொன்னான்.

பையன் வீட்டிலிருந்து ஞாயிறு மாலை என்று தான் சொல்லி இருந்தார்கள் எத்தனை மணிக்கு கிளம்புகிறோம் என்று சொல்லாத காரணத்தினால் ராகு காலம் கழிந்து 6 மணிக்கு பிறகு தான் வருவார்கள் என்று இவர்கள் நினைத்தார்கள்.

ஞாயிறு மாலை : 3.00 மணி

பேசிக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. பையன் வீட்டிலிருந்து ஃபோன் செய்து நாங்கள் இப்போது கிளம்பிவிட்டோம் இன்னும் அறை மணி நேரத்தில் அங்கு வந்துவிடுவோம். ராகு காலம் வருவதற்குள் வந்து பார்த்துவிடுகிறோம் என்று கூறினார்கள். வழி தெரியாவிட்டாள் யாரையாவது அனுப்பவேண்டும் என்று சொல்லி கட்டானது அந்த ஃபோன். அனைவரும் விழித்தனர்.

வைதேகியிடம் சீக்கிரம் தயாராகுமாறு சொல்ல, அவளோ இன்னும் 30 நிமிடத்தில் ஐந்து முறை தயார் ஆகலாம். நோ டென்ஷன் ப்ளீஸ் என்றாள். அவளது தங்கையோ அக்காவிடம், இந்த கலர் புடவை கட்டிக்கோ என்று சிகப்பு நிற பட்டுப் புடவை ஒன்றை எடுத்து தர, ராஜேஷும் ஹே இது சூப்பரா இருக்கு இதையே கட்டிக்கோ என்றுச் சொல்ல, அதற்குச் சரியாக சேரும் ரவிக்கையை தேடி எடுத்தாள். சரி எனக்கு 10 நிமிடம் கொடுங்கள் என்னை தயார் படுத்திக் கொள்கிறேன் என்றாள். ஹே என் ஆளு வரப் போறான், நான் ரெடியாகனும் எல்லாரும் இந்த அறையை விட்டு வெளியே செல்லுங்கள், என்று நாசுக்கா சொல்றா என்று கிண்டல் செய்த படியே அவன் நகர, எல்லோரும் வெளியே ஹாலுக்கு வந்தார்கள்.

அவள் தனது அறையில் ஒரு டவலுடன், குளியலறைக்குச் சென்றாள். முகம், கை, கால் அலம்பி அவள் மெதுவாக தனது கூந்தலை வருடிய படியே குளியலறையிலிருந்து வந்தாள். நேரமானதைக் கண்டு வேகமாக அவளது அந்தக் கூந்தலை பின்னினாள். முகத்திற்குச் சிறிது பவுடர் பூசினாள். எப்போது வைக்கும் வட்ட பொட்டினை வைத்தாள். நெற்றியில் போட்டுடன் எப்போதும் வைக்கும் சிறிய விபூதியும், அந்த வட்ட பொட்டிற்குக் கீழே ஒரு சிறிய கீரலாக சிகப்பு நிற குங்குமும் இட்டாள்.

ஞாயிறு மாலை : 3.20 மணி

புடவையைக் கட்ட ஆயத்தமானாள். வீட்டு வாசலில், ஒரு கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்டாள். ஆவல் மிகுதியில் வாசலில் எட்டிப் பார்த்தாள் அதற்குள் வீட்டிற்குள்ளிருந்து ராஜேஷும், பூரணியும், மற்றும் அவளது மாமாவும் வாசலுக்குச் சென்று காரிலிருந்தவர்களை வரவேற்றார்கள் தான் ஆனாலும் அவளை பொருத்தவரை மறைத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அவளது தங்கை ரம்யா குரல் கொடுத்தாள் அக்கா ரெடியா என்று. இதோ ஆச்சு டீ என்று புடவையை கட்டினாள் வேகமாக.

ராகவன் வீட்டிலிருந்து, அவனது, தாய், தந்தை, மற்றும் அவனது சகோதரிகள் இருவரும் வந்திருந்தனர். அவர்களை அன்போடும், மரியாதையாகவும் உள்ளே அழைத்து வந்தான் ராஜேஷ். வைதேகியின் உறவுகள் அனைவரையும் அவர்களுக்கு அறிமுக படுத்தினான், இது வைதேகியோட அம்மா பூரணி, சித்தி, அத்தை, அவளது தங்கை ரம்யா என்றும் நான் வைதேகிக்கு மாமவோட மகன் என்றும் தான் அந்த வீட்டில் ஒரு மகன் போல என்று அவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கும் முன்னரே கூறினான்.

