வைதேகி-காத்திருந்தாள்-1

பதிவிட ஆரம்பித்த நாளில் இருந்து ஒரு கதை எழுத வேண்டும் என்ற துடிப்பு இருந்து வந்தது. சந்தர்ப்பம் அமையவில்லை. கதைகள் படிக்கிற பழக்கமும் இல்லாத காரணத்தால் எழுத ஆரம்பிக்க ஒரு தயக்கம். இருப்பினும் நான் எழுதுவதை ரசிக்க பலர் இருக்கிற தைரியத்தில் ஒரு சிறிய படைப்பு(படைப்பு என்றதும் என்னை பிரம்மா கோபித்துக் கொள்வார்). பலரது வாழ்க்கையிலும் வந்து போகும் விஷயம் தான் இந்தக் கதையும். முற்றிலும் என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்று சொல்லி விட முடியாது. ஆனாலும் எனது வாழ்வின் பல சில சுவாரசியம் இதில் மறைந்து இருக்கும் என்பதில் எழுத ஆரம்பித்த ஐந்து நிமிடத்தில் உணர்ந்தேன்.

முதல் அத்தியாயம்

வெகு நாட்களாகவே வைதேகிக்குள் ஒரு சிறு தவிப்பு. என்ன செய்யபோகிறோம் என்ற கவலையில் ஆழ்ந்திருந்தாள். பல ஆண்டுகளாக எப்போதோ ஒருமுறைத் தோன்றும் கவலை. ஆனால் இப்போது எல்லா நேரத்திலும் அவள் மனதில் குடிக்கொண்டுவிட்டது.

வைதேகி நல்ல அழகி, நல்ல நிறம், சுமாரான உயரம், படித்தவள், உத்தியோகத்தில் இருப்பவள். (கற்பனையில் கூட ஒரு பெண்ணை அழகி என்று கூற மனம் வரமாட்டேன் என்கிறதே). சிட்டு குருவிக்கு என்ன கட்டுபாடு என்று இந்த பறந்த உலகில் தன் மனம் போன போக்கில் சென்று வருபவள்.

கேள்விக் கேட்க யாரும் இல்லை…அவள் அனாதை இல்லை. பெற்றவள், உடன் பிறந்தோர், உற்றார், உறவினர் என்று ஏகத்துக்கும் மக்கள் அவளைச் சுற்றி உள்ளனர். மகளின் சந்தோசத்திற்கு எப்போதும் எதிலும் குறுக்கே நிற்காத பெற்றோர்கள். தாங்கள் கொடுத்து இருக்கும் சுதந்திரத்தை தங்கள் மகள் எப்போதும் தவறாக பயன் படுத்திடமாட்டாள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லாதவர்கள். அத்தனை நம்பிக்கை தன் புதல்வியின் மீது. அவளும் இதுவரை அவளது சுதந்திரத்தை தவறாக பயன் படுத்தவில்லை, இனிமேலும் செய்ய மாட்டாள்.

வைதேகி வசந்ததிற்காக(வசந்திற்காக இல்லை) காத்திருக்கிறாள் என்றால் அவளாலயே நம்ப முடியவில்லை. மாற்றங்கள் இல்லாதது என்று எதுவுமே இல்லையே. மாற்றாங்கள் மட்டுமே வாழ்க்கையில் நிரந்தரம்.

ஆம் இந்த வைதேகியின் கதையும் விரல் கொண்டு மீட்டாமல் இருக்கின்ற வீணை போல தான்.

வைதேகியின் வயது நாற்பதை தொடுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் இப்படி ஒரு கவலை தேவையானது தானா என்று தனக்குள்ளேயே கேள்வி கனைகளைத் தொடுத்தாள். அவளை அழகான பெண் என்றால் மிகவும் நவ நாகரிக மங்கையாக கற்பனை வேண்டாம். அதற்காக அவள் ஒரு கிரமத்து பைங்கிளியும் அல்ல. அவளின் அழகிற்காக அதிகமாக அக்கறைகூட எடுத்துக் கொண்டதாக தெரிவதில்லை. புருவத்தினை எப்போதாவது அழகிற்காக தீட்டுவதோடு சரி. நீண்ட கருப்பான முடியை அழகாக தலை விரித்து அவள் நடந்தால் அந்த கூந்தல் அழகிற்கே சொக்கி விடலாம் என்று காத்திருப்போர் ஏராளம்.

