மன்மதன் அம்பு

மன்மதன் அம்பு

உலக நாயகன் கமலின்  கதை திரைகதை வசனம்  மற்றும் அவரது நடிப்பில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்  மன்மதன் அம்பு.

சூப்பர் ஹிட் டைரக்டர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

வளர்ந்து வரும் பல சூப்பர் தயாரிப்பாளார்களில் ஒருவரான ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.

கமலோடு சேர்ந்து திரிஷா,மாதவன், சங்கீதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தொழிலதிபரான மதனின் (மாதவன்) காதலி பிரபல முன்ன்னி நடிகை நிஷா (நம்ம திரிஷா)வின் நிஜ (படத்தில் தான்) பெயர் அம்பு.

இவர்களின் காதல் நிச்சயத்தில் முடிந்து திருமணத்திற்காக காத்திருக்கும் நிலையில் கதை ஆரம்பிக்கிறது.

காதலியைகான அவரது திரைப்படத்தின் பாடல் பதிவாகும் இடத்திற்கு செல்ல அங்கு சூரியாவுடன் காதல் பாடலில் தனது வருங்கால மனைவி நெருக்கமாக நடிப்பதையும், மிகவும் சகஜமாக தட்டி பேசுவதையும் கண்டு மன புகைச்சல் எடுக்க கதை எப்படி போக போகிறது என்று யூகிக்க முடிகிறது. சூரியாவின் மகள் நிஷாவிடம் பேசவேண்டும் என அவர் கான்ஃப்ரண்ஸ் கால் போட அதையும் தவறாக புரிந்து கொள்கிறார் நமது சராசரி ஆண்மகனான மாதவன்.

தான் புதியதாக வாங்கிய ஒரு கோடி ரூபாய் ஹம்மர் காரை தனது காதலி பார்க்க வேண்டும் என்று வந்தவர், அவருக்காக காத்திருந்து மனதில் சலனத்துடன் அந்த புதிய வாகனத்தில் இருவரும் மலை பாதையில் செல்லும் போது, மாதவன் நிஷாவிடம் நீ கல்யாணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டு விட வேண்டும் என்கிறார்.

நிஷாவோ அவரிடம் தர்க்கம் செய்கிறார். நடிகை நான் என தெரிந்து தானே காதலித்தாய். நடிப்பது என்பது என்னுடைய தொழில். அதை விட முடியாது என்று சொல்லகிறார். இப்போதே உனக்குள் இத்தனை சந்தேகம். படங்கள் முடித்தவுடன் திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்று சொல்ல, இருவரும் சண்டை போடுகிறார்கள்.

நிஷாவின் கவனம் சிதற, எதிரில் வரும் காரினில் மோத பெரிய விபத்து என்று எண்ணினால் அப்படி எதுவும் இல்லாமல், சிறு கீரல் தான், அதற்குள் அந்த வழியாக வரும் ஒரு பேருந்து நிற்க அதிலிருந்து அனைவரும் நிஷாவைச் சூழ அங்கு ஒரு தீபாவளியே நடக்கிறது.

இதன் பிறகு விடுமுறைக்காக வெளி நாடு செல்கிறார் நிஷா. அங்கு அவரை பின் தொடர்கிறார் மேஜர் R.மன்னார் (கமல்). காட்சிகள் செல்ல செல்ல என்று பொய் உரைக்காமல் சிறிது நேரத்திலேயே, அவரை அனுப்பியது மதன் என்று சொல்லியது சப்பென்றானதோ ???

மன்னார் நிஷாவின் நடவடிக்கைகளை லைவ் ரிலே போல மதனுக்கு சொல்கிறார், மதனிடன் நீங்கள் நினைப்பது போல இல்லை, அவர் மிகவும் நல்லவர் என்று சொல்ல, அப்படியா சரி நீ சென்னைக்கு வந்துவிடு என்கிறார். நீ எதுவும் கண்டுபிடிக்கவில்லை அதனால் உனக்கு நான் எதுவும் பணம் தரவேண்டாம். நீ வேண்டுமானால் அந்த கப்பலில் பயணம் செய்து ஊரைச் சுற்றி வா என்கிறார். மன்னாரின் நண்பரின் உயிர் காக்க பணம் தேவை என்பதால் மட்டுமே இந்த உளவாளி வேலைக்கு வந்தார்.

நண்பன் ஆபத்தான் நிலையில் இருப்பதால் பணம் இல்லாமல் ஊருக்கு செல்ல முடியாது.

என்ன செய்கிறார், எப்படி செய்கிறார், மதனின் அம்பு மன்னாரின் மன்மதன் லீலைகள் எதுவுமின்றி மன்னாரின் அம்புவாக மாறியது எப்படி என்பதே திரைக்கதை.

மன்னார், மதனகோபால், அம்புஜாக்‌ஷி …. ஒரு ட்ரையாங்குலர் லவ் ஸ்டோரியை என்றும் சொல்லலாம். படத்தை பார்த்தபின் இது சகலகலா வல்லவனின் தில் என்றும் சொல்லலாம். மன்மத லீலை என்று வந்த உனது படமா இது ???