ராகவனும் – ஐம் ராகவ், என்னோட அப்பா, அம்மா, இவர்கள் இருவரும் என்னோட சகோதரிகள். எங்களோட்து இப்போ ரொம்ப சின்ன குடும்பம், நான் எனது பெற்றோர் மட்டுமே. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி அவர்களும் சென்னையிலேயே இருக்கிறார்கள் என்று ஒரு தன் குடும்பத்தைப் பற்றி சொன்னான்.

பெண்ணைப் பார்க்கலாமா என்று ராகவனின் தந்தைக் கேட்க, ஐந்து நிமிடம் கொடுக்கவும் என்று கூறி ராஜேஷ் வேகமாக உள்ளே சென்றான். வைதேகியின் அருகே சென்றவன் ஆச்சரியப்பட்டான். ஹே என்ன இது உனக்குள்ளும் பயமா?? என்ன டென்ஷன் ?? இந்த முகத்தோட போனாய் என்றால் எல்லாருக்கும் தெரிந்து விடும் நீ பதட்டபடுகிறாய் என்று. வைதேகி ஒரு விஷயம் சொல்லவா, அவன் ரொம்ப நல்ல இருக்கான், உனக்கு ஏற்றார் போல தான் இருக்கான், எதற்கும் பதட்டபடாதே, உனக்கும் பிடிக்கும் என்று தான் நினைக்கிறேன். என்னை விட நல்ல உயரம், நல்ல நிறம், கொஞ்சம் பாடி பில்டர் மாதிரி இருக்கிறான். உனக்கு பிடித்த காம்பினேஷன்ல பேண்ட் ஷர்ட் போட்டு இருக்கிறான் என்று ஏகத்துக்குச் சொல்ல, இவளே நீ என்னை இன்னும் டென்ஷனாக்கப் பார்க்கிறாய். எனக்கு இந்த வேஷம் எத்தனை நேரத்திற்கு என்று நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன். வேற ஒரு டென்ஷனும் இல்லை என்றாள்.

ஞாயிறு மாலை : 3.30 மணி

அப்படி என்றால் சரி வா போகலாம் என்றான். ஹே இந்த புடவையில் நான் எப்படி இருக்கேனு சொல்லவே இல்லை? எல்லாம் ஓகே தானே என்றுக் வைதேகிக் கேட்க அவனோ ஓரக்கண்ணால் பார்க்க இவளோ வெட்கப் பட்டு சிரிக்க இது தான் சந்தர்ப்பம் என்று அவளை வா போகலாம் என்றான். ஹே நீ அங்க போய் அவங்களுக்கு காபி எல்லாம் கொடுக்க வேண்டாம், வெறும் நமஸ்காரம் மட்டும் பண்ணு போதும் என்றான்.

வைதேகியின் சித்தி அவர்களுக்கு காபி எடுத்துச் செல்ல, அதற்குள் வைதேகியும் அங்கு அதே நேரத்தில் வர அவளிடமே  காபி ட்ரெயைக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்தாள்.

நேராக அவனது பெற்றோருக்கு கொடுத்து பின்னர் ராகவனுக்குக் கொடுத்தாள். ஒரு பார்வை இருவரும் ஒருவருக்கொருவர் பார்வைகளை பரிமாறிக் கொண்டனர். அவளையும் மீறி சிரித்தால் காரணம் அவளுக்கு பிடித்த நீலக் கலர் சட்டையும், லை சாண்டல் கலர் பேண்டில் இருந்த ராகவன் அழகாக மட்டுமில்லை, கம்பீரமாகத் தான் இருந்தான்.

ஞாயிறு மாலை : 3.32 மணி

அந்த ஒரு நொடிப் பார்வை தான் அவர்களின் வாழ்க்கை ஆரம்பிக்க போகிறது என்று ராகவனுக்கு மணி அடித்ததோ. அவள் நமஸ்கரித்தாள் பின்னர் பாடத் தெரியுமா என்று சம்பிரதாயக் கேள்விகள் கேட்டது என்று எதுவும் ராகவன் காதில் விழவில்லை.