காலக் கேடு என்று எதுவும் இல்லாமல் இருந்து இருந்தால், எல்லாம் ஒழுங்காக நடந்திருந்தால் இன்று தன் பிள்ளைகளின் சுதந்திரம் பற்றி யோசித்து இருப்பாளோ. ஆம் குறைந்தது ஒரு மகனோ அல்லது மகளோ இன்று சுமார் 15 வயதிலாவது இருந்து இருக்கும் அவளுக்கு. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு படிக்கும் பிள்ளையின் தாயாக அதனை தயார் செய்து இருப்பாள்.

எங்கே தவறு என்று யோசிக்காமலயே அவளது காலம் ஓடிவிட்டது.

தனது வாழ்க்கை சக்கரத்தை கொஞ்சம் திருப்பி பார்த்திட நினைத்தாள் வைதேகி.

எப்படியான ஒரு இளமை பருவம், எல்லோருக்குமே இனிக்கும் இளமை பருவம் தான் ஆனால் என்னமோ வைதேகிக்கு மனதில் எதுவுமே பசுமையாக இல்லை, இருப்பினும் அவளது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களை நினைத்து பார்த்திடும்போது அவள் அந்தக் காலத்திலேயே இருப்பது போன்ற ஒரு உணர்வு. ஆம் பணி புரிந்திடும் இந்த காலகட்டத்திலும் அவளுக்கு நல்ல நட்புகள் உள்ளது.

நம்ம கோலங்கள் அபி தொல்ஸ் போன்ற பல நட்புக்கள் அவளிடம் உண்டு. (இது வெறும் தோழமை தானுங்கோ ஒரு தலை காதல்கள் இருக்கா என்று வைதேகிக்கு தெரியாது).

பல கதைகளில் வரும் கேவலமான, கீழ்தரமான புத்திக் கொண்ட மனிதர்களை அவள் இதுவரை கானாதது அவள் செய்த புண்ணியமா, இல்லை அவள் சுட்டெறிக்கும் சூரியன் என்பதாலா? இவளிடம் வாலாட்டினால் ஒட்ட நறுக்கிவிடுவால் என்ற அச்சத்தினலோ? எப்படி இருப்பினும் அவள் இதம் தரும் குளிர்ந்த நிலவு என்று இதுவரை ஒருவரும் அறியாததே விந்தையான விஷயம்.

அப்படியே பள்ளி, கல்லூரி காலத்திலிருந்து விடுபட நினைத்தவள், அவளது தாயார் அவளிடம் அவளுடைய திருமணத்திற்க்கு ஒரு வரன் வந்து இருப்பதாகவும், அவர்கள் வீட்டிலிருந்து வரும் ஞாயிறு அன்று பெண் பார்க்க வரபோகிறார்கள். மேலும் தயக்கத்தோடு “ அந்த பையன் இதுவரை 9 பெண்களை பார்த்து வேண்டாம் என்று சொல்லி இருக்கிறானாம்” அவன் அப்படி ஏதாவது சொல்லிவிட்டாள் நீ மனம் கலங்கி விடாதே. இது ஒரு சம்பிரதாய நிமித்தமே, ஆகையால் வந்து பார்த்துவிட்டுப் போகட்டும் என்றாள்.

என்னம்மா எனக்கு இருபது வயது கூட ஆகவில்லையே என்று சொல்லக்கூடத் தோன்றாமல், எல்லாம் தலைவிதி படி நடக்கட்டும் என்று தான் இருந்தாளோ? இல்லை தனக்கு பின் தன் வீட்டில் இருக்கும் உடன் பிறப்புகளை நினைத்தாள். அவர்கள் படிப்பு, திருமணம் என்று வருமே. கூடவே வளர்ந்து வருபவர்க்ள்.. இன்னும் ஒரிரு ஆண்டுகள் இவள் தாமதித்தாள், அவளுக்கு அடுத்த தங்கையும் திருமணத்திற்கு தயாராகி விடுவாள், பெற்றோருக்கு கடினமாகக் கூடம். இருவருக்கும் அடுத்தடுத்து திருமணம் நடத்துவது என்பது நமது நடுத்தர வர்க்கத்திற்கு முடியாத ஒன்றாயிற்றே.

