எனக்காக என்று நீ கேட்டாயே

கனவுகள் மெய்பட வேண்டும் ! ! ! காதல் என்பது எதுவரை ! ! !

காதல், காதல், காதல்

அந்த காதல் போயின்

சாதல் சாதல் சாதல்

என்றார் முண்டாசு கவி பாரதி.
”காதல் செய்வீர் உலகத்தீரே”  என்று உலகத்தில் உள்ள அனைவரையும் காதல் செய்ய சொன்னார்.

காதல் என்பது எதுவரை, கல்யாண காலம் வரும் வரை தானா?

ஆயிரம் கேள்விகள் இருந்தது என்னுள்.

காதல் இனிமையானதா, மென்மையானதா, காதல் என்பது ஒரு மாயை, பொல்லாதது என்று பல முறை பலரிடம் தர்க்கம் செய்துள்ளேன். அதன் பொருள் புரியும் வரை – காதல் என்பது என்னை நெருங்காதவரை.

காதல் என்பது தான் என்ன? காதல் என்பது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே ஏற்படும் வெறும் ஈர்ப்பு தானா? இல்லை அதற்கும் மேலும் எதாவது உண்டா?
காதல் என்பது ஒரு உணர்வா, இல்லை நினைவா? ஒருவராக நினைத்தால் அது நினைவாகும், இருவரும் பகிர்ந்தால் அது ஒரு இனிமையான உணர்வே.

காதல் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக வரும் ஒரு அத்தியாயம். திருமணத்திற்கு முன்னரோ அல்லது திருமணத்திற்கு பின்னரோ கண்டிப்பாக வந்தே தீரும். (வந்தால் தீருமா?)

என்னுள்ளும் காதல் வந்தது. மெதுவாக என்னுள் காதல் வந்தது. ஒரே நொடியில் காதல் வந்தது என்று சொல்ல மாட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக செதுக்காமல் ஆனால் சடாரென்று வந்தது. எப்படி, எப்போது, யாரால் என்று பின் ஒரு பதிவில் பார்ப்போம்.

இளமையில் காதல் வந்தால் எது வரைக்கு வரும் என்று யோசித்ததனால் அப்போது வரவில்லை. முதுமைவரை வேண்டும் என்பதால் ஒரு முழுமையான காதலைத் தேடி அலைந்தேன்.

உன்னை கண்டவுடன் என் காதலை சொல்லிட வார்த்தைகளை தேடினேன், அது என்னவோ புரியாமல், உணராமல் சொல்வதால் இது முழுமையாக உணராத காதல்.
உன்னை என் கண்களால் கண்டபின் என் காதலை உன்னிடம் சொல்லிட நினைத்தேன், ஆனால் என்னுள் இருக்கும் எண்ணங்களை நீ இன்றே தெரிந்துக் கொள்ள விரும்பிய காரணத்தால் மட்டுமே இந்த பதிவு.

என்னுடைய காதலை ஒரு வரியில் சொல்ல வா – நீ அருகே இல்லாமல் என் காதல் ஒரு ஊமை பெண் கானும் கனவு போல தான். உனக்கான என் காதலை மொத்தமாய் தேக்கி வைத்திருக்கிறேன் என்னுள்ளேயே. இப்போது சொல்லிட ஒரு சந்தர்ப்பம் நீயாக கேட்டதினால்.

உன்னுடனான உரையாடலை நினைத்துக் கொண்டே சென்றேன். இரவில் வழிதனில் முழு நிலவு கண்ணில் தோன்றியதே, அதில் என்ன ஆச்சர்யம் என்று கேட்டால் ஒன்றும் இல்லை அன்று நிலவுக்கு விடுமுறை நாள் ஆம் அமாவாசை சந்திரன் முழுவதும் மறைந்திருக்கும் நாளாம் எப்படி என் கண்களில் முழு நிலவு??? அந்த நொடியில் காதல் என்னுள் வந்ததா?

எனக்கான உன்னை பற்றி எழுத வேண்டுமா??

சொல்ல வார்த்தைகள்
பல கோடி உள்ளது, ஆனால்
உனக்கான வார்த்தை
எதுவாக இருக்கும்
என்று எண்ணும் போது,
எதுவும் உனக்கு நிகரில்லையே

நீ என்னை புரிந்துக் கொள்ளாமல் கேட்ட கேள்வி, புரிந்து கொள்ளவே இந்த பதிவு. புரிந்த பின் பிறிவு என்பது நம் காதலில் இல்லை

என் காதல் என்றும் உன்னோடு தான்.

எனக்கான உன்னை உன் கரம் பற்று முன்னரே மனமெல்லாம் சந்தோசம் பொங்க, இவன் எனக்கானவன், என் உயிர் என்றும், என் வாழ்க்கையின் வழி நீ என்றும், என் மகிழ்ச்சியே உன் மகிழ்ச்சி என்றும், உன் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி, எனது சுக துக்கங்களை என்னுடன் பகிர போகும் எனக்கான இவன், எந்த ஒரு நிலையிலும் என்னை கைவிடாதவன் இவன் என்று நினைத்து உள்ளம் பூரித்து அந்த தருணத்திற்காக காத்திருத்தல் என்பது தான் காதலோ??