வைதேகியை நீ உள்ளே போ என்று ராஜேஷ் சொல்லியதில் நிஜமாகவே ஒரு சகோதர கரிசனம் தெரிந்தது. அவள் அங்கு அவளாக இருக்க முடியாத நிலை என்பதை நன்கு உணர்ந்தவனாதலால் அவளை உள்ளே செல் என்று உத்தரவே போட்டான். அவளும் இது தான் சாக்கு என்று உள்ளே செல்ல ஆயத்தமானாள்.

ராகவனுக்கு அப்போது தான் விழித்தவன் போல அவளைப் பார்த்தான். பார்த்த அந்த நொடியில் என்ன தோன்றியதோ தெரியவில்லை. எனக்கு உங்க பெண்ணை பிடித்திருக்கிறது. அவளுக்கு என்னைப் பிடித்து இருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்றான்.

வைதேகிக்கு அதிர்ச்சி என்றே சொல்லலாம். ஒரு நிமிடத்தில், ஒரே பார்வையில் அவளை பிடித்திருக்கிறது என்று சொன்னதாலா? அதனைக் கேட்டவாறே அவள் உள்ளேச் சென்றாள். அதனை ஒரு நொடியில் அவள் முகத்தில் காட்ட அதனை அவனது சகோதரி ஒருவள் பார்த்து அவளுடனேயே உள்ளேச் சென்றாள்.

வைதேகி உள்ளே சென்றவுடன், அவளது அம்மா, சித்தி, ராஜேஷ் என்று அனைவரும் உள்ளே செல்ல முற்படுகையில், ராகவனின் சகோதரி ப்ரியா உள்ளே அவளுடன் இருப்பதைக் கண்டு அமைதி காத்தனர்.

வைதேகி, நீ ரொம்ப அழகா இருக்கே, என்னோட தம்பிக்கு மனைவியாக போகிறாய், நாங்கள் வாங்கி வந்த இந்த பூவினை நானே வைத்துவிடவா என்று கேட்டபடியே அவளது தலையினில் அவள் கையில் கொண்டு வந்த மல்லிகைப் பூவினை வைத்தாள். ப்ரியாவோ தன்னை ராகவனின் அக்கா என்றும் அவன் அவர்கள் வீட்டுச் செல்லப் பிள்ளை என்றும். தனது தம்பியைக் கைபிடிப்பவள் கண்டிப்பாக பாக்கியச்சாலி என்றும் சொல்லி உனக்கு என் தம்பியைப் பிடிக்கலையா என்ன? உன் முகத்தினில் நான் மாற்றத்தினைக் கண்டேன் என்றாள். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, ஒரு அதிர்ச்சி தான் இப்படி நான் எதிர்பார்க்கலை. அவன் எப்பவுமே அப்படி தான் பட் என்று சொல்லிடுவான்.

ஆனாலும் உனக்குப் பிடிச்சிருந்தால் மட்டுமே மேற்கொண்டு பேசலாம் என்று அவன் சொன்னானே. உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா என்று சொல் என்று ப்ரியா தொடர்ந்தாள்.

வைதேகி என்ன சொன்னாள்

முன்பக்கம்

அடுத்த பக்கம்

வைதேகி3

வேலை நிமித்தமாக பல உளைச்சல்களுக்கு இடையில், என்னோட வைதேகியின் கதை மனதில் ஓடிக் கொண்டே இருந்தாள். கட்டுபடுத்தி எனது அலுவலகத்தில் இருக்கும் வேலைகளுக்கு மனதை திருப்ப அரும் பாடு பட்டேன். ஆனாலும் எனக்குள் அன்றே தோன்றியதை எழுதியிருந்தால் இப்போது பெண் பார்க்கும் வைபவம் முடிந்து இருக்கும்… ஆனால் இப்போது கொஞ்சம் கதையை இழுத்துவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்….

