ஷாக்கான முதல்

ஷாக்கான முதல் கடிதம்

கடிதங்கள் பலர் என்னிடமே நேரடியாக கொடுத்து இருக்கிறார்கள், நானும் சர்வ சாதரணமாக வாங்கி படித்துவிட்டு பதிலே சொல்லாமல் செலவது வழக்கம். காதலுக்காக நண்பர்கள் அடிதடி வரைகூட சென்று இருக்கிறார்கள். ஆஹா என்ன இது என்று யோசிக்க வேண்டாம்.

மேலும் அது என் நண்பரிடமிருந்து எனக்கு வந்த முதல் காதல் கடிதம் என்பதால் அதைப் சொல்லலாம் என்றே பதிவாக இடுகிறேன். என்னுடைய நட்பின் ஆழத்திற்காகவே இந்த பதிவு.

எங்களின் நட்பு தொடங்கியது எங்களின் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில். கல்லூரியில் சென்னையில் இருந்து சென்று படிக்கும் மாணவிகள் இருவரில் நான் ஒருவர். என்னுடைய வீட்டை அடுத்து அவர் வீடு என்பதால் நாங்கள் இருவரும் ஒரே பேருந்தில் வாரம் ஒரு முறைச் செல்வோம். (ஹாஸ்டல் வாசிகள்).

எங்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்த காலம். நான் எப்போதும் ரொம்ப அமைதியானவள் என்று பொய் சொல்ல மாட்டேன். ரொம்ப அரஜகம், அரட்டை, அமர்களம் என்று இருப்பவள். எப்போது வீடு அடங்கி இருக்கும் ஆள் இல்லை. ஏதோ தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினேன்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் எல்லோரும் என்னை முறைப்பது போல இருந்த்தது. புதுசா முறைச்சா அது நமக்கு உறைக்கும், எப்போதுமே முறைப்பாகவே பார்த்தவர்களாதலால் எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. என்ன என்று கேட்கவும் பயம், அங்கு இருந்தது என் சித்தி. சித்தியிடம் பயம் என்பதைவிட மரியாதை அதிகம்.

இங்க வாடி என்று அழைக்க, அப்போதும் எனக்கு என்ன விஷயம் என்று தெரியாததால் என்ன என்று திமிராக கேட்க என் முகத்தினில் ஒரு கடிதத்தை எறிந்தார்கள். அது ஒரு உள்நாட்டு தபால்களில் வருமே அந்த நீல நிற கடிதம். என்ன என்று படிக்கு முன்னரே ஆளாளுக்கு சத்தம் போட ஆரம்பித்தார்கள்.

கடிதம் யார் எழுதியது என்ற முகவரியும் இருக்கு, வந்த்து என் நண்பரிடமிருந்து. என் வீட்டிற்கு மிகவும் பரிச்சயமானவன் தான். என்னுடன் வந்து என் வீட்டில் எனக்கு தொழில்நுட்ப வரைபடங்கள் வரைய சொல்லி கொடுத்து இருந்த்தால் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.

கடிதம் எப்படி இருந்தது என்பதே சுவாரசியமான விஷயம்….

எனக்கு கமலஹாசன் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது என் நண்பருக்கு நன்றாக தெரியும்.  கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் என்ற பாடலை எனக்கு கடிதமாக எழுதி அனுப்பியிருந்தார்.

எனக்கு படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது. என் வீட்டில் உள்ளவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது, அவனுக்கு எனக்கு கமல் பிடிக்கும் என்று தெரியும் அதான் அனுப்பி இருக்கிறான். இதில் ஒன்றும் இல்லை என்று கூறினேன். அடி காலை உடைச்சிடுவேன் என்று என் சித்தி சொல்ல, நானோ பாருங்கோ அவன் எல்லா லைன்லையும் காதலன், காதல்னு வரும் இடங்களில் வெற்று இடங்களாகவே இருக்கு அதனால் இதை பெரிசு படுத்தாதீங்க என்று சொல்லி விட்டேன். என் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

அவனிடமும் என்ன இது என்று மட்டுமே கேட்டதாக நினைவு. அதன் பின்னரும் நான் மிகவும் சாதரணமாக நட்பாக மட்டுமே பழகினேன். அவனிடமிருந்தும் அதன் பின் எந்த கடிதமும் வரவில்லை.

இன்றும் என்னிடமிருந்து ஃபோன் என்றால் அந்த நண்பரின் முகத்தில் ஒரு தனி சந்தோசம் வரும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

இது என்னுடைய தோழிக்கு வந்தது என்று பொய் சொல்ல வேண்டியது இல்லை. நடந்து பல ஆண்டுகள் ஆகியும் மனதில் இன்றும் பசுமையாக இருக்கிறது என்றால், அது எந்த அளவுக்கு நம்மை பாதித்தது என்பது மட்டுமே. மிகவும் மட்த்தனமான கடிதமாக இருந்தாலும் எனக்கு வீட்டிற்கு வந்த்தால் இது இன்றும் நினைவில் இருக்கிறது. மனதினில் பதிய இனிமையான கடிதம் தேவையில்லை, ஆனால் சாதூர்யமாக என்று எதாவது இருக்க வேண்டும் என்பதால் அப்படி ஒரு கடிதம் எழுதினாயோ.

நீ இதனை படிக்க நேர்ந்தால் உன்னால் எனக்கு அந்த பாடல் அல்ல படமே பிடிக்காமல் போனது என்று தெரிந்து கொள்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s