தோல்விகள் பரவாயில்லை, ஆனால் இது அவளை பார்க்க வரும் முதல் வரன். முதல் வரனே பிடிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? முதல் கோனல் முற்றும் கோனலாக மாறிவிடுமோ என்று மன கிலேசத்துடன் இருந்தாள். மனதிற்குள் ஒரு வித கலவரத்தோடு, எப்படி சமாளிப்போம் என்ற எண்ணத்தோடு இருந்தாள். எல்லோருக்கும் இருக்கும் அந்த சந்தோசம், ஆர்வம் என்று எதுவும் இல்லாமல், இது தேவை தானா என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்.,.

பாவம் என்ன தான் நடந்தது என்று பெண் பார்க்கும் படலத்தில் பார்ப்போம்?

தொடரும்

அடுத்த பக்கம் 2

Advertisements

9 thoughts on “வைதேகி-காத்திருந்தாள்-1

 1. பல கதைகளில் வரும் கேவலமான, கீழ்தரமான புத்திக் கொண்ட மனிதர்களை அவள் இதுவரை கானாதது அவள் செய்த புண்ணியமா, இல்லை அவள் சுட்டெறிக்கும் சூரியன் என்பதாலா? இவளிடம் வாலாட்டினால் ஒட்ட நறுக்கிவிடுவால் என்ற அச்சத்தினலோ? எப்படி இருப்பினும் அவள் இதம் தரும் குளிர்ந்த நிலவு என்று இதுவரை ஒருவரும் அறியாததே விந்தையான விஷயம்./////

  யாம் அறிந்தேன் தோழி…நீங்கள் குளிர்ந்த நிலவென்று!

  • நன்றி தோழா! ! !

   எப்படியோ உங்களுக்கு தெரிந்து விட்டது ! ! !
   எந்தன் கதையின் நாயகி குளிர்ந்த நிலவு தான்…
   கொஞ்சம் கதையின் நாயகிக்கும் எனக்கும் ஒற்றுமைகள் இருக்கலாம்,
   ஆனால் இது சுய சரிதம் இல்லை.

 2. மிக அருமையான கதை. உங்களின் படைப்பு மேன்மேலும் தொடர்ந்து வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

   • ஏதோ உங்களை மாதிரி ஒரு சிலர் படிப்பதும்,
    நல்லா இருக்கு என்று சொல்லுவதும் ஊக்கமாகும்…

    நன்றி ரவி அவர்களே ! !

 3. வைதேகி காத்திருந்தாள்-1; முதல் அத்தியாயம்; படித்தேன்..இளமைக்காலத்தில் இலக்கியங்களில் சுவை தேடி என் ஊரில் உள்ள நூலகத்தில் வாழ்வின் பெரும் பகுதி கழிந்தது என் நினைவுக்கு வருகின்றது..அகிலன், சாண்டில்யன், ரா.கி. எஸ்.ஏ.பி.,மணியன், அனுராதா அம்மா, லக்ஷ்மி அம்மா ( இயற் பெயர் டாக்டர். திரிபுரசுந்தரி என்ற நினைவு) முதல் இலக்கியத்திலும் திரை உலகிலும் தனி முத்திரையை பதித்துச் சென்ற சுஜாதா கதைகள் வரை படித்து என் வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொண்டதை நான் இன்னும் மறக்கவில்லை.. உங்கள் தொடரின் முதல் அத்தியாயம் படித்தபின் எனக்குள் ஏற்பட்ட ஒரு குறுகுறுப்பே எனது முந்தைய வரிகள்.ஆசிரியர் மணியனின் கதைகளும் இப்படித்தான் தொடங்கி நம்மையும் கதையோடு இழுத்துச் செல்வார்…வைதேகி உங்கள் முதல் கதையா? ஆச்சர்யம் தான் ….But any way எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்…

  • ஹாரூன் சார்,
   பெரிய அதிமேதவிகளின் கதைகளோடு என் கதையும் சேர்த்தது என் பாக்கியமே.
   ஆனாலும் அவர்களின் கால் தூசு அளவே எனது தமிழ் அறிவு.

   இது என்னுடைய முதல் கதை தான். இதுவும் யோசித்து என்று எழுதவில்லை.
   என்ன மனதில் தோன்றுகிறதோ அதை வார்த்தைகளாய் கிறிக்கிறேன்.
   கொஞ்சம் சுவை வேண்டும் என்பதால் தேவைக்கு ஏற்ப காட்சிகளை கண் முன் நிறுத்தி பின் வார்த்தைகளால் கோர்த்து விடுகிறேன்.

   உங்களின் வார்த்தைகள் மேலும் என்னை எழுதத் தோன்றும்.

   நன்றி நன்றி நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s