வைதேகி காத்திருந்தால், எல்லோருக்கும் இந்த பெண் பார்க்கும் தருணம் என்பது கனவுகளோடும், தன்னைக் காண வரபோகும் அந்த மனிதன் எப்படி இருப்பானோ என்ற கவலையும், அவனுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று யோசிப்பார்கள். ஆனால் வைதேகியோ, அந்த ஆணவமான ஆண்மகனை காண்பதற்கு காத்திருந்தாள் என்றே சொல்ல வேண்டும். அத்தனை ஆத்திரம், கோபம் அவளுக்குள். இத்தனை பெண்களை எப்படி வேண்டாம் என்று ஒருவனால் சொல்ல முடிந்தது? அப்படி என்ன தான் எதிர்பார்த்தான் அவன் என்று அவளுக்குள் ஒரு கொலைவெறியே இருந்தது முன்பின் தெரியாத அந்த நபர் மேல்.

ஆனாலும் அவளுக்குள் ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்றே சொல்ல வேண்டும். தன்னை முதன் முதலாக காண வருப்போகிறவனைப் பார்ப்பதற்கு. இம்ம் எதிர் பார்ப்பு இருந்தது, மற்றபடி தவிப்போ அல்லது ஒரு பதட்டமோ இல்லை. அவளின் அழகு மேல் அவளுக்கு ஒரு அபரிமிதமான நம்பிக்கையா அப்படி ஒரு எண்ணம் இல்லை அப்படியே இருந்தாலும் அதில் தவறில்லையே. அவளைப் பார்த்தபின் அவளையும் பிடிக்கவில்லை என்று சொன்னால் ஒன்பதோடு பத்தாக அவள் இருப்பால், அதுவே இவள் அவனை வேண்டாம் என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று பலவாறு தன்னை தயார் செய்து கொண்டு தான் இருந்தாள்.

வெள்ளிக் கிழமை காலையில் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் நேரம்,  அலுவலகதிலிருந்து வரும் போது தான் எப்போதும் (எப்போதாவது  தான்) செல்லும் அழகு நிலையம் சென்று புருவத்தை கொஞ்சம் அழகாக தீட்டிக் கொள்வோமா என்று யோசித்தாள். அதே நேரம் பக்கத்து வீட்டு ரேடியோவிலிருந்து பாடல் ஒன்று (அழகன் படத்திலிருந்து — சங்கீத ஸ்வரங்கள்) அங்கே இரவா பகலா… எனக்கும் மயக்கம் என்ற பாடல் வர, ஒரு நிமிடம் நின்று ரசிக்க, முதல் முறையாக கல்யாண மயக்கத்தில் தனக்குள் சிரித்துக் கொண்டே செல்ல, எதிரே அவளது அத்தை வந்தாள், அவளது சிரிப்பிற்கான காரணம் என்னடி பொன்னே என்று கேட்டபடியே வாசல் கதவினில் கை வைத்தாள். என்னடீ சிரிப்பு என்ற கேள்வியுடன் அருகினில் வந்து பாசமாக அனைத்தாள். அவளிடம் என்னடி எப்போது வருகிறார்கள் அந்த பையன் வீட்டில் இருந்து என்று கேட்டாள்.  அது சரி எப்போ வந்தாலும் இதே சிரிப்போட இரு. இந்த சிரிப்பினை கண்ட பின் எவன் உன்னை வேண்டாம் என்று சொல்வான் என்று தன் மருமகளின் அழகை ரசித்து, அனைப்பினில் ஒரு அழுத்தத்தை தர, போதும் அத்தை எப்போது கேளி, கிண்டல் தானா என்று பொய் கோபம் கொண்டாள். என்னடீ நிஜமாகவே கோபமா என்று மேலும் அவளை சீண்டினாள். அய்யோ அத்தை, நேரமாச்சு நான் கிளம்பறேன், சாய்ந்திரம் வந்து பேசறேனே என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள் இல்லை ஆளைவிடு என்று வெட்கத்தோடு ஓடினாள் என்றே சொல்ல வேண்டும்.

அத்தை உள்ளே பூரணி என்று குரல் ட்கொடுத்துக் கொண்டே சென்றாள். அவளை வரவேற்று, சாப்பிட வாருங்கள் என்றாள் பூரணி. என்னடி இது அடுத்த வீதியில் இருக்கிறேன். எனக்கு என்ன இந்த உபசாரம் என்றாள். என்ன நீ ஆபிஸிக்கு போகலையா, இன்னும் கிளம்பமா இருக்கியே என்றாள். போக வேண்டும், கொஞ்சம் மனசே சரி இல்லை அதனால் இன்று தாமதமாக வருவேன் என்று சொல்லி இப்போ தான் ஃபோன் பண்ணினேன் என்றாள். ஏன் என்ன ஆச்சு டீ இப்போ?? உனக்கு என்ன உடம்பு எதாவது சரியில்லையா என்றாள் மிகவும் அக்கரையாக.