எந்த நிலையிலும் நம் அன்பு குறையாமல் இருக்குமாயின் அதுவே காதலாகும். இன்று நமக்குள் இருக்கும் அன்பினை போற்றுகிறேன். என்றும் குறையாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

உன் இனிமையான வரவுக்காக காத்திருக்கும்.
உந்தன் காதலியாக இதனை எழுத வேண்டும் என்றால் என் காதலை உன்னிடம் சொல்ல வேண்டுமே. சொன்னால் தான் உனக்கு புரியுமா??? உன்னை பற்றி சொல்ல, என்னுள் இத்துனை மாற்றம் தந்த உன்னை பற்றிச் சொல்ல பக்கங்கள் பல வேண்டும், உன்னால் பல வண்ணங்களாக நம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படட்டும். பின்னர் சொல்லிடலாம் என்று மிச்சம் வைக்கிறேன்.

என் இமைகள்
விழிகளை பாதுகாப்பது போல
என்னை நீ பொக்கிஷமாய்
காத்திடுவாய்.
என் பெயரை நீ சொல்லிடும்
வேளையில்
உன் காதலை
என் மீது நீ கொண்ட
நேசத்தை நான் சுவாசித்தேன்.

உனக்கான என் மனம்


காதல் என்பது எனக்கு காவியமானால்
காவியமாக்க துனையாக நீ வேண்டும் ! !
நீயின்றி என் காதல் கானல் நீரே ! ! !
உனக்குள் இருக்கும் என்னை
புரிந்து கொள், பிறகு
எனக்குள் இருக்கும் உன்னையும்
நீயே புரிந்து கொள்வாய்.

நீ கேட்டால் நான் மாட்டேன் என்று சொல்வேன் என நினைத்தாயோ?
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் சொல்??? உனக்காகவே இது.

இது காதலர் தின பதிவாக இருக்கட்டும்.நீ என்னை துளைத்து எடுத்த காரணத்தினால் இதனை இப்போது இடுகிறேன் இல்லையெனில் இன்னும் பல ஆண்டுகள் கழித்து நம்முடைய பசுமையான நினைவுகளாக எழுதி இருப்பேன்.

Advertisements

16 thoughts on “எனக்காக என்று நீ கேட்டாயே

 1. ஹா..ஹா…பரவால… எனக்கென்று நான் கேட்காமலே எனக்கும் ஒரு பதிவு எழுதிட்டீங்க(சீற்றத்தில் சீதை)!!!

 2. அனு,

  காதலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். யார் அந்த அதிர்ஷ்டசாலி?

  • அருணா,
   உங்களை விட அழகாக யாரால் காதலை சொல்ல முடியும்.
   உங்களின் பதிவே இந்த பதிவிற்கும் ஒரு காரணம்.
   யார் அந்த அதிர்ஷ்டசாலி, நிஜமாக எனக்கும் தெரியாது.
   காலம் கண்டுபிடித்துக் கொடுத்தால் உங்களுக்கும் சொல்லிடுவேன் யார் அவர் என்று.

 3. அனு,
  “உன்னை என் கண்களால் கண்டபின் என் காதலை உன்னிடம் சொல்லிட நினைத்தேன், ஆனால் என்னுள் இருக்கும் எண்ணங்களை நீ இன்றே தெரிந்துக் கொள்ள விரும்பிய காரணத்தால் மட்டுமே இந்த பதிவு.”
  ”இது காதலர் தின பதிவாக இருக்கட்டும்.நீ என்னை துளைத்து எடுத்த காரணத்தினால் இதனை இப்போது இடுகிறேன் இல்லையெனில் இன்னும் பல ஆண்டுகள் கழித்து நம்முடைய பசுமையான நினைவுகளாக எழுதி இருப்பேன்.”
  இவை எல்லாம் இருக்கும் ஒருவரையே குறிக்கின்றன. தெரியாது என்று மறைக்கலாமா?

  • அருணா,

   என்னோட பதிவை ரொம்ப நல்லா படித்திருக்கிறீர்கள். உன்னை என் கண்களால் கண்டபின் என் காதலைனு தானே சொல்லி இருக்கிறேன், இன்னும் காண வில்லை என்று தானே அர்த்தம்???

   இன்னும் பார்க்கவில்லை, பார்த்த பின் காதலை சொல்லி விடுவேன், அவரிடம் சொன்னதும் உங்களுக்கு தனியாக சொல்கிறேன்…. ஆளை விடுங்கோ ! ! !

 4. நான் வாழ்வியழில் இதுவரை அறிந்தது…

  Love is a commitment…

  ஒரு Divine உணர்வு….

  காதல் என்ன பண்டமாற்று முறையா!!!!

  நீ கொடு நான் தருகிறேன் எனச் சொல்ல???

  • காதல் என்பது ஒரு தெய்வீக உணர்வு என்பது சரிதான் சார்.
   அதைதானே என் கதா நாயகியும் சொல்கிறாள்.
   அப்படி ஒரு உணர்வு திருமணத்திற்குப் பிறகு என்றால் அதில் அழுத்தம் கொஞ்சம் இருக்கும் என்பது அவளது கருத்து

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s