சீற்றத்தில் சீதை

சீற்றத்தில் சீதை

இந்த தலைப்பை எழுத வேறு ஒரு இனையத்திலிருந்து வந்த தாக்கமே காரணம். மிகவும் கேவலமாக சொல்லபட்டது. சொல்ல பட்ட கருத்த்தினை நான் மறுக்கவில்லை. இன்றைய நவநாகரிக பெண்களின் வாழ்க்கையை கூறி இருந்தது.

சிறப்பாக சொல்லும்படி எதுவும் இல்லை என்றாலும், அவர் சொல்லிய விதமோ சொன்ன விஷயமோ என்னை பாதிக்கவில்லை. அவர் கொடுத்திருந்த தலைப்பே என்னை இந்த பதிவிட வைத்தது.

கலியூக சீதைகள் என்ற அவரின் கவிதை பைக்கில் ஊர் சுற்றி திரியும் கல்லூரி பெண்கள், முகங்களை துப்பட்டாவினால் மறைப்பதைப் பற்றி சொல்லியது சற்று சிந்திக்க வைத்தது.

கலியுக சீதைகள் – என்ற தலைப்பில் இருந்த கவிதை

பட்டாய் பறக்கிறது

சிட்டு

பைக்கில்..,

முகம் தெரியாதபடி

துப்பட்டாவை

போர்வையாய்

போர்த்திக்கொண்டு.

இறுக அணைத்தபடி

இளைஞனை!

அருகாமை வாகனத்தில்

கணவனோ, தந்தையோ

தம்பியோ, தங்கையோ

அண்ணனோ யாரறிவார்

அவள் முகமூடி

அவதாரத்தை!

அலைபேசியில் பதியப்பட்டிருக்கிறது

அழகாய்.. பெண் பெயரில்

அவன் பெயர்.

அவள் அழைப்பினில் கூட

அவன் ஏனோ

அவளாகிப்போகிறான்.

அவள் போட்டிருக்கும்

டி சர்ட்டில் வாசகம் சொல்கிறது

IM BITCH (நான் நடத்தை கெட்டவள்)

நவநாகரீக மங்கையவள்!

தாலிக் கட்டிக் கொண்டு

வேலித் தாண்டியவளின்

வார்த்தை

காஸ்மோ கல்ச்சர்

கவலை வேண்டாம்

இதெல்லாம் சகஜம்

காலம் மாறிடுத்து!

நல்ல பதிவாளரின் பதிவாக இருந்திருந்தால் அவரது இனைய முகவரியை கொடுத்து இருப்பேன். அறை குறை, படங்கள் நிறைந்த அந்த இனைய முகவரியை எப்படி இங்கு கொடுப்பது.

சீதைக்கும் இந்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்?

அப்படி சிட்டாய் பறக்கும் பெண்களை பற்றி கவலை படுபவராக இருந்திருந்தால் அந்தக் கேவலமான டி ஷர்ட் படத்தினை போட்டு இருக்க மாட்டார். அடுத்தவரை குறை சொல்லுமுன் உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.

வேலிதாண்டியவள் என்று ஒரு வார்த்தையில் ஈசியாக சொல்லி இருந்தார், எத்தனை கேவலமான எண்ணங்கள், குதர்க்கமான சிந்தனை என்று இருக்கும் இவரது படைப்பினை படித்ததை கேவலமாக நினைக்கிறேன்.

கலியுக சீதைகள் இந்த தலைப்பில் வேறு ஒரு பதிவினை போட்டால் மட்டுமே என் மனம் நிம்மதி பெறும்.

Advertisements

10 thoughts on “சீற்றத்தில் சீதை

 1. சீதையின் சீற்றத்தை பற்றி நான் கவலைக் கொள்வதில்லை..ஏனெனில் சீதையை பெண்ணிய இலக்கணமாக நான் கருதவும் இல்லை.ராவணன் எம் தமிழ் மன்னன்.தமிழ் குலத்தின் அடையாளம்.நல்லவன் நயவஞ்சகர்களால்(ஆரியர்களால்) அயோக்கியன் ஆக்கப்பட்டான் என்பதே உண்மை.
  பெண்ணியத்துக்கு இலக்கணமாய் எம் தமிழ் குலத்தில் பிறந்த கண்ணகி இருக்கிறாள்.அவளைப் பற்றி நான் தலைப்பிடவில்லை.பெண்ணியத்தின் மேலும்,பெண்களின் மேலும் எனக்கும் மரியாதை இருக்கிறது.பெண் சுதந்திரம் என்பது எதுவென்று அறிந்தவன் தான் நான்.ஆணாதிக்க வாதியில்லை.
  நான் இப்படியோர் தலைப்பிட்டதிற்கு ,எக்காரணம் கொண்டும் வருந்த போவதும் இல்லை.இதை விட இக்கவிதைக்கு நல்ல தலைப்பாய் வேறு இருக்கவும் வாய்ப்பில்லை.

  • இது ஆணாதிக்கவாதியா இல்லையா என்பதைப் பற்றிய விமர்சனம் இல்லை. அப்படியே இருந்தாலும் அதற்காக வருத்தப்பட போவதுமில்லை.

   ஒரு சீர் கேட்டினை சுட்டிக் காட்டிட நினைக்கும் தருணத்தில் அதற்கு ஏற்றார் போலவே இருக்க வேண்டும் அதன் தலைப்பும் என்பது தான். மேலும் இது கருத்து தானே தவிர போராட்டம் இல்லை.

 2. நல்ல பதிவாளரின் பதிவாக இருந்திருந்தால் அவரது இனைய முகவரியை கொடுத்து இருப்பேன். அறை குறை, படங்கள் நிறைந்த அந்த இனைய முகவரியை எப்படி இங்கு கொடுப்பது.////

  என் தளத்தை தொடர்ச்சியாய் படித்தவர்களுக்கும்,படிப்பவர்களுக்கும் என் இணையதளத்தில் என்ன எழுதியிருக்கிறேன் என்பது தெரியும்.படம் பார்த்து கதை சொல்பவர்களுக்கு அது தெரியாது..புரியவும் புரியாது.

  • கண்டிப்பாக உங்கள் தளத்தில் உள்ளவைகளை படிப்பேன் மேலும் நம்முடைய வாழ்த்துக்களும், வாதமும் தொடரும். என் கண்களில் பட்டவைகளை மட்டுமே சொல்லி இருக்கிறேன். உங்களது 400 பதிவுகளை படித்திருந்தாலும் நான் சொன்ன கருத்தில் மாற்றமில்லை. நீங்கள் ஓவியக் கலை பயின்றவரா?

 3. வலைதளத்தில் யாரும் யாருக்கும் எதிரியில்லை..ஒரு தளத்தையோ,படைப்பையோ பற்றி விமர்சனம் எழுதும் முன் யோசித்து எழுதுங்கள்..ஒரு தளத்தைப் பற்றி முழுதாய் அறியாமல்,உங்கள் கண்ணோட்டத்தில்,கெட்ட பதிவர் என்று சான்றிதழ் தராதீர்கள் .எது..எப்படியோ ஒரு விமர்சனத் தோழியாய் வலைதளத்தில் கிடைத்திருக்கிறீர்கள்…நன்றி..மீண்டும் வருக!நம் நட்பு பலமாகட்டும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s