அதற்கு பூரணியோ தனக்கு பயமாக இருக்கிறது, வைதேகி என்ன நினைக்கிறாள் என்றே புரியவில்லை.

நாங்கள் இருவரும் நல்ல நேசத்தோடு இருந்தாலும், அவள் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்வாளோ என்று பயமாக இருக்கு என்று புலம்பினாள். அத்தையோ மிகவும் சாதரணமாக அவளிடம் இது ஒரு பெரிய விஷயமில்லையேடி. அவளுக்கு பிடிச்சிருந்தா தானே நாம் மேற்கொண்டு பேசுவோம். அவளுக்கும் தெரியும் அவளுக்கு பிடித்தால் மட்டுமே நாம் மேற்கொண்டு பேசுவோம் என்று அவளுக்கு உன் மீது அத்தனை நம்பிக்கை. போடி போய் வேலையை பாரு எதுக்கு தான் கவலை படறது என்று இல்லையா உனக்கு. நீயா கவலை படுகிறாய் என்று பூரணியையும் கேளி செய்தாள்???

மேலும் அவள் வீட்டு வாசலில் கண்ட காட்சியை சொன்னாள். உன் பெண் ஒன்றும் சிறுமி இல்லை. கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல சன்யாசினியும் இல்லை. இப்போது வேண்டாம் என்று இருந்திருந்தால் அவள் வரன் பார்க்கட்டுமா என்று உன் தங்கை கேட்ட போதே வேண்டாம் என்று சொல்லி இருப்பாள். அப்பா இல்லாமல் அம்மா கஷ்ட படக் கூடாது என்பதில் எங்கள் எல்லோரையும் விட வைதேகி மிகவும் யோசிக்கிறவ. அவளுக்கும் தெரியும் அவளுக்கு பிறகு ரம்யா இருக்கா என்று.

ஆனா ஒன்னு சொல்றேன், அவள் இந்த வரன் வேண்டாம் என்று சொன்னால் அவளை கோபித்துக் கொள்ளாதே. அவளுக்கு எது சரி வரும் என்று நன்றாகத் தெரியும். அவளுக்குப் பிடிக்கலை என்றால் வேறு வரன் பார்த்துக் கொள்ளலாம் என்ன என்றாள். அவளோட வாழ்க்கை என்பதை விட அம்மா நமக்கு நல்லது தான் செய்வாள் என்ற நம்பிக்கை நம்ம கொழந்தை கிட்டே இருக்கு. அப்படி பட்டவளுக்கு, நீ அவளுக்கு பிடித்தமான வாழ்க்கையை தான் தரனும் டீ என்று தன் பேச்சிற்கு முற்று புள்ளியிட்டாள்.

ஏதோ நீங்க இப்போ சொன்ன வார்த்தை ஆறுதலாக இருக்கு. எப்படி உங்களுக்கு நன்றி சொல்வேன் என்றாள் தன் நாத்தனார் தனக்கு கூறிய அறிவுரைக்கு. நான் என்னடி செஞ்சேன், ஏதோ எனக்கு தெரிந்ததை, மனசுல பட்டதை சொன்னேன் என்றாள். நான் எள் என்றால் நீ எண்ணையாக வருவாய், நான் சுள் என்றாலும் கோபம் கொள்ளாமல் என்னோடு அன்பாக இருக்கும் உனக்கும், உன் மகள்களுக்கும் என்னால் வேறு என்ன  செய்ய முடியும் சொல்.

அத்தைக்கு மனது நிறைய குறை தான் அவளது மகன் ராஜேஷ்க்கு வைதேகியை கல்யாணம் செய்யலையேனு. என்ன செய்வது, அவன் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்னை நேசித்து திருமணமும் செய்துவிட்டானே….