தனது வயதிற்கான முதிர்ச்சியுடன், அழகாக பவனி வந்து இருக்கிறார் திரையில் உலக நாயகன். நாயகி பாஸ்போர்டினை வழிபரியிடம் தொலைக்க அதனை கண்டு பிடிக்க  ஒரு சின்ன சண்டை, சூப்பர் ஒரு சாராசரி சண்டையாக மிகவும் நாசுக்காக எடுத்தவிதத்திற்கு ரவிக்குமாருக்கு ஒரு சபாஷ் என்றாலும் அந்த ஸ்டைல் அது கமலுக்கே உரித்தானது. Who Is the hero பாடலில் வரும் ஸ்டைல் நடனத்திற்குள் விசில் பறந்ததில் ஒரு பரவசம் எனக்குள். இன்றும் உன்னை ரசிக்க ஆண்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

திரிஷாவிடம் இத்தனை நடிப்பு திறனா என்று பிரம்மிக்க வைத்தார் என்றே சொல்லவேண்டும். நல்ல கதாபாத்திரம் அதற்கு அப்படியே பாந்தமாக பொருந்தியுள்ளார். சொந்த குரலில் பேசியுள்ளார்.

மாதவனுக்குதான் கொஞ்சம் பிசகாகி போச்சி… இன்னுமும் கொஞ்சம் ரசனையோடு கொண்டு வந்து இருக்கலாம். எப்போது தண்ணியில் மிதக்கும் பணக்கார, திமிர் பிடித்த ஆளாக காட்டியிருப்பது கொஞ்சம் ஓவர்தான். தனது பங்கினை நன்றாகவே செய்து இருக்கிறார். பாடல் வெளியீட்டு விழாவில் சொல்லி இருந்தார் எப்போதுமே கமல் சார் தான் மன்மதன் என்று அது முற்றிலும் உண்மையே.

சங்கீதவிற்கு சவலான கதாபாத்திரம் என்று சொல்ல முடியாது. சங்கீதா சும்மா பேசினாலே கவர்ச்சி தான் என்று இல்லாமல் காமெடியும் கலந்து இருக்கிறார்.என்னமோ சங்கீதாவின் வேடத்திற்கு ஊர்வசி சிறப்பாக இருந்து இருப்பர் என்று தோன்றுகிறது. கதையோடு ஒட்டுவதற்கா, இல்லை கதா நாயகியோடு ஒட்டுவதற்காகவோ சங்கீதாவை போட்டுவிட்டார்.

ரமேஷ் அரவிந்தையும், ஊர்வசியும் ஊருகாயாக வைத்து இருந்தாலும் உருக்கமாக காட்சிகள்.

படத்தின் பாடல்கள் சூப்பரோ சூப்பர் என்று சொல்ல முடியாது.

கமலின் வரிகள் வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவருக்கு, பாடல் புரிந்தவருக்கு பிடிக்கும். வரிகளுக்கான விமர்சனம் தேவையில்லாதது. ஆடைகுறைத்து முகம் சுளிக்கவைக்கும் நடனம் மில்லாத படம் எது ???

திரைக்கதையில் தொய்வு என்று எதுவும் இல்லை. முதல் பாதி ஆரம்பித்த நிதானம், மறுபாதியில் தொடர்ந்திருந்தால் நிச்சயம் ரசனையில்லாமல் போயிருக்கும்.

படத்தின பலம் – நிஷா சாரி த்ரிஷா, கமல், திரைகதை, லொகேஷன், பிரம்மாண்டமான கப்பல்.

இதன் படப்பிடிப்பு பிரான்ஸ், இத்தாலி, க்ரீஸ் ,மலேஷியா ஆகிய வெளிநாடுகளில் நடந்துள்ளது. மூன்று மணிக்கூறுக்கும் குறைவான நேரத்தில் பல நாடுகளின் அழகிய காட்சிகளை கான முடிந்தது.

நீலவானம் என்ற பாடலை முழுவதுமாக பின்னோக்கிய(flash back- Reverse) காட்சிகளாய் காண்பித்தது ரசிக்கும் படியாக இருந்தது.

பலவீனம் – வசனம். இதையே க்ரேசி மோகனிடம் கொடுத்து இருந்தால், மற்றுமொரு மெகா காமெடி படமாக இருந்திருக்கும்.

முழு நீள நகைச்சுவை மற்றும் ரொமான்டிக் படமாக அமைந்திருக்கும். இப்போ இதில் காமெடி இல்லை என்று சொல்லவில்லை.

ஒன்றிரண்டு பாடல்களாவது கொடுத்து இருக்கலாம் மாதவனுக்கு.

சங்கீதா மாதவனின் கதாபாத்திரம். காமெடிக்காக இனைக்கப் பட்ட அந்த தயாரிப்பளருக்கு பதில் ஒரு தமிழ் காமெடி நடிகரை போட்டு இருக்கலாம்.

மன்மதன் அம்பு – இது மன் மதன் அம்பு மூன்று கதாபாத்திரங்களின் பெயர், நீங்களாக கற்பனை செய்து மன்மதன் அம்பு பாயுமா இல்லையா என்று எல்லாம் யோசிக்க வேண்டாம்.

ஹாசினியின் பார்வையில் என்ன சொல்கிறார் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

Advertisements

2 thoughts on “மன்மதன் அம்பு

    • தங்களின் வருகைக்கு நன்றி ! ! !
      சமயத்தில் என்னுடைய ரசனை ஹாசினி பார்வை மாதிரி இருக்கலாம்,
      ஆனால் அவர் அளவுக்கு சினிமா துறையில் எனக்கு ஞானம் கிடையாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s