சீரியலும் நானும்

சீரியலும் சீர்கேடுகளும்

என்ன எழுதவது என்று யோசித்த நேரத்தில், தோழி ஒருவரின் பதிவினைப் தற்செயலாக படிக்க நேர்ந்தது. மெகா சீரியல்கள் பார்ப்பவர்களுக்கு சிறப்பு விருது என்றும் அதற்கும் தகுதி சுற்று, கால் இறுதி சுற்று முதல் இறுதி சுற்று வரையும் (இதிலும் வைல்ட் கார்டு சுற்று வருமாம்) என்று அவரது பதிவு ஆரம்பித்த்து…

எண்ணற்றத் தொலைக்காட்சிகள் பெருகிவிட்டதால், மெகா சீரியல்கள் பல ஆண்டுகள் கடந்தாலும் நாம் நம்மை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பதில் சிறுது வருத்தமே. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

புதுதில்லியில் இருந்தவரை தொலைக்காட்சி பார்க்கவே நேரமின்மையால் தொடர்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி என்று இருந்தேன். ஆனால் அது ஒரு காற்புள்ளியாகவே இருந்து இருக்கிறது என்று எனக்கே தெரியாமல் இருந்திருக்கிறேன். இரவு ஒரு மணி நேரம் பழைய பாடல்கள் கேட்டுக் கொண்டே உணவு, நட்புகளுடன் உறையாடல் என இருந்தேன்.

உத்யோக நிமித்தமாக தில்லியைவிட்டு அரபு தேசம் வந்தவுடன், நமக்கு பொழுது போக்கு என்பது நம்முடைய மடிகணனி தான் என்றிருந்தேன். காலக் கோலாறால் என்னைத் தேடி என் அறை வரை சன் தொலைக்காட்சி துரத்தியது. வேலை நேரம் போக சன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தால், நேரம் போவதே(வீணாவதே) தெரியவில்லை.

ஏற்கனவே சில சீரியல்களின் விசுவாசி இப்போது மாலை நேரத்தின் சீரியல்கள் அனைத்தையும் நான் பார்க்காவிட்டால் சன் தொலைக்காட்சி கவிழ்ந்து விடுமே என்ற கவலையில் இந்த மெகா தொடர்களில் என் முழு நேரத்தையும் வீணடிக்கிறேன் என்று நன்றாக தெரிந்தும் அதையே செய்கிறேன்.

இப்போது நேரம் அதிகமாக இருப்பதால் நல்ல முறையில் பல விஷயங்களில் பயன் படுத்தலாம். நல்ல வெயில் காலத்தில் நடை பயிற்சி செய்ய முடியாது ஆகையால் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாயிற்று. சீரியல்கள் பார்ப்பதால் சமைக்கவேண்டும், சாப்பிட வேண்டும் என்பது கூட மறந்து போகிறேன்.

நாம் சீரியல்களில் மூழ்கிவிட்டு, நம்மை சீரியல்கள் ஆக்ரமித்துவிட்டது என்று புலம்புகிறோம்.

நேற்று ஒரு நண்பர் என்னை காண வேண்டும், இந்த இட்த்தில் இருக்கிறேன் வருகிறாயா என்று கேட்க நானும் மிகவும் நிதானமாக நீ எவ்வளவு நேரம் அங்கு இருப்பாய் என்று கேட்டேன். அவ்ரோ இன்னும் அறை மணிக்கூறு இருப்பேன் என்றார். நான் என்னுடைய சீரியல் முடிய இன்னும் 15 நிமிடங்கள் இருப்பதால் வருவதற்கு 40 நிமிடம் பிடிக்கும் வேறொரு நாள் நாம் பார்க்கலாம் என்று கூறிவிட்டேன்.

அவரைக் காணாத்தால் எனக்கோ அல்லது அவருக்கோ எதுவும் நஷ்டமில்லை. அவரைச் சென்று பார்த்திருந்தால் என்னாகும் என்று யோசித்தேன். இரண்டு கிலோமீட்டர் நடை பயிற்சி கிடைத்திருக்கும். காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் (நம்ம அரசாங்க அலுவலர்களைப் போல் ) உட்கார்ந்த இடத்தை விட்டு நகருவது இல்லை. நம்முடைய வேலை அப்படி. எந்த நெருக்கடியான நிலையாக இருந்தாலும் உட்கார்ந்தே சிறிது சிந்திப்பது அல்லது இனைய தளத்தில் இருப்பது மட்டுமே. இப்படி இருக்க் கிடைத்த நடை பயிற்சிக்கான பொன்னான வாய்ப்பினை தவற விட்டதாகவே இருந்தது.

எதாவது மாற்றங்கள் செய்யவில்லை என்றால் என்னுள் எந்த மாற்றமும் இருக்காது  என்று எண்ணியதுடன் வேகமாக முடிவும் எடுத்தேன் சீரியல்களைப் பார்க்கும் நேரத்தில் நடை பயிற்சியில் ஈடுபடுவதும், மற்றும் எனக்குத் தேவையான சமையலைச் செய்து சாப்பிடவேண்டும் என்றும்… பார்ப்போம் என் எண்ணம் தின்னமாகிறதா இல்லை சீரியல்கள் என்னை வெல்கிறதா என்று காலம் தான் சொல்லவேண்டும் ?

Advertisements

4 thoughts on “சீரியலும் நானும்

  1. Buy a good MP3 (eg., iPod) Player and download your favourite old songs, put it on with a comfortable cloth and shoes, start walking. You will not stop after that…God Willing

    • தங்களின் வருகைக்கு நன்றி. பாடல்களைக் கேட்டு நடப்பதுண்டு ஆனாலும் சீரியல் நேரத்தில் எங்கும் செல்வது இல்லை.

  2. Dear Uma,

    நான் எழுதிய ’சிறந்த மெகா சீரியலிஸ்ட்’ Hindu-வில் வெளியான ‘How to become a serial addict’ என்பதை தழுவி எழுதியது. It is indirectly criticizing the serial viewers. நீங்கள் ‘சீரியலும் சீர்கேடுகளும்’ என்று தலைப்பிட்டு சீர்கேடுகளைப் பற்றி அதிகம் குறிப்பிடவில்லையே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s