சரி உன் தங்கை எப்போ வரா என்று கேட்டுக் கொண்டே கிளம்ப ஆயத்தமானாள். இப்படியே யோசித்துக் கொண்டு இருக்காதே. நாளைக்கு வைதேகியை லீவு போட்டு விட சொல். வீட்டு வாசலில் பாரு ஒட்டடையா இருக்கு. அவளை அந்த வேலையை மட்டும் பார்க்க சொல். எப்போதும் போல அவளே வெளியில் கடைக்கு போய், பூ பழம் என வாங்க அனுப்பாதே. நான் ராஜேஷை வாங்கிட சொல்றேன் என்றாள். சரி நான் கிளம்பறேன் எல்லாம் அப்படியே போட்டபடி இருக்கு. அவா ரெண்டு பேரும் ஆபிஸ் கிளம்பின கையோட நான் கிளம்பி வந்துட்டேன்.

எப்போதும் போல முதல் ஆளாக அலுவலத்திற்குள் வைதேகி ஒன்பது மணிக்கு முன்னரே ஆபிசிற்கு வந்து விட்டாள். புது அலுவலகம் என்பதால் இல்லை, அது அவளது தாயிடமிருந்து கற்ற பாடங்களில் மிகவும் முக்கியமானது. எந்த இடமாக இருந்தாலும் ஐந்து நிமிடம் முன்னர் இருக்க வேண்டும் என்று சொல்லியே அவளை வளர்த்தாள். எப்போதும் வேலை என்பது பேருக்கு செய்ய கூடாது என்று தான் வேலைக்கு கிளம்புமுன் மகளை அனுப்பிவிடுவாள்.

அன்று அலுவலகம் வந்தவுடன் முதல் வேலையாக தனது மேலாளர் வந்து விட்டாரா என்று நோட்டம் விட்டாள். அவர் எப்போது பத்து மணிக்கு மேல் தான் வருபவர். பாவம் 70 கிமீ தூரம் பயணம் செய்பவர். ஆனால் அவள் எட்டிப் பார்க்க அங்கே அவர் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டாள். சரி யாரும் வந்து அவரிடம் பேச ஆரம்பிக்குமுன் தான் போய் பேசி விட்டு வந்துவிடலாம் என்று அவரது அறைக்குள் நுழைய கதவினில் டொக் டொக் என்றால். அவரது யெஸ் என்ற குரல் கேட்டு உள்ளே சென்றால், என்னமா என்றார். நாளை ஒரு நாள் தனக்கு விடுமுறை வேண்டும் என்றாள். அவள் மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடப்பதானால் ஏன் எதற்கு என்று எந்த தேவையில்லாத கேள்வியும் கேட்காமல் சரி என்று அவர் சொன்னதைக் கேட்டதும், நாளை முடிக்க வேண்டிய வேலையும் இன்று முடித்துவிட்டுச் செல்கிறேன் என்றாள். முடிந்தவரை செய். பின்னர் திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளலாம்.

தன்னுடைய இருக்கைக்கு வந்தவள் தனது வேலையை செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு ஆபிஸ் பையன் காபி கொடுத்திடும்போது தான் பார்த்தாள் மணி 11.30 அதுவரை நேரம் போனதே தெரியவில்லை. அவளது அருகினில் இருந்த மேரி என்ன பா நாளை லீவாமே என்ன விஷயம் என்றாள். அவளிடம் அதிகமாக அந்த அலுவலகத்தில் பேசும் இருவரில் ஒருவள் மேரி, மற்றும் ஒருவன் இப்போது காபி கொடுத்துவிட்டு போன இஸ்லாம். பொதுவாக அம்மா கை ஃபில்டர் காபியை தவிர்த்து வேறு எங்கும் காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவள். இந்த அலுவலகத்தில் வந்த அன்று இஸ்லாம் தந்த இன்ஸ்டண்ட் காபியின் சுவையினால் இப்போது தினமும் இரண்டு காபி அதிகமாக குடிக்கிறாள்.

மேரியின் கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு சிரிப்பினை பதிலாக்கி வேலையில் மூழ்கினால். சொல்லக் கூடாது விஷயம் என்றால் சொல்ல வேண்டாம் என்று மேரியும் நாசுக்காக கூற, சொல்லக் கூடாத விஷயம் என்று அப்படி எதுவும் இல்லை. வேலை முடித்தவுடன் சொல்கிறேன் என்றாள்.

அப்படியே அன்றைய நாள் முழுவதும் வேலையிலேயே மூழ்கிப் போனாள். எல்லோரும் கிளம்பும் முன் கிளம்பி விடுபவள். அன்று அவளது வேலையில் தன்னை மறந்தாள்.

எப்போ கிளம்ப போறீங்க மேடம் என்று இஸ்லாம் கேட்க, தனது கைகடிகாரம் ஆறு மணி கடந்து முப்பது நிமிடங்கள் ஆனதை சொன்னது. ஐந்து நிமிடம் கொடுப்பா என்றாள். தனது வீட்டிற்கு ஒரு ஃபோன் செய்து தனது தங்கை ரம்யாவிடம் இப்போது தான் கிளம்ப போகிறேன் அம்மா வந்தவுடன் சொல்லிடு என்று கூறி அலுவலகத்திலிருந்து புறப்பட்டாள்.

எப்போதும் போல பேருந்து கூட்டமாக இல்லாமல் அதிசயமாக அவளுக்கு அமர்ந்து செல்ல இடம் கிடைக்க, பரவசத்துடன் அன்றைய தினம் எப்படி போனதே தெரியவில்லை என்று யோசித்தாள். பேருந்திலிருந்து இறங்கி, வீட்டை நோக்கி நடந்தாள். எப்போதும் வீரு நடை போடுபவள் இன்று அன்ன நடைபோட்டு சென்றது அவளுக்கே வினோதமாக இருந்தது. பின்னர் தனது நடையை துரிதப் படுத்தினாள். மாற்றங்கள் இல்லாதது எதுவுமில்லையோ…..

முன் பக்கம்

அடுத்த பக்கம்

வைதேகி காத்திருந்தாள்-2

ஆரம்பம் என்னமோ அரை மணி நேரத்தில் எழுதிவிட்டேன், ஆயினும் அடுத்து இந்த கதையை எப்படி எடுத்துச்(இழுத்து) செல்வது என்று சிறிது தயக்கமே. தெரிந்தவர்கள் பலரும், என்னை அறியாதவர்களும் கூட அருமை என்று சொல்லியது கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும் ஒருவித பயம் எனக்குள் வந்தது. இந்த கதையோடு என் வாழ்க்கையும் இனைத்து விடுவார்களோ என்ற அச்சமும் எனக்குள்ளே எழுந்தது. எது எப்படி இருப்பினும் என்னுடைய கற்பனையை கட்டி போட மனமில்லாமல் தொடர்கிறேன்.

வைதேகியிடம் அவளுக்காக வரன் பார்க்க ஆரம்பித்தவுடனே அவளது உறவினர் கேட்ட முதல் கேள்வி உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று தான். அவளோ மிகவும் சாதரணமாக என்ன கமல் மாதிரி அழகா, அமிதாப் மாதிரி உயரமா, அப்படி இப்படினு கேட்டா உங்களால பார்க்க முடியுமா? ஏதோ எனக்கு யார் சரியா வருவாங்களோ அப்படி  பாருங்க என்று நறுக்கென்று சொல்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னால்.

தேடுதலே வாழ்க்கை இதில் இவர்கள் யாரைத் தேடி தந்தாலும் அவனுடன் சேர்ந்து தான் வாழ்க்கையை தேட போகிறோம்.

கனவுகள் பொங்கி வழிதலும் (அவளும் தான்) தனக்கானவனை எப்படி இருப்பான் என்று நினைத்து உள்ளம் பூரித்தலோ என்று எந்தக் கல்யாணக் கனவுகள் இல்லாமல், கவனம் சிதறாமல், காதல் சிறிதுமில்லாமல் எப்படி இருக்க முடிந்தது என்று வைதேகி இன்று யோசித்துக் கொண்டிருக்கிறால். 17 வருடங்களுக்கு பிறகு.

கண்ணனின் கோதைக்கு அவனை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சில் பரவசம் என்று கூட படித்ததில்லையா? இன்று யோசிக்கும்போது எப்படி ஜடமாக இருந்திருக்கிறாள் என்று உணர்கிறாள் தனக்குள்ளேயே நானி கோனுகிறாள் வைதேகி.

புதிதாக வேலைக்குச் சேர்ந்து சில நாட்களே ஆன காரணத்தினாலோ என்னமோ இந்த விவரம் பற்றி பேசுவதற்கு அவளுக்கென்று நெருங்கிய தோழிகள் அந்த நேரத்தில் யாரும் இல்லாமல் போனார்கள்.

நான் ஒரு தனிமை விரும்பியோ? ஆனால் தனிமை என்பது தேடினாலும் கிடைக்காது. தனிமையில் இனிமையை ரசித்தவள் தான் இந்த வைதேகி. நான் விரும்பிய தனிமை என்னை சுடுகிறதோ? என்று தன் வாழ்க்கையை அசை போடுகிறாள் வைதேகி இப்போது. தனிமை தந்த பாடங்களால் மட்டுமே அவள் வாழ்க்கையை அசை போடுவது. கூகிலில் கிடைக்காத ஞானமும் தனிமையில் கிடைத்திடும். இப்போதும் தனிமை என்பது இனிமை தான்.

ஆனால் ஆசைகளே இல்லாத கல் மனம் கொண்டவள் இல்லையே. அவளுக்கான அவனைப் பற்றி கற்பனை செய்தது இல்லை என்று சொல்ல முடியாது. அந்த தெரியாத நபரிடம் காதல் இல்லை என்றும் சொல்ல முடியாது. திருமணத்திற்கு பிறகு தான் காதல் என்பதில் அவள். நான், நீ என்றும், எனக்கான நீ, உனக்கான நான் என்று யோசிப்பதில் சிறிதும் நம்பிக்கை இல்லாதவள். நாம் இருவரும் சேர்ந்து ஒன்றாக யோசிப்போம், யோசிக்க வேண்டும் என்று நினைப்பவள்.

எப்படியோ வரும் ஞாயிறு பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்பது முடிவானது. அதற்கு பின்னும் எதுவும் கேட்காமல் இருக்க முடியாது என்று வைதேகிக்கு தோன்றியதோ என்னமோ, தன் தாய் பூரணியிடம் போய் என்ன செய்கிறான் அவன் என்று கேட்டாள். அவள் தாய் திடீரென்று வந்து என்ன செய்கிறான் என்று மகள் கேட்டதும் ஒன்றும் புரியாமல் யாரைப் பற்றிக் கேட்கிறாய் என்றாள். அதான் என்னை பார்த்துட்டு பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட வரானே அவனைப் பற்றி தான் கேட்கிறேன்.

அப்பாடா, இப்போதவாது இவள் கேட்டாளே என்று தோன்றினாலும் உள்ளுக்குள் என்னடா வரபோகிற மாப்பிள்ளையை அவன் இவன் என்று சொல்கிறாளே என்று பயந்தாள்.

ஏண்டி கொஞ்சம் மரியாதையாக கேட்க கூடாதா என்று மென்மையாக வைதேகியிடம் கேட்டாள். அவளோ இப்போ என்னம்மா, அவன் வந்து பார்க்கட்டும், பார்த்து பிடிச்சிருக்குனு சொல்லட்டும். ஏற்கனவே 9 பேரை வேண்டாம் என்று சொன்னவன் தானே. அவனுக்கு என்ன மரியாதை. அவன் என்னை பிடிச்சிருக்குனு சொன்னா அது அவனுக்கு ஏழரை சனி பிடிக்க போகிறது என்று அர்த்தம் தான் என்று எடுத்தெரிந்து பேசினாள். இதற்கு மேல் இவளிடம் இதைப் பற்றி இப்போது பேச வேண்டாம் என்று அமைதி காத்தாள் அவளது தாய்.

இதன் பிறகும் வைதேகியின் மனதில் ஏதோ ஒரு இனம் தெரியாத குழப்பம். வைதேகி குழப்பவாதி இல்லை ஆனாலும் தேவையே இல்லாத கோபம். ஒருவிதத்தில் எரிச்சலாக இருந்தது. இன்னமும் கண்ணால் காணாத ஒருவன் மேல் ஏன் இந்த வெறுப்பு.

பெண்ணினம் மேல் உள்ள காதலோ? ஆம் 9 பெண்களைப் பார்த்து வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான் என்று அவள் அன்னை அவளிடம் சொன்னது தவறோ. இவளையும் வேண்டாம் என்று சொல்லி விட்டால், மகள் மனம் நொந்து விடக் கூடாது என்று அக்கறையோடு சொல்லியது தவறோ? அதுவே அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

எப்படி இருந்தாலும் அந்த பெண் பார்க்க வந்த படலம் கொஞ்சம் இனிமையான படலமே.

முன் பக்கம்

அடுத்த பக